
தாய்ப்பால் கொடுக்கும்போது எடை இழப்பு குழந்தையைப் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு பொதுவானது. இது கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் உடல் எடையைக் குறைக்க உதவும் இயற்கையான வழி என்றும் கூறலாம்.தாய்ப்பால் கொடுப்பது புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஊட்டச்சத்தின் முதன்மை ஆதாரமாகும். குழந்தையைப் பெற்றெடுத்த புதிய தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதும் அதனால் அவர்களுக்கு உடல் எடை குறைவதும் இயற்கையான மற்றும் ஆரோக்கியமான நிகழ்வாகும்.கர்ப்ப காலத்தில் தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பு செல்களின் பயன்பாடே குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் கொடுக்கும்போது தாய்மார்களின் உடல் எடை குறைவதற்கான காரணமாகக் கருதப்படுகிறது.
உங்கள் உடலுக்கு போதுமான ஆற்றலை வழங்க தினமும் 300 முதல் 500 கலோரிகள் வரை கூடுதலாக உட்கொள்ள உணவுப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும் தாய்ப்பால் கொடுப்பதால் உடலில் எடை இழப்பு ஏற்படும்.இந்தக் கட்டுரை தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களின் உடல் எடை குறையும் என்பதன் பின்னணியில் உள்ள அறிவியலை ஆராய்கிறது.
தாய்ப்பால் கொடுக்கும்போது உடல் எடை குறைவது என்பது பெரும்பாலான தாய்மார்களுக்கு இயற்கையான நிகழ்வு. ஒரு தாய் பிரசவத்திற்குப் பிறகு திடீரென ஏற்படும் உடல் சோர்வை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என்பது ஒரு வெளிப்படையான காரணம் ஆகும். தாய்ப்பால் கொடுக்கும் ஒரு தாயின் உடலில் தினமும் கூடுதலாக 500 கலோரிகள் எரிக்கப்படுகிறது. உடற்பயிற்சியின்போது 45 முதல் 60 நிமிடங்கள் வரை ஒருவர் எரிக்கக் கூடிய அதே அளவு கலோரி இதுவாகும்.
தங்கள் குழந்தைகளின் நலனுக்காகவும், தங்கள் உடல் நலனுக்காகவும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பார்கள். இது தாய்ப்பால் கொடுக்கும்போது எடையைக் குறைப்பதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களுக்குள் தங்களின் உடல் எடையைக் குறைப்பதற்காகத் திட்டமிடப்பட்ட டயட்டுக்கு மாறுபவர்களை விட தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் 1.5 கிலோ வரை தங்களின் உடல் எடையைக் குறைக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தாய்ப்பால் கொடுக்கும் சில தாய்மார்கள் கர்ப்பத்திற்கு முன்பு இருந்த பழைய உடல் எடைக்கே திரும்பவும் வாய்ப்புள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் போது கலோரி எரிக்கப்படுவதது தான் காரணம்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு குழந்தை பிறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் ஒட்டுமொத்த உடல் கொழுப்பு குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைக்கு முதல் 3 மாதங்கள் முதல் 6மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுத்தால் தாய்மார்களின் உடல் எடை வேகமாக குறையும்.
தாய்ப்பால் கொடுக்கும்போது அனைத்து தாய்மார்களுக்கும் உடல் எடை குறைவது என்பது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மேலும் இது எளிதாக இருக்க வாய்ப்பு இல்லை. தாய்ப்பாலூட்டும் அனைத்து தாய்மார்களுக்கும் எடை இழப்பு ஏற்படுவதில்லை. தினமும் 500 கலோரிகள் எரிந்தால் ஒரு வாரத்திற்கு 0.5 கிலோ எடை தாய்மார்களுக்கு குறையும். பெரும்பாலான தாய்மார்கள் ஆய்வு அறிக்கைகள் கூறுவதுபோன்று இல்லாமல் எடை குறைவு ஏற்பட அதிக காலத்தையும் எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு. பெரும்பாலான தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட எடை அதிகரிப்பில் 86% குழந்தை பிறந்த ஆறு மாதங்களில் குறைந்துவிடுகிறது என்று ஆய்வு அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
தாய்ப்பால் கொடுப்பதும் எடை குறைப்பதும் இரண்டு தொடர்பற்ற நிகழ்வுகளாகக் கூட இருக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அந்தக் கோட்பாட்டை நிரூபிக்க வரையறுக்கப்பட்ட ஆய்வுகள் உள்ளன.
கர்ப்பம் என்பது பெரும்பாலான பெண்களுக்கு சவாலாகவும் சோர்வாகவும் இருக்கிறது. ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது இன்னும் கடினமானதாகும். பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் கொடுப்பது மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவை ஏற்கனவே சோர்வடைந்த தாயின் உடல் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.
இதுபோன்ற காரணங்களால், பெரும்பாலான தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு அடிக்கடி பசி எடுக்கிறது. அதனால், அதிகமாக சாப்பிடுகிறார்கள். குழந்தையைப் பராமரிக்கத் தூக்கத்தையும் தாய்மார்கள் தொலைத்துவிடுவதால் உடல் எடை குறையாமல் அதிகரித்து விடுகிறது.
தாய்ப்பால் கொடுத்தல் மற்றும் எடை குறைப்பு ஆகிய இரண்டும் மிக நுட்பமான விஷயங்கள். தாய்ப்பால் கொடுக்கும்போது எடை குறைய வேறு சிலஆரோக்கியமான வழிகளும் உள்ளன.
பால் மற்றும் ஆற்றலை உற்பத்தி செய்ய போதுமான ஊட்டச்சத்துக்களை உட்கொள்ளுங்கள். ஆனால், அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்த்து விடுங்கள். மிகக் குறைவாக சாப்பிடுவதும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் உடல் எடையை குறைக்க நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் தசையைப் பாதுகாக்க மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
அவ்வப்போது தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.
மெதுவாகவும், என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனத்துடன் இருப்பதும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும்.
எவ்வளவு கடினமாக இருந்தாலும், முடிந்தவரை தூங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே! - சி-செக்ஷனில் இருந்து விரைவில் குணமடைய தேவையான டிப்ஸ்
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடிய டயட் இல்லை. ஆனால், தாய்ப்பால் கொடுக்கும்போது எடையைக் குறைப்பதற்கு ஒருவர் பின்பற்றக்கூடிய நிலையான வழிகாட்டுதல்கள் உள்ளன. பல ஆய்வுகள் ஆராய்ச்சிகள் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட உணவுமுறைகள்:
காலை உணவில் புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின்களை சேர்த்துக் கொள்வது நல்லது. ஒரு கிளாஸ் பால், முட்டை அல்லது கீரை மற்றும் சில முழு கோதுமை ரொட்டியுடன் சேர்ந்த உணவாக இருந்தால் இன்னும் சிறந்ததாக இருக்கும்.
ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால், வைட்டமின்கள் அதிகம் உள்ள பழம் அல்லது தயிரை மதிய உணவுக்கு முன் உட்கொள்ளலாம்.
மதிய உணவு அதிக புரதம் அல்லது அதிக கொழுப்பு நிறைந்ததாக இல்லாமல் சரியான சத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும். ரொட்டி, பருப்பு மற்றும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட சாலடுகள் போன்றவை சிறந்த தேர்வாக இருக்கும். இதனுடன் நீங்கள் ஒரு கிண்ணத்தில் தயிர் சேர்த்து சாப்பிடலாம்.
மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் என்றால், உலர்ந்த பழங்களை சாப்பிடலாம். இரவு உணவு சாப்பிட வேண்டும் என்பதையும் மனதில் வைத்து இந்த ஸ்நாக்ஸை நீங்கள் சாப்பிட வேண்டும்.
இரவு உணவில் சிக்கன் அல்லது மீன் போன்ற புரத அடிப்படையிலான உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சூப் குடிப்பதும் நல்லது.
தாய்ப்பால் கொடுக்கும்போது உடல் எடையைக் குறைக்க ஹெல்த்தியான உணவுகளை தேர்வு செய்வதே இறுதியில் முக்கியமான ஒன்றாகும். இது ஒரு இயற்கையான செயல்முறை என்பதை நாம் புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்பட வேண்டும்.
Weight loss during breastfeeding in tamil, reasons for weight loss during breast feeding in tamil, tips for breast feeding mothers in Tamil, diet for breast feeding mothers in tamil, Weight Loss During Breastfeeding – Know the Facts In Hindi, Weight Loss During Breastfeeding – Know the Facts in English, Weight Loss During Breastfeeding – Know the Facts in Telugu, Weight Loss During Breastfeeding – Know the Facts In bengali
Yes
No















Official account of Mylo Editor




worked for me, increae in energy levels

When my baby turned 5 months old, I suddenly felt that my milk supply was decreasing. That’s when I ordered Lacto Mama, and I could feel a difference within a week. The product is good.also taste was good 👍

mere ko aaj hi Mila hai but test acha hai ummid karti hu kaam bhi acha kare ga....

Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?
Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்
3 மந்த் பேபி எப்படி இருக்கும்
அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |