This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கர்ப்பம் தரிக்க எவ்வளவு காலம் ஆகும்? ( how long it takes to get pregnant in Tamil?)

Conception
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 24, 2026
கர்ப்பம் தரிக்க எவ்வளவு காலம் ஆகும்? ( how long it takes to get pregnant in Tamil?)
Likes58 Likes|
Read time7 min

இப்போது நீங்கள் கர்ப்பமாக முடிவு செய்துள்ளீர்கள் என்றால், அது எப்போது நடக்கும் என்று நீங்கள் கவலைப்படக் கூடும். உடலுறவுக்குப் பிறகு கர்ப்பமாகிவிட வேண்டும் என்று நீங்கள் முயற்சிக்கும் முதல் மாதத்தில் அது நடக்காமல் போகலாம். அதனால், உடலுறவுக்குப் பிறகு கர்ப்பம் தரிக்க எவ்வளவு காலம் ஆகும்? என்கிற இந்தக் கேள்விக்கு இவ்வளவு காலம் ஆகும் என்று உறுதியாக பதில் கூற முடியாது. இங்கு கீழே உள்ள தகவல்கள் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களிடம் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

உடலுறவுக்கும் கர்ப்பத்திற்கும் இடையிலான இடைவெளி காலம்(the intervel between intercourse and pregnancy in tamil) :

  • புள்ளிவிவர தரவுகளின்படி 30% பெண்கள் ஒரு மாதத்தில் கருத்தரிக்கிறார்கள் 60% பெண்கள் மூன்று மாதங்களிலும் 80% பெண்கள் ஆறு மாதங்களிலும் கருத்தரிக்கிறார்கள்

  • 85% பெண்கள் ஒரு வருட முயற்சிக்குப் பிறகு கர்ப்பமாகிறார்கள். இருப்பினும், தோராயமாக 10% தம்பதிகளிடம் மலட்டுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சையின்றி அவர்கள் இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது.

  • நாம் இப்போது பார்த்தபடி , வெற்றிகரமான கர்ப்பத்தின் விகிதம் ஒரு பன்முக காரணியைக் கொண்டிருக்கிறது. இது ஒவ்வொரு நபருக்கும் வேறுபட்டதாக இருக்கும். உடலுறவுக்குப் பிறகு கர்ப்பம் தரிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.

கருத்தரிப்பு எப்போது நிகழ்கிறது?(when does conception occurs)

  • புள்ளிவிவரங்களின்படி, ஒரு வருடம் கருத்தரிக்க முயற்சித்த பின்னர் 20வயதுடைய ஆரோக்கியமான, கரு உருவாகக்கூடிய பெண்களில் சுமார் 86% பேருக்கு கர்ப்பம் உண்டாகிறது. 30 வயதுடைய பெண்களில், தோராயமாக 63% பெண்கள் கருத்தரிக்க முயற்சித்த ஒரு வருடத்திற்குப் பிறகு கருத்தரிக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக, 40 வயதுடைய பெண்களில் ஆரோக்கியமான, கருவை சுமக்கக்கூடிய 36% பேர் மட்டுமே கருத்தரிக்கிறார்கள்.

  • 35 வயதுக்குக் குறைவான இளம் தம்பதிகள் ஒரு வருடம் முயற்சி செய்தும் 35 வயது அல்லது அதற்கு அதிகமான வயதுடைய பெண்கள் ஆறு மாதங்கள் முயற்சித்து கர்ப்பம் தரிக்கவில்லை என்றாலும் மலட்டுத்தன்மை என வரையறுக்க முடியும்.

  • கர்ப்பம் தரிப்பதற்கு, விந்தணுக்கள் கரு முட்டையை சென்றடைவதற்கு அனைத்து வழிகளிலும் பயணிக்க வேண்டும். எனவே, முதல் விஷயம்: பெண்களின் பிறப்புறுப்பில் விந்தணு முதலில் நுழைய வேண்டும். இது அடுத்த பெரிய கேள்வி ஒன்றை எழுப்புகிறது, "ஒரு விந்தணு கரு முட்டையை அடைய எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும்?''

  • உடலுறவின்போது ஒரு ஆணின் இனப்பெருக்க உறுப்பு (ஆண்குறி) பெண்ணின் இனப்பெருக்க உறுப்புக்குள் (பிறப்புறுப்பு) விந்து வெளியேறும் போது இது பொதுவாக நிகழ்கிறது.

உங்களுக்குத் தெரியுமா?(do you know)

விந்துவின் நுழைவு பெண்ணுறுப்பில் வந்து உங்கள் பிறப்புறுப்புக்குள் நுழையும் போது கூட நடக்குமா? ஆனால் அந்த விந்தணுக்கள் முட்டையைச் சென்றடைவதற்கு இன்னும் நீண்ட கால நேரம் தேவையாக இருக்கிறது.

கர்ப்பம் தரிக்க உடலுறவு(Intercourse to Pregnancy in Tamil) :

நாள்1 :

உடலுறவு என்பது உங்கள் கர்ப்பப் பயணத் தொடக்கத்தின் ஒரு பகுதியாகும். அடுத்த சில நாட்களுக்கு, விந்தணு உங்கள் பிறப்புறுப்பு வழியாக நீந்துகிறது. பின்னர் உங்கள் கருப்பை வாய் மற்றும் கருப்பை வழியாக, உங்கள் ஃபலோபியன் குழாய்களை அடைந்து முட்டையைத் தேடுகிறது.

இப்போது, ​​நமது பெரிய கேள்விக்கு வருவோம், "ஒரு விந்தணு முட்டையை அடைய எவ்வளவு நேரம் எடுக்கும்?''

நாள் 2 :

உடலுறவுக்குப் பிறகு, விந்தணுக்கள் உங்கள் உடலில் ஆறு நாட்கள் வரை இருக்கும். முட்டை வெளியாகும் வரை அவை காத்திருக்கும். ஒரு முட்டையை வெளியிடும் இந்த செயல்முறை முட்டை வெளியீடு என அழைக்கப்படுகிறது. விந்தணு முட்டையை சென்றடைய முடிந்தால், அது கருத்தரித்தல் என்று அழைக்கப்படுகிறது.

நாள் 3 :

இப்போது, ​​கருவுற்ற முட்டை வளரத் தொடங்குகிறது மற்றும் மெதுவாக கருப்பையை நோக்கி நகரத் தொடங்குகிறது. இந்தச் செயல்முறை அதன் இறுதி இலக்கை அடைய ஒரு வாரம் வரை ஆகலாம்.

நாள் 8 :

விந்து அங்கு சென்றதும், அது கருப்பையின் உள்வரிச் சவ்வில் (uterine lining) இணைகிறது. அதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம். இந்த இணைப்பு செயல்முறை கரு பதித்தல் என்று அழைக்கப்படுகிறது. அப்போதுதான் கர்ப்பம் தொடங்குகிறது.

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? இல்லையா? என்பதை அறிய ஒரே உறுதியான வழி வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்வதுதான். அருகிலுள்ள மருந்தகங்களில் இந்தக் கருவியை நீங்கள் வாங்கலாம் அல்லது உங்கள் அருகில் உள்ள சுகாதார மையம் அல்லது மகப்பேறு மருத்துவரை அணுகலாம்.

கர்ப்பமாக இருக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்(Essential Things to Keep in Mind While Getting Pregnant in Tamil)

நம் உடல்கள் எவ்வளவு சிக்கலானவை மற்றும் திறமையானவை என்பதையும், திரைக்குப் பின்னால் எவ்வளவு சிக்கலானது என்பதையும் அறிய முடியாது. ஆனால் நீங்கள் கர்ப்பமாக இருக்க முயற்சிக்கும்போது பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்:

  • உங்கள் கரு முட்டைகளை கணக்கில் எடுத்துக்கொள்வது(Taking account of your eggs):

நீங்கள் 1-2 மில்லியன் முட்டைகளின் ஒன்றில் இருந்து பிறந்தீர்கள். பருவமடைதல் மூலம், நீங்கள் 300-5லட்சம் கருமுட்டைகளை கொண்டிருப்பீர்கள். இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. நீங்கள் 37 வயதுக்குள் இருக்கும்போது சுமார் 25 ஆயிரம் கரு முட்டைகளைக் கொண்டிருப்பீர்கள். 51 வயதில் ஆயிரம் கரு முட்டைகளைக் கொண்டிருப்பீர்கள். அந்த வயதில் தான் பெரும்பாலான பெண்கள் இறுதி மாதவிடாய் காலத்தை கடப்பார்கள்.

  • வயது காரணி(Age factor):

சமீபத்திய ஆராய்ச்சிபடி, 32 வயதில் நீங்கள் கருவுறும் வாய்ப்பு குறையத் தொடங்குகிறது. எனவே, ''கர்ப்பம் தரிக்க எவ்வளவு காலம் ஆகும்?'' என்ற உங்கள் மிகப் பெரிய கேள்விக்கு வயது தான் பதிலாக இருக்க முடியும்.

  • உடல் எடை(Body Weight):

ஆரோக்கியமான பிஎம்ஐக்கு (பாடி மாஸ் இண்டெக்ஸ்) மேல் உடல் எடை இருந்தால் நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் குறையக்கூடும். எனவே, ஆரோக்கியமான பிஎம்ஐயை பராமரிக்க எடுத்துக் கொள்ளும் உணவு, உணவுத்திட்டம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை உன்னிப்பாகச் சரிபார்க்க வேண்டியது அவசியம். இது உங்களை விரைவில் கர்ப்பமாக்க அனுமதிக்கிறது.

  • கருமுட்டை வெளியீடு கண்காணிப்பு(Tracking ovulation):

வெறும் யூகத்திற்கு பதிலாக, மிகவும் துல்லியமான முடிவுகளை வழங்க கருமுட்டை வெளியீடு முன்கணிப்பு கருவியைப் பயன்படுத்துவது நல்லது. உங்கள் அடிப்படை உடல் வெப்பநிலையைப் பதிவுசெய்வதும் உங்கள் மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிப்பதும் கர்ப்பம் தரிப்பதற்கான சிறந்த நாட்களை அடையாளம் காண உதவும்.

  • முட்டை உறைதல்(Egg freezing):

இப்போதெல்லாம், பெண்கள் பொதுவாக குழந்தை பெற்றுக் கொள்வதை 20 வயது, 30 வயது அல்லது 40 வயது வரை கூட தள்ளிப் போடுகிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுவதால் ஏற்படும் விளைவுகளை நாங்கள் வழக்கமாக வலியுறுத்தி கூறிவிடுவோம். எனவே, சில பெண்கள் முட்டை உறைதல் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் உடலுறவு

  • கருவுறுதலுக்காக உடலுறவு கொள்ளும் நேரம்(Timing sex with fertility):

"எப்போது கருத்தரித்தல் ஏற்படுகிறது? '' மிகவும் குழப்பமான கேள்வியை அகற்றுவதற்கு, நீங்கள் சில வீட்டுப்பாடம் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்.

கருமுட்டை வெளியீடு நடைபெறும் காலத்தில் பொருந்துமாறு உடலுறவைத் திட்டமிட நீங்கள் முயற்சிக்கலாம். கருப்பைகள் முட்டையை வெளியிடும் போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இந்த கரு முட்டை அடுத்த 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை இருக்கும்.

நாம் முன்பு விவாதித்தபடி, விந்தணுக்கள் ஐந்து நாட்கள் வரை உயிர்வாழும். எனவே, கரு முட்டை வெளியாகும் நேரத்திற்கு வழிவகுக்கும் ஐந்து நாட்களில் நீங்கள் உடலுறவு கொண்டால், நீங்கள் கருத் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உங்களுக்குத் தேவையானவை

மேலே குறிப்பிட்டுள்ளபடி, 32 முதல் 37 வயதுக்கு பிறகும் கரு உருவாகும் தன்மை குறைந்து கொண்டே வருகிறது. எனவே, நீங்கள் எந்த நேரத்திலும் கர்ப்பமாக திட்டமிட்டால், ''கர்ப்பம் தரிக்க எவ்வளவு காலம் ஆகும்?'' என்ற கேள்விக்கான சரியான பதில் உங்களுக்கு இப்போது கிடைத்து இருக்கும் என்று நம்புகிறோம். உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான கருத்தரிப்பு உண்டாக எங்களின் வாழ்த்துக்கள்!

TAGS :

How to conceive in tamil, process of concieve in Tamil, Howlong take a period to concieve inTamil, period of ovalation in tamil, how long it takes to get pregnant In English, how long it takes to get pregnant In Hindi, how long it takes to get pregnant In Telugu, how long it takes to get pregnant In Bengali

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Mylo App Banner

Your parenting partner
in your pocket.

Access 24/7 expert tools, trackers, and a
supportive community.
Apple App StoreGoogle Play Store
Apple App StoreGoogle Play Store

Article Posted Under

Helpful Tools & Calculators

undefined icon
Pregnancy Calendar
See baby growth week by week
arrow_right
undefined icon
Mylo Store
Shop for mom & baby
arrow_right
undefined icon
Pregnancy Diet Chart
Trimester & region-wise diet plan
arrow_right
undefined icon
Mamasutra
Safe positions for pregnancy
arrow_right
undefined icon
Save Memories
Store baby's photos & firsts
arrow_right
undefined icon
Weight Tracker
Monitor your weight
arrow_right
undefined icon
Zordar Dadi Ke Nuskhe
Gharelu nushke that work
arrow_right
undefined icon
My Calendar
Predict periods & record symptoms
arrow_right
undefined icon
Ovulation Calendar
Know your monthly cycle
arrow_right
undefined icon
Pill Reminder
Get reminded for medicines
arrow_right
undefined icon
Vaccination Tracker
Never miss a vaccine date
arrow_right
undefined icon
Make Baby Sleep
Play white noise & sleep music
arrow_right
undefined icon
Pregnancy Music
Play calming music for baby
arrow_right
undefined icon
Baby Diet Chart
Age-wise food plans for baby
arrow_right
Gajalakshmi Udayar
Gajalakshmi Udayar

Related Articles

Questions about this article

  • trying to conceive

    கரு முட்டை எப்போது வெளிப்படும்

  • Asked when trying to conceive

    I missed my periods for for days when I will check pregnancy test

  • trying to conceive

    Hii, enaku erandu boy baby iruku. Ippo enaku girl baby venum enna seiya venum please sollunga.

Related Topics

Recently Published Articles

Your body needs extra nutrition this trimester - these can help.

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.