Pregnancy Journey
4 September 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்ப காலத்தில் குறிப்பிட்ட ஒரு உணவின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்படுவது இயல்பானது தான். அந்த வகையில் பர்கர் முதன்மையான இடத்தில் இருக்கிறது. மென்மையான இறைச்சி அல்லது காய்கறி கலவை, புதினா, கொத்தமல்லி மற்றும் மயோனைஸ் கலந்த இந்த உணவு நம் நாவில் எச்சில் ஊற வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை வேண்டாம் என்று மறுப்பது மிகக் கடினம். ஆனால், கர்ப்ப காலத்தில் பர்கர் சாப்பிடுவது நல்லது தானா என்பதற்கு கீழ்காணும் விஷயங்களை நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.
முழுமையான கோதுமை பிரெட், முறையாக சுத்தம் செய்யப்பட்ட, ஃப்ரெஷ்ஷான காய்கறிகள், மென்மையான பீஃப் இறைச்சி மற்றும் பாதுகாப்பாக பேக்கிங் செய்யப்பட்ட மயோனைஸ் ஆகியவற்றை சேர்த்து பர்கர் தயாரிக்கப்படுகிறது. பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதாலும், சீரான உணவு என்பதாலும் இதை சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானது.
கர்ப்ப காலத்தில் பர்கர் சாப்பிட வேண்டும் என்ற ஆசை தோன்றும் பட்சத்தில், மார்க்கெட்டில் விற்பனையாகக் கூடிய பர்கரை காட்டிலும், எப்போதுமே வீட்டில் தயார் செய்யக் கூடிய பர்கருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும். அளவு கடந்த உடல் எடை அதிகரிப்பை தவிர்க்க, எத்தனை நாட்களுக்கு ஒருமுறை இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.
நீங்கள் சாப்பிடும் பர்கரில் என்னென்ன பொருட்களை சேர்த்துள்ளீர்கள் என்பதைப் பொறுத்து தான், அது ஆரோக்கியமானதா, இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும். பறவை இன இறைச்சிகள் அல்லது மென்மையான, நன்கு பொடியாக நறுக்கப்பட்ட, ஃப்ரெஷ்ஷாக வேக வைக்கப்பட்ட விலங்கு இறைச்சி என்பது ஆரோக்கியமானதுதான்.
மென்மையான பீஃப் என்பது, சமைக்கப்பட்ட 100 கிராம் இறைச்சியை கணக்கிடும்போது அதில் மொத்த கொழுப்பு அளவு 10 கிராமுக்கு குறைவாகவும், நிறையூட்டப்பட்ட கொழுப்பு 4.5 கிராம் அளவிலும் கொண்டதாக இருக்க வேண்டும். அதேபோல, 95 மில்லி கிராமுக்கு குறைவான அளவில் கொலஸ்ட்ரால் கொண்ட இறைச்சியையும் பயன்படுத்தலாம். புரதச்சத்து கிடைக்கின்ற ஆரோக்கியமான உணவுகளில் மென்மையான இறைச்சியும் ஒன்றாகும். இது குழந்தையின் உடல் உறுப்பு வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியமானதாகும்.
பர்கரில் பயன்படுத்தப்படும் இறைச்சி முறையாக வேக வைக்கப்படாமல், உட்புற பகுதியில் பிங்க் நிறத்தில் இருக்கிறது என்றால் கர்ப்பிணி பெண்களுக்கு உணவு ஒவ்வாமை (ஃபுட் பாய்ஸன்) ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. கர்ப்ப காலத்தில் உணவு ஒவ்வாமை ஏற்படுகின்றபோது சிலருக்கு ரத்தக்கசிவு சேர்ந்து நிகழக் கூடும். இதன் எதிரொலியாக கருச்சிதைவு நிகழும்.
கர்ப்ப காலத்தில் பச்சை கீரை சாப்பிடுவதால் நீர்ச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இவை இரண்டுமே அபாயகரமானது.
”கர்ப்ப காலத்தில் நான் பர்கர் சாப்பிடலாமா?” என்ற கேள்வி பல பெண்களின் மனதில் எழுவது இயலப்பினது தான். பீஃப் பர்கரில் ஏராளமான நிறையூட்டப்பட்ட கொழுப்புகள் இருந்தாலும், அது சாப்பிடுவதற்கு உகந்தது மற்றும் நிறைவான உணர்வைத் தரும்.
இருப்பினும், மென்மையான இறைச்சி கலவையைத் தேர்வு செய்வது குறித்து நீங்கள் பரீசீலிப்பது நல்லது. அதாவது 90/10 அடிப்படையில் பீஃப் தேர்வு செய்யலாம் அல்லது பர்கர் சாப்பிட வேண்டிய தேவை ஏற்படும்போது வான்கோழி பர்கரை தேர்வு செய்யலாம். உங்கள் பர்கரில் போதுமான அளவு நார்ச்சத்து மற்றும் நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்ய, பர்கருடன் சேர்த்து காய்கறிகள் அல்லது பழங்களை உட்கொள்ளவும்.
பர்கரில் மிகச் சிறப்பான பகுதிகளில் ஒன்று டாப்பிங்ஸ் ஆகும். ஆனால், கர்ப்ப காலத்தில் அனைத்து டாப்பிங்ஸ் வகையுமே சிறப்பானது என்று சொல்லிவிட முடியாது. பிரபலமான டாப்பிங்ஸ் வகைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. இதை பர்கருடன் சேர்த்து சாப்பிடும்போது நம் பாதுகாப்பு குறித்து கவனம் கொள்வதற்கான டிப்ஸ் இதில் இடம்பெற்றுள்ளன.
வெளியிடங்களில் சாப்பிடும் போது கீரையை தவிர்க்கவும். அதே போல, வீட்டில் பர்கருடன் கீரையை சேர்த்துக் கொள்ளும் முன்பாக, அவை முழுமையாக அலசி சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள்.
வெளியிடங்களில் சாப்பிடும்போது, டாப்பிங்க்ஸ் மீது இடம்பெறும் தக்காளி மற்றும் வெங்காயம் போன்றவை குறிப்பிட்ட அளவுக்கு சூடேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சூடான பர்கரில் இவற்றை பச்சையாக வைக்கும்போது, அந்த வெப்பம் இதன் மீதும் பரவக் கூடும். ஆனால், அதில் உள்ள நுண்ணிய கிருமிகளை கொல்வதற்கு அந்த வெப்பம் போதுமானதாக இருக்காது. அதே சமயம், வீட்டில் முறையாக சுத்தம் செய்யப்படும் பட்சத்தில் தக்காளி மற்றும் வெங்காயத்தை பச்சையாக எடுத்துக் கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் நம் மனதை தூண்டக் கூடிய மிக இயல்பான உணவுகளில் ஊறுகாய்க்கு முக்கியமான இடம் உண்டு. அதே சமயம், குறைவான உப்பு சேர்த்த, கொஞ்சம் கடித்து, மென்று சாப்பிடும் வகையிலான காய்கறி ஊறுகாயை பர்கரின் மேல் பகுதியில் சேர்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் எந்த வகை வெண்ணெயை தேர்வு செய்கிறீர்கள் என்பதை பொருத்துதான், அது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை சொல்ல முடியும். பதப்படுத்தப்பட்ட பாலில் இருந்து தயார் செய்யப்பட்ட கொஞ்சம் மென்மையான மற்றும் கெட்டியான வெண்ணெய் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானதுதான்.
முட்டைகளில் சால்மோனெல்லா என்னும் கிருமி எப்போதும் காணப்படும். ஆகவே, எப்போதுமே ஃபிரை செய்யப்பட்ட முட்டையை மட்டுமே பர்கரின் டாப்பிங்ஸ் ஆக வைக்க வேண்டும்.
கெட்சப், கடுகு எண்ணெய், மையோனைஸ் மற்றும் இதர வகை சாஸ்களில் இருக்கின்ற முக்கிய பிரச்சினையே அதில் சேர்க்கப்படும் முட்டை தான். கிரீம் போல அல்லது மையோனைஸ் கொண்ட பல சாஸ்களில் முட்டை பச்சையாக சேர்க்கப்பட்டிருக்கும். கர்ப்ப காலத்தில், ஸ்டோர்களில் வாங்கப்படும் பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட முட்டை கலவையை கொண்ட சாஸ் சாப்பிடுவது பாதுகாப்பானது தான். ஆனால், வீட்டில் ஃப்ரெஷ்ஷாக முட்டை சேர்த்து தயார் செய்யப்பட்ட சாஸ் வகையை தவிர்க்கவும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பத்தின் போது பிஸ்தா எடுத்துக் கொள்ளுதல்: நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்
கர்ப்ப கால உணவில் பர்கர் சேர்த்துக் கொள்வது முழுமையான உணர்வை தரும் மற்றும் சிறந்த தேர்வாக அமையும். ஆனால், வீட்டில் சமைக்கப்பட்டாலும் அல்லது வெளியிடங்களில் சாப்பிட்டாலும் முறையாக வேக வைக்கப்படுவதையும், சுத்தமான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதி செய்யுங்கள். தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு இது மிக முக்கியமானதாகும். டாப்பிங்ஸ் என்று வருகிற போது மேலே பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனைகளை பின்பற்றவும்.
1. Stråvik M, Jonsson K, Hartvigsson O, Sandin A, Wold AE, Sandberg AS, Barman M. (2019). Food and Nutrient Intake during Pregnancy in Relation to Maternal Characteristics: Results from the NICE Birth Cohort in Northern Sweden. Nutrients.
2. Lipsky LM, Burger KS, Faith MS, Siega-Riz AM, Liu A, Shearrer GE, Nansel TR. (2021). Pregnant Women Consume a Similar Proportion of Highly vs Minimally Processed Foods in the Absence of Hunger, Leading to Large Differences in Energy Intake. J Acad Nutr Diet.
Burger During Pregnancy in Tamil, Is it safe to eat Burger during Pregnancy in Tamil, Can I eat Burger during Pregnancy in Tamil, Burger During Pregnancy: Benefits & Effects in English, Burger During Pregnancy: Benefits & Effects in Hindi, Burger During Pregnancy: Benefits & Effects in Telugu, Burger During Pregnancy: Benefits & Effects in Bengali
Yes
No
Written by
aviraparaiyar
aviraparaiyar
பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு புற்றுநோய் அறிகுறிகள்
கருக்கலைப்புக்குப் பிறகு மார்பக வலி மற்றும் வலி நிவாரண முறைகள் | Breast Pain After Abortion: Pain Relief Methods in Tamil
குங்குமப்பூ - நன்மைகள், பாதிப்புகள் மற்றும் பல | Saffron - Benefits, Drawbacks, and More in Tamil
கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பு அரிப்பிற்கான அறிகுறிகள் மற்றும் சிகிச்சை | Vaginal Itching During Pregnancy: Symptoms and treatment in Tamil
சிலர் ஏன் சுண்ணாம்பைக் குறிப்பாக சாப்பிடுகிறார்கள்? | Eating Chalk: What You Need to Know About This Unusual Craving in Tamil
உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத குற்ற உணர்வில் உள்ளீர்களா? தேவையில்லை! (Are you feeling guilty for not being able to breastfeed your little one? Don't be In Tamil)
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
Skin - Fertility | By Concern | PCOS | Pregnancy Test Kit | Fertility For Her | Ovulation Test Kit | Fertility For Him | By Ingredient | Chamomile | Shatavari | Ashwagandha | Myo-inositol | Skin - Pregnancy & New Mom | By Concern | Stretch Marks Cream | Maternity Wear | Lactation | Maternity Gear | Shop By Ingredient | Dhanwantaram | Cloth Diaper | Stretch Marks Kit | Stroller |