This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your ovulation on mylo app

கர்ப்பத்திற்கான IUI (கருப்பைக்குள் கருவூட்டல்) சிகிச்சை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் (All that you need to know about IUI (Intrauterine Insemination) Treatment for Pregnancy In Tamil)

Getting Pregnant
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 20, 2025
கர்ப்பத்திற்கான IUI (கருப்பைக்குள் கருவூட்டல்) சிகிச்சை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் (All that you need to know about IUI (Intrauterine Insemination) Treatment for Pregnancy In Tamil)
Read time4 min

இன்ட்ராஉத்திரேன் இன்செமிநேஷன் /கருப்பையில் கருவூட்டல் (ஐயூஐ) முறையை, கருவுறா நிலைக்கு மாற்றுச் சிகிச்சை செயல்முறை எனலாம். இது சூலாக்கத்தின்(ஒவியூலேஷன்) போது கருப்பையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளைக் கருவுறுதலுக்கு வெளியிடும் நேரத்தில் விந்துவை நேரடியாகக் கருப்பையில் பொறுத்தும் சிகிச்சை முறையாகும்.

இன்ட்ராஉத்திரேன் இன்செமிநேஷனின் விளைவாக விந்தணுக்கள் ஃபலோபியன் குழாயில் சென்று முட்டையை கருவுறச் செய்வதால் பெண் கர்ப்பம் தரிக்கிறார். இந்த வகையான செயற்கை கருவூட்டு முறை பின்வரும் தம்பதிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது:

காரணமற்ற மலட்டுத்தன்மை (Unexplained infertility):

காரணமற்ற மலட்டுத்தன்மைக்கான சிகிச்சையாக இது மேற்கொள்ளப்படுகிறது.

எண்டோமெட்ரியோசிஸ் உடன் தொடர்புடைய கருவுறாமை (Endometriosis related infertility):

எண்டோமெட்ரியோசிஸ் உடன் தொடர்புடைய கருவுறாமைக்கு, மருந்துகளுடன் ஐயூஐ மேற்கொள்வது முதல் சிகிச்சை அணுகுமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆண் காரணி மலட்டுத்தன்மை (Male factor infertility):

விந்து சோதனையில் சராசரிக்குக் குறைவான விந்தணுக்களின் செறிவு, விரைவான ஓட்டமின்மை அல்லது விந்தணு வடிவம் மற்றும் அளவு ஆகியவற்றில் அசாதாரணம் ஆகியவற்றைக் காணலாம். இது போன்ற பிரச்சனைகளை ஐயூஐ மூலம் சமாளிக்க முடியும், ஐயூஐ-இல் குறைந்த தரம் கொண்ட விந்தணுக்களில் ஆரோக்கியமான விந்தணுவைப் பிரித்தெடுத்து கருவூட்டலுக்கு உதவலாம்.

சூலாக்கம் தொடர்பான கருவுறாமை (Ovulation related infertility):

சூலாக்கத்தில் சிக்கல் அல்லது குறைந்த எண்ணிக்கையிலான முட்டை போன்ற பிரச்சனை உள்ள பெண்களுக்கு ஐயூஐ உபயோகிக்கலாம்.

செர்விகல் காரணி தொடர்பான கருவுறாமை (Cervical factor related infertile):

சூலாக்கத்தின் போது, விந்தணுக்கள் பெண்குறியிலிருந்து ஃபலோபியன் குழாய்களுக்குப் பயணிக்க உதவும் வகையில் பெண்ணின் கருப்பை வாய் சளித்திரவத்தை உருவாக்குகிறது. ஆனால் இச்சளித்திரவம் திண்மையாக இருந்தால், அது விந்தணுவின் பயணத்தைப் பாதித்து முட்டையை அடைவதை தடுக்கும்.

இதையும் படிக்கலாமே! - IUI (Intrauterine Insemination) பரிசோதனைக்கு விந்தணு பெறுவது எப்படி?

ஐயூஐ எவ்விதத்தில் உதவுகிறது? (How does IUI help In Tamil)

இன்-விட்ரோ/ஆய்வுக் கூட சோதனைமுறை கருத்தரித்தலுடன் ஒப்பிடும்போது ஐயூஐ என்பது இன்வேசிவ் முறை இல்லாதது மற்றும் அதிக செலவற்ற கருவுறுதல் முறையாகும். இருப்பினும், பின்வரும் சூழ்நிலைகளில் ஐயூஐ பயன் தராது:

  • மிதமான முதல் தீவிர எண்டோமெட்ரியோசிஸ்

  • ஃபலோபியன் குழாய்கள் அகற்றப்பட்ட நிலை

  • தீவிர ஃபலோபியன் குழாய் நோய்

  • பல பெல்விக் நோய்த்தொற்றுகளால் அவதிப்படுதல்

  • விந்து உற்பத்தி செய்ய இயலாத ஆண்கள்

ஐயூஐ சிகிச்சையின் வெற்றி விகிதம் வயது, அடிப்படை நோயறிதல், கருவுற மருந்துகளின் பயன்பாடு மற்றும் பிற கருவுறுதல் சிக்கல்கள் ஆகியவற்றைப் பொறுத்தது.

ஐயூஐ சிகிச்சைக்குத் தயாராதல் (Preparing for IUI treatment In Tamil)

ஐயூஐ சிகிச்சைக்கு முன் பின்வருவன மேற்கொள்ளப்படுகிறது :

விந்து மாதிரியை எடுத்தல் (Taking the semen sample) :

துணைவரின் விந்து மாதிரி சேகரிக்கப்படுகிறது. விந்துவில் உள்ள விந்தணு அல்லாத கூறுகள் பெண்ணின் கருத்தரிப்பில் குறுக்கிட்டு எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மாதிரியிலிருந்து உயர்தர விந்தணுவை பிரிதத்தெடுக்கும் விதத்தில் அது கழுவப்படுகிறது. இது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை மேம்படுத்துகிறது.

சூலாக்க அறிகுறிகளைக் கண்காணித்தல் (Monitoring signs of ovulation):

ஐயூஐ மேற்கொள்ளும் நேரம் முக்கியமானது என்பதால், உடலில் லுடினைசிங் ஹார்மோனின் வெளியீட்டைக் கண்டறிய ஹோம் யூரின் ஓவலூஷன் கிட் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

நேரத்தைத் தீர்மானித்தல் (Determine timing):

ஐயூஐ பெரும்பாலும் சூலாக்கத்தைக் கண்டறிந்த ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்படுகிறது.

கர்ப்ப முடிவுகள் (Pregnancy results)

வீட்டில் கர்ப்ப பரிசோதனைக்கு முன் இரண்டு வார இடைவெளி தேவைப்படலாம். கர்ப்ப ஹார்மோன்கள் இன்னும் அளவிடக்கூடிய அளவில் இல்லாத நிலை அல்லது சூலாக்கத்தைத் தூண்டும் மருந்தின் காரணமாகக் கர்ப்பத்தைக் குறிக்கும் தவறான பாசிவிடிவ் முடிவு வெளியாக வாய்ப்புள்ளதால் அதற்கு முன் சோதனை செய்வது எதிர்மறையான முடிவைக் காட்டலாம்

இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஹோம் கிட் சோதனையில் கர்ப்பமாக இல்லை என்றால், நீங்கள் மற்ற கருவுறுதல் சிகிச்சைகள் அல்லது அதே சிகிச்சையை மூன்று முதல் ஆறு மாத இடைவெளியில் முயற்சி செய்யலாம்.

TAGS:

IUI treatments in tamil, informarions about IUI treatments in tamil, All that you need to know about IUI (Intrauterine Insemination) Treatment for Pregnancy In English, All that you need to know about IUI (Intrauterine Insemination) Treatment for Pregnancy In Hindi, All that you need to know about IUI (Intrauterine Insemination) Treatment for Pregnancy In Telugu, All that you need to know about IUI (Intrauterine Insemination) Treatment for Pregnancy In Bengali

Article Posted Under

Related Articles

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.