VIEW PRODUCTS
Skin Problems
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
எக்ஸிமா என்பது அரிப்பு, வறட்சி, தடிப்பு, மற்றும் பிற அறிகுறிகளை உண்டாக்குகின்ற ஒரு வகையான சரும நோயாகும். ஏழு வகையான எக்ஸிமா சரும நோய்கள் உள்ளன, மற்றும் அரிப்பு ஏற்படுவது தான் எக்ஸிமாவின் பொதுவான அறிகுறியாக உள்ளது. எக்ஸிமாவிற்கு மருந்து மாத்திரைகள் கொண்டு தான் பெரும்பாலும் சிகிச்சையளிக்கப்படும், ஆயினும் எக்ஸிமா பாதிக்கப்பட்ட சருமத்தில் ஏதேனும் சிகிச்சையளிப்பதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
வெவ்வேறு சரும நிறங்களுக்கேற்றவாறு எக்ஸிமா வித்தியாசமாக தெரியும். மாநிறம் மற்றும் கருமையான சருமத்தில், அரிப்பு, சிவந்து போதல், வறட்சி, செதில்கள் தோன்றுவது, அல்லது தடிமனாக மாறுவது போன்ற பாதிப்புகள் தோன்றும். சிவப்பான சருமத்தில், பழுப்பு, ஊதா, அல்லது சாம்பல் நிறத்திலும் தோன்றும். எக்ஸிமா சரும பாதிப்புகளில் ஏழு வெவ்வேறு வகையான பாதிப்புகள் உள்ளன.
அட்டோபிக் டெர்மடைடீஸ் என்னும் எக்ஸிமா வகை பொதுவாக குழந்தைப் பருவத்தில் தொடங்குகிறது, பின்னர் பெரியவர்களானவுடன் அதன் பாதிப்பு குறைந்து விடும் அல்லது முழுமையாகவே போய் விடும். அட்டோபிக் டிரையாட் எனப்படும் மூன்று வகையான பாதிப்புகளில் இது ஒன்றாகும், ஆஸ்துமாவும், ஹே ஃபீவர் (தூசியால் வரும் சளிக்காய்ச்சல்) ஆகியவை மற்ற இரண்டாகும்.
காண்டாக்ட் டெர்மடைடீஸ் இரு வகைப்படும்:
மரப்பால் அல்லது உலோகம் போன்ற எரிச்சலை உண்டாக்கும் பொருட்களுடன் நோய் எதிர்ப்பு அமைப்பு வினை புரியும் போது அலர்ஜிக் காண்டாக்ட் டெர்மடைடீஸ் ஏற்படுகிறது.
இரசாயன அல்லது பிற பொருட்கள் சருமத்தில் எரிச்சலூட்டும் போது இர்ரிடன்ட் கான்டாக்ட் டெர்மடைடீஸ் ஏற்படுகிறது.
டைஷிட்ரோடிக் எக்ஸிமா உங்கள் கைகளிலும், கால்களிலும் சிறிய கொப்புளங்களை ஏற்படுத்தக் கூடும். மேலும் இது பொதுவாகவே ஆண்களை விடவும் பெண்களுக்கு தான் அதிகமாக ஏற்படுகிறது.
எரிச்சலை உண்டாக்கும் இரசாயனப் பொருட்களை பணி புரியும் இடத்தில் பயன்படுத்தும் நபர்களுக்கு, உதாரணத்திற்கு முடி திருத்தும் நபர்அல்லது தூய்மை செய்பவர் போன்றவர்களுக்கு கைகளில் எக்ஸிமா தோன்றக் கூடும்.
இது அட்டோபிக் எக்ஸிமா போன்றது, ஆனால் இது பெரும்பாலும் குழந்தைகளை விடவும் பெரியவர்களை தான் அதிகம் பாதிக்கிறது.
இது சருமத்தில் நாணய வடிவிலான புள்ளிகளை உண்டாக்கும்.
இந்த வகை எக்ஸிமாவில், சில சமயங்களில், சருமத்தில் உள்ள நரம்புகள் வலுவிழந்து திரவங்களை வெளியிடக் கூடும்.
பொதுவாக காணப்படும் இந்த எக்ஸிமா வகை பாதிப்புகளை தவிர்த்து, வாழ்நாள் முழுவதும் பாதிப்பேற்படுத்தும் நிலைமையான சோரியாசிஸ் எக்ஸிமா என்னும் ஒரு வகை உள்ளது. இது சருமத்தில் தடிமனான, சிவப்பு நிற திட்டுக்களையும், சில்வர் நிற செதில்களையும் உண்டாக்கும். இந்த திட்டுக்கள் அரிப்பு, வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்துவனவாக இருக்கும். அவை பொதுவாக முழங்கைகளிலும், முழங்கால்களிலும் தோன்றும், ஆயினும் அவை தலையின் மேல் பகுதியையும், நகங்களையும் கூட பாதிக்கக் கூடும்.
பொதுவாக நாம் வீட்டில் உபயோகப்படுத்தும் பல பொருட்கள், எக்ஸிமா-வை முகத்திலும், உடலின் பிற பாகங்களிலும் உண்டாக்க தூண்டுதலாக அமையும்.
சில வகை துணிகள் மற்றும் ஆடைகள்
சில வகை சோப்கள் மற்றும் டிடர்ஜெண்ட்கள்
தூசியில் காணும் நுண்ணுயிரிகள்
மகரந்தத்தூள்
பூஞ்சனம்
கிருமிநாசினிகள்
நிக்கல் போன்ற உலோகங்கள்
சில தடுப்பூசிகள் மற்றும் ஒட்டுப்பசைகளில் காணப்படும் ஃஃபார்மால்டிஹைட்
பழங்களிலும், காய்கறிகளிலும் காணப்படும் இயற்கையான திரவங்கள்
மணம் வீசும் மெழுகுவர்த்திகள்
குழந்தைக்கு பயன்படுத்தும் வைப்ஸ் (துடைப்பான்கள்) போன்ற தனிப்பட்ட பராமரிப்பிற்கான தயாரிப்புகளில் காணப்படும் ஐசோதியாசோலினோன் போன்ற பாக்டீரியா எதிர்ப்பிகள்
லெதர் டை-களில் உள்ள பாராஃபினைலின்டயமின் போன்ற இரசாயனங்கள்
எக்ஸிமா-வால் பாதிக்கப்பட்ட சருமமானது, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரி இருக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். இதன் பொருள் என்னவென்றால், ஒருவருக்கு செயல்படக் கூடிய சரும பராமரிப்பும், சிகிச்சையும் அடுத்தவருக்கு செயல்படாமல் போகலாம். வெவ்வேறு எக்ஸிமா வகை பாதிப்புகள் உடலின் வெவ்வேறு பாகங்களில் வெவ்வேறு சமயங்களில் தோன்றலாம். சில சமயங்களில், மக்கள் சோரியாசிஸ் எக்ஸிமா அறிகுறிகளை, எக்ஸிமா என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அவை இரண்டும் வேறு வேறு பாதிப்புகளாகும்.
பொதுவாக காணப்படும் எக்ஸிமா அறிகுறிகளாவன:
சரும அரிப்பு
வறட்சி
நிறம் மாறிய சருமம்
சருமத்தில் செதில் செதிலான திட்டுக்கள்
சருமத்தில் நீர் கசிவு அல்லது பக்கு உதிர்வு
சருமத்தில் வீக்கம்
எக்ஸிமா நோய் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும், அதனை குணப்படுத்துவதற்கு அவ்வப்போது வெவ்வேறு முறைகளை கையாள வேண்டியிருக்கும். நோயின் திடீர் எழுச்சியை கட்டுப்படுத்துவது தான் எக்ஸிமா சிகிச்சையின் மிக முக்கியமான பகுதியாகும்.
அரிப்பினை கட்டுப்படுத்துவதற்கும், சருமத்தினை சரி செய்வதற்கும் வெவ்வேறு வகையான பல மருந்து தயாரிப்புகள் உள்ளன. இந்த தயாரிப்புகள் க்ரீம், ஜெல், ஆயின்மென்ட் போன்ற வெவ்வேறு வடிவங்களில் வேறுபட்ட தடுப்பாற்றல் மற்றும் மருந்துக் கலவை சூத்திரங்களோடும் வருகின்றன. பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைமுறை எதுவாயிருப்பினும், பொதுவாக மாய்ஸ்சுரைஸர் போடுவதற்கு முன்னமே, அதில் குறிப்பிட்டபடி பயன்படுத்த வேண்டும். கார்டிகோஸ்டீராய்டு தயாரிப்பினை அதிகமாக பயன்படுத்தும் போது சருமம் மெலிவது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
சில சமயங்களில், கைகளிலும், முகத்திலும் எக்ஸிமா-வை கட்டுப்படுத்துவதற்கு, ஆன்டிபயாட்டிக்ஸ் கூட பரிந்துரைக்கப்படுகிறது. மிகக் கடுமையான எக்ஸிமா அறிகுறி உள்ளவர்கள், கீழ்க்கண்ட மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்,
சைக்லோஸ்போரின்
மெத்தோட்ரெக்ஸேட்
ப்ரெட்னிசோன்
மைக்கோஃபினோலேட்
அஸாதியோப்ரின்
எக்ஸிமா சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் ஊசி மருந்துகள் பின்வருமாறு,
மோனோக்ளோனல் ஆன்டிபாடிஸ்
ட்யூபிக்ஸன்ட்
ஆட்ப்ரி
இதையும் படிக்கலாமே! - அறிவுசார்ந்த குறைபாடு: அப்படியென்றால் என்ன, அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை
எப்படி பார்த்தாலும், எக்ஸிமா பாதிப்பு துன்பம் தரக் கூடியது தான். இதற்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சிகிச்சை அளிப்பது முக்கியமாகும், ஏனென்றால் விரைவாக கண்டறியப்படும் போது, அதற்கு சிகிச்சை அளிப்பது எளிதானது. எக்ஸிமா அறிகுறிகளை குணப்படுத்துவதற்கு, கார்டிகோஸ்டீராய்டு ஆயின்மென்ட்-ஐ பயன்படுத்தலாம், ஆயின்மென்ட்-ஐ தடவியவுடன் இதனை ஈரமான மெல்லிய சல்லாத் துணி கொண்டு கட்டி வைத்துக் கொள்ளலாம்.
அட்டோபிக் எக்ஸிமா-விற்கு சிகிச்சையளிப்பதற்கு, லைட் தெரபி அளிப்பது இன்னொரு முறையாகும். ஃபோட்டோதெரபி என்பது லைட் தெரபி-யின் எளிமையான ஒரு வடிவமாகும், இந்த முறையில் பாதிக்கப்பட்ட சரும பகுதிகள் இயற்கையான சூரிய வெளிச்சத்தில் வெளிப்படுத்தப்படும், ஆயினும் கட்டுப்படுத்தப்பட்ட முறையிலேயே இது செய்யப்படுகிறது. மற்ற சிகிச்சை முறைகள் நேரோ பேண்ட் அல்ட்ராவைலட் பி (யுவிபி) மற்றும் செயற்கையான அல்ட்ராவைலட் ஏ (யுவிஏ) போன்றவை.
அறிகுறிகள் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், எக்ஸிமா சரும பாதிப்பிற்கு எண்ணற்ற வழிகளில் சிகிச்சையளித்து குணப்படுத்தலாம். இது பயமுறுத்தும் நோய் அல்ல, மாறாக சரியான சமயத்தில் கவனிப்பதும், பராமரிப்பதும் அவசியம். இது போன்ற மேலும் பயன் தரும் தகவல்கள் அடங்கிய கட்டுரைகளுக்கு, Mylo குடும்ப வலைப்பதிவினை பார்க்கவும்.
Yes
No
Written by
Ravish Goyal
Official account of Mylo Editor
Read MoreGet baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |