Diet & Nutrition
16 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
"பிரசவித்தல்" என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு நிகழக்கூடிய அழகிய தருணம். கர்ப்பம் அடைவது பற்றிய செய்தியிலிருந்து உண்மையில் ஒரு குழந்தையைப் பிரசவிப்பது வரை எல்லா வலிகளுக்கும் மதிப்புள்ளது. ஆனால், ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும், ஒரு புதிய தாய் அல்லது ஒரு குழந்தையை கருத்தரிக்க முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தனது கர்ப்பத்திற்குப் பிந்தைய எடையைப் பற்றி கவலைப்படுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு எடை அதிகரிப்பது என்பது இயற்கையானது மற்றும் அதற்காக வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை.
இந்த கட்டுரையானது பிரசவத்திற்குப் பின் எடைக் குறைப்பதை பற்றி பேசுகிறது; பிரசவத்திற்குப் பிறகு எடையைக் குறைப்பதற்கான சராசரி கால அளவு; இயற்கையான வழியில் எடை குறைப்பது எப்படி என்பது போன்ற சில பயனுள்ள டிப்ஸ்கள் மற்றும் பிரசவத்திற்குப் பின் எடையைக் குறைப்பதற்காக டயட்டில் சேர்க்க அல்லது தவிர்க்க வேண்டியவிஷயங்கள் என்ன என்பது குறித்தும் இங்கு பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் ஏன் எடை அதிகரிகிறது என்று பெரும்பாலான பெண்கள் ஆச்சரியப்படுகிறார்கள். கர்ப்ப ஹார்மோன் வளர்சிதை மாற்றம் என்று அழைக்கப்படும் ஹெச்.சி.ஜி ஹார்மோன், கர்ப்பிணிப் பெண்ணின் டைஜஷன் மற்றும் மெட்டோபாலிசத்தை ரெகுலேட் செய்கிறது. இந்த ஹார்மோன் தாயின் பசியை அதிகரிக்கிறது. மேலும், அவர் இரண்டு பேருக்கு தேவையான உணவை சாப்பிட ஆரம்பிக்கிறார். இதன் காரணமாக அவருக்கு கூடுதலாக எடை அதிகரிக்கிறது. அம்மாக்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், இந்த எளிய டிப்ஸ்கள் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு எடைக் குறைப்பு டயட் போன்ற தகவல்கள், அவர்களுக்கு கூடுதல் எடையைக் குறைக்க உதவும்.
உடலில் நீர்ச்சத்து இருக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். தாய்மார்கள் தங்கள் சிறுநீரின் தன்மையை கவனிக்க வேண்டும். சிறுநீர் தெளிவாக இல்லை என்றால், தண்ணீரை அதிகமாக பருக வேண்டும். அது தெளிவாக இருந்தால், அமைதியாய் இருங்கள்.
குழந்தைகள் 24/7 தாயின் கவனத்திற்காக ஏங்கிக் கொண்டே இருக்கும். இது தாயின் தூக்கத்தை இழக்கச் செய்கிறது. ஆனால், அதிகபடியான தூக்கத்தை இழப்பதால் கார்டிசோல் ஹார்மோனை வெளியிடுகிறது. இது பசியின்மை மற்றும் அதிகப்படியான உணவு அல்லது அருந்துவதை அதிகரிக்கிறது. இவை அவரது பிரசவத்திற்குப் பிறகு எடையை அதிகரிக்கின்றன.
பிரசவத்திற்குப் பிந்தைய எடை குறைப்பு என்பது ஒரு படிப்படியான செயல்முறையாகும். மேலும், இது சில மாதங்களில் நடந்துவிடாது. பதிலாக மருத்துவர்கள் பிரசவத்திற்கு பிந்தைய எடைக் குறைப்புக்கு ஓரிரு வருடங்கள் ஆகலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.
பிரசவத்திற்குப் பிறகான எடைக் குறைப்பு டயட் பிளானை பின்பற்றுவது மூலம் அம்மாவுக்கு பிரசவத்திற்குப் பிந்தைய எடையை குறைக்க உதவும். ஆனால், பிரசவத்திற்குப் பிறகான உடல் எடையைக் குறைக்கும் டயட் மட்டும் போதாது. அவரது எடைக் குறைப்புக்கான பயணத்தில் சில எளிய மற்றும் பயனுள்ள பயிற்சிகளையும் சேர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் அவரது உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், சிறந்த தூக்கத்தையும் அளித்து, அவரது நாள் முழுவதுமான மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கவும் உதவுகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பிரசவத்திற்குப் பின் தங்கள் எடையை படிப்படியாகக் குறைக்க வேண்டும். ஏனெனில், எடையை மிக வேகமாகக் குறைக்கும் போது தாய்ப்பாலை மாசுபடுத்தும் நச்சுகளை வெளியிடுகிறது. இது தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். வாரத்திற்கு ஒரு பவுண்டு என எடையை குறைக்க முயற்சிக்கவும். அதாவது ஒரு மாதத்திற்கு நான்கு பவுண்டுகள்.
பிரசவத்திற்குப் பிந்தைய எடைக் குறைப்புக்கான டயட் பிளான் என்பது க்ராஷ் டயட் (போதுமான அளவு சாப்பிடாதது) என்று அர்த்தமல்ல. பெண்களுக்கு உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு 1500-2200 கலோரிகள் தேவைப்படுகிறது. ஆனால், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1800 கலோரிகள் தேவைப்படுகிறது. மேலும், கலோரி எடுத்துக்கொள்வது என்பது செயல்பாடு நிலை, உடல் அளவு போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். பிரசவத்திற்குப் பிந்தைய எடைக் குறைப்புக்கான டயட்டில் சேர்க்க வேண்டிய விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் இலக்கு வரம்பிற்கு கலோரி எடுத்துக்கொள்வதை கட்டுப்படுத்துகிறது.
எடை இழப்புக்கான உணவுத் திட்டத்தில் மீன், நட்ஸ், பருப்பு வகைகள், குறைந்த கொழுப்புடைய இறைச்சி, முட்டை மற்றும் ஆரோக்கியமான புரதத்தின் பிற ஆதாரங்கள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் வைட்டமின்கள் போன்றவை தாதுக்களின் நல்ல ஆதாரங்கள் ஆகும். ஒரு கப் பழத்தை ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிடுங்கள். கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற பச்சை மற்றும் இலை காய்கறிகளை உட்கொள்வது பாலூட்டுதல் மற்றும் எடைக் குறைப்புக்கு உதவும்.
பிரசவத்திற்குப் பிந்தைய எடைக் குறைப்புக்கான டயட்டில் பால் பொருட்கள் இன்றியமையாத பகுதியாக இருக்க வேண்டும். ஆனால், கலோரி நுகர்வை மனதில் வைத்து, யோகர்ட் மற்றும் பட்டர்மில்க் போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கோதுமை, அரிசி, ஓட்ஸ், சோளம், பார்லி போன்ற தானியங்களை டயட் பிளானில் சேர்த்துக் கொள்வது தாய்க்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து, பிரசவத்திற்குப் பிந்தைய எடைக் குறைப்பை எளிதாக்கும்.
புதிய அம்மாக்கள், எண்ணெய் மிகுந்த அல்லது வறுத்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவற்றில் கலோரிகள் அதிகம்.
ஆல்கஹால் அதிக கலோரிகளைக் கொண்டுள்ளது மற்றும் பிரசவத்திற்குப் பிறகான எடைக் குறைப்புக்கான டயட்டிற்கு எந்தப் பலனையும் அளிக்காது. மது அருந்துவதால் வயிற்றில் கொழுப்பு அதிகரிக்கிறது மற்றும் தாயின் உடலுக்கும் அவரது குழந்தைக்கும் கடுமையாக தீங்கு விளைவிக்கும்.
இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க உதவும் 8 சூப்பரான டிப்ஸ்
ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் முன்பே பேக் செய்யப்பட்ட உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகும். இவை சாப்பிடுவதற்கு ஆரோக்கியமற்ற உணவுகள். அவற்றில் அதிகப்படியான சர்க்கரை, அதிக கொழுப்பு, அதிக கலோரி மற்றும் உப்பு ஆகியவவை இருக்கும். இது பிரசவத்திற்குப் பிந்தைய எடைக் குறைப்பு டயட் பிளானுக்கு இடையூறு விளைவிக்கும்.
குளிர்பானங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில், அவற்றில் அதிக சர்க்கரை உள்ளடக்கம் உள்ளது மற்றும் அவற்றை உட்கொள்வது ஆரோக்கியமற்றது ஆகும்.
Yes
No
Written by
chandrikaiyer
chandrikaiyer
டாப் 10 நெயில் ஆர்ட் டிசைன்கள்
நகத்தை பராமரிக்க 5 டிப்ஸ்
மார்பக வீக்கம் (பால் கட்டுதல்) பற்றி மேலும் அறிக- காரணங்கள், சிகிச்சை & அறிகுறிகள்
நேர்மறையான குழந்தை வளர்ப்பின் நன்மைகள் என்னென்ன?
குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடுவதில் உள்ள முதல் 8 ஆச்சரியமான உண்மைகள்
கிட் மூலம் வீட்டிலேயே பிரக்னன்ஸி சோதனை செய்தல்
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Mylo is a master brand offering solutions through it's subsidiaries - Mylo Care and Mylo Baby.
Mylo Care offers science backed, expert led solutions across multiple health concerns.
Mylo Baby is a one stop solution for young parents for all their baby's needs.
Onion | Aloe Vera Range For Hair | Coconut | Neelibrigandi | Skin - Bath & Body | By Ingredient | Skin - Pregnancy & New Mom | Skin - Health & Wellness | Digestive Health | Lactation | Pain management | By Ingredient | Saffron | Shatavari | Nivarini | Skin - Weight | Weight Management | By Ingredient | Wheatgrass | Apple Cider Vinegar |