Diet & Nutrition
16 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
"கர்ப்ப காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?" என்று கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி சிந்திப்பதுண்டு. நல்ல செய்தி என்னவென்றால், கர்ப்பிணிப் பெண்கள் ஐஸ்கிரீமை சாப்பிடலாம், ஆனால், மிதமான அளவுகளில் மட்டுமே. அதே சமயம், கர்ப்ப காலத்தில் ஐஸ்கிரீமுடன் தொடர்புடைய அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும்.
கர்ப்ப காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று அடிக்கடி ஆசை வரலாம். அதனை சமாளிப்பது சற்று கடினம் தான். பொதுவாக கர்ப்பிணிப் பெண் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு உணவும் அவரது வயிற்றில் வளரும் குழந்தையையும் சென்றடையும். அதனால் எந்த ஒரு தீங்கு விளைவிக்கும் உணவை எடுத்துக் கொண்டாலும் அது குழந்தையை பாதிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்வது அவசியம் ஆகும்.
பொதுவாக கர்ப்ப காலத்தில் ஹார்மோன் அளவுகள் அதிகரித்து காணப்படும். அவை உங்கள் இது போன்ற ஆசைகளை கட்டுப்படுத்துவதை கடினமாக்கும். கர்ப்ப காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது ஒரு பெரிய கவலைக்கிடமான விஷயம் ஒன்றும் அல்ல. ஆனால், ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து விழிப்புடன் இருப்பது முக்கியம்.
ஐஸ்கிரீமின் ஊட்டச்சத்து மதிப்பு, கர்ப்ப காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட ஏங்குவதற்கான காரணம், இதை சாப்பிடுவதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது தொடர்பான பிற பரிசீலனைகள் போன்றவற்றைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.
ஐஸ்கிரீமில் உள்ள முக்கிய பொருட்கள் பால், கிரீம், கோகோ, காய்கறி கொழுப்புகள், சர்க்கரைகள், முட்டை, நட்ஸ், பழம், நௌகட், குக்கீஸ் மற்றும் பிற சேர்க்கைகள் ஆகும். ஐஸ்கிரீமின் 100 கிராம் பரிமாறலில் கிடைக்கும் ஊட்டச்சத்து மதிப்புகள் பின்வருமாறு:
கலோரிகள்: 200-210 கலோரிகள்
கொழுப்பு: 11 கிராம் அல்லது அதற்கு மேல்
கொலஸ்ட்ரால்: 44 மில்லி கிராம்
கார்போஹைட்ரேட்: 24 கிராம்
சர்க்கரை : 21 கிராம்
சோடியம்: 80 மில்லி கிராம்
எனவே, கர்ப்பிணிகள் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? இந்த கேள்விக்கான பதில் ஆம் என்பது தான். ஆனால், உட்கொள்ளும் அளவுகளை மனதில் கொள்வது அவசியம். இதில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ளது. எனவே, நுகர்வைக் கட்டுப்படுத்துவது முக்கியம். நீங்கள் சிறிதளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஐஸ்கிரீம் மீது ஆர்வம் ஏற்படுவதற்கான காரணங்கள் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் ஏன் ஐஸ்கிரீம் மீது அதிக ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதற்கான நுண்ணறிவை சில கோட்பாடுகள் வழங்கக்கூடும்.
இது தொடர்பான ஒரு கோட்பாடு என்னவென்றால், ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பினால் கர்ப்ப காலத்தில் அதிக ஏக்கத்தைத் தூண்டுகிறது. மற்றொரு சாத்தியமான விளக்கம் என்னவென்றால், இந்த அதிகரித்த ஆர்வம் உடல் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தை இழக்கிறது என்பதைக் குறிக்கலாம்.
ஐஸ்கிரீமை நாம் சிறிய அளவில் உட்கொண்டால் கர்பத்திற்கு நல்லது. மிதமாக ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இது மனநிலையை பூஸ்ட் செய்கிறது மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்குகிறது. இவை குழந்தையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் இன்றியமையாதவை ஆகும்.
கர்ப்ப காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் சில அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பொதுவான சில விஷயங்கள் பின்வருமாறு:
ஒரு ஆய்வில் கர்ப்ப காலத்தில் ஐஸ்கிரீமை தொடர்ந்து உட்கொள்வது கர்ப்பகால நீரிழிவு நோயை உருவாக்கும் அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஐஸ்கிரீமில் சர்க்கரை அதிகம் உள்ளது. இதை அதிகமாக உட்கொண்டால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் எடை அதிகரிப்பு ஏற்படும்.
பால் அல்லது பொதுவாக ஐஸ்கிரீமில் காணப்படும் பிற பொருட்கள் சிலருக்கு சென்சிட்டிவாக இருக்கலாம். இது ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
டெலிவரிக்கு பிறகு புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பெரும்பாலும் இரத்த சர்க்கரை அளவு கடுமையாக குறைந்து காணப்படுகிறது
ஐஸ்கிரீம் மற்றும் பிற உயர் சர்க்கரை உணவுகளை சாப்பிடுவது முன்கூட்டியே பிரசவிக்கும் அபாயத்தை அதிகரிக்கும். ஏற்கனவே கர்ப்ப காலத்தில் சிக்கல்கள் கொண்டவர்களுக்கு முன்கூட்டிய பிரசவம் நிகழும் வாய்ப்பு உள்ளது.
கர்ப்ப காலத்தில் எப்போதாவது ஐஸ்கிரீம் சாப்பிடுவது ஏற்புடையது. ஆனால், கர்ப்பமாக இருக்கும் போது மொத்தமாக நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டியது அவசியம். அதை மற்ற ஆரோக்கியமான உணவுகளுடன் சமப்படுத்த வேண்டும். ஏதேனும் எதிர்பாராத பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால், சரியான வழிகாட்டுதலுக்கு மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் பன்னீர் நல்லதா? இதன் நன்மைகள், பக்க விளைவுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
"கர்ப்ப காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?" என்பதற்கான ஆலோசனை என்னவென்றால், கர்ப்ப காலத்தில் பெண்கள் ஐஸ்கிரீமை மிதமாக சாப்பிடலாம் என்பது தான். மற்ற ஆரோக்கியமான உணவுகளுக்கு மாற்றாக இதை சாப்பிட வேண்டாம்.
கர்ப்ப காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். ஆனால், அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதை மட்டுமே நம்புவது தவறானது.
19 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு உகந்த ஆரோக்கியத்திற்கு தினமும் 1,000 மில்லிகிராம் கால்சியம் தேவைப்படுகிறது. ஏசிஓஜி இந்த பரிந்துரையை வழங்குகிறது.
கர்ப்ப காலத்தில் பிற சத்தான உணவுப் பொருட்களால் கூட பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களையும் வழங்க முடியும். எனவே, பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற பிற ஆரோக்கியமான உணவுகளுக்கு மாற்றாக இல்லாமல் ஐஸ்கிரீமை மிதமாக சாப்பிடுவது நல்லது.
பெண்கள் பெரும்பாலும் வயிற்றில் உள்ள கருவுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற பயம் அல்லது எடை அதிகரிப்பு குறித்த கவலைகள் காரணமாக தங்களுக்கு பிடித்த குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். எதையும் அதிகமாக உட்கொள்வது நிச்சயமாக தீங்கு விளைவிக்கும். அதனால் தான் ஐஸ்கிரீமை மிதமாக உட்கொள்வது முக்கியம்.
கர்ப்ப காலத்தில் ஐஸ்கிரீம் நுகர்வு பற்றிய கட்டுக்கதைகள் குறித்து உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை மருத்துவர் அல்லது பிற சுகாதார நிபுணரிடம் பேசுவதன் மூலம் தீர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் போது உணவு அல்லது உடற்பயிற்சி வழக்கத்தை மாற்றுவதற்கு முன்பு எப்போதும் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு பெண்ணும் குழந்தையும் தனித்துவமானவர்கள். எனவே, ஒரு நபருக்கு வேலை செய்வது மற்றொருவருக்கு வேலை செய்யாமல் போகலாம். ஆனால், மிதமான மற்றும் சரியான வழிகாட்டுதலுடன், கர்ப்ப காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது நன்கு சீரான உணவின் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு பகுதியாக இருக்கும்.
Yes
No
Written by
aviraparaiyar
aviraparaiyar
பிரசவத்திற்கு பிறகு எளிமையான பயனுள்ள எடைக் குறைப்பு குறிப்புகள் மற்றும் டயட் பிளான்கள்.
டாப் 10 நெயில் ஆர்ட் டிசைன்கள்
நகத்தை பராமரிக்க 5 டிப்ஸ்
மார்பக வீக்கம் (பால் கட்டுதல்) பற்றி மேலும் அறிக- காரணங்கள், சிகிச்சை & அறிகுறிகள்
நேர்மறையான குழந்தை வளர்ப்பின் நன்மைகள் என்னென்ன?
குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடுவதில் உள்ள முதல் 8 ஆச்சரியமான உண்மைகள்
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Mylo is a master brand offering solutions through it's subsidiaries - Mylo Care and Mylo Baby.
Mylo Care offers science backed, expert led solutions across multiple health concerns.
Mylo Baby is a one stop solution for young parents for all their baby's needs.
Skin - Health & Wellness | Digestive Health | Lactation | Pain management | By Ingredient | Saffron | Shatavari | Nivarini | Skin - Weight | Weight Management | By Ingredient | Wheatgrass | Apple Cider Vinegar | Skin - Fertility | PCOS | By Ingredient | Chamomile | Skin - Hygiene | Intimate Area Rashes | Diapers & Wipes |