Growth & Development
14 September 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
புதிதாகப் பிறந்த குழந்தையின் மூளை அதன் முதிர்ந்த எடையில் சுமார் 25% மட்டுமே இருக்கும். குழந்தையின் முதல் மூன்று ஆண்டுகளிலேயே அதன் மூளை பெருமளவு வளர்ந்துவிடும். தாயின் வயிற்றில் இருக்கும் முதல் மும்மாதங்களில் கருவின் நியூரான்கள் உருவாகத் தொடங்கினாலும் மூளையின் பெரும்பாலான வளர்ச்சி கடைசி இரண்டு மும்மாதங்களில்தான் நிகழ்கிறது. நியூரான்களுக்கு இடையிலான இணைப்புகள் (synapses) உருவாகி குழந்தையின் மூளை வளர்வதால் இந்தக் காலம் மிக முக்கியமானது.
குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தூண்ட அதன் பெற்றோர்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. குழந்தைகளின் மூளை வளர்ச்சியை ஊக்குவிப்பதாக ஆய்வுகள் காட்டியுள்ள 10 மிக முக்கியமான மூளை வளர்ச்சி நடவடிக்கைகள் இவை:
குழந்தையின் கூக்குரல்களுக்கும் அழுகைகளுக்கும் பதிலளிப்பது, அதன் கண்களை நோக்குவது, முகத்தைக் கோணி அதற்கு விளையாட்டுக்காட்டுவது அனைத்தும் அன்பான கவனிப்புடனான தொடர்பைப் போலக் குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு அவசியம். பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு துல்லியமான முன்னும் பின்னுமான உரையாடல் நடைபெறுகிறது. குழந்தை ஒலிகளை எழுப்பும்போது, பெற்றோர் அதனுடன் பேச்சில் ஈடுபட்டிருப்பது போலப் பதிலளிக்கிறார்கள்.
உங்கள் குழந்தை கடினமான பயிற்சிகள் செய்யத் தேவையில்லை. சாதாரணமாக திரும்பிப்படுப்பது, தவழ்வது, பாய்வது, நடப்பது, பெற்றோரும் குழந்தையும் சேர்ந்து நீச்சலடிப்பது போன்ற உடல் செயல்பாடுகள், குறிப்பாக 1 வயதுக் குழந்தையின், மூளை வளர்ச்சிக்கு உதவும். குழந்தையின் அறிவாற்றல், குறிப்பாக செயல் இயக்கங்களும் மொழித் திறன்களும் வளர, குழந்தையின் பிறப்பு முதல் 5 வயது வரையிலும் அதன் உடல் செயல்பாடுகள் பயனளிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
பிறந்த உடனேயே முகங்களைப் பார்ப்பது குழந்தைகளின் பார்வைக்கும் அறிவாற்றல் வளர்ச்சிக்கும் மிகவும் நன்மை பயக்கும். ஸ்டான்ஃபோர்ட் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பிறரது முகங்களை அடையாளம் காணும் ஒரு குழந்தையின் திறன் அதன் நான்கு வயதிற்குள் பெரியவர்களுடைய திறனுக்கு சமமாகிறது. குழந்தையின் முகத்தில் இருந்து ஒருவர் 10-12 அங்குலங்கள் தொலைவில் முகத்தை வைத்து நகர்த்திவிட்டு மற்றொரு நபரின் முகத்தை (அல்லது ஒரு பொம்மையை) அதே இடத்தில் வைத்து குழந்தை என்ன செய்கிறது என்று பார்ப்பது போன்ற எளிய விளையாட்டுக்கள் இந்த முக்கியமான திறனை வளர்க்க உதவும்.
பெற்றோரும் குழந்தைகளும் சேர்ந்து புத்தகங்களை வாசித்து ரசிக்கலாம். குழந்தையின் மூளை வளர்ச்சி நடவடிக்கைகளின் முக்கியமான மொழியியல் திறன்களான சந்தங்கள், ஒலிகள் மற்றும் சொற்களின் அர்த்தம் ஆகியவற்றை குழந்தையின் மூளை ஏற்றுக்கொள்வதற்கும் இது உதவுகிறது. எடுத்துக்காட்டாக, நிறைய படங்கள் கொண்ட ஒரு புத்தகத்திலிருந்து எளிய கதைகளையோ அல்லது குழந்தைகளுக்கேற்ற பாடல்களையோ படியுங்கள்.
குழந்தைகள் இயல்பாகவே இசையை ரசிக்கிறார்கள். அது அவர்களின் மூளை வளரவும் உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இசை சிகிச்சையைப் பெற்ற ஆறுமாதக் குழந்தைகளுக்கு நல்ல தூக்கப் பழக்கமும் பகலில் மேம்பட்ட கவனமும் உண்டாயின என ஓர் ஆய்வு காட்டியுள்ளது. மற்றொரு ஆய்வின்படி, இசை வகுப்புகள் எட்டுமாதக் குழந்தைகளின் தசை இயக்க வளர்ச்சியை மேம்படுத்தின. எனவே குழந்தையை தினமும் நல்ல இசையைக் கேட்கச் செய்யவும்.
குழந்தையுடன் தொடர்புகொள்வதற்கும் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் மற்றொரு சிறந்த அணுகுமுறை பாடுவது. பெற்றோருடன் அமர்ந்து பாட்டுப்பாடும் குழந்தைகளுக்கு ஆறு மாதம் ஆகும்போது சமூக, உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி மேம்பட்டதாக ஒரு 2013 ஆய்வு தெரிவிக்கிறது. எனவே, குழந்தைகளுக்கான பாடல்களைப் பாடி குழந்தையையும் உடன் பாடச் சொல்லலாம்.
குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்க பெற்றோர் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்று அவர்களுடன் பேசுவது. ஒரு குழந்தை அதிகச் சொற்களைக் கேட்கும்போது, அதன் சொல்வளம் பெரியதாக இருக்கும், ஆய்வுகளின்படி, நல்ல சொல்வளம் பின்னர் அக்குழந்தை அதிக வாசிப்புத் திறன் படைத்து விளங்க உதவுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தையிடம் எதைப் பற்றியும் எல்லாவற்றைப் பற்றியும் பேசலாம்.
சைகை மொழியைப் பயன்படுத்தும் குழந்தைகள் மேம்பட்ட கருத்துப் பரிமாற்றத் திறன்களைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவை வளர்ப்பதோடு அறிவாற்றல் வளர்ச்சியை மேம்படுத்தவும் செய்கிறது. ஒரு ஆய்வின்படி, குழந்தைச் சைகைமொழியில் ஈடுபட்ட ஆறுமாதக் குழந்தைகள், ஈடுபடாதவர்களுடன் ஒப்பிடும்போது சிறந்த சொல் அறிவையும் சிக்கல் தீர்க்கும் திறன்களையும் வெளிப்படுத்தினர்.
புலன்சார் விளையாட்டு என்பது குழந்தைகளின் புலன்களைத் தூண்டும் எந்தவொரு செயலையும் குறிக்கலாம். இது குழந்தையின் மூளை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான ஒரு அற்புதமான அணுகுமுறையாகும். உங்கள் குழந்தையின் கால்களில் வேறுபட்ட சொரசொரப்புத்தன்மை கொண்ட துணிகளை வைப்பது அல்லது குலுங்கும், சத்தம்போடும், உருட்டமுடியும் பொருளை அதனிடம் தருவது போன்ற எளிய விஷயங்களைச் செய்யவும். அவர்கள் அதை விரும்புவார்கள். புலன்சார் விளையாடல் குழந்தையின் அறிவாற்றல், மொழி, தசை இயக்கத் திறன் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் உதவும்.
தண்ணீரில் விளையாடுவது மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே சமயம் குழந்தையின் புலன்களைத் தூண்டுவதற்கான மற்றொரு வேடிக்கையான வழியாகும். நீர் விளையாட்டு குழந்தையின் சமூக, உணர்ச்சித் திறன்கள் முதல் சிக்கலைத் தீர்க்கும் திறன் வரை அனைத்தையும் வளர்க்க உதவும். எனவே குழந்தையை குளத்திலோ குளியல் தொட்டியிலோ அல்லது ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீருடனோ விளையாட விடவும். அவர்கள் அதை விரும்புவார்கள்.
குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு பலவித விளையாட்டுகளும் புதிர்களும் அவசியம் என்பதைப் பெற்றோர்கள் அறிந்து கொள்வது முக்கியம். இவை எல்லா வயதுக் குழந்தைகளுக்கும் ஏற்றபடி பல வகைகளில் கிடைக்கின்றன. பெற்றோரும் தாங்களே குழந்தைக்குத் தக்க விளையாட்டுக்களை உருவாக்கலாம்.
சிறு குழந்தைகளை வண்ணம் தீட்டுவதிலோ எளிமையான பொருத்தும் விளையாட்டுகளிலோ வடிவங்களை வரிசைப்படுத்தும் செயல்களிலோ ஈடுபடுத்தலாம். அவர்கள் கொஞ்சம் பெரியவர்களாகும்போது, தர்க்கம், திட்டமிடல், சிக்கல் தீர்க்கும் திறன்களை வளர்க்க உதவும் மிகவும் சவாலான புதிர்களையும் விளையாட்டுகளையும் விளையாடச் செய்யலாம். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் அறிவாற்றல் வளர்ச்சியை ஊக்குவிக்கப் பல வழிகள் உள்ளன. அவற்றைத் தொடங்க இங்கே சில யோசனைகள் மட்டுமே கூறப்பட்டுள்ளன.
குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்க புதிய புதிய விளையாட்டுகளைக் கண்டுபிடியுங்கள். அவர்களுக்குப் பலவிதங்களில் வேடிக்கை காட்டுங்கள். குழந்தைகளின் மூளை வளர்ச்சியை ஊக்குவிப்பது குறித்த கூடுதல் தகவல்கள் உங்களுக்குத் தேவையானால், உங்கள் குழந்தையின் மருத்துவரிடம் பேசுங்கள்.
Baby brain development in tamil, tips to baby brain activities in tamil, Top 10 Baby Brain Development Activities In English, Top 10 Baby Brain Development Activities In Hindi, Top 10 Baby Brain Development Activities In Telugu, Top 10 Baby Brain Development Activities In Bengali
Yes
No
Written by
chandrikaiyer
chandrikaiyer
கர்ப்ப காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், பாதுகாப்பு மற்றும் பல | Amla In Pregnancy: Benefits, Safety & More in Tamil
கர்ப்ப காலத்தில் சேப்பங்கிழங்கு: பாதுகாப்பானதா இல்லையா? | | Arbi In Pregnancy: Is It Safe Or Not in Tamil
கர்ப்ப காலத்தில் தேங்காய்: நன்மைகள் மற்றும் கட்டுக்கதைகள் | Coconut in Pregnancy: Benefits & Myths in Tamil
கர்ப்ப காலத்தில் குயினோவா: தொடர்புடைய நன்மைகள் & வழிமுறைகள் | Quinoa During Pregnancy Benefits & Guidelines in Tamil
கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் ஆபத்துக்கள் | Fish In Pregnancy: Benefits and Risks in Tamil
கர்ப்ப காலத்தில் ரெட் ஒயின்: தொடர்புடைய பக்க விளைவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் | Red wine during pregnancy: Side Effects & Guidelines in Tamil
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
UTIs & Infections | Diapers & Wipes | Disposable Diapers | Baby Wipes | Cloth Diapers | Diapers & Wipes - Baby Care | Hair | Skin | Bath & Body | Diapers & Wipes - Baby Wellness | Diaper Rash | Mosquito Repellent | Anti-Colic | Diapers & Wipes - Baby Gear | Stroller | Dry Sheets | Bathtubs | Potty Seats | Carriers | Diaper Bags | Maternity dresses | Stretch Marks Kit |