Scans & Tests
11 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது நமக்கு பலதரப்பட்ட உணர்வுகள் தோன்றும் - அவை எதிர்மறையாகவும் இருக்கலாம், நேர்மறையாகவும் இருக்கலாம். அதாவது இந்த சமயத்தில் உள்ளுக்குள் பயம் மற்றும் பதட்டம் இருக்கும், அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கும். பெரும்பாலும் நீங்கள் உங்கள் பிறக்காத குழந்தையின் ஆரோக்கியம் குறித்தே அதிகம் கவலை கொள்வீர்கள். இது தொடர்பாக மனதில் பல கேள்விகள் எழும். அதில் ஒன்று தான், குழந்தை ஆரோக்கியமாக பிறக்குமா இல்லையா என்பது. இந்த கேள்வி தான் தாய்மார்களுக்கு மன அழுத்தத்தையும் பீதியையும் ஏற்படுத்தும். என்டி ஸ்கேன் போன்ற பிரசவத்திற்கு முந்தைய ஸ்கிரீனிங் சோதனைகள் இத்தகைய கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பப்படுகிறது. எனவே, கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் என்டி ஸ்கேன் என்றால் என்ன? வாருங்கள் ஆராய்ந்து பார்ப்போம்.
என்டி அல்லது நியூக்கல் டிரான்ஸ்லூசன்ஸி என்பது கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் குழந்தைக்கு டவுண் சிண்ட்ரோம் மற்றும் வேறு ஏதேனும் குரோமோசோமல் அசாதாரணங்கள் உள்ளதா என்பதைச் சரிபார்க்க செய்யப்படும் ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கிரீனிங் ஆகும். இதில் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து இருப்பதாக கண்டறியப்பட்டால், மருத்துவர் கூடுதல் நோயறிதல் சோதனைகளை பரிந்துரைப்பார்.
நியூக்கல் டிரான்ஸ்லூசன்ஸி என்பது குழந்தையின் கழுத்தின் பின்னால் உள்ள திரவத்தால் நிரப்பப்பட்ட ஒளி ஊடுருவக்கூடிய ஒரு இடமாகும். குழந்தைக்கு டவுண் சிண்ட்ரோம், பட்டாவ் சிண்ட்ரோம் மற்றும் எட்வர்ட்ஸ் சிண்ட்ரோம் போன்ற அசாதாரணங்கள் ஏதேனும் இருந்தால், நியூக்கல் டிரான்ஸ்லூசன்ஸியில் அதிக திரவம் குவியும். எனவே, குழந்தையின் கழுத்தின் அடிப்பகுதி வழக்கத்தை விட பெரியதாக தோன்றும்.
இந்த சோதனையை மேற்கொள்ள துளையிடுவது அல்லது கத்தி போன்ற கருவிகளை பயன்படுத்தத் தேவையில்லை. அதோடு இதன் முடிவுகள் உறுதியானவை அல்ல. சந்தேகங்கள் இருந்தால், அபாயங்கள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சராசரி என்டி அளவீடானது 2.18 மிமீ ஆகும். இருப்பினும், குழந்தை 45 முதல் 84 மிமீ வரையிலான அளவில் இருக்கும் போது 3.5 மிமீ-க்குக் குறைவான அளவு சாதாரணமாகக் கருதப்படுகிறது. எனவே, 1.2 மிமீ மற்றும் 2.9 மிமீ என்டி அளவீட்டை நாம் நிலையானதாகக் கருதலாம். வழக்கமான அளவீட்டு தரத்தை என்டி மீறும் போது அசாதாரணங்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும். உதாரணமாக, 6மிமீ என்டி கொண்ட குழந்தைக்கு குரோமோசோமல் அசாதாரணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அளவீடுகள் அதிகமாக இருக்கும்போது முடிவுகளை உறுதிப்படுத்த இரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. இரத்தப் பரிசோதனையில் ஏதேனும் அசாதாரணங்கள் கண்டறியப்படாவிட்டால் குழந்தை சராசரியை விட பெரியதாக இருக்கும்.
கர்ப்பத்தின் 11 வது வாரம் முதல் 13 வது வாரம் வரை நியூக்கல் ஸ்பேஸ் ஆனது ஒளிஊடுருவக்கூடியதாக இருக்கும். 14 வாரங்களுக்குப் பின்னர், நிணநீர் அமைப்பு திரவத்தை உறிஞ்சி விடும். குழந்தைக்கு அசாதாரணம் இருந்தாலும் கூட, என்டி ஸ்கேன் சில சமயங்களில் வழக்கமான அளவீட்டுத் தரங்களைக் குறிக்கலாம். இதில் துல்லியம் இல்லாததால், 14 வாரங்களுக்குப் பின்னர் இந்த ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்படுவதில்லை.
இது துளையிடுதல் அல்லது கத்தி போன்ற கருவிகள் எதுவும் பயன்படுத்தாமல் சோனோகிராஃபரால் செய்யப்படும் ஒரு ஸ்கிரீனிங் செயல்முறையாகும். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
முதல் வழியானது டிரான்ஸ்-அடிவயிற்று சோதனையாகும். அல்ட்ராசவுண்ட் ப்ரோப் ஆனது தாயின் அடிவயிற்றின் மேல் நகர்த்தப்படுகிறது. மேலும் ஒரு ஜெல் போன்ற பொருள் வயிற்றில் தடவப்படும். இது ப்ரோப்-ன் எளிதான இயக்கத்திற்கு உதவுகிறது மற்றும் ஒலி அலைகளை கடத்துகிறது. சிறுநீர்ப்பை நிரம்பியிருக்கும் போது டிரான்ஸ்-அடிவயிற்று சோதனையின் படங்கள் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும். எனவே, ஸ்கேன் செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு சிறுநீர்ப்பையை காலி செய்து, அதன் பின்னர் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.
மற்றொரு வழி டிரான்ஸ்-யோனி சோதனை ஆகும். இதில் ஒரு சிறிய, உயவூட்டப்பட்ட அல்ட்ராசவுண்ட் ப்ரோப் யோனிக்குள் செருகப்படுகிறது. இதனால் வலி ஏற்படாது என்றாலும், சற்று அசௌகரியமாக இருக்கும். சில சோனோகிராஃபர்கள் டிரான்ஸ்-யோனி பரிசோதனையை பரிந்துரைக்கின்றனர். ஏனெனில், இதன் மூலம் விளக்கமான படங்களைப் பெறலாம்.
இரண்டிலும், அல்ட்ராசவுண்ட் அலைகள் கருவின் படங்களை உருவாக்குகின்றன. சோனோகிராஃபர் நியூக்கல் மடிப்பைக் கண்டுபிடித்து அதன் தடிமனை அளவிடுவார். நியூக்கல் திரவ அளவீடு, தாயின் வயது மற்றும் கர்ப்பம் தரித்து எத்தனை வாரங்கள் ஆகின போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு சமன்பாட்டின் மூலம் ஆபத்து நிகழ்தகவு கணக்கிடப்படுகிறது. இதன் முடிவுகள் ஆபத்தை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. என்டி ஸ்கேனின் துல்லிய விகிதம் 75% ஆகும். இது இரத்தப் பரிசோதனையுடன் சேர்ந்து 85% வரை துல்லியமாக இருக்கும்.
குழந்தையின் வரவை எதிர்நோக்கி காத்திருக்கும் அனைத்து தாய்மார்களின் மனதிலும் இந்த கேள்வி கண்டிப்பாக இருக்கும். என்டி ஸ்கிரீனிங் பொதுவாக அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. இது முதல் மூன்று மாதங்களில் அவர்கள் மேற்கொள்ளும் விரிவான மகப்பேறு ஸ்கேனின் ஒரு பகுதியாகும். இருப்பினும், தாய்க்கு வயது அதிகமாக இருந்து, அதனோடு குடும்பத்தில் குரோமோசோமல் அசாதாரணங்களின் மரபணு வரலாறு இருந்தால், என்டி ஸ்கேன் அவசியமாக எடுக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே! - உங்களுடைய 7 வார கர்ப்பத்திற்கான ஸ்கேன் அறிக்கையில் என்ன எதிர்பார்க்கலாம்?
இது எக்டோபிக் கர்ப்பம் அல்ல.ஒரே ஒரு குழந்தை தான் உள்ளது.இதயத் துடிப்பு நன்றாக உள்ளது.
குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம், பட்டாவ் சிண்ட்ரோம் மற்றும் எட்வர்ட்ஸ் சிண்ட்ரோம் உள்ளது
இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் எலும்புக் குறைபாடுகள் உள்ளன.
குழந்தை பிற குரோமோசோமல் அசாதாரணங்களுக்கு உள்ளாகியுள்ளது.
என்டி ஸ்கிரீனிங் கட்டாயமில்லை என்றாலும், இது பெரும்பாலும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது; இந்த ஸ்கிரீனிங் ஆனது கர்ப்ப காலத்தில் ஏற்படக் கூடிய கவலை மற்றும் நிச்சயமற்ற தன்மையைக் குறைப்பதில் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் என்டி ஸ்கேன் என்றால் என்ன என்பதை இப்போது நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். அதனால் நம்பிக்கையுடன் இந்த சோதனையை மேற்கொள்ளுங்கள்.
Yes
No
Written by
chandrikaiyer
chandrikaiyer
உங்களுடைய குழந்தையை எளிதில் தூங்க வைப்பதற்கான டாப் 3 டிப்ஸ்
9 வார கர்ப்பத்தில் அல்ட்ராசவுண்ட் அறிக்கையில் என்ன எதிர்பார்க்கவேண்டும் மற்றும் அபாயம் தரும் அறிகுறிகள் யாவை?
10 வார கர்ப்பத்திற்கான டயட் சார்ட் பற்றி நீங்கள் அறிய வேண்டிய முக்கிய குறிப்புகள்
உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதைக் காட்டும் 8 எளிய அறிகுறிகள்
குழந்தை என்.ஐ.சி.யு (NICU) இல் இருக்கும்போது அதை எப்படிச் சமாளிப்பது?
குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 4 முக்கியமான ஊட்டச்சத்துகள்
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Mylo is a master brand offering solutions through it's subsidiaries - Mylo Care and Mylo Baby.
Mylo Care offers science backed, expert led solutions across multiple health concerns.
Mylo Baby is a one stop solution for young parents for all their baby's needs.
Onion | Aloe Vera Range For Hair | Coconut | Neelibrigandi | Skin - Bath & Body | By Ingredient | Skin - Pregnancy & New Mom | Stretch Marks | Skin - Health & Wellness | Digestive Health | Lactation | Pain management | By Ingredient | Saffron | Shatavari | Nivarini | Skin - Weight | Weight Management | By Ingredient | Wheatgrass |