This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

Pregnancy
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 28, 2026
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
Read time13 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • ஈகோஸ்பிரின் 75 மாத்திரைகள் கர்ப்ப காலத்தில் இரத்தம் உறைவதைத் தடுக்கவும், ப்ரீ-எக்லாம்ப்சியா போன்ற நிலைமைகளைத் தடுக்கவும் குறைந்த அளவில் பரிந்துரைக்கப்படுகிறது.
  • ஈகோஸ்பிரின் மாத்திரையின் பொதுவான பக்க விளைவுகளில் குமட்டல், வாந்தி, மயக்கம், வயிற்று வலி, இரைப்பை குடல் இரத்தப்போக்கு மற்றும் மஞ்சள் காமாலை ஆகியவை அடங்கும்.
  • கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஈகோஸ்பிரின் தவிர்க்க வேண்டும், மேலும் தாய்ப்பால் கொடுக்கும்போதும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுக்கக் கூடாது.
  • கர்ப்ப காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை எப்படி பராமரிப்பது? Explore our Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each.
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Rating4.9
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating3.9
Organic Aloe Vera (300 ml)
Organic Aloe Vera (300 ml)
Rating4.4

பொதுவாக கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு ஈகோஸ்பிரின் 75 மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இது இரத்தம் உறைவதை தடுக்கிறது. இந்த மாத்திரைகளை குறைந்த அளவுகளில் பயன்படுத்தினால், இரத்தம் உறைவதைத் தடுப்பதற்கும், இரத்தத்தட்டு எதிர்ப்பு ஏஜென்ட்டாக செயல்படுகிறது. இது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு இதயம் சார்ந்த பிரச்சனைகளைத் தடுப்பதில் அத்தியாவசியமானதாக விளங்குகிறது.

ஈகோஸ்பிரின் அதன் அளவைப் பொறுத்து எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்? (How Is Ecosprin Useful According To Its Dose in Tamil)

ஈகோஸ்பிரின் அதிக அளவுகளில் பயன்படுத்தப்பட்டால், அது காய்ச்சல் அல்லது வலியைப் போக்கப் பயன்படும் ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஈகோஸ்பிரின் 75 மாத்திரைகள் உடனே பரிந்துரைக்கப்படலாம். இவ்வாறு செய்தால், இரத்தம் உறைவதையும் அல்லது இதயத் திசு மரணத்தையும் தடுக்கலாம். இதயத்தில் உள்ள தமனியில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மாரடைப்பு ஏற்படலாம். இது இதயத்திற்குள் இரத்தத்தின் ஒட்டுமொத்த ஓட்டத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. பிளேக், கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு போன்ற பல்வேறு பொருட்களின் உருவாக்கம் காரணமாக இரத்த ஓட்டப் பாதையை தடுக்கிறது.

பொதுவாக, ஈகோஸ்பிரின் மாத்திரையை குறைந்த டோஸில் எடுத்துக் கொள்ளும்போது அது இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. அதிக டோஸ் கொடுக்கும்போது வலி நிவாரணியாக பயன்படுகிறது. ஈகோஸ்பிரின் இரத்தத்தட்டு எதிர்ப்பு ஏஜென்ட்டாகவும் செயல்டுகிறது. இதயத்தில் இரத்தம் உறைவதைத் தடுக்கவும் உதவுகிறது. இதனால் தான் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ஈகோஸ்பிரின் ரத்தம் உறைவதைத் தடுப்பதால் இரத்தத்தின் ஒட்டும்தன்மையை குறைக்கிறது. இதன் மூலம் பக்கவாதம் வராமலும் தடுக்கிறது. ஈகோஸ்பிரின் மாத்திரைகளானது சைக்ளோஆக்சிஜனேஸ் மற்றும் இரத்த அழுத்தக்குறைப்பியின் செயல்பாடுகளை தடுக்கிறது. அதன் காரணமாக வீக்கம், வலி ஆகியவற்றை ஏற்படுத்தாமல் இது தடுக்கும்.

ஈகோஸ்பிரின் மாத்திரைகளால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் என்ன? (What Are Some Of The Possible Side Effects Of Ecosprin Tablets in Tamil)

ஈகோஸ்பிரின் மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் என எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் இந்த மாத்திரைகளை மெல்லாமல் இருப்பது முக்கியம், அதுக்கு பதிலாக ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு வாயில் போட்டு விழுங்கவும். உங்கள் கர்ப்பத்தின் நிலை அல்லது நீங்கள் பாதிக்கப்படும் நிலையைப் பொறுத்து, உங்கள் மருத்துவர் மாத்திரையை எப்படி உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார். ஈகோஸ்பிரின் மாத்திரைகள் வாய்வழியாகவோ, மலக்குடல் வழியாகவோ அல்லது நரம்பு வழியாகவோ கூட கொடுக்கப்படலாம்.

இத்தகைய நிலைமைகளில் சில பக்க விளைவுகளை உண்டாகும். அதாவது, குமட்டல், வாந்தி, மயக்கம், கணுக்கால் வீக்கம் அல்லது லேசான தலைவலி ஆகியவை அடங்கும். மயக்கம் என்பது மிகவும் பொதுவான பக்க விளைவு, எனவே வாகனம் ஓட்டுவதற்கு முன்பு இந்த மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. பெரும்பாலான பக்க விளைவுகளுக்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவையில்லை. ஏனெனில், அவை நேரம் ஆக ஆக சரியாகிவிடும். எனினும், நீங்கள் தொடர்ந்து கடுமையான பக்க விளைவுகளை அனுபவித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மருந்தைத் தொடரும்போது நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (How Cautious Should You Be When Continuing The Ecosprin Medication During Pregnancy in Tamil)

கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் உட்கொண்ட பிறகு, மது, வலி நிவாரணி அல்லது கருக்கலைப்பு மாத்திரைகள் ஆகியவற்றை உட்கொள்வதை தவிர்த்து விடுங்கள். இதெல்லாம் ஈகோஸ்பிரின் மாத்திரையுடன் எதிர்வினையை ஏற்படுத்தி இரைப்பையில் இரத்தப்போக்கை ஏற்படுத்திவிடும். இது தவிர, சின்னம்மை அல்லது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, மருத்துவர் சொல்லும் வரை, இந்த மாத்திரைகளை உட்கொள்ள கொடுக்கக் கூடாது.

குழந்தைகளுக்கு எக்கோஸ்ப்ரின் 75 மாத்திரைகள், மூளை மற்றும் கல்லீரலின் வீக்கத்தை உள்ளடக்கிய ரெய்ஸ் நோய்க்குறி போன்ற தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும், கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் இந்த மாத்திரையை உட்கொள்வதைத் தவிர்க்கலாம். ஏனெனில் கருவில் உள்ள குழந்தைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஈகோஸ்பிரின் மாத்திரைகள் கர்ப்ப காலத்தில் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் போது உங்கள் குழந்தையை பாதிக்குமா? (Can Ecosprin Tablets Affect Your Baby During Pregnancy Or While Breastfeeding in Tamil)

சில சமயங்களில், ஈகோஸ்பிரின் மாத்திரைகள் தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்ப்பாலுக்குள் கலந்து, இறுதியில் குழந்தையை பாதிக்கும். நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது கர்ப்பமாக இருக்க திட்டமிட்டிருந்தால், இந்த மருந்துகளுக்கு மாற்று வழிகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்பது நல்லது. ஈகோஸ்பிரின் எடுத்துக் கொள்ளும் பல கர்ப்பிணிகள், எந்தவொரு தீவிர பக்க விளைவுகளாலும் பாதிக்கப்படுவதில்லை. வயிற்று வலி, இரத்தப்போக்கு, காதுகளில் ஒலிக்கும் சத்தம் அல்லது தொடர்ந்து குமட்டல் போன்றவை நீங்கள் அனுபவிக்கக்கூடிய சில தீவிரமில்லாத பக்க விளைவுகளாகும். தோல் அல்லது கண்களில் மஞ்சள் நிறத்தை ஏற்படுத்துவதும் இந்த மருந்துகளின் பொதுவான பக்க விளைவு ஆகும். இது மஞ்சள் காமாலை என்றும் அழைக்கப்படுகிறது.

ஈகோஸ்பிரின் 75 மாத்திரைகளின் மிகவும் தீவிரமான பக்க விளைவுகளில் ஒன்று இரைப்பை குடல் இரத்தப்போக்கு ஆகும். இது வயிற்றில் இருந்து அல்லது குடலில் இருந்து உருவாகக்கூடும். இது தவிர, மூளையில் உள்ள மண்டையோட்டுக்குள்ளான இரத்தப்போக்கு மற்றொரு தீவிர பக்க விளைவு ஆகும். இது மேலும் பல கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கக் கூடும். எனவே, கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் ஈகோஸ்பிரின், மருத்துவருடன் கலந்தாலோசித்த பின்னரே உட்கொள்வது நல்லது.

ஈகோஸ்பிரின் உட்கொள்ளத் தொடங்கும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்ன? (What Are A Few Things To Keep In Mind When Starting Out On Ecosprin in Tamil)

அந்த மருந்தைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன், அதைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை நீங்கள் அறிந்திருப்பது முக்கியம். முதலில் முக்கியமாக, உங்கள் மருத்துவரின் பரிந்துரையைப் பெற்ற பின்னரே மருந்துகளைத் தொடங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அத்துடன், உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை சரியாக உட்கொள்ளுங்கள். உங்கள் உணவுடன் மருந்தை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம், ஆனால் உங்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் இருக்கும். வெது வெதுப்பான தண்ணீரில் மாத்திரையை விழுங்குவதற்கு முன் அதை கடிக்கவோ, மெல்லவோ அல்லது நசுக்கவோ கூடாது. நீங்கள் மருந்தை குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்கலாம். குறிப்பாக சூரிய ஒளியில் படாமல் வைக்க வேண்டும்.

எகோஸ்ப்ரின் மாத்திரையின் பொதுவான பக்க விளைவுகள் குறித்து சுருக்கமாக உங்கள் வசதிக்காக கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

1. வயிற்று வலி

2. இதயத்தில் எரிச்சல் உணர்வு.

3. எளிதான இரத்தப்போக்கு.

4. காதில் ஒலிக்கும் சத்தம்.

5. சிறுநீரின் நிறம் அல்லது அளவில் மாற்றம்

6. கடுமையான வாந்தி

7. பலவீனம்

8. களைப்பு மற்றும் சோர்வு.

9. மயக்கநிலை

10. மண்டை ஒட்டுக்குள் இரத்தப்போக்கு.

11. மஞ்சள் காமாலை அல்லது மஞ்சள் நிறத் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல்.

12. இரைப்பை குடல் இரத்தப்போக்கு.

ஈகோஸ்பிரின் மாத்திரைகள் உங்கள் மருத்துவ ரீதியிலான ஆய்வக சோதனைகளின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா?( Can Ecosprin Tablets React With Your Medical Laboratory Tests in Tamil)

நீங்கள் சில ஆய்வக சோதனைகளை எடுக்க திட்டமிட்டால், ஈகோஸ்பிரின் மாத்திரைகளின் தாக்கங்கள் ரிசல்ட்களில் பிரதிபலிக்கக்கூடும். சில நேரங்களில், மருந்துகளின் குறுக்கீடு காரணமாக உங்கள் சர்க்கரை பரிசோதனைகள் தவறாக இருக்கலாம். உங்கள் வயிற்றில் புண், ஆஸ்துமா, கல்லீரல் நோய், நீரிழிவு நோய் அல்லது ஈகோஸ்பிரின் காரணமாக ஒவ்வாமை உள்ளதா என்பதை உங்கள் மருத்துவரிடம் தெரிவிப்பது நல்லது. உங்களுக்கு அறுவை சிகிச்சை ஏதேனும் செய்ய வேண்டி இருந்தால், இந்த மருந்தைத் தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட வாய்ப்புள்ளது!

ஈகோஸ்பிரின் மாத்திரைகள் மற்றொரு மருந்தால் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா? (Can Ecosprin Tablets Cause Side Effects After Interacting With Another Drug in Tamil)

ஈகோஸ்பிரின் மாத்திரைகள் மற்ற மருந்துகளுடன் தொடர்புகொள்வதாக அறியப்படுகிறது, இறுதியில் வயிற்று வலி அல்லது பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஈகோஸ்பிரின் ரியாக்ட் செய்யக்கூடிய சில மருந்துகளில் வார்ஃபரின், க்ளோபிடோகிரெல், கேப்டோபிரில் மற்றும் டிகோக்சின் ஆகியவை அடங்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஈகோஸ்பிரின் மற்ற பிளட் தின்னர் மருந்துகளுடனும், நோயெதிர்ப்பு மருந்துகள், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள், மற்றும் பிற ஸ்டெராய்டல் மருந்துகளுடன் ரியாக்ட் செய்யும்.

இது தவிர, உங்கள் மருந்து கருக்கலைப்பு மாத்திரைகள், நீரிழிவு மாத்திரைகள் மற்றும் எலும்புப்புரை தொடர்பான மருந்துகளுடன் ரியாக்ட் செய்யக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆல்கஹால் அல்லது பிற மூலிகை சப்ளிமெண்ட் உடன் மருந்துகளை உட்கொள்வது மருந்தின் விளைவைத் தடுத்துவிடக்கூடும். தீவிர சூழ்நிலைகளில், குடலில் இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தான் இந்த மருந்தைத் தொடங்குவதற்கு அல்லது தொடர்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

உங்களுக்கு ஏதேனும் இரத்த உறைதல் கோளாறு இருந்தால், ஈகோஸ்பிரின் போன்ற மருந்துகள் உங்களுக்கு ஆபத்தாக மாறிவிடும். உண்மையில், ஹீமோபிலியா, குடல் புண்கள், இதய பிரச்சனைகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்கள் ஆகியோருக்கு ஈகோஸ்பிரின் மருத்தை பரிந்துரைக்க முடியாது. ஏனெனில், இந்த மருந்து நிலைமையை மோசமாக்கும் மற்றும் பிற தீவிர சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இத்தகைய சூழ்நிலைகளில் மூச்சுத் திணறல் ஒரு பொதுவான பக்க விளைவாகும்.

ஈகோஸ்பிரின் மருந்தைத் தொடரும்போது நினைவில் கொள்ள வேண்டிய சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? (What Are A Few Safety Precautions To Remember When Continuing The Medication in Tamil)

நீங்கள் மனதில் கொள்ள விரும்பும் சில பாதுகாப்பு எச்சரிக்கைகளும் உள்ளன. உங்கள் வசதிக்காக அவை சுருக்கமாக கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

நீங்கள் கர்ப்பமாக இருந்தால், கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் 150 மாத்திரையைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

13. மருத்துவர் பரிந்துரைத்தபடி எடுத்துக் கொள்வது நல்லது. வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதும் முக்கியம்.

14. நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால், உங்கள் மருத்துவர் ஈகோஸ்பிரின் மருந்தை உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. ஏனெனில், அந்த மருந்து தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்குச் செல்லும் என்பது தெரிந்த உண்மை.

15. ஈகோஸ்பிரின் மருந்தை உட்கொண்ட பிறகு வாகனம் ஓட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் மருந்தின் பொதுவான பக்க விளைவு மயக்கநிலையை ஏற்படுத்திவிடும். இதனால், இது உங்கள் வாகனம் ஓட்டும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தலாம், குறிப்பாக இரவில் கூடுதல் ஆபத்து இருப்பதால் கவனம் தேவை.

16. உங்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏதேனும் இருந்தால், உங்கள் மருத்துவர் ஈகோஸ்பிரின் டோஸை அதற்கேற்ப மாற்றுவார். இத்தகைய சூழ்நிலைகளில், நீங்கள் எச்சரிக்கையுடன் மருந்து எடுக்க வேண்டும். நீங்கள் ஏதேனும் சிறுநீரக கோளாறுகள் அல்லது பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இது பொருந்தும்.

ஈகோஸ்பிரின் ஒரு பழக்கத்தை உருவாக்கும் வகையிலான மருந்து அல்ல. இருப்பினும், மருந்து சிறந்த முறையில் செயல்பட வேண்டுமெனில், உங்கள் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை நீங்கள் பின்பற்ற வேண்டியது இருக்கும். உங்கள் வசதிக்காக உங்கள் வழக்கத்தில் நீங்கள் சேர்க்கக்கூடிய சில வாழ்க்கை முறை மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

17. குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட உணவை உட்கொள்வதை கடைப்பிடியுங்கள். அதற்கு பதிலாக உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்தலாம்.

18. தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இருப்பினும், நீங்கள் கர்ப்பமாக இருந்தால், நீங்கள் லேசான உடற்பயிற்சிகளை செய்யலாம்.

19. இந்த மருந்துகளின் தொடர்பால் குடல் அல்லது வயிற்றில் இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும் என்பதால், நீங்கள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் காலம் முழுவதும் மதுவைத் தொடாதீர்கள்.

20. துரித உணவுகளைத் தவிர்த்து விடுங்கள் அல்லது குறைவாக சாப்பிடுங்கள். அதற்குப் பதிலாக வீட்டில் சமைத்த புதிய உணவை சாப்பிடுங்கள். கொழுப்பு நிறைந்த மீன், வெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற உணவுகளை நீங்கள் கருத்தில் கொள்ளலாம். இந்த உணவுகளில் உங்கள் இதயத்திற்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரைகளை அதன் சக்திவாய்ந்த பக்க விளைவுகளை கருத்தில் கொண்டு எடுத்துக்கொள்வது முக்கியமா? (Is It Important To Take Ecosprin During Pregnancy Considering Its Potent Side Effects in Tamil)

கர்ப்ப காலத்தில் மிகவும் பொதுவான ப்ரீ-எக்லாம்ப்சியா போன்ற நிலைமைகளைத் தடுக்க கர்ப்பிணிகளுக்கு பொதுவாக குறைந்த அளவிலான ஆஸ்பிரின் பரிந்துரைக்கப்படுகிறது. அதிக அளவு எக்கோஸ்பிரின் மருந்துகள் பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை, குறிப்பாக கர்ப்ப காலத்தில் அவை உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலைகளில், ஈகோஸ்பிரின் மாத்திரைகளுக்குப் பதிலாக வேறு வலி நிவாரணிகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.

இருப்பினும், நீங்கள் 30 வார கர்ப்பத்துக்குப் பிறகும் ஈகோஸ்பிரின் எடுத்துக்கொண்டால், அதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள். இதனால் அவர்கள் உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் உடனடியாகச் சரிபார்க்க முடியும். நீங்கள் கருவுறுதல் சிகிச்சையை மேற்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் மருத்துவர் குறைந்த அளவு ஆஸ்பிரின் பரிந்துரைப்பார். இந்த சூழ்நிலையில் மிக முக்கியமானது என்னவென்றால் உங்கள் மருத்துவரின் அனுமதியைப் பெற்ற பின்னரே மருந்துகளைத் தொடங்குவது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

Is It Safe For Breastfeeding Mothers To Continue Ecosprin? தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எக்கோஸ்பிரினை தொடர்வது பாதுகாப்பானதா?

நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாயாக இருந்தால், உங்கள் மருத்துவர் ஈகோஸ்பிரின் வலி நிவாரணியாக எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கமாட்டார். அதற்கு பதிலாக, நீங்கள் பாராசிட்டமால் அல்லது ஐபியூபுரூஃபனைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படலாம். ஒரு சில மருத்துவர்கள் பொதுவாக ஆஸ்பிரின் பரிந்துரைக்கிறார்கள் என்றாலும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த மருந்துகள் பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கும் மருந்து செல்லக்கூடும். நீங்கள் இதுகுறித்து மேலும் அறிய விரும்பினால், உங்கள் மருத்துவரிடம் பேசலாம்.

நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மாராக இருந்து ஆஸ்பிரின் மாத்திரை எடுத்தால் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை நீங்கள் அவ்வப்போது கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் குழந்தை நோய்வாய்ப்பட்டாலோ அல்லது தொற்றுநோயால் பாதிக்கப்பட்டாலோ, சில நாட்களுக்கு அல்லது குறைந்தபட்சம் உங்கள் குழந்தை குணமடையும் வரை மருந்தை நிறுத்தி வைக்க வேண்டும்.

மாத்திரையை நீங்கள் தொடர வேண்டியது இருந்தால், உங்கள் குழந்தைக்கு ஃபார்முலா பாலை கொடுக்கலாம். இவ்வாறு, இந்த வழியில் ஒருவர் தனது குழந்தை சிறப்பாக செயல்படும் வரை ஃபார்முலா பாலை கொடுத்து, பின்னர் தாய்ப்பாலை மீண்டும் தொடரலாம். உங்கள் குழந்தைக்கு இரத்தப்போக்கு, சிராய்ப்பு அல்லது தடிப்புகள் தோன்றினால், மருத்துவரின் உதவியை நாடுங்கள். உங்கள் பிரச்சனையைப் பற்றி உங்கள் மருந்தாளுனர் அல்லது உங்கள் மருத்துவரிடம் பேசலாம், பின்னர் ஒரு மாற்று மருந்துடன் தொடங்கலாம்.

ஆஸ்பிரின் மற்றும் அதன் விளைவுகள் காரணமாக கருவுறுதலில் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் கர்ப்பமாக இருக்க திட்டமிட்டால், உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கலாம். இந்த வழியில், உங்கள் சிகிச்சை குறித்த திட்டம் மதிப்பாய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப திட்டமிடப்படும்.

முடிவுரை (Conclusion)

உங்கள் உடலுடன் மருந்துகளின் பொருந்தக்கூடிய தன்மையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மருந்துக்கும் சில வகையான பக்க விளைவுகள் உள்ளன. ஈகோஸ்பிரின் மிகவும் பயனுள்ள மருந்துகளில் ஒன்றாகும், இருப்பினும், அதன் சாத்தியமான பக்க விளைவுகளை ஒருவர் எளிதில் புறக்கணிக்க முடியாது. இது உயிருக்கு ஆபத்தாகக் கூட இருக்கலாம்.

இதுதவிர, மருந்துச் சீட்டு இல்லாமல் இந்த மருந்தை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் முறையற்ற பயன்பாடு இரைப்பை குடல் இரத்தப்போக்கு அல்லது மண்டைக்குள் இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும். மேலும், நீங்கள் கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் உட்கொள்ளும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் , ஏனெனில் அது உங்கள் குழந்தையை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. பாதிக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. மற்ற மாற்று வழிகள் மற்றும் எச்சரிக்கையான பயன்பாடு பற்றி தெரிந்து கொள்ள உங்கள் மருத்துவரிடம் பேசுவது நல்லது.

குறிப்பு (References)

1. Scott Shanker. November 9, 2021. Preventing preeclampsia may be as simple as taking an aspirin

2. Patient Leaflets Team. 5th April 2022. Aspirin in pregnancy

Tags

Ecosprin 75 in Pregnancy, Ecosprin tablets uses in English Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in English , Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Telugu, Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Bengali

எதிர்பார்ப்பில் இருக்கும் தாய்மார்களால் நம்பப்படும் பராமரிப்பு

மருந்துகளுடன் சேர்த்து, உங்கள் கர்ப்ப காலத்தை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும் தயாரிப்புகள் இங்கே உள்ளன.

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2005 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g

Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g

Fades Stretch Marks | Improves Digestion | Reduces Stress

531 Moms bought
₹917₹129829% Off
Rating
4.9
(50)
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

418 Moms bought
₹999₹154535% Off
Rating
3.9
()
Organic Aloe Vera (300 ml)

Organic Aloe Vera (300 ml)

Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience

4133 Moms bought
₹289₹32912% Off
Rating
4.4
(45)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.