Skin Changes
16 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
சில நேரங்களில், பலர் உட்புற தொடை ஒன்றோடொன்று தேய்வதால் வலியை அனுபவிப்பார்கள். இது சங்கடமாகவும் எரிச்சலாகவும் இருக்கும். தொடையின் இருபுறமும் தோலுக்கு இடையில் உராய்வு ஏற்படும் போது இது நிகழ்கிறது.
இந்த உராய்வு காரணமாக சருமத்தின் மேற்பரப்பு தோல் உரிந்து எரிச்சலைக் கொடுக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது ஒருவர் ஓடும் போது அல்லது நடக்கும் போது நிகழ்கிறது. அரிப்பு, வலி மற்றும் எரிச்சல் தொடைகளுக்கு இடையில் தொடர்ச்சியாக உராய்வு ஏற்படுவதால் காணப்படுகிறது.
அதே போல், தொடைகள் நீண்ட நேரம் ஒன்றோடு ஒன்றாக அழுத்தும்போதும் இது நிகழலாம். இது குறித்த காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை மற்றும் இதை எவ்வாறு தடுப்பது என்பதை இங்கே விவாதிக்கலாம்.
உள் தொடை தேய்தல் அல்லது உட்புற தொடை உராய்வு என்பது விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். தொடைகளுக்கு இடையிலான உராய்வு எரிச்சலையும் வலியையும் ஏற்படுத்துகிறது.
இறுக்கமான ஆடைகளை அணிபவர்களுக்கு இந்த நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நிலை மருத்துவ ரீதியாக டைனியா க்ரூரிஸ் அல்லது ஜாக் நமைச்சல் என்று அழைக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், நாள்பட்ட உட்புற தொடை உராய்வானது இரண்டாம் நிலை நோய்த் தொற்றுகளுக்கு கூட வழிவகுக்கும்.
பல சந்தர்ப்பங்களில், உள் தொடைகளில் உள்ள தோல் வறண்டு போகலாம். இது உராய்வை அதிகரிக்கிறது, இதனால் எரிச்சல் ஏற்படஅதிக வாய்ப்புள்ளது. மற்ற சந்தர்ப்பங்களில், அரிப்பை ஏற்படுத்தக்கூடிய சிரங்கு, சோரியாசிஸ் அல்லது பிற தோல் எரிச்சல்கள் போன்ற பிரச்சனைகள் தோலில் தேய்தலை ஏற்படுத்தக்கூடும்.
மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிவது உராய்வை அதிகரிக்கும் மற்றும் உள் தொடையில் தோல் உரிவதற்கு காரணமாக அமையும்.
லெக்கிங்ஸ் மற்றும் சைக்கிளிங் ஷார்ட்ஸ் போன்ற தொடைகளைச் சுற்றி இறுக்கமாக பொருந்தும் ஆடைகளை அணிபவர்களுக்கு இது கண்டிப்பாக ஏற்படும் வாய்ப்புள்ளது.
உடலில் அதிக ஈரப்பதம் இருக்கும் போது தோல் உரிதல் ஏற்படும், ஏனெனில் தோல் ஈரமாக இருக்கும் போது அது உராய்வுக்கு உட்படுகிறது. வியர்வை அல்லது ஈரமான ஆடைகளை அணிந்து கொண்டு நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஈரப்பதம் ஏற்படலாம்.
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் உள் தொடை தேய்வதற்கு அதிக எடை ஒரு முக்கிய காரணமாகும். அதிக எடையுடன் இருப்பது தொடைகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இது உராய்வு மற்றும் தேய்வதை அதிகரிக்கிறது.
சிலர் டியோடரண்ட் அல்லது ஆன்டிபெர்ஸ்பிரண்ட் போன்ற தொடை பகுதிக்கு பொருத்தமற்ற தோல் பராமரிப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். இது தோல் பாதிப்பு மற்றும் அதிகரித்த உராய்வுக்கு வழிவகுக்கும். இது தேய்தலுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
இந்த நடவடிக்கைகள் உட்புற தொடை தேய்தலுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இது குறிப்பாக பொருத்தமான ஆடைகளை அணியாத அல்லது உராய்வைக் குறைக்க சரியான தயாரிப்புகளைப் பயன்படுத்தாதவர்களுக்கு ஏற்படுகிறது.
சிரங்கு மற்றும் சோரியாசிஸ் போன்ற பிரச்சனைகள் தோலில் தேய்தலை ஏற்படுத்தும். ஏனென்றால், இந்த கண்டிஷன்கள் சருமத்தை வறண்டதாகவும் அதிக சென்சிடிவ் ஆனதாகவும் மாற்றும். இது தோல் தேயும் அபாயத்தை அதிகரிக்கிறது.
உள் தொடை தேய்தலின் மிகவும் பொதுவான அறிகுறி தொடைகளின் பக்கத்தில் சொறி ஏற்படும். இந்த சொறி சிவப்பாகவும், அரிப்பு மற்றும் வலியை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம். இது சருமத்தில் எரிச்சல் அல்லது தோல் உரிவதற்கு வழிவகுக்கும்.
தொடை இடுக்கில் காணப்படும் பிற பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
அரிப்பு
எரிச்சல்
சிவந்து போதல்
கொப்புளங்கள்
சொறி
ஹைப்பர் பிக்மென்டேஷன்
கட்டி
வீக்கம்
நீர் வடிதல்
வலி
பொதுவாக உட்புற தொடை உராய்வுக்கான சிகிச்சை அதன் அடிப்படை காரணத்தைப் பொறுத்து அமையும். எந்தவொரு சிகிச்சையையும் முயற்சிக்கும் முன், அந்தப் பகுதியை நன்கு சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.
தொடை இடுக்கு உராய்வை தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படும் சில பொதுவான முறைகள் பின்வருமாறு:
சருமத்தை குணப்படுத்தவும் சரிசெய்யவும் உதவும் பல தோல் பராமரிப்பு தயாரிப்புகள் கிடைக்கின்றன. இந்த தயாரிப்புகளில் தொடையில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட லோஷன்கள், கிரீம்கள் அல்லது எண்ணெய்கள் இருக்கலாம்.
தொடையில் ஏற்படும் தோல் உராய்வை குணப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் உதவ, அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி (ஏ.ஏ.டி) பெட்ரோலியம் ஜெல்லியின் மெல்லிய கோட்டைப் பயன்படுத்த அறிவுறுத்துகிறது. இந்த லேயரானது எரிச்சலூட்டும் தோல் மற்றும் எந்தவொரு கொப்புளங்கள் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. இது ரணத்திலிருந்து விரைவாக மீள உதவுகிறது.
உள் தொடையுடன் தொடர்புடைய அரிப்பு தாங்க முடியாததாகிவிட்டால், பின்வரும் வெவ்வேறு முறைகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த அறிகுறியைப் போக்கலாம். மருந்து கடைகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய ஆண்டிஹிஸ்டமைன் எடுத்துக்கொள்வது, அந்தப் பகுதிக்கு ஒத்தடம் கொடுப்பது, கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவது அல்லது மருந்தகங்களில் பரிந்துரை இன்றி கிடைக்கும் (ஓடிசி) மேற்பூச்சு கிரீம் பயன்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.
டால்கம் பவுடர், பேபி பவுடர், சோள மாவு மற்றும் ஆரோரூட் பவுடர் ஆகியவற்றை உள் தொடைகளில் தடவுவது சருமத்தில் தேய்தலை தடுக்க உதவும். ஏனென்றால், இந்த பவுடர்கள் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, தொடைகளுக்கு இடையிலான உராய்வைக் குறைக்கும்.
உள் தொடையில் ஏற்படும் உராய்வுக்கான பிற சிகிச்சையில் மேற்பூச்சு ஆண்டிபயாடிக் பயன்படுத்துவது, மென்மையான-பேண்டேஜ்களை சுற்றிக்கொள்வது மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சக்கூடிய துணிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிவது ஆகியவை அடங்கும்.
உள் தொடை உராய்வு ஏற்படுவதைத் தடுக்க அல்லது குறைக்க ஒருவர் எடுக்க வேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு:
சௌகரியமாக இருப்பதற்கும், உராய்வைத் தவிர்ப்பதற்கும் சரியான நீரேற்ற அளவைப் பராமரிப்பது முக்கியம். நீரேற்றத்துடன் இருப்பது என்பது நாள் முழுவதும் ஏராளமான தண்ணீரைக் குடிப்பதாகும். இது குறிப்பாக உடல் செயல்பாடுகளில் ஈடுபடும்போது தேவைப்படுகிறது.
மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிவது தொடைகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும், இது தொடை தேய்தல் அபாயத்தை அதிகரிக்கும்.
குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் போது அல்லது பிற உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் போது, லூசாகப் பொருந்தும் ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே! - பைலோனிடல் நீர்க்கட்டி: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை.
சில கிலோ எடையைக் குறைப்பது மிகவும் கவர்ச்சிகரமானவராக மாறுவதற்கு மட்டுமான வழி அல்ல, அதே நேரத்தில், ஒருவர் வேறு பல நன்மைகளைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, ஒருவர் அவரின் எடை வரம்புக்குள் இருந்தால், தொடையில் உராய்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
Yes
No
Written by
aviraparaiyar
aviraparaiyar
கர்ப்ப காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் அபாயங்கள் & பக்க விளைவுகள்
பிரசவத்திற்கு பிறகு எளிமையான பயனுள்ள எடைக் குறைப்பு குறிப்புகள் மற்றும் டயட் பிளான்கள்.
டாப் 10 நெயில் ஆர்ட் டிசைன்கள்
நகத்தை பராமரிக்க 5 டிப்ஸ்
மார்பக வீக்கம் (பால் கட்டுதல்) பற்றி மேலும் அறிக- காரணங்கள், சிகிச்சை & அறிகுறிகள்
நேர்மறையான குழந்தை வளர்ப்பின் நன்மைகள் என்னென்ன?
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Mylo is a master brand offering solutions through it's subsidiaries - Mylo Care and Mylo Baby.
Mylo Care offers science backed, expert led solutions across multiple health concerns.
Mylo Baby is a one stop solution for young parents for all their baby's needs.
Lactation | Pain management | By Ingredient | Saffron | Shatavari | Nivarini | Skin - Weight | Weight Management | By Ingredient | Wheatgrass | Apple Cider Vinegar | Skin - Fertility | PCOS | By Ingredient | Chamomile | Skin - Hygiene | Intimate Area Rashes | Diapers & Wipes | Disposable Diapers | Cloth Diapers |