hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • தம்பதிகளுக்கான கருத்தரித்தல் டயட் பிளான்- இது பயனுள்ளதாக இருக்குமா மற்றும் எவ்வாறு வேலை செய்கிறது? arrow

In this Article

    தம்பதிகளுக்கான கருத்தரித்தல் டயட் பிளான்- இது பயனுள்ளதாக இருக்குமா மற்றும் எவ்வாறு வேலை செய்கிறது?

    Getting Pregnant

    தம்பதிகளுக்கான கருத்தரித்தல் டயட் பிளான்- இது பயனுள்ளதாக இருக்குமா மற்றும் எவ்வாறு வேலை செய்கிறது?

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யும் தம்பதியினர் பொதுவாக எங்கு தொடங்குவது என்று புரியாமலும், சில நேரங்களில் மனந்தளர்ந்தும் போவார்கள். இதில் யோசிக்க பல விஷயங்கள் உள்ளன. ஓவுலேஷனில் தொடங்கி ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது வரை. எனினும், கவலைப்படாதீர்கள். இந்த பதிவில் கருத்தரித்தல் டயட் பிளான்கள் என்றால் என்ன? இது எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்? அனைவரும் இதைப் பின்பற்றலாமா? போன்ற முழுத் தகவலையும் இங்கு வழங்கியுள்ளோம்.

    கருத்தரித்தல் டயட் பிளான் என்றால் என்ன?

    கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க உதவும் ஒரு குறிப்பிட்ட டயட் என்பது கருத்தரித்தல் டயட் பிளான் எனப்படும். ஃபோலிக் அமிலம் போன்ற ஒரு சில தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் இந்த டயட் பிளானில் இடம்பெறும் அல்லது இது பெரும்பாலும் ஒரு பொதுவான ஆரோக்கியமான உணவுக்கான ஒரு பிளானாகவும் இருக்கலாம். உணவுகளில் செய்யப்படும் ஒரு சில மாற்றங்கள் கருத்தரிப்பதை மேம்படுத்த உதவும் என்பதற்கான ஒரு சில சான்றுகள் உள்ளன. இருப்பினும், இது குறித்து கூடுதல் ஆராய்ச்சி அவசியம். குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யும் தம்பதிகள், தங்களுக்கு கருத்தரித்தல் டயட் பிளான் உகந்ததா என்பதை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

    கருத்தரித்தல் டயட் பிளானை பின்பற்றுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன?

    கருத்தரித்தல் டயட் பிளானானது குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யும் தம்பதிகளுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. சின்க், ஃபோலேட் போன்ற கருத்தரிப்பதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தம்பதிகள் சாப்பிடுவதன் காரணமாக கர்ப்பமாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. கூடுதலாக, கருத்தரித்தல் டயட் பிளானானது ஒரு பெண்ணின் மாதவிடாயை ஒழுங்கமைக்க உதவுகிறது. இதுவும் கருத்தரிப்பதற்கான வாய்ப்பினை மேம்படுத்துகிறது.

    கருத்தரித்தல் டயட் பிளானைப் பின்பற்றும் தம்பதிகள் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும்?

    • கருத்தரித்தல் என்று வரும்போது, ஒரு சில முக்கியமான விஷயங்களை மனதில் வைத்துக்கொள்வது அவசியம். முதலாவதாக, நீங்கள் சரியான ஊட்டச்சத்தினை போதுமான அளவு சாப்பிடுவது முக்கியம். அதாவது நிறைய நிறைய ஃபிரஷான பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் முழு தானியங்கள், கொழுப்பல்லாத புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிட வேண்டும்.

    • கருத்தரித்தல் என்று சொல்லும் போது, மிக முக்கியமாக நேரம் என்பது கட்டாயமாக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, எந்த ஒரு உணவையும் தவிர்க்காமல், சீரான உணவுகள் மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை சரியான நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இந்த எளிமையான விஷயங்களை பின்பற்றினாலே விரைவில் குழந்தை பாக்கியம் பெறுவதற்கான வாய்ப்பினை நீங்கள் அதிகரிக்கலாம்.

    கருத்தரித்தல் டயட் பிளானில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன?

    கருத்தரிக்க முயற்சி செய்யும் ஒருவர் தவிர்க்க வேண்டிய சில உணவுகளும் இருக்கத்தான் செய்கிறது. கருத்தரித்தல் டயட் பிளானை பின்பற்றும் ஒருவர் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்பது குறித்து இப்போது விரைவாக பார்க்கலாம். கருத்தரிப்பதை பாதிக்கக்கூடிய எந்த ஒரு உணவையும் அத்தம்பதி தவிர்ப்பது நல்லது. இதில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை இனிப்புகள் மற்றும் மாறு கொழுப்பு போன்றவை அடங்கும். இது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

    மது பானங்கள்:

    மது அருந்துதல் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். மது பானங்களை அருந்துவது முழுவதுமாக பரிந்துரை செய்யப்பட்டாலும், ஒரேடியாக அதனை விட முடியாதவர்கள் ஒரு வாரத்தில் இரண்டு முறை மட்டுமே குடிப்பது போன்ற வரம்புகளை கடைப்பிடிக்கலாம்.

    காஃபின்:

    அதிகப்படியான காஃபின் நுகர்வும் நீங்கள் கருத்தரிப்பதைத் தடுக்கக்கூடிய ஒன்று. காபி குடிப்பது ரொம்ப பிடிக்கும் என்றாலும் கூட ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு டம்ளருக்கு மேல் குடிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில், அதிகப்படியான காஃபின் நுகர்வு கருத்தரிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தி விடும்.

    பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

    பதப்படுத்திகள், சேர்க்கைப் பொருட்கள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை அதிக அளவில் கொண்ட உணவுகள் கருத்தரித்தலில் எதிர்மறையான தாக்கத்தைக் கொண்டுள்ளன. ஆகவே, முடிந்த வரை முழு மற்றும் பதப்படுத்தப்படாத உணவுகளை சாப்பிடுங்கள்.

    சர்க்கரை:

    சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவது எடை அதிகரிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும். இவை இரண்டுமே கருத்தரிப்பதை கடினமாக்கக்கூடியவை. எனவே, ஒரு நாளைக்கு 25 கிராம் சர்க்கரைக்கு மேல் சாப்பிடக்கூடாது.

    கருத்தரித்தல் டயட் பிளானை தம்பதிகள் எத்தனை நாட்களுக்கு பின்பற்ற வேண்டும்?

    கருத்தரித்தல் டயட் பிளான் என்பது கர்ப்பமாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் ஒரு அற்புதமான வழியாகும். எனினும், ஒவ்வொரு தம்பதியும் வித்தியாசமானவர் என்பதை ஒருவர் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, இது குறித்து மருத்துவரிடம் ஆலோசிப்பது சிறந்தது. பொதுவாக, கருத்தரிக்க முயற்சிக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னரில் இருந்து இந்த டயட் பிளானை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் ஒரு சில தம்பதிகளுக்கு கூடுதல் மாதங்கள் தேவைப்படலாம்.

    கருத்தரித்தல் டயட் பிளானின் முக்கியமான அங்கங்கள்:

    கருத்தரிக்க முயற்சிக்கும் போது, நீங்கள் சாப்பிடும் உணவானது பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு தம்பதியின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமாக கருத்தரிப்பதற்கான வாய்ப்பினை அதிகரிக்க கருத்தரித்தல் டயட் பிளான் என்பது உதவி புரியும்.

    கருத்தரித்தல் டயட் பிளானின் சில முக்கியமான அங்கங்கள் உள்ளன:

    1. போதுமான ஃபோலிக் அமிலம் பெறுதல்:

    பச்சை இலை காய்கறிகள், பயறு வகைகள், பிரெட் மற்றும் தானியங்களில் காணப்படும் ஒரு வகை ஊட்டச்சத்தே ஃபோலிக் அமிலம் ஆகும். குழந்தைக்கு பிறப்பு குறைபாடு ஏற்படுவதைத் தடுக்க ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கும் ஃபோலிக் அமிலம் அவசியமான ஒரு ஊட்டச்சத்து. குழந்தை பெற்றுக்கொள்ள தகுதிவாய்ந்த ஒரு பெண்ணுக்கு அன்றாடம் 400 மில்லி கிராம் ஃபோலிக் அமிலம் பரிந்துரைக்கப்படுகிறது.

    2. ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடவும்:

    ஹார்மோன் உற்பத்தி மற்றும் ஓவுலேஷன் நடைபெற ஆரோக்கியமான கொழுப்புகள் மிகவும் அவசியம். ஆலிவ் எண்ணெய், அவகேடோ பழங்கள், நட்ஸ் வகைகள் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படுகிறது.

    3. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்:

    மன அழுத்தம் என்பது ஹார்மோன் அளவுகள் மற்றும் கருத்தரித்தலை பாதிக்கும் தன்மை கொண்டது. யோகா அல்லது தியானம் போன்ற நுட்பங்கள் மூலமாக உங்களை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்.

    இதையும் படிக்கலாமே! - ஆண்களில் மலட்டுத்தன்மை போக்கும் கருத்தரித்தல் டயட் பிளான்கள்

    முடிவுரை

    குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்யும் தம்பதிகள் இடையே கருத்தரித்தல் டயட் பிளான் என்பது பிரபலமான ஒன்று. இது அனைவருக்கும் வேலை செய்யாது என்று சொல்லப்பட்டாலும் பல தம்பதிகளுக்கு இது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவியுள்ளது. மருத்துவர் அல்லது மகப்பேறு சிறப்பு மருத்துவரை அணுகுவதே கருத்தரித்தல் டயட் பிளான் உங்களுக்கு பொருந்துமா என்பதற்கான விடையைப் பெறுவதற்கான சிறந்த வழி.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.