This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்ப காலத்தில் லிட்சி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Pregnancy
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 29, 2025
கர்ப்ப காலத்தில் லிட்சி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
Likes1 Likes|
Read time5 min

ஒரு பெண் கர்ப்பிணியாக இருக்கும் போது, அவளுக்கு அடிக்கடி வித்தியாசமான உணவை சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படும். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது உங்கள் ஆரோக்கியத்துக்கு சிறந்ததாக இல்லாத உணவு வகைகளையும் சாப்பிட தோணலாம். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் நீங்கள் மிக கவனமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், நீங்கள் சாப்பிடும் ஒவ்வொன்றும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

இந்த நாட்களில் லிட்சிக்கள் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. லிட்சி பழம் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்தது மட்டுமின்றி உயர் ஆன்டி ஆக்சிடெண்ட்களையும் கொண்டது. இதன் இனிமையான சுவை மற்றும் அதீத ஊட்டச்சத்து மதிப்பு கர்ப்பிணி பெண்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக, எடை அதிகரிக்க விரும்புபவர்கள் மற்றும் அவர்களது டயட்டில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டசத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு இது உகந்தது.

உங்களுக்கு லிட்சிகள் சாப்பிட பிடித்திருந்தால், நீங்கள் கர்ப்பக்காலத்தில் அதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி அறிய இந்த கட்டுரையை படிக்கவும்.

கர்ப்ப காலத்தில் லிட்சி சாப்பிடுவது பாதுகாப்பானதா?

குறைந்த அளவுகளில் லிட்சி சாப்பிடுவது பாதுகாப்பானது. கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு இந்த பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, பொட்டாஷியம் மற்றும் ஆன்டிஆக்சிடெண்ட்கள் தினசரி உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்களில் அடங்கும். லிட்சிகள் பெரும்பாலும் நீர் மற்றும் சர்க்கரை நிறைந்தவை. ஏனெனில், சில கர்ப்பிணி பெண்கள், குறிப்பாக கெஸ்டெஷனல் டயபிட்டிஸ்(GDM) இருப்பவர்களுக்கு, இந்த பழங்களை அளவாக எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படலாம்.

இந்த பழத்தை அதிகம் உட்கொள்வதால் கர்ப்பத்தை பாதிக்கும் அபாயம் இருப்பதால், இந்த பழத்தை கர்ப்பிணிகளின் டயட்டில் சேர்ப்பதற்கு முன் மருத்துவர் ஆலோசனை செய்வது சாலச்சிறந்தது.

லிட்சி சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவைகள் :

சிறந்த லிட்சிகள் சிறிது கடினமாகவும், மிகுந்த மென்மையானதாகவும், கனமானதாகவும், காய்ந்ததாகவும், இளஞ்சிவப்பு-பழுப்பு ஓட்டினுள்ளும் இருக்கும். பிடிக்க மென்மையானதாக இருக்கும் அல்லது கருப்பு அல்லது விரிசல் நிறைந்த பழங்களை வாங்க வேண்டாம்.

லிட்சிகளை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்கக்கூடாது, நீங்கள் அதை சிறிது நாட்கள் கழித்து சாப்பிட விரும்பினால், நீங்கள் அதை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். அவற்றை பிளாஸ்டிக் பேகில் வைத்து பிரிட்ஜில் வைத்தால் குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு அவை ஃப்ரெஷாக இருக்கும். லிட்சிகளின் சத்துக்களை பெற வேண்டுமெனில் அவற்றை அதிக நாட்களுக்கு பிரிட்ஜில் வைக்காமல் அவற்றை உடனடியாக சாப்பிடுவது நல்லது.

லிட்சியின் ஊட்டச்சத்து மதிப்பு :

லிட்சி பழம் உங்களுக்கு உகந்த ஊட்டச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடென்ட்களை வழங்குகிறது. ஃப்ரெஷ் லிட்சி பழம் 100 கிராமில் (3.5 அவுன்சஸ்) :

  • 66 கேலோரிகள்

  • 0.83 கிராம் புரத சத்து

  • 0.44 கிராம் கொழுப்பு, 16.5 கிராம் கார்ப்ஸ் சத்து நிறைந்தது

  • 1.3 கிராம் நார்சத்து நிறைந்தது

  • 15.2 கிராம் இனிப்பு தன்மை

  • வைட்டமின் சி: 71.5 மில்லிகிராம்

கர்ப்ப காலத்தில் லிட்சி தரும் நன்மைகள் :

உங்களுக்கு அறிந்துக்கொள்ள வேண்டிய 5 ஆரோக்கிய நன்மைகள் பின்வருமாறு

  • லிட்சி பழம் வைட்டமின் சி நிறைந்தது, இது உங்கள் உடலில் கொழுப்பாக மாற்றும் செயல்முறையை செய்யும் என்சைம்களை வேகப்படுத்தும்.

  • லிட்சியிலிருக்கும் ருட்டின் எனும் சேர்மம் உங்கள் இரத்த நாளங்களை வலிமைப்படுத்துவும், அது எளிமையாக உடையவும் வழிவகுக்கவும்.

  • லிட்சி பழங்களில் அதிக பாலிபினால் இருக்கிறது. இது எடையை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட லிவர்களை குணப்படுத்தவும், டைப் 2 டயப்பிட்டீஸ்களை கட்டுப்படுத்தும். இது கர்ப்பக்காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த உதவும்.

  • லிட்சி பலம் டயட்டரி நார்ச்சத்துக்கள் நிறைந்தது. எனவே, இது அஜீரணம் மற்றும் மலசிக்கல்களை தடுத்து குடல்களின் இயக்கங்களை எளிதாக்குகின்றது.

  • லிட்சியில் சிறிய அளவு பொட்டாஷியம் இருக்கிறது. இது நமது உடலில் இருக்கும் திரவங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் எப்படி லிட்சியை சாப்பிடுவது :

  • அதன் தோல் மற்றும் விதையை நீக்கிவிட்டு அப்படிய முழு பழத்தையும் சாப்பிடவும்.

  • புட்டிங்ஸ் அல்லது ஸ்மூத்திகளில் சேர்த்துக்கொள்ளலாம்

  • அவற்றை நாம் சாலட், சீரியல், அல்லது யோகர்ட்​​டில் சேர்த்து சாப்பிடலாம்

  • மற்ற பழங்களுடன், நீங்கள் ஃப்ரெஷ் ஜுஸ்கள் அல்லது மாக்டெயில்களில் சேர்க்கவும்

  • மற்ற பழங்களுடன், அதன் மேல் பரப்பலாம் அல்லது டாப்பிங்காக சேர்க்கலாம்

  • சீஸ் பிளாட்டர் அல்லது டெசர்ட்டிலும் நீங்கள் அதை சேர்க்கலாம்.

முடிவுரை :

லிட்சிகள் சாப்பிடுவதினால் கர்ப்பிணி பெண்கள் அவர்களது ஆரோக்கிய தேவையையும் பூர்த்தி செய்துக்கொள்ளலாம். அது அவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் நல்லது. ஏனெனில் லிட்சிகள் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அதி முக்கிய ஊட்டச்சத்து நிறைந்தது. உங்களால் அதிக லிட்சி பழங்கள் சாப்பிட முடியாத சூழ்நிலை இருப்பின், குறைந்த அளவாவது சேர்த்துக்கொள்ள பாருங்கள்.

நீங்கள் அளவிற்கு அதிகமாக சாப்பிடாதவரை, லிட்சி பழம் உங்கள் அன்றாட டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான பழம். நீங்கள் கர்ப்பிணி என்றால், லிட்சி சாப்பிடுவதற்கு முன்பு நீங்கள் எப்பொழுதும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். இந்தியாவின் அதிகம் நம்பப்படும் பேரண்ட்டிங் பிளாட்பார்ம், மைலோ ஃபேமிலியில் பேரண்ட்டிங் பற்றி மேலும் அறிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் பதிவு செய்தல் மட்டுமே.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. குழந்தைக்கு லிட்சி நல்லதா?

ஆம், குழந்தைக்கு லிட்சி சிறந்தது. நீங்கள் உங்கள் குழந்தையை அவர்களுக்கு எவ்வளவு லிட்சி வேண்டுமோ அவ்வளவு லிட்சி பழங்களை சாப்பிட அனுமதிக்கலாம். அவர்கள் ஆரோக்கியமாக இருக்கவும், ஆரோக்கியமான, முழு டயட் சேர்ந்த உணவை உண்ணுவதையும் உறுதி செய்துக்கொள்ளுங்கள். எல்லா உணவு வகைகளும் டையட்டில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

2. லிட்சிப்பழத்திற்கு ஏதேனும் பக்க விளைவுகள் இருக்கிறதா?

டயபிட்டீஸ் இருக்கும் மக்கள் அவர்களது லிட்சி பழம் உட்கொள்ளலை குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அது அதீத சக்கரை அளவைக்கொண்டது. சிலருக்கு அவை அலர்ஜியை ஏற்படுத்தலாம். ஹார்மோனல் பிரச்சனை என்பது லிட்சி பயன்பாட்டின் மற்றொரு பக்கவிளைவு. உடலினுள் ஏற்படும் இரத்த கசிவு, காய்ச்சல் மற்றும் மற்ற அறிகுறிகளும் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

3. லிட்சி சூடானதா? அல்லது குளிர்ச்சியானதா?

லிட்சி என்பது ‘சூடு’ நிறைந்த பழம்; அதை ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடுவது கொப்பளங்கள், தொண்டை வலி மற்றும் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.