Breastfeeding & Lactation
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு சிறப்பாக இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே ஊட்டுவார்கள். சிலருக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். தாய்ப்பால் குறைகிற சமயத்தில் குழந்தைக்கு என்ன ஊட்டுவது என்பது குறித்து கவலை கொள்வார்கள்.
தாய்ப்பால் ஊட்டுதல் மற்றும் புட்டிப்பால் ஊட்டுதல் தொடர்பாக, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான (FAQ) பதில்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆம், ஒரே சமயத்தில் தாய்ப்பால் ஊட்டுவதும், புட்டிப்பால் ஊட்டுவதும் பாதுகாப்பானது தான். சில தாய்மார்கள் பகல் பொழுதில் தாய்ப்பால் ஊட்டுகின்றனர் மற்றும் இரவுப் பொழுதில் புட்டிப்பால் ஊட்டுகின்றனர்.
உங்கள் குழந்தையின் உடல் எடையில் தலா ஒரு பவுண்ட் எடைக்கு 75 எம்எல் என்ற அளவில் புட்டிப்பால் கொடுக்கலாம். தெளிவாக உறுதி செய்து கொள்ள குழந்தை நல மருத்துவரை அணுகி ஆலோசனை செய்யவும்.
குழந்தைக்கு எப்போது பசி எடுக்கிறதோ, அந்த சமயத்தில் பாலூட்டுவது தான் சிறப்பானதாகும். பொதுவாக 2 முதல் 3 மணி நேர இடைவெளியில் குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும்.
ஒவ்வொரு குழந்தைக்கு பசியுணர்வு மாறுபடுகிறது மற்றும் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு 2 முதல் 3 மணி நேர இடைவெளியில் பாலூட்டுவது இயல்பான விஷயம் தான். குழந்தையுடன் நீங்கள் மிகவும் ஒன்றிணைந்து பழகத் தொடங்கிவிட்டால், அதற்கு எப்போது பால் தேவைப்படுகிறது என்பது உங்களுக்கு தெரிந்துவிடும்.
பச்சிளம் குழந்தைகளுக்கு 2 அல்லது 3 மணி நேர இடைவெளியில் பாலூட்ட வேண்டும். ஒவ்வொரு முறையும் பால் குடித்த பிறகு குழந்தை குட்டித்தூக்கம் போடும். சிறிது காலத்திற்கு பிறகு, உங்கள் குழந்தை எப்போது பால் குடிக்கிறது மற்றும் எப்போது தூங்குகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு எப்போதெல்லாம் பசி எடுக்கிறதோ, அப்போதெல்லாம் பாலூட்டலாம் அல்லது வழக்கமாக 2 முதல் 3 மணி நேர இடைவெளியில் பாலூட்டலாம். குழந்தைக்கு பசி எடுக்கும்போது சப்பு கொட்டும். இந்த அறிகுறியை தெரிந்து வைத்துக் கொண்டு, அதற்கு ஏற்றாற்போல பாலூட்ட தயாராக இருக்கவும்.
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதில் இருந்து புட்டிப்பாலுக்கு மாறுவது எளிமையாக இருக்கும்.
புதிய தாய்மார்களின் ஆரோக்கியம் மீண்டு வருவதற்கான கால அவகாசம் கிடைக்கும்.
தாய்மார்களின் தூக்கத்திற்கு தொந்தரவு இருக்காது.
ஆம், தாராளமாக செய்யலாம். இரவு நேரத்தில் குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டும் பணியை உங்கள் கணவரிடம் ஒப்படைத்து விட்டு, நீங்கள் தொந்தரவு இன்றி தூங்கலாம்.
பணி செய்ய செல்லலாம்.
தொந்தரவு இன்றி தூங்கலாம்.
தாய்ப்பால் சுரப்பு குறைவு.
இரண்டு முறைகளிலும் பாலூட்டுவதன் காரணமாக தாய்மார்களுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் மற்றும் தொந்தரவு இன்றி தூங்குவார்கள். ஆனால், தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்ற உணர்வை தாய்மார்கள் அவ்வபோது வெளிப்படுத்தாவிட்டால் தாய்ப்பால் சுரப்பு குறையத் தொடங்கும்.
பகலில் தாய்ப்பால் ஊட்டுவதுடன், இரவில் புட்டிப்பால் ஊட்டலாம்.
நாள் முழுவதும் தாய்ப்பால் மற்றும் புட்டிப்பால் என மாற்றி, மாற்றி ஊட்டலாம்.
பகலில் புட்டிப்பால் ஊட்டுவதுடன், இரவில் தாய்ப்பால் ஊட்டலாம்.
வேலைக்கு செல்லும் தாய்மார்கள், வேலையில் இருக்கின்ற தருணங்களில் குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுக்கலாம். வீட்டில் இருக்கின்ற சௌகரியமான தருணங்கள் அல்லது தாய்ப்பால் சுரக்கின்ற நேரங்களில் தாய்ப்பால் ஊட்டலாம்.
பகுதி நேரம் புட்டிப்பால் ஊட்டுவதால் பால் உற்பத்தி பாதிக்கப்பட கூடும். அவ்வபோது தாய்ப்பால் ஊட்டுவதற்கு நீங்கள் முயற்சி செய்தால், பால் சுரப்பில் எந்தவித மாற்றமும் வராது.
பயன்படுத்துவதற்கு முன்னதாக பாட்டிலை சுத்தமாக கழுவவும்.
குழந்தை நல மருத்துவர் பரிந்துரை செய்யும் ஃபார்முலாவை கடைப்பிடிக்கவும்.
சரியான அளவில் பால் பவுடர் மற்றும் வெந்நீரை சேர்க்கவும்.
குழந்தைக்கு பாலூட்டும் முன்பாக அது சுடுகிறதா என்பதை பரிசோதனை செய்து கொள்ளவும்.
6 மாத காலத்தை தாண்டியுள்ள குழந்தைகளில், 75 சதவீத குழந்தைகளின் பெற்றோர் அவர்களுக்கு புட்டிப்பால் ஊட்ட முடிவு செய்கின்றனர்.
புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, தாய்ப்பால் குறைவான அளவில் தான் கிடைக்கும். இருப்பினும், தினந்தோறும் பலமுறை தாய்ப்பால் ஊட்ட முயற்சி செய்யலாம். அது உங்கள் குழந்தைக்கு பலனுள்ளதாக அமையும்.
புட்டிப்பால் ஊட்டுவதற்கு, இயற்கையான மார்புக் காம்புகளை போன்றே நிப்பிள் உடைய பாட்டிலை நீங்கள் தேர்வு செய்யலாம். மார்புக் காம்புகள் (நிப்பிள்) வேறுபடுகின்றன என்ற குழப்பம் குழந்தையிடம் ஏற்படுவதை தவிர்க்க இது உதவும்.
தாய்ப்பாலுடன் புட்டிப்பாலை கலக்கலாம். ஆனால், பால் பவுடரில் தண்ணீருக்குப் பதிலாக தாய்ப்பாலை பயன்படுத்த வேண்டாம். புட்டிப்பால் ஆற்றிய பிறகு, அதனுடன் தாய்ப்பால் சேர்த்துக் கொள்ளவும். ஆனால், இதனை ஒரு மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.
சரியான அளவுக்கு பால் பவுடரை எடுத்து, அதை பாட்டிலில் போட்டுக் கொள்ளவும்.
தூய்மையான வெந்நீரை சரியான அளவில் எடுத்து, பாட்டிலில் சேர்த்துக் கொள்ளவும்.
பால் பவுடரும், தண்ணீரும் நன்றாக கலக்கும் வகையில் பாட்டிலை குலுக்கவும்.
குழந்தைக்கு ஊட்டுவதற்கு முன்பாக பால் சுடுகிறதா என்று பரிசோதனை செய்யவும்.
புட்டிப்பாலை கலக்கும்போது தண்ணீருக்குப் பதிலாக தாய்ப்பால் சேர்க்கக் கூடாது.
ஏற்கனவே ஆற்றிய புட்டிப்பாலுடன், குறைவான அளவில் தாய்ப்பால் சேர்க்கலாம்.
கலக்கிய ஒரு மணி நேரத்தில் இந்தப் பாலை பயன்படுத்துவதை உறுதி செய்யவும். மேலும் எஞ்சியுள்ள பாலை கொட்டிவிடவும்.
உங்கள் குழந்தைக்கு பசிக்கும் சமயங்களில் நீங்கள் பாலூட்டலாம். எவ்வளவு பவுடர் பயன்படுத்துவது என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவரை அணுகி ஆலோசிக்கலாம் அல்லது குழந்தையின் உடல் எடையில் ஒவ்வொரு பவுண்ட் எடைக்கும் தலா 75எம்எல் என்ற அளவில் பால் எடுத்துக் கொள்ளவும்.
இதையும் படிக்கலாமே! - குழந்தைக்கு பாட்டில் பால் (புட்டி பால்)கொடுப்பதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் சௌகரியமான கால வரையறை ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும். பகல் பொழுதில் தாய்ப்பால் ஊட்டிவிட்டு, இரவில் புட்டிப்பால் கொடுக்கலாம் அல்லது இதை அப்படியே மாற்றி செய்யலாம். நாள் முழுவதும் தாய்ப்பால் ஊட்டுவது மற்றும் புட்டிப்பால் ஊட்டுவது ஆகிய இரண்டையும் மாற்றி, மாற்றி மேற்கொள்ளலாம்.
6 மாத குழந்தைக்கு எப்போதெல்லாம் தாய்ப்பால் மற்றும் புட்டிப்பால் கொடுக்கலாம் என்பது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
இரவில் தேவைப்படும் நேரங்களில் புட்டிப்பால் கொடுக்கலாம்.
காலை 7 மணி - குழந்தை எழுந்ததும் தாய்ப்பால் ஊட்டலாம்.
காலை 9 - 10 மணி - ஒரு குட்டித் தூக்கத்திற்குப் பிறகு இப்போது புட்டிப்பால் கொடுக்கலாம்.
நண்பகல் - குழந்தைக்கான உணவு.
பிற்பகல் 2 மணி - குழந்தையின் சிறு தூக்கத்திற்கு பிறகு தாய்ப்பால் ஊட்டலாம்.
மாலை 4 முதல் 5 மணி வரை - குழந்தைக்கான உணவு.
7 மணி - தாய்ப்பால் ஊட்டிவிட்டு, தூங்க வைக்க வேண்டும்.
தாய்மார்கள் பணத்தை சேமிப்பதற்கான யோசனைகள் இதோ.
பால்பவுடரை ஒரே சமயத்தில் மொத்தமாக வாங்கிக் கொள்ளவும்.
ஆன்லைனில் கிடைக்கிறதா என்று பார்க்கவும்.
கூப்பன்களை பயன்படுத்தவும்.
உங்கள் குழந்தைக்கு எது சிறப்பானது என்பதை ஒரு பெற்றோராக நீங்கள்தான் உணர முடியும். தாய்ப்பால் ஊட்டுவது அல்லது புட்டிப்பால் ஊட்டுவது அல்லது இரண்டு முறைகளிலும் பாலூட்டுவது என இதில் சௌகரியமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும். குழந்தை எப்படி பால் குடிக்கிறது என்பது குறித்து குழந்தைகள் நல நிபுணரிடம் ஆலோசிக்கவும். மேலும், குழ்ந்தையின் எடையை பரிசோதனை செய்யவும்.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |