
பல் வளரத் துவங்கும் நேரம் பெற்றோருக்குக் கவலை தரும் நேரம் எனவும் கூறலாம். ஈறுகளில் இருந்து பற்கள் வெளிவரத் துவங்கும்போது ஏற்படும் வலியின் காரணமாக வேதனையால் குழந்தை அதிகம் அழக் கூடும். அதோடு, லேசான காய்ச்சல் கூட வர வாய்ப்புள்ளது.
குழந்தை வேதனையின் காரணமாக அமைதியற்ற நிலையில் தவிக்கும்போது அழுதுகொண்டே இருப்பதால் காய்ச்சல் ஏற்படக் கூடும். பொதுவாக 4 முதல் 7 மாதங்கள் ஆகும் போது குழந்தைக்குப் பல் வெளிவர ஆரம்பிக்கும். சில குழந்தைகளுக்கு மேலும் தாமதமாகக் கூடும். அது கவலைக்குரிய விஷயம் இல்லை, பல் வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது இயற்கையே.
இந்தக் காலகட்டத்தில் நீங்கள் கவனிக்கக்கூடிய விஷயங்கள் இங்கே உள்ளன.
பல் முளைக்கத் துவங்கும் போது, மேல் அல்லது கீழ் தாடையில் இருந்து இரண்டு முன் பற்கள் முதலில் தோன்றும். பின்னர் கடைவாய்ப்பற்கள் வரத் தொடங்குகின்றன. அதைத் தொடர்ந்து கோரைப் பற்கள் வளருகின்றன. பல் வெளிவரும் சமயம் ஈறுகள் வீங்கி மென்மையாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே! - முதல் வயதில் உங்கள் குழந்தையின் பற்களை பிரஷ் செய்வதற்கான படிப்படியான வழிமுறை
இந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் கட்டை விரலைச் சப்புவதன் மூலம் நிம்மதியாக உணர்வார்கள். இது எதிர்காலத்தில் ஒரு பழக்கமாகக் கூட மாறும். எனவே, அதை தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.
இந்த சமயத்தில் குழந்தைகள் மெல்ல எதையாவது தேடுவார்கள். டீத்திங் ரிங் போன்ற அதற்கான மெல்லும் பொம்மைகள் சந்தைகளில் கிடைக்கின்றன. சேதம் அல்லது தீங்கு ஏற்படாமல் இருக்க, அவை மென்மையான பொருட்களால் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். டீத்தர்களைப் பொதுவாக குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்வித்து உபயோகிப்பது குழந்தைக்கு ஆறுதலைத் தரும். ஆனால், அவை மிகவும் கடினமாகி, சில நேரங்களில் ஈறுகளை சேதப்படுத்தவும் வாய்ப்புண்டு.
ஈறுகளை மென்மையாக்கும் மருந்துகளைத் தவிர்ப்பதே நல்லது. இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது அல்ல. மேலும், குழந்தைகளுக்கான ஈறு வலி நிவாரணிகளில் FDAஆல் அங்கீகரிக்கப்படாத தாவரநச்சு இருக்க வாய்ப்புள்ளதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
பல் துலக்குவதால் அதிக காய்ச்சல் ஏற்படலாம் அல்லது வராமல் போகலாம். காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது பரிந்துரைக்கப்படுகிறது.
சந்தையில் கிடைக்கும் மென்மையான ப்ரிஸ்டில் கொண்ட குழந்தைகளுக்கான டூத் பிரஷ்களைக் கொண்டு ஒவ்வொரு உணவிற்கும் பிறகும் துலக்கி விடுவது பற்களை நன்கு பராமரிக்க உதவும்.
வாயில் பாட்டிலை வைத்துக்கொண்டு தூங்குவதை அனுமதிக்காதீர்கள். வாயில் பாட்டிலுடன் தூங்கினால் பற்களின் இடையே பால் தங்கி சிதைவு ஏற்பட வழிவகுக்கும். தயிர், குளிரூட்டப்பட்ட பழங்கள் மற்றும் ஆப்பிள் சாஸ் போன்ற குளிர்ந்த உணவை உங்கள் குழந்தையின் உணவில் சேர்க்கவும்.
சிறிய தவறு கூட நிரந்தர சேதத்தை ஏற்படுத்த கூடும் என்பதால், குழந்தை வளரும் பருவத்தில் கவனமாக இருப்பது நல்லது. குழந்தைக்குப் பற்கள் வெளிவரும் சமயம் மேற்சொன்ன கருத்துகளைக் கவனத்தில் கொள்வது அச்சமயம் கவலை எதுமின்று குழந்தையைச் சிறப்பாக பராமரிக்க உதவும்
4-month baby teeth in tamil, 7-month baby teeth in tamil, Teething: What to Expect in Your 4- to 7-Month-Old Baby In English, Teething: What to Expect in Your 4- to 7-Month-Old Baby In Hindi, Teething: What to Expect in Your 4- to 7-Month-Old Baby In Telugu, Teething: What to Expect in Your 4- to 7-Month-Old Baby In Bengali
Yes
No















Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |