This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

பிறந்த குழந்தைக்கு விக்கல் வருவது இயல்பானதா? (Are hiccups normal in a new-born baby In Tamil)

Baby Care
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 24, 2026
Likes3 Likes|
Read time4 min

ஒரு புதிய பெற்றோராக, உங்கள் குழந்தையிடம் வழக்கத்திற்கு மாறானதாகத் தெரிகிற எந்தவொரு உடல் அசைவையும் நீங்கள் மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும். குழந்தை மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டாலோ, அசெளகரியமாக உணர்ந்தாலோ அல்லது தொடர் விக்கலால் அவதிப்பட்டாலோ நீங்கள் அதை எளிதானது என்று நினைத்துவிடக்கூடாது. குழந்தை நார்மலாக இல்லை என்று நினைத்தால், உடனே நீங்கள் குழந்தையை உங்கள் பீடியாட்ரீஷனிடம் காண்பிக்கவேண்டும். குழந்தைக்கு ஏதேனும் ஹெல்த் இஸ்யூ வருமுன் முன்னெச்சரிக்கையாக இருப்பதில் தவறேதுமில்லை.

உதாரணமாக, பிறந்த குழந்தைக்கு அவ்வப்போது விக்கல்கள் ஏற்படுவது நார்மலானதுதான். சில குழந்தைகள் வயிற்றில் இருக்கும்போதுகூட விக்கல் ஏற்படும், ஆனால் நம்மால் அதை கேட்கவோ உணரவோ முடிவதில்லை. உங்கள் குழந்தையின் டயாபிராம் (உதரவிதானம்) இழுக்கும் போதோ அல்லது எரிச்சலை உணரும் போதோ விக்கல்கள் ஏற்படும். பொதுவாக, இதுபோன்ற விக்கல்கள் சிறிது நேரம் கழித்து தானாகவே நின்றுவிடும், ஆனால் அதை உடனடியாக குணப்படுத்த சில வழிகள் உள்ளன.

ஃபீடிங் செய்யும்போது இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள் (Taking a break while feeding In Tamil)

உங்கள் குழந்தைக்கு ஃபீடிங் செய்யும்போது, ​​கொஞ்சம் பிரேக் எடுத்து மீண்டும் ஃபீடிங் செய்வது அவசியம் ஏனெனில் அப்போது தான் குழந்தைக்கு நன்றாக ஏப்பம் வரும். ஏப்பமானது உணவை தொண்டையில் இருந்து கீழே தள்ளுவதுடன் கேஸ் உருவாகாமல் பார்த்துக்கொள்ளும். கேஸை ரிமூவ் செய்வதன் மூலம், குழந்தைக்கு விக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையலாம்.

வயிற்றில் இருந்து கேஸ் ரிமூவ் செய்யப்படுவதால், குழந்தைக்கு ஃபீடிங் செய்த பிறகும், ஃபீடிங்கிற்கு இடையிலும் உங்கள் குழந்தை ஏப்பம் விட வசதியாக இருக்கும். குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால், பிரஸ்டின் ஒருபக்க ஃபீடிங்கின்போது ஏப்பம் வந்தால் மற்றொரு பக்க பிரஸ்டில் ஃபீடிங் செய்வது நல்லது, அத்துடன் இருபக்கமும் சரியான இன்டர்வெல்லில் ஃபீடிங் செய்வது அவசியம்.

பேசிபையரை பயன்படுத்துதல் (Using a Pacifier)

விக்கல்கள் ஃபீடிங் செய்வதால் மட்டும் வருவதில்லை, எந்த நேரத்திலும் வரலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்கள் குழந்தையின் வாயில் ஒரு பேசிபையரை வைப்பது உங்கள் குழந்தையின் டயாபிராமை தளர்த்தி விக்கல்களை நிறுத்தவும் உதவும்.

மேலும், குழந்தை பேசிபையரை வாயில் வைத்து உறிஞ்சும் போது, டயாபிராம் தளரும், இது பிற எரிச்சலையும் நிறுத்தும்.

கிரைப் வாட்டரைப் பயன்படுத்துதல் (Using Gripe Water)

கிரைப் வாட்டர் ஒரு நேச்சுரல் ரெமடியாகும், இது பிறந்த குழந்தைக்கு ஏற்படும் விக்கலை நிறுத்த உதவுவதுடன் குடல் மற்றும் பெருங்குடல் அசௌகரியத்திற்கும் உதவும் மேலும் இது பல்வேறு மூலிகைகள் தண்ணீரில் கலக்கப்பட்ட கலவையாகும். இந்த மூலிகைகளில் இஞ்சி, சாமந்தி, இலவங்கப்பட்டை மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவை அடங்கும், மேலும் இது அடிஷனல் ஹெல்த் பெனிஃபிட்களையும் கொண்டுள்ளது.

கிரைப் வாட்டர் குழந்தையின் டயாபிராமிற்கு போதுமான ரிலாக்சேஷனை அளிக்கிறது மேலும் ஏதேனும் எரிச்சல் இருந்தால் அதையும் குறைக்கும். கிரைப் வாட்டர் என்பது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குழந்தையின் பல்வேறு உடல் உபாதைகளுக்கு நல்ல முறையில் வேலை செய்யும் ஒரு நேச்சுரல் ரெமடியாகும், இருந்தாலும் கிரைப் வாட்டரை குழந்தைக்கு கொடுப்பதற்கு முன் பீடியாட்ரீஷனை கன்சல்ட் செய்வது நல்லது.

ஒன்றும் செய்யவேண்டாம் (Do nothing)

இதை கேட்பதற்கு வினோதமாகத் தோன்றினாலும், சில நேரங்களில் குழந்தைக்கு ஒன்றும் செய்யாமல் இருப்பது சிறந்த தேர்வாக இருக்கலாம், அனைத்து குழந்தைகளுக்கும் விக்கல் மிகவும் சாதாரணமானது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த விக்கல்கள் தானாகவே நின்றுவிடும், மேலும் உங்கள் குழந்தைக்கு அசௌகரியம் தெரியவில்லை என்றால், அதை அதன் போக்கில் அப்படியே விட்டுவிடுவது நல்லது.

இதையும் படிக்கலாமே! - புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஏன் முணுமுணுக்கின்றனர்

முடிவுரை (Conclusion)

ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளில் விக்கல் ஏற்படுவது நேச்சுரல்தான், ஏனெனில் அவர்களின் டயாபிராம் மெதுவாக வளரும், அப்போது இது சிறிய அசௌகரியத்தை ஏற்படுத்தும். பொதுவாக, இந்த விக்கல்கள் சிறிது நேரம் கழித்து நின்றுவிடும். இருப்பினும், விக்கல் சிறிது நேரத்திற்கு பிறகும் நிற்கவில்லை என்றால், நீங்கள் டாக்டரை அணுக வேண்டும். மிகவும் அரிதாக இருந்தாலும், விக்கல் என்பது அடிப்படை மருத்துவப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.

TAGS :

Hiccups for new born babies in tamil, Tips for stop the hiccups for newborn babies In Tamil, Are hiccups normal in a new-born baby In English, Are hiccups normal in a new-born baby In Hindi, Are hiccups normal in a new-born baby In Telugu, Are hiccups normal in a new-born baby In Bengali

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.