
சுருக்கம்


பிறந்த குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்க பெற்றோர்கள் ஃபார்முலா அல்லது தாய்ப்பாலைப் பயன்படுத்தலாம். குழந்தை பிறந்து ஆறு மாதமாக இருக்கும் போது பெற்றோர்கள் பொதுவாக புட்டிப்பால் கொடுக்க விரும்புவார்கள்.
பாட்டில் ஃபீடிங் தாய்ப்பால் கொடுப்பதற்கு பாதுகாப்பான மாற்றாகும், மேலும், தாயால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத போது அல்லது குழந்தை ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கும் போது இது உதவும்.
பாலூட்டும் தாய்மார்கள் பாட்டிலை அறிமுகப்படுத்துவதற்கு முன், குழந்தைக்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகும் வரை காத்திருக்க வேண்டும். இது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கப் பழகுவதுடன் பால் உற்பத்தியைத் தூண்டுகிறது. பிரத்தியேகமாக பாட்டில் ஃபீடிங்கை விரும்பும் பெற்றோர்கள், குழந்தை பிறந்த சில வாரங்களுக்கு பிறகு கொடுக்கலாம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் பாட்டில் ஃபீடிங் அனுபவம் வித்தியாசமாக இருக்கும். சில குழந்தைகள் உடனடியாக ஃபீடிங்கை ஏற்றுக்கொள்கிறார்கள், மற்ற குழந்தைகளுக்கு ஊக்கம் தேவை. விஷயங்களை எளிதாக்க, பெற்றோர்கள் பின்வரும் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
ஃபார்முலா பாலைப் பயன்படுத்தும் போது, தண்ணீர் மற்றும் ஃபார்முலாவின் சரியான விகிதத்தைப் பயன்படுத்தி பாலை தயார் செய்ய வேண்டும். சற்று சூடான நீரில் பாட்டிலை சிறிது நேரத்திற்கு போட்டு வைக்க வேண்டும். இதனால் பாட்டிலில் கிருமிகள் இருந்தால் அவை முடிந்துவிடும். நீங்கள் புதிதாக பாலை பம்ப் செய்தால், அதனை குழந்தைக்கு உடனடியாக கொடுக்கலாம். ஆனால், முன்னரே பம்ப் செய்து எடுத்து வாய்த்த தாய்ப்பாலை குளிர்சாதன பெட்டியில் வைத்து இருந்தால், அதை கண்டிப்பாக காய்ச்ச வேண்டும்.
குழந்தைக்கு பாட்டிலைக் கொடுப்பதற்கு முன், பெற்றோர்கள் பாலின் வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும். மணிக்கட்டில் பால் வெதுவெதுப்பாக உணர்ந்தால், குழந்தைக்கு கொடுப்பது நல்லது. ஆனால் அது மிகவும் சூடாக இருந்தால், அது சற்று நேரம் சூடு ஆறிய பின்னரே கொடுக்க வேண்டும்.
பாட்டில் ஃபீடிங் செய்யத் தொடங்குவதற்கு முன் தாய் சௌகரியமாக அமர்ந்திருக்க வேண்டும். மேலும், பாலூட்டும் போது குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க பால் பாட்டிலை லேசாக சாய்த்துப் பிடித்தவாறு பால் குடிக்க வைக்க வேண்டும்.
பாலூட்டும் போது குழந்தை அசௌகரியமாக உணர்ந்தால், பெற்றோர்கள் நிப்பிளை சரிபார்க்க வேண்டும். பால் ஓட்டம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். தேவையென்றால் மற்ற பக்கத்திலிருந்து பால் கொடுங்கள். மொத்தத்தில், நீங்கள் ஒரு மென்மையான/அமைதியான ஃபீடிங் செஷனை குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.
பெற்றோர்கள் ஒரு புதிய பாட்டில் அல்லது புதிய நிப்பிளை மாற்றி முயற்சி செய்து குழந்தைக்கு பாலூட்டத் தொடங்க வேண்டும்.
பெற்றோர்கள் குழந்தையை மெதுவாக எழுப்பி மீதமுள்ள பாலை குடிக்க வைக்க வேண்டும். சிறந்த ஃபீடிங்கிற்காக குழந்தையின் அட்டவணையை பெற்றோர்கள் சரிசெய்ய வேண்டும்.
சில நேரங்களில் குழந்தைகள் வயிற்றில் வாயுக்கள் இருந்தால் அல்லது ஏப்பம் விடச் செய்ய வேண்டியிருந்தால் அழும்.
மூக்கில் அடைப்பு உள்ள குழந்தைகள் வாயால் சுவாசிப்பதால் அவர்களுக்கு சரிவர பாலூட்ட முடியாது. பெற்றோர்கள் முதலில் குழந்தையின் கோல்டை சமாளிக்க வேண்டும், பின்னர் உணவளிக்க முயற்சிக்க வேண்டும்.
குழந்தை பசியுடன் இருப்பதை பெற்றோர்கள் அறியலாம்
ஃபீடிங்கிற்கு பிறகு அழுகை.
கை சப்புதல் மற்றும் எதையாவது தட்டி ஒலிகளை எழுப்புதல்.
வாயில் எச்சில் வடிதல்.
குழந்தையின் வாயானது பாட்டில் அல்லது மார்பகங்களைத் தேடுவது.
பிறந்த குழந்தை தினமும் குடிக்க வேண்டிய பாலுக்கு சரியான அளவீடு இல்லை. இது அனைத்தும் குழந்தையின் பசியைப் பொறுத்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தை சரியான வளர்ச்சிக்கு மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை உணவளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குழந்தைக்கு வசதியாக இருக்கும் பாட்டில் மற்றும் நிப்பிளை பெற்றோர்கள் அவர்களுக்கு அளிக்கலாம். பரிந்துரைகளுக்கு அவர்கள் தெரிந்த பிற பெற்றோர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்களின் ஆலோசனையை பெறலாம்.
புட்டிப் பாலூட்டுதல் குழந்தைக்கு பாலூட்டும் போது குடும்ப உறுப்பினர்களுடன் பிணைப்பில் இருக்க அனுமதிக்கிறது.
தாய்ப்பாலில் இருந்து பாட்டிலுக்கு மாறுவது குழந்தைக்கும் தாய்க்கும் சற்று கடினம், எனவே பெற்றோர்கள் அவசரப்படக்கூடாது. அதற்குப் பதிலாக, குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக பாட்டில் பாலுக்கு மாற்றுங்கள்.
குழந்தைகள் பொதுவாக பசி இல்லாதபோது பாட்டிலை மறுக்கிறார்கள். சில குழந்தைகளுக்கு ஃபீடிங் செய்யும் முன் குளிக்க வேண்டும், மற்றவர்களுக்கு பாட்டில் நிப்புள்களை மாற்ற வேண்டும்.
ஆறு மாதங்களுக்கும் மேலான குழந்தைகளுக்கு ஃபீடிங் கப்களைப் பயன்படுத்த பெற்றோர் முயற்சி செய்யலாம். இது குழந்தைக்கு ஒரு வயது ஆகும் போது பாட்டில் ஃபீடிங்கில் இருந்து ஒரு கப்பிற்கு மாற உதவும்.
பிறந்த குழந்தைகளுக்கு படுக்கையில் புட்டிபால் ஊட்டுவது அவர்களுக்குப் பழக்கமாகிவிடும், பின்னர் அவர்களால் படுக்கையில் பாட்டில் இல்லாமல் தூங்க முடியாமல் போகலாம். இது மூச்சுத் திணறல், பல் சிதைவு அல்லது காது நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.
குழந்தை அழத் தொடங்கும் முன் பாட்டிலை முன்கூட்டியே தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தங்கள் பார்ட்னர்களின் உதவியுடன் குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்ட பழகிவிட வேண்டும்.
குழந்தைக்குப் பசியாகத் தோன்றினால், சிறிய அளவில் பாலைக் கொடுங்கள்.
குழந்தைக்கு பெற்றோர் வலுக்கட்டாயமாக பாலூட்டக் கூடாது.
பாட்டில் பால் கொடுக்கும் போது பெற்றோர் குழந்தையை சற்றே மேலே சாய்த்து பாலூட்ட வேண்டும்.
அவர்கள் குழந்தையை படுக்க வைத்து பாலூட்டக்கூடாது, ஏனெனில் அது ஆபத்தானது.
குழந்தையின் பசியின்மை மாறிக்கொண்டே இருக்கும்.
பாட்டிலில் குழந்தை உணவை சேர்க்கக்கூடாது. ஒருவர் ஃபார்முலா மற்றும் தாய்ப்பாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சரியான பாட்டில், நிப்பிள் மற்றும் ஸ்டெரிலைசர் தேர்வு செய்வது உங்கள் குழந்தையின் ஃபீடிங் அனுபவத்தை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும்.

Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2
BPA Free | Breast-Like Nipple | Food Grade Material | Wide Base for Better Latch | Can be Sterilized | Microwave Safe | Fits Most Standard Bottles




Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns



Yes
No



















5 month start aguthu putti pal kudukalama food edhum start pannalama baby ku
பாட்டல் பால் குடுக்கலாமா
Feeding bottle to brest feeding in tamil
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.


Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |