
நம்மில் பெரும்பாலானவர்கள் கர்ப்ப காலத்தில் மார்பில் ஏற்படும் கட்டிகள் குறித்து கேள்விபட்டிருப்போம். இது மார்பக புற்றுநோயின் மிகப் பொதுவான அறிகுறி என்பதால் இதனை ஒருபோதும் புறம்தள்ள கூடாது. ஆக, ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் அவரது மார்பு அச்சுறுத்தலாக மாறும் என்பதை நாம் மறுக்க இயலாது. ஆனால், பொதுவான நம்பிக்கைக்கு நேர்மாறாக, மார்பு மீது ஏற்படும் கட்டி குறித்து நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இருப்பினும், கர்ப்ப காலத்தில் மார்பு மீது கட்டி ஏற்படுவது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், கர்ப்ப காலத்தில், அதுவும் 35 வயதுக்கு உட்பட்ட பெண்களாக இருப்பின் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது மிகவும் அரிதான விஷயம். கர்ப்ப காலத்தில் உங்கள் உடல் பலவித மாற்றங்களை எதிர்கொள்கிறது என்று அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி தெரிவிக்கிறது. மார்பகங்கள் பால் உற்பத்திக்கு தயாராகும் நிலையில் அவை உறுதியானதாக, கனமானதாக மற்றும் வீக்கம் கொண்டதாக மாறும் என்று தெரிவிக்கப்படுகிறது. உண்மையச் சொல்வதென்றால், கர்ப்ப காலத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது அத்தியாயத்தில் பெரும்பாலும் அடைபட்ட பால் சுரப்பிகள் காரணமாக மார்புகள் வீக்கம் அடைந்ததைப்போல தோன்றும்.
இயற்கை ஒரு கட்டமைப்போடு இயங்குகிறது. பிரசவத்திற்குப் பிறகு ஊட்டச்சத்துக்காகவும், உயிர் வாழவும் உங்கள் குழந்தை உங்கள் தாய்ப்பாலை சார்ந்துள்ளது. கர்ப்ப காலத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் உங்கள் மார்பகங்கள் தாய்ப்பால் சுரப்பதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்கின்றன. இந்த நடவடிக்கையின்போது பால் சுரப்பிகள் அடைபடுவதும், மிக பெரியதாக மாறுவதும் இயல்பானது. அடைபட்ட பால் சுரப்பிகள் பெரும்பாலும் கடினமானதாக தோன்றும். மேலும் சிவப்பு நிற கட்டிகள் தென்படும். அவற்றை தொடும் பட்சத்தில் வலி ஏற்படக் கூடும். இலகுவான கட்டிகள் நீங்கள் பால் சுரக்க தயாராகிறீர்கள் என்பதற்கான அறிகுறி ஆகும். அதேசமயம், இந்த கட்டிகள் சில நாட்களில் மறைந்துவிடும். வாழ்க்கையின் பிற்பகுதியில் உங்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்றால் நீங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் பெண்கள் நீண்ட காலத்திற்கு சுய பரிசோதனைகளை செய்யத் தேவையில்லை என்று அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி தெரிவிக்கிறது. ஆனால், கர்ப்பிணி பெண்கள் தங்கள் மார்பகத்தின் ஆரோக்கியம் குறித்து கவனமாக இருக்க வேண்டும். ஏதேனும் அசாதாரணமான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அதுகுறித்து மருத்துவரிடம் தெரிவிப்பது முக்கியமானது. உங்கள் உடல்வாகு பொறுத்து மார்பகங்கள் எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் பட்சத்தில், அதில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கு புரியவரும்.
தொடர்ச்சியாக மார்பக கட்டிகள் குறித்து நீங்கள் சுயபரிசோதனை செய்து கொண்டு வரவும். ஆபத்து மிகுந்த கட்டிகளானது அவை உருவான தொடக்கத்தில் சிவப்பாகவோ அல்லது வலி மிகுந்ததாகவோ இருக்காது என்பதையும், வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து சுத்தம் செய்யும்போது மறையாது மற்றும் அடைபட்ட பால் சுரப்பிகளைப் போன்று மசாஜ் செய்ய இயலாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஏதேனும் புதிய கட்டிகள், அதனுடன் சருமம் அடர்த்தியாகும் மாற்றம், சிவந்துபோவது, வெடிப்பு அல்லது ஒரே இடத்தில் வலி ஆகிய அறிகுறிகள் தென்பட்டால், மேலும் அவை தீவிரமானதாக இருந்தால் அதை எச்சரிக்கையுடன் அணுகவும். மேலும், உடனடியாக மருத்துவரை ஆலோசிக்கவும்.
சில சமயம், நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போதிலும் மார்பக புற்றுநோய் வளரக் கூடும். ஆக, உங்கள் மார்பகங்களில் அசாதாரணமான ஏதோ ஒன்றை நீங்கள் உணரும் பட்சத்தில், பிரசவ காலம் வரை காத்திருக்காமல் மருத்துவரை அணுகவும். உங்கள் மார்பக தசைகள் இப்போது தடிமனாகவும், வீக்கம் கொண்டதாகவும் காட்சியளிக்கும் நிலையில், புற்றுநோய் இருக்கிறதா என்பது சுயபரிசோதனை செய்வது கடினமானதாகும். ஆனால், மிகச் சரியான மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது சாத்தியமானது மற்றும் முக்கியமானது.
ஒரு பெண்ணின் மார்பகத்தில் கர்ப்ப காலத்தின்போது கட்டிகள் தென்படும் பட்சத்தில், அதனை எதிர்கொள்ள அவர் முடிந்த வரையிலும் கீழ்காணும் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்:
நீங்கள் பாலூட்டும் தாய்மாராக இருக்கும் பட்சத்தில், கட்டி என்பது தாய்ப்பால் கெட்டியாக மாறும் நிலை அல்லது தடைபட்ட பால் சுரப்பிகளாக இருக்கலாம். இதற்கு என்ன சிகிச்சை அளிப்பது என்றால், வெதுவெதுப்பான மசாஜ் செய்து கட்டிகளை இலகுவானதாக மாற்ற வேண்டும். (நீங்கள் சூடான நீரில் குளிக்கலாம் அல்லது வெந்நீர் ஷவர் கீழ் நின்று கொள்ளலாம்).
வெதுவெதுப்பான குளியலுக்குப் பிறகு கட்டியை சுற்றியுள்ள பகுதியில் அழுத்தி தேய்க்கவும். மேலும் உங்கள் கைகளைப் பயன்படுத்தி பாலை வெளியேற்றவும். மசாஜ் செய்த பிறகு கட்டி இலகுவானதாக மாறிவிட்டால் தாய்ப்பால் ஊட்ட முயற்சிக்கலாம்; அல்லது மசாஜ் செய்து வெளிவரும் பாலை குழந்தைக்கு ஊட்டலாம்.
உங்கள் குழந்தைக்கு நீங்கள் தொடர்ந்து பாலூட்டி வரும் பட்சத்தில் மார்புகளில் கட்டிகள் சேராது மற்றும் பால் வற்றிவிடும்.
மிக அதிகமான தண்ணீர் அல்லது ஜூஸ் அருந்தி உங்கள் உடலில் நீர்ச்சத்து அளவை உயர்வாக வைத்திருக்கவும். குறிப்பாக உடல்நலக்குறைவு ஏற்பட்டால் இதைச் செய்யவும்.
உங்கள் ப்ராவின் இறுக்கம் காரணமாகவும் கட்டிகள் உருவாகக் கூடும். இதனால், மார்பகத்தை தாங்கி நிற்கும் வகையில் நீங்கள் ப்ரா அணிந்தாலும், அது இறுக்கமானதாக இருக்கக் கூடாது. மேலும் அடிப்பகுதியில் பட்டை போல இருக்கக் கூடிய ப்ரா அணிவதை தவிர்க்க வேண்டும். இது உங்கள் பால் சுரப்பிகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும்.
சிறந்த முறையில் பாலூட்டுவது எப்படி என்பது குறித்து பாலூட்டுவது தொடர்பான நிபுணரை கலந்தாலோசிக்கவும்.
கர்ப்ப கால மார்பக கட்டி 3 அல்லது 4 நாட்களில் மறையவில்லை என்றால், மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. உங்கள் தாய்ப்பாலில் சீழ் மற்றும் ரத்தம் சேர்ந்து வருவது அல்லது காம்புகளில் பால் கசிவது போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும்.
புற்றுநோய் இல்லை என்பதை உறுதி செய்ய கட்டி முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
உங்கள் கட்டி வெறும் நீர்க்கட்டியா அல்லது புற்றுநோய் கட்டியா என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
உங்கள் கட்டி புற்றுநோய் கட்டியாக இருக்கும் பட்சத்தில், என்ன விதமான சிகிச்சை பெறலாம் என்பதை சிந்தித்து முடிவு செய்யுங்கள். சிறந்த மருத்துவரை கண்டறிய, உங்களுக்கு தெரிந்த நபர்களிடம் ஆலோசனை கேட்கலாம்.
நீங்கள் மருத்துவமனைக்கு செல்லும்போது, நீங்கள் கேட்கும் எந்த விதமான கேள்விகளுக்கும் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் சலிக்காமல் பதில் சொல்லக் கூடும்.
அனைத்து சமயங்களிலும் பெருமூச்சு விட்டு, நல்லதையே நினைக்கவும்.
கர்ப்ப காலத்தில் மார்பில் ஏற்படும் கட்டி குறித்து மருத்துவரிடம் சரியான முறையில் எடுத்துரைக்க வேண்டும். எந்த இடத்தில் இருக்கிறது மற்றும் எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்பதைப் பொறுத்து உங்கள் மருத்துவர் கூடுதலான பரிசோதனைகளை செய்யக் கூடும். அது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ ஸ்கேனாக இருக்கலாம்.
ஒருவேளை அடைபட்ட பால் சுரப்பியின் காரணமாக கட்டி ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், வெதுவெதுப்பான பொருள் கொண்டு ஒத்தடம் கொடுக்கவும் (அல்லது சூடான நீரில் குளிக்கவும்). பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும். ஒருவேளை கட்டி அப்படியே நீடித்தால் அல்லது மிகவும் மோசமானதாக மாறும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட பகுதி ஆபத்தானதாக இல்லை என்பதை உறுதி செய்ய மருத்துவரை சந்திக்கவும்.
மார்பு வீக்கத்தின்போது மார்பகங்களில் வலி மிகுந்த கட்டிகள் உருவாகக் கூடும். ஒவ்வொரு தாய்மாரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தருணத்தில் இது நிகழக்கூடும். இதனால் மார்பகங்கள் கடினமானதாக மாறக் கூடும். வீங்கிய மார்புகளில் கட்டிகள் மீண்டும், மீண்டும் வளரக் கூடும். செயற்கையாக நீங்கள் தாய்ப்பாலை கறக்கும் பட்சத்தில் இந்த கட்டிகள் மறைந்துவிடும். குழந்தை முறையாக குடிக்காத காரணத்தால் பால் வெளிவர இயலாமல் போகும். பால் சுரப்பதற்கான சத்துணவுகளை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் இந்த வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
பால் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படும் பட்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் தாய்ப்பால் தடைபட்டு நிற்கும். தவறான பொசிஷனில் நீங்கள் தாய்ப்பால் ஊட்டும் பட்சத்திலும் இதேபோன்ற பிரச்சினை ஏற்படக் கூடும். ப்ராக்களை மிகவும் இறுக்கமாக அணிவதன் காரணமாகவும் பால் சுரப்பிகள் அடைபடக் கூடும். குழந்தை பிறந்த முதலாவது மாதத்தில் அடிக்கடி தாய்ப்பாலுக்கான பம்ப் பயன்படுத்தும் பட்சத்திலும் பால் சுரப்பிகள் அடைபடக் கூடும்.
மாஸ்டிடீஸ் என்பது வலி மிகுந்த, வீங்கிய மற்றும் தொற்று காரணமாக தொந்தரவு தரக் கூடிய கட்டியாகும். அடைபட்ட பால் சுரப்பிகளுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால், அந்த சுப்பிகளுக்கு பின்னால் பால் தேக்கமடையக் கூடும். அவை தொற்றுகளாக மாறி, எரிச்சலை உண்டாக்கும். பொதுவாக காய்ச்சல் ஏற்படலாம்.
பால் சுரப்பிகளில் ஏற்படும் கட்டிகளின் காரணமாக, மம்மரி கிளாண்ட் அருகே ஒரு நீர்க்கட்டி உருவாகக் கூடும். இதில் பால் மற்றும் பால் தொடர்புடைய ரசாயனங்கள் ஒன்று சேரும். பெரும்பாலான சமயங்களில் இது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. தாய்ப்பால் ஊட்டுவதை ஒரு பெண் நிறுத்தும்போது இது மறைந்து விடும்.
மார்பகத்தில் கிருமிகள் ஒன்று கூடுவதால், அதன் மூலமாக சீழ் உருவாகக் கூடும். பெரும்பாலும் மாஸ்டிடீஸ் பிரச்சினைக்கு உரிய சிகிச்சை அளிக்காத நிலையில் இது உருவாகக் கூடும். ஏதேனும் ஒரு ஊசி அல்லது ஆண்டிபயாடிக் நிறைந்த கேதெட்டர் பயன்படுத்தி இந்த சீழ் பகுதியை உறிஞ்சி வற்ற வைக்க வேண்டும். சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் இது மிகுந்த தொந்தரவுகளை உண்டாக்கக் கூடும்.
பொதுவாக 15 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு ஆரம்பகால மார்பக புற்றுநோய் கட்டி உண்டாகக் கூடும். அது திசுக்கள் மற்றும் கிளாண்ட் கொண்ட கட்டியாக இருக்கும். பொதுவாக மார்பக கட்டிகள் என்பது மாதாந்திர அடிப்படையில் தோன்றி, மறையக் கூடியது என்றாலும், ஃபைப்ரோடெனோமா என்பது ஒரு மாதம் கடந்தும் நீடிக்கக் கூடியதாகும். மெனோபாஸ் கடந்த பெண்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகும்.
மார்புகளின் பால் சுரப்பிகள் மீது ஏற்படும் வளர்ச்சி தான் இண்ட்ராடக்டல் பாபிலோமாஸ் ஆகும். அவை ஆபத்தானவை கிடையாது. பெரும்பாலும், மார்புக் காம்புகளை சுற்றியுள்ள பால் சுரப்பிகளில் தான் இண்ட்ராடக்டல் பாபிலோமாஸ் வளரக் கூடும். பாலூட்டிகளுக்கு ஏற்படும் பொதுவான கட்டி இதுவாகும். சில பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கட்டிகள் உருவாகக் கூடும். பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு ரத்தக்கசிவு ஏற்படக் கூடும்.
மார்புகளில் மெதுவாக வளர்ந்து வரும் கொழுப்புக்கட்டி. இதனை லிபோமா எனக் குறிப்பிடுகின்றனர். 2 செ.மீ. டயமீட்டர் அளவு தான் இதன் அதிகபட்ச வளர்ச்சி ஆகும். இதை லேசாக அழுத்தும் பட்சத்தில், அவை நகர்ந்து செல்லும். மேலும் ஓவல் வடிவத்தில் மாறும். அதில் ஒரு ரப்பர் உணர்வு ஏற்படக் கூடும். பல கட்டிகள் ஒரே சமயத்தில் உருவாகக் கூடும்.
பெரும்பாலான சமயங்களில் இது மிகக் கடினமானதாக இருக்கும். மேலும் எந்த ஒரு அசௌகரியமும் ஏற்படாது. மார்பகம் அல்லது காம்பு பகுதி தான் இதன் தொடக்கமாக அமையும். எனினும் மேல் வெளிவட்ட பகுதியில் இது வளரத் தொடங்கும். மார்பக பகுதிக்கு அருகே பெருமளவில் ஆபத்து மிகுந்த கட்டிகள் உருவாகக் கூடும் அல்லது சருமத்தின் வழியாக உடைந்து வெளியேறக் கூடும். இந்த இரண்டுமே மிகுந்த வேதனையை தரக் கூடியது.
மார்பகத்தில் உள்ள கொழுப்பு திசுக்களில் ஏற்படக் கூடிய பாதிப்பின் காரணமாக இது நிகழக் கூடும். நீண்டகாலத்திற்கு இந்தப் பிரச்சினை நீடிக்கும் பட்சத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. வெற்றிகரமாக குணமாக்க முடியும்.
மார்பக கட்டி என்பது மார்பக புற்றுநோய்க்கான அறிகுறி அல்ல என்றாலும், இந்தக் கட்டிகள் வலி மிகுந்ததாகவும், அசௌகரியம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். இதில் இருந்து தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், நீங்கள் எப்போதும் வெதுவெதுப்பான பொருள் கொண்டு மார்புகளுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். கட்டி உள்ள இடங்களில் வெந்நீர் ஊற்றி கழுவலாம். பால் சுரப்பிகள் மீது மென்மையாக மசாஜ் செய்வதும் இந்த கட்டிகளில் இருந்து நிவாரணம் தருவதாக அமையும். பட்டை உள்ள ப்ராக்கள் அணிவதை தவிர்க்கவும். அந்தக் கட்டிகள் மறையாவிட்டால் மருத்துவரை அணுகவும்.
இதையும் படிக்கலாமே! - பிறந்த குழந்தையின் எடையை அதிகரிப்பது எப்படி?
பொதுவான மார்பக கட்டி போல் அல்லாமல், மார்பக புற்றுநோய் கட்டிகள் என்பது வலியற்றதாக இருக்கும். முதன் முதலில் தோன்றும்போது அது சிவந்த நிறத்தில் இருக்காது. மேல்கண்ட எந்தவித சிகிச்சையிலும் மார்பக புற்றுநோய் கட்டிக்கு நிவாரணம் கிடைக்காது. ஆனால், சாதாரண கட்டிகளுக்கும், புற்றுநோய் கட்டிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை கண்டறிவது மருத்துவருக்கு கூட சிக்கல் மிகுந்ததாக இருக்கும். அரிதான விஷயம் தான் என்றாலும், கர்ப்ப காலத்திலும் கூட மார்பக புற்றுநோய் வளரக் கூடும் என்பதை மறுக்க இயலாது. ஏதேனும் சந்தேகம் இருப்பின் மருத்துவரை ஆலோசனை செய்வது நல்லது.
கர்ப்ப காலத்தில், கர்ப்பத்திற்கு தகுந்தாற்போல உடல் தன்னை பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்திக் கொள்ளும். மேலும் குழந்தை பிரசவிக்கும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போலவும் உடல் மாற்றமடையும். கர்ப்ப காலத்தில் ஏற்படக் கூடிய மார்பகக் கட்டிகள் என்பது ஆபத்தானவை அல்ல. அது இந்த உடல் மாற்றங்களின் ஒரு அங்கம் தான். கர்ப்ப காலத்தில் மார்பக கட்டியை கண்டறியும் பட்சத்தில் நீங்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. என்றாலும், சரியான பரிசோதனையை தக்க தருணத்தில் மேற்கொள்ள நீங்கள் மருத்துவரை அணுகவும்.
Breast lump In Tamil, Breast lump meaning in tamil, Types of breast cyst in tamil, Breast Lump During Pregnancy: When To Get Serious And Visit A Doctor In English, Breast Lump During Pregnancy: When To Get Serious And Visit A Doctor In Telugu, Breast Lump During Pregnancy: When To Get Serious And Visit A Doctor In Bengali
Yes
No


















Influenza and boostrix injection kisiko laga hai kya 8 month pregnancy me and q lagta hai ye plz reply me
Hai.... My last period was in feb 24. I tested in 40 th day morning 3:30 .. That is faint line .. I conculed mylo thz app also.... And I asked tha dr wait for 3 to 5 days ... Im also waiting ... Then I test today 4:15 test is sooooo faint ... And I feel in ma body no pregnancy symptoms. What can I do .
Baby kicks KB Marta hai Plz tell mi
PCOD kya hota hai
How to detect pcos
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |