hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான குளிர்காலத்திற்குத் தேவையான 17அத்தியாவசியங்கள் (17 Newborn Baby Winter Essentials In Tamil) arrow

In this Article

    புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான குளிர்காலத்திற்குத் தேவையான 17அத்தியாவசியங்கள் (17 Newborn Baby Winter Essentials In Tamil)

    Baby Care

    புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான குளிர்காலத்திற்குத் தேவையான 17அத்தியாவசியங்கள் (17 Newborn Baby Winter Essentials In Tamil)

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    அறிமுகம்(Introduction)

    புதிய குழந்தையின் வருகையானது ஒவ்வொரு பெற்றோருக்கும் எப்போதும் ஒரு உற்சாகமான நேரமாக இருக்கும். ஆனால், குளிர்காலத்தில் சிறிய குழந்தையை உலகிற்கு வரவேற்பவர்களுக்கு, அவை குளிர்காலத்தில் வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்காக ஒரு சில கூடுதல் விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது. குளிர்காலத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தேவையான 17 அத்தியாவசியங்களை வழங்குகிறோம்.

    டயாப்பர்கள்(Diapers)

    குளிர்காலங்களில் குழந்தைகள் ஈரப்பதத்துடன் இருப்பது மிகவும் சங்கடமாக இருக்கும். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு குளிர்காலத்தில் டயாப்பர்கள் அல்லது நாப்கின்களை வழங்குவது குழந்தைக்கான அத்தியாவசியங்களில் ஒரு முக்கிய பகுதியாகும். சரியான டயப்பரைப் பெறுவதற்கு, தரத்திற்கும் விலைக்கும் இடையிலான சமநிலையைக் கண்டறிய முயற்சிக்கவும்.

    செளகரியமாக இருக்கும் பேண்டுகள்(Cosy Pants)

    குளிர்காலங்களில் குழந்தைக்கு அவசியமாகத் தேவைப்படும் பொருட்களில், செளகரியமான பேண்டுகள் கட்டாயம் இருக்கவேண்டும், ஏனென்றால் இவை குழந்தையை நாள் முழுவதும் வெதுவெதுப்பாகவும், செளகரியமாகவும் வைத்திருக்கின்றன. குழந்தையின் தோலை எரிச்சலடையச் செய்யாத மென்மையான எலாஸ்டிக் வெய்ஸ்ட் பேண்ட் உடனிருக்கும் மென்மையான ஒன்றைத் தேர்வு செய்யவும்.

    லேசான எடை கொண்ட ஜாக்கெட்டுகள் / கார்டிகன்கள்(Light Jackets/Cardigans)

    லேசான எடை கொண்ட ஜாக்கெட் அல்லது கார்டிகன் குழந்தைக்கு அதிக எடை இல்லாமலும் அல்லது பருமனாகவும் இருக்காது இது குழந்தையை கதகதப்பாக வைத்திருக்க உதவும். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு குளிர்காலத்தில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு எளிய கம்பளி ஜாக்கெட் அல்லது கார்டிகனை தேர்வு செய்யவும் அல்லது ஹூட் கோட் போன்ற இன்னும் கொஞ்சம் ஸ்டைலான ஒன்றைப் பயன்படுத்தலாம்.

    துணிகள் மற்றும் துணைப்பொருட்கள்(Clothes and Accessories)

    குளிர் காலங்களில் முழுக்கையினைக் கொண்ட பாடி சூட்டுகள், தெர்மல் பேன்ட் மற்றும் டி-ஷர்ட்கள், கம்பளி சாக்ஸ், தொப்பிகள் மற்றும் வெளியில் குளிராகவும் ஈரமாகவும் இருந்தால் நீர்ப்புகாத ஜாக்கெட் போன்ற பலவிதமான ஆடைகள் தேவைப்படும்.

    இதையும் படிக்கலாமே! - குழந்தைகளுக்கான குளிர்கால ஃபேஷன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்! (Winter Fashion for kids:everything you know about In Tamil)

    காலுறைகள் (சாக்ஸ்)(Socks)

    மேலே இருக்கும் விஷயத்தை விரிவாகக் கூற வேண்டுமென்றால், குளிர்காலத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு காலுறை (சாக்ஸ்) அவசியம். சரியான ஜோடியைத் தேர்ந்தெடுக்கும்போது பின்வரும் விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்: பருத்தி அல்லது கம்பளி போன்ற இயற்கை பொருட்களால் ஆன காலுறைகளைத் தேர்வுசெய்து கொள்ளவும், இந்தக் காலுறைகள் இறுக்கமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவும், ஆனால் மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

    தூங்குவதற்கான அத்தியாவசித் தேவைகள்(Sleep Essentials)

    தூக்கத்தின் அடிப்படையில், குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு பின்வரும் பொருட்கள் மிகவும் அவசியம்: ஒரு சூடான போர்வை மற்றும் ஒரு தூக்கத்திற்கான சாக் தேவைப்படும். இதற்கு மாற்றாக, ஒரு ஸ்லீப்பிங் பேக் ஐ தேர்வு செய்யவும்.

    காலணிகள்(Booties)

    குழந்தைக்கு குளிர்காலத்தில் காலணிகள் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். காலணிகள் நன்கு பிடிமானமாக (க்ரிப் ஆக) இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இப்படி இருந்தால்தான் நழுவாமல் இருக்கும். மேலும், போடுவதற்கும் கழற்றுவதற்கும் எளிதாக இருப்பதைத் தேர்ந்தெடுங்கள்.

    குளிர்ச்சியான காலநிலைக்கான தொப்பிகள் (Cold-Weather Caps)

    குளிர்காலத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, குளிரில் இருந்து அனைத்து உடல் பாகங்களையும் பாதுகாப்பதற்கு, குளிர்கால தொப்பி அவசியம். குழந்தையின் மென்மையான தோலைப் பாதுகாக்கும் பருத்தி போன்ற மென்மையாக இருப்பதையும், நன்கு சுவாசிக்கும் தன்மை கொண்ட பொருட்களால் செய்யப்பட்டதையும் தேர்வு செய்யுங்கள்.

    குழந்தைக்கான கையுறைகள் (மிட்டன்ஸ்)(Baby Mittens)

    புதிதாகப் பிறந்த குழந்தைக்கு குளிர்கால அத்தியாவசியங்கள் என்று வரும்போது, இதில் கையுறைகளும் அவசியம் தேவை. இது குழந்தையின் கைகளை வெதுவெதுப்பாக வைத்திருப்பதோடு, குழந்தை தன்னுடைய முகத்தை அடிக்கடி சொறிந்து கொள்வதையும் தடுக்கிறது. இவர்களை ஒரு தென்றலில் வைத்திருப்பது போல இருப்பதர்கு வெல்க்ரோஸுடன் ஒரு ஜோடியைத் தேடுங்கள்.

    அனைத்து –நிலப்பரப்பிற்கேற்ற ஸ்ட்ரோலர் (தள்ளுவண்டி)(All-Terrain Stroller)

    குழந்தைகளுக்கான குளிர்கால அத்தியாவசியப் பொருட்களில் முக்கியமான ஒன்றாக, பனி, மண் இதற்கு இடையில் இருக்கும் எதையும் கையாளக்கூடிய பெரிய சக்கரங்களைக் கொண்ட அனைத்து நிலப்பரப்பிற்கு ஏற்ற ஸ்ட்ரோலர்களைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் ஸ்ட்ரோலர்கள் நிறைய சேமிப்பகத்தைக் கொண்டிருப்பதோடு, தள்ளுவதற்கு நன்றாக இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    சூரியனில் இருந்து பாதுகாத்தல் (Sun Protection)

    குளிர்காலத்தில் குழந்தைக்கு கதகதப்பாக இருக்கும் ஆடைகள் முக்கியம் என்றாலும், சன்ஸ்கிரீன் மற்றும் லிப் பாம் போன்றவையும் குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு அவசியம். குறைந்தபட்சம் 15 SPF கொண்ட சன்ஸ்கிரீன் லோஷன் மூலமாக சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து குழந்தையைப் பாதுகாக்கலாம்.

    ஸ்வாடில் (குழந்தைகளைச் சுற்றி முழுவதுமாகப் போர்த்தப்படும்) போர்வை (Swaddle Blanket)

    ஸ்வாடில் போர்வையானது எல்லா குழந்தைக்கும் குளிர்காலத்தில் மிகவும் அவசியமானது. இது உங்களுடைய குழந்தையை கதகதப்பாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும். ஸ்வாடில் போர்வைகளில் பல்வேறு பாணிகள் (ஸ்டைல்கள்) மற்றும் பிராண்டுகள் உள்ளன. எனவே, இதில் நிறைய விருப்பத் தேர்வுகள் உள்ளன.

    குழந்தைக்கான செளகரியமான போர்வை(Cosy Baby Blanket)

    சந்தையில் குழந்தைக்கென்று பல்வேறு வகையான போர்வைகள் உள்ளன. இதற்கு எங்கே இருந்து தொடங்குவது என்பது கடினமாக இருக்கலாம். உங்களுக்கு என்ன வேண்டும் என்று சரியாகத் தெரியாவிட்டால், கிளாசிக் ஆக இருக்கும் வெள்ளை நிற போர்வையுடன் பாதுகாப்பாக இருங்கள். ஆனால், இன்னும் கொஞ்சம் கிரியேட்டிவ் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புவர்களுக்கு, இன்னும் நிறைய விருப்பங்கள் உள்ளன.

    ஈரப்பதமூட்டி(Humidifier)

    வெளிப்புற தட்பவெப்பநிலை குளிர்ச்சியாகவும் வறண்டும் இருக்கும்போது, வீட்டிற்குள் இருக்கும் காற்றை அழைக்காதது போல ஆகிவிடும். நிலையான மின்சாரம் முதல் வறண்ட சருமம், சைனஸ் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சனைகள் அனைத்திற்கும் குறைந்த ஈரப்பதம் காரணமாக இருக்கலாம். வீட்டிற்கான முழு ஈரப்பதமூட்டி வீட்டில் அனைத்து இடங்களிலும் வசதியான ஈரப்பதத்தை பராமரிக்க உதவும், இது குழந்தைக்கு மிகவும் இனிமையாக இருக்கும்.

    குழந்தைக்கான கேரியர்(Baby Carrier)

    குளிர்காலங்களில் குழந்தைக்கு கேரியர் அவசியம். புதிய பெற்றோர்கள் சந்தையில் பல்வேறு விதமான கேரியர்களைப் பார்க்கலாம். பேட் செய்யப்பட்ட பட்டைகள் (ஸ்ட்ராப்புகள்) மற்றும் குழந்தைக்கு வசதியான இருக்கை போன்றவற்றைக் கொண்ட கேரியரைப் பாருங்கள். குளிரில் இருந்துது குழந்தையைப் பாதுகாக்க கேரியரில் ஹீட் அல்லது கவர் இருக்க வேண்டும்.

    படுக்கையறைக்கான வெப்பநிலைமானி(Bedroom Thermometer)

    சில நேரங்களில், ஒரு அறையின் வெப்பநிலையைத் தீர்மானிப்பதற்கு கடினமாக இருக்கலாம். மேலும், குளிர் காலமானது பெரியவர்களை விட பச்சிளம் குழந்தைகளை அதிகமாக பாதிக்கும். எனவே, குளிர்ச்சியான காலநிலையில் இருந்து விலகி இருக்கவும், உறைபனி வெப்பநிலையிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கவும் படுக்கையறைக்கான வெப்பமானியைத் தேர்வு செய்யவும்.

    குளிர்காலத்தில் குழந்தைக்கான முழுக்கையுடன் இருக்கும் ரோம்பர்(Baby Winter Wear Full Sleeves Romper)

    குளிர்காலத்தில் குழந்தையை சூடாக வைத்திருக்க ரோம்பர் சரியானதாக இருக்கும். குளிரைத் தடுப்பதற்கு முழுக் கைகள் மற்றும் உயர்-கழுத்து காலர் போன்றவற்றைக் கொண்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும், இது மென்மையான, செளகரியமான பொருட்களால் ஆனது, இது குழந்தையை நாள் முழுவதும் வசதியாக வைத்திருக்கும்.

    முடிவுரை (Conclusion)

    குளிர்காலத்திற்கான இந்த 17 அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று, குளிர் காலங்களில் குழந்தையைப் பராமரிப்பதற்கு தயாராக இருங்கள். குழந்தை பராமரிப்பு பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு, மைலோ ஃபேமிலியில் இருக்கும் எங்களுடைய மிகப்பெரிய வலைப்பதிவு களஞ்சியத்தை ஆராயுங்கள்.

    TAGS :

    Newborn baby needs in tamil, newborn baby winter needs in tamil, 17 Newborn Baby Winter Essentials In English, 17 Newborn Baby Winter Essentials In Hindi, 17 Newborn Baby Winter Essentials In Telugu, 17 Newborn Baby Winter Essentials in Bengali

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    Related Topics

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.