back search

Raise A Happy & Healthy Baby

Get baby's growth & weight tips

Join the Mylo Moms community

Get baby diet chart

Get Mylo App

Want to raise a happy & healthy Baby?

  • Get baby's growth & weight tips
  • Join the Mylo Moms community
  • Get baby diet chart
  • Get Mylo App
    ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
    • Home arrow
    • தொடை சிராய்ப்பு: அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை | Thigh Chafing: Symptoms, Causes & Presentations in Tamil arrow

    In this Article

      தொடை சிராய்ப்பு: அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை | Thigh Chafing: Symptoms, Causes & Presentations in Tamil

      Pregnancy

      தொடை சிராய்ப்பு: அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை | Thigh Chafing: Symptoms, Causes & Presentations in Tamil

      29 August 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

      தொடை சிராய்ப்பு என்பது தொடை ஒன்றோடு ஒன்று உராய்வதால் மற்றும் அரிப்பு நிலையைக் குறிக்கிறது. ஆடையானது தோலில் அழுந்தி உராயும் போது இந்த நிலை ஏற்படலாம். இதனால் ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் உராய்வு ஏற்படலாம். மேலும், தொடைப் பகுதியில் ஈரப்பதமாக இருந்தால், இந்நிலை மேலும் மோசமடையும். இது ஒரு தீவிரமான நிலை இல்லை என்றாலும், இது அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு வலிமிகுந்ததாகவும் இருக்கும்.

      தொடை சிராய்ப்பின் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் (Symptoms and presentations of thigh chafing in Tamil)

      • தொடை இடுக்கில் தோல் சிவந்து தடித்திருத்தல்

      • கொப்புளங்கள் அல்லது நீர் கோர்த்திருத்தல்

      • வலி

      • எரிச்சல்

      • தோல் உரிந்து வருதல்

      • தொடைகளில் வெட்டுக்கள் ஏற்படுதல்

      • சில நேரங்களில் இது சீழ், வீக்கம் மற்றும் அந்த இடம் தொட்டாலே வலிக்கக்கூடியதாக மாறுதல் போன்ற அறிகுறிகளுடன் தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்

      இந்த மாதிரி அடிக்கடி நிகழக்கூடியவர்களுக்கு அதே பகுதியில் மீண்டும் மீண்டும் தொடை சிராய்வதால் இது சருமத்தில் நிறமாற்றத்தை உருவாக்கலாம். நீண்ட காலத்திற்கு இவ்வாறு தொடர்ந்தால் இது நிரந்தர தோல் நிறமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

      தொடை சிராய்ப்பு ஏற்படக் காரணங்கள் (Thigh chafing causes in Tamil)

      தொடை சிராய்ப்பு என்பது முக்கியமாக பொருத்தமற்ற ஆடைகளால் அல்லது தொடையில் தோல் ஒன்றுக்கொன்று தொடர்ந்து உராய்தால் ஏற்படுகிறது.

      பின்வரும் சூழ்நிலைகளில் தொடை சிராய்ப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது:

      • உடற்பயிற்சி அல்லது அன்றாட நடவடிக்கைகள் காரணமாக தொடை பகுதியில் வியர்வை ஏற்படுதல்

      • நடைபயிற்சி அல்லது ஓட்டம்

      • மிகவும் இறுக்கமான மற்றும் தொடைகளுக்கு இடையில் தோல் உராயும் வகையில் ஆடைகளை அணிவது

      • தொடைப்பகுதி அதிக ஈரப்பதமாக இருத்தல்

      • ஈரப்பதத்தை உறிஞ்சாத துணியால் செய்யப்பட்ட ஆடைகளை அணிவது

      • தோல் மடிப்புகளுக்கு இடையில் அதிக ஈரப்பதம் ஏற்படுதல்

      • அதிக எடை கொண்டவர்கள் அல்லது தொடை தசைகள் பெரிதாக உள்ளவர்கள்

      • சென்சிட்டிவான தோல்

      • ஷேவிங் மற்றும் முடி அகற்றுதல்

      • உட்கார்ந்திருக்கும்போது கால்களைக் ஒன்றுக்கொன்று குறுக்காக வைத்திருத்தல்

      • இறுக்கமான உள்ளாடைகளை அணிவது தொடையில் வெட்டுக்களை ஏற்படுத்தும்

      • கனமான ஆடைகளை அணிதல்

      தொடை சிராய்ப்புக்கான சிகிச்சை (Treating chafing thighs in Tamil)

      மிக எளிதில் சில நிமிடங்களில் தொடை சிராய்ப்பு ஏற்படுகிறது. இதற்கு எளிய வீட்டு வைத்தியங்களை மேற்கொள்வதன் மூலமும் அதற்காக மருத்துக்கடைகளில் சாதாரணமாக கிடைக்கும் மருந்துகள் மூலமும் சிகிச்சையளிக்கப்படலாம்.

      இது மோசமடைவதைத் தடுப்பது அவசியம் ஆகும். நோய்த்தொற்றின் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

      இந்த நிலைக்கு சிகிச்சையளிக்க பின்வரும் சில வீட்டு வைத்தியங்கள் பயனுள்ளதாக இருக்கும்:

      இதில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய முதல் மற்றும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட பகுதியை சொறிவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் முன் அந்தப் பகுதியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

      1. தொடை பேண்டுகள் அவை ஒன்றுக்கொன்று உராய்வதைத் தடுக்க உட்புற தொடைகளைச் சுற்றி அணியப்படுகின்றன. இதை ஸ்கர்ட், பேண்ட் மற்றும் தடகள உடைகளுக்கு உள்ளே அணியலாம். தொடை சிராய்ப்பு ஏற்பட்ட பிறகும் இவற்றை அணியலாம்.

      1. சாஃபிங் ஷார்ட்ஸ் என்பது தொடை பட்டைகளைப் போன்றது, ஆனால் அவை அதிக கவரேஜை வழங்குகின்றன. இது அதிக வியர்வையை உறிஞ்ச உதவுகிறது. இது உள் ஆடைகளாக நன்கு வேலை செய்கிறது.

      1. கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும்போது, தொடை சிராய்ப்புக்கான கிரீம் அல்லது பாம் பயன்படுத்தப்படுகிறது. இது புதிதாக பாதிக்கப்பட்ட தொடைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. லூபிரிகேண்ட்ஸ் கொண்ட சாஃபிங் கிரீம்கள் மருந்து கடைகளில் சாதாரணமாக கிடைக்கின்றன. அவை தோல் ஒன்றோடொன்று உரசுவதை தடுக்கின்றன.

      1. பேபி பவுடர் ஈரப்பதத்தைத் தடுப்பதன் மூலம் செயல்படுகிறது. உடை உடுத்துவதற்கு முன் பேபி பவுடரை தடவிகொள்வதோடு, நாள் முழுவதும் தேவைப்படும்போது மீண்டும் பயன்படுத்துவது நல்லது. டால்க் ஃபார்முலாக்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை வியர்வையை உறிஞ்சாது. கார்ன் ஸ்டார்ச் சார்ந்த பொடிகள் இதற்கு சிறந்தவை.

      1. பெட்ரோலியம் ஜெல்லி சிறந்த மற்றும் பயன்படுத்த எளிதில் கிடைக்கிறது. இது தோலில் ஒரு தடையை உருவாக்குகிறது மற்றும் உராய்வின் தீவிரத்தை குறைக்கிறது. இது மிகவும் மலிவாகக் கிடைக்கூடியது. இது தோலில் பிசுபிசுப்பு உணர்வை ஏற்படுத்தினாலும் இது சிறந்த தேர்வு விருப்பங்களில் ஒன்றாகும்.

      1. லிப் பாம் பயன்படுத்தலாம், வேறு எந்தத் தீர்வும் எளிதில் கிடைக்காதபோது இது பயனுள்ளதாக இருக்கும். இது உட்புற தொடைகளில் உள்ள மென்மையான சருமத்தை பாதுகாக்கிறது. ஸ்டிக் போன்றவைகளைப் பயன்படுத்தவும்.

      1. அரிப்பை குணப்படுத்தக்கூடிய கற்றாழை ஜெல், ஐஸ் ஒத்தடம் மற்றும் ஓட்மீல் அடிப்படையிலான மாய்ஸ்சரைசர்கள் ஆகியவை அடங்கும்.

      1. அழற்சி மற்றும் அரிப்பைக் குறைக்க ஆண்டிஹிஸ்டமின்கள், பூஞ்சை காளான் மற்றும் ஸ்டீராய்டு கிரீம்கள் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படலாம்.

      தொடை சிராய்ப்பு ஏற்படுவதைத் தடுத்தல் (Preventing Thigh chafing in Tamil)

      முதலில் தொடைகள் ஒன்றுக்கொன்று உராய்வதைத் தடுக்க எடுக்கக்கூடிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

      1. சுறுசுறுப்பாகவும் உடற்பயிற்சி செய்பவராகவும் இருப்பவர்கள், இயக்கத்திற்கு அதிக இடமளிக்க ஸ்பான்டெக்ஸ் பொருளால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிவது நல்லது. இந்த பொருள் வியர்வையையும் உறிஞ்சுகிறது.

      2. பருத்தி ஆடையைத் தவிர்க்கவும், ஏனெனில் இது வியர்வையை உறிஞ்சுகிறது. பாலியஸ்டர் அல்லது ஸ்பான்டெக்ஸ் அணியுங்கள்.

      3. தளர்வான மற்றும் காற்றோற்றமான ஆடைகளை அணியுங்கள்.

      4. வியர்வை அதிகம் உள்ள பகுதியை அதிகம் ஈரப்பதம் இன்றி

      வைத்திருங்கள்

      5. நீரேற்றத்துடன் இருங்கள்; இது உடல் வெப்பநிலையை குறைக்கிறது.

      6. ஆடை அணிவதற்கு முன் உள் தொடையில் பவுடர் பூசிக்கொள்ளலாம்.

      7. அடிக்கடி உடைகளை மாற்றுங்கள்.

      8. வியர்வை அதிகம் உள்ளவர்கள், பகலில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை குளிப்பதன் மூலமோ அல்லது அந்தப் பகுதியை தவறாமல் கழுவுவதன் மூலமோ தங்களை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.

      இதையும் படிக்கலாமே! - உட்புற தொடை உராய்வு காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை

      தொடை சிராய்ப்பு மிகுந்த வலியை ஏற்படுத்தும் மற்றும் நிறைய அசௌகரியங்களையும் ஏற்படுத்தும். இது மக்கள் விரும்பிய ரசனையுள்ள ஆடைகளை உடுத்திக் கொள்வதை தடுக்கலாம். பொருத்தமான ஆடைகளை அணிவதன் மூலமும், சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் தொடைகளில் சிராய்ப்பு ஏற்படுவதை எளிதாகத் தடுப்பதோடு அதற்கு சிகிச்சையளிக்க முடியும்.

      ஏதேனும் கடுமையான வீக்கம் அல்லது தொற்று காணப்பட்டால், மேல் சிகிச்சைக்காக உடனடியாக தோல் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.

      References

      1. Agrawal A, Raibagkar SC, Vora HJ. (2008). Friction burns: epidemiology and prevention. Ann Burns Fire Disasters.

      2. Mazhar M, Simpson M, Marathe K. (2019) Inner thigh friction as a cause of acne mechanica. Pediatr Dermatol.

      Tags

      What are the symptoms and presentations of thigh chafing in Tamil, What are the causes of thigh chafing in Tamil, What are the treatments of thigh chafing in Tamil, Preventions of thigh chafing in Tamil, Thigh Chafing: Symptoms, Causes and Presentations in English, Thigh Chafing: Symptoms, Causes and Presentations in Hindi, Thigh Chafing: Symptoms, Causes and Presentations in Telugu, ⁠Thigh Chafing: Symptoms, Causes & Presentations in Bengali

      Is this helpful?

      thumbs_upYes

      thumb_downNo

      Written by

      gajalakshmiudayar

      gajalakshmiudayar

      Get baby's diet chart, and growth tips

      Download Mylo today!
      Download Mylo App

      Related Questions

      RECENTLY PUBLISHED ARTICLES

      our most recent articles

      100% Secure Payment Using

      Stay safe | Secure Checkout | Safe delivery

      Have any Queries or Concerns?

      CONTACT US
      +91-8047190745
      shop@mylofamily.com
      certificate

      Made Safe

      certificate

      Cruelty Free

      certificate

      Vegan Certified

      certificate

      Toxic Free

      About Us
      Mylo_logo

      At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

      • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
      • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
      • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.

      All trademarks are properties of their respective owners.2017-2023©Blupin Technologies Pvt Ltd. All rights reserved.