Raise A Happy & Healthy Baby
Get baby's growth & weight tips
Join the Mylo Moms community
Get baby diet chart
Get Mylo App
Want to raise a happy & healthy Baby?
Pregnancy Journey
6 September 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்பிணிப் பெண்கள் ரெட் ஒயின் குடிக்கக் கூடாது, ஏனென்றால் மதுவானது வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை மோசமாக பாதிக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு எந்த அளவிற்கு மது குடித்தால் அது ஆபத்தாக முடியும் என்பது குறித்து நிபுணர்களுக்கு சரியாகத் தெரியாது. பெரும்பாலானோர் கர்ப்பிணிப் பெண்களை அதிலிருந்து முற்றிலும் விலகி இருக்கச் சொல்கிறார்கள். கர்ப்ப காலத்தில் ரெட் ஒயின் குடிப்பது பாதுகாப்பானதா என்பதை இந்தக் கட்டுரை விவாதிக்கிறது மற்றும் கர்ப்ப காலத்தில் ரெட் ஒயின் குடிப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் ஆராய்கிறது.
தேசிய சுகாதார நிறுவனங்களைப் பொறுத்த வரை, கர்ப்ப காலத்தில் மது அருந்துவது ஆபத்தானது.
ஒரு கர்ப்பிணிப் பெண் அதிகமாக ரெட் ஒயின் அல்லது மது அருந்தினால், கரு ஆல்கஹால் நோய்க்குறி எனப்படும் ஒரு நிலை ஏற்படலாம். எனவே, கர்ப்பிணிகள் கண்டிப்பாக மது அருந்தக்கூடாது.
நஞ்சுக்கொடி வழியாக மதுவானது குழந்தையின் இரத்த ஓட்டத்தில் கலந்து விடலாம். இது குழந்தை பிறக்கும் போதே உடல் ரீதியான சிரமங்கள் முதல் மனநல குறைபாடு வரை பல பிரச்சனைகள் உண்டாவதற்கு வழிவகுக்கும். இந்த பாதிப்புகள் குழந்தை பிறந்த பிறகு அல்லது வளரும் போது வெளிப்படும்.
கரு ஆல்கஹால் நோய்க்குறி உண்டாவதற்கு எந்த அளவில் மது உட்கொள்வது காரணமாக அமையும் என்பது பற்றிய அறியப்பட்ட பதிவு எதுவும் இதுவரை இல்லை. அதனால், கர்ப்ப காலத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் மது அருந்தலாமா என்ற கேள்விக்கு பாதுகாப்பான பதில் கர்ப்பிணிகள் மது குடிக்காமல் இருப்பது நல்லது என்பதே ஆகும்.
ஒருவர் மது அருந்தும் போது, அதிலிருக்கும் வேதிப்பொருள் இரத்த ஓட்டத்தில் நுழைகிறது. ஒரு கர்ப்பிணிப் பெண் மது அருந்தும்போது, ஆல்கஹால் ஆனது தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கும் செல்கிறது. வளரும் கருவால் நச்சுத்தன்மையை ஜீரணிக்கவோ அல்லது வளர்சிதைமாற்றம் செய்யவோ முடியாது, இது எண்ணற்ற ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது.
பொதுவாக கர்ப்ப காலத்தில் மது அருந்துவதால் அசாதாரணமான பிறப்புக்கள், கருச்சிதைவு மற்றும் குறைப்பிரசவம் முதலியவை ஏற்ப்டுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இதன் விளைவாக கருவின் ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் கோளாறு (எஃப்ஏஎஸ்டி/FASD) ஏற்படும் – இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பல்வேறு உடல், நடத்தை மற்றும் மனநலப் பிரச்சனைகளை உள்ளடக்கிய ஒரு சொல் ஆகும். இந்தக் கோளாறுகள் மிதமானதாகவோ அல்லது கடுமையானதாகவோ இருக்கலாம், அவற்றைக் குணப்படுத்துவதற்கு அல்லது சரிப்படுத்துவதற்கு எந்த வழியும் இல்லை.
கருவின் ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் கோளாறின் மிகவும் கடுமையான வகை கருவின் ஆல்கஹால் சிண்ட்ரோம் (எஃப்ஏஎஸ்/FAS) ஆகும். இந்த நோய்க்குறி இருக்கும் குழந்தைகள் சிறிய தலை, மேல் உதடு மற்றும் மூக்குக்கு இடையே ஒரு மென்மையான முகடு இருத்தல் போன்ற அசாதாரணமான முகப் பண்புகளைக் கொண்டிருப்பார்கள். மேலும், அவர்கள் அதே வயதில் இருக்கும் குழந்தைகளை விட குட்டையாகவும் குறைவான எடை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
கருவின் ஆல்கஹால் நோய்க்குறியின் கூடுதல் அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன:
தூங்குவதில் சிரமம்.
குழந்தையாக இருக்கும் போது பாலை உறிஞ்சுவதில் சிரமம்.
கண்பார்வை தொடர்பான பிரச்சனைகள்
கேட்டல் தொடர்பான பிரச்சினைகள்.
இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள்.
ஒத்துழைப்பு இல்லாமை.
நினைவாற்றல் பிரச்சனைகள்.
அதிவேக நடத்தை.
கவனம் செலுத்துவதில் சிக்கல்கள்.
கற்றல் குறைபாடுகள்.
பேசுவதில் தாமதம்.
குறைந்த ஐக்யூ (IQ).
போதிய அறிவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன்கள் இல்லாமை.
கர்ப்பிணிப் பெண்கள் ஒயின் குடிக்கலாமா? கர்ப்பிணிப் பெண் தன்னுடைய கர்ப்ப காலத்தில் ரெட் ஒயின் குடிக்கலாமா என்று கேட்டால், அவர் அதை குடிக்கக்கூடாது என்பது தான் பாதுகாப்பான பதிலாக இருக்கும்.
கருவிற்கு ஆல்கஹாலால் ஏற்படும் நோய்க்குறியின் ஆபத்து காரணமாகவும் மற்றும் கருவில் ஏற்படும் பிற சிக்கல்களாலும், கர்ப்பிணிப் பெண்கள் மது அருந்தக்கூடாது. கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக மது அருந்தும்போது, கருவின் ஆல்கஹால் நோய்க்குறி என்ற நிலை ஏற்படுகிறது.
நஞ்சுக்கொடி வழியாக ஆல்கஹால் குழந்தையின் இரத்த ஓட்டத்தில் நுழைந்து விடும். இதனால் குழந்தை பிறக்கும்போது உடல் ரீதியான சிரமங்கள் முதல் மனநல குறைபாடு வரையிலான பல பிரச்சனைகளுக்கு உள்ளாகக் கூடும். பிரசவத்திற்குப் பிறகு மற்றும்/அல்லது குழந்தையின் வளர்ச்சியின் போது இதனுடைய பக்க விளைவுகள் வெளிப்படும்.
கருவில் ஆல்கஹால் நோய்க்குறியை ஏற்படுத்தக் கூடிய ஆல்கஹாலின் உறுதியான அளவு எதுவும் இது வரைக்கும் பதிவு செய்யப்படவில்லை.
ஒரு கர்ப்பிணிப் பெண் எவ்வளவு அல்லது எந்த வகையான மது அருந்தினாலும், அது அவருடைய குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும், மேலும் இது கண்டிப்பாக ஆபத்தில் தான் முடியும். கருவின் ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் கோளாறு என்பது கருவில் இருக்கும் பெரும்பாலான ஆல்கஹால் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளைக் குறிக்கிறது. 2017 ஆம் ஆண்டின் ஆய்வுகளின் மதிப்பாய்வின்படி, கர்ப்பமாக இருக்கும் போது மது அருந்திய 13 பெண்களில் ஒரு சிலருக்கு எஃப்ஏஎஸ்டி/FASD உடன் குழந்தை பிறந்துள்ளது. கர்ப்பமாக இருக்கும்போது குடித்தால் ஏற்படும் விளைவுகள் பின்வருமாறு:
ஆல்கஹால் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் இரத்த ஓட்டத்திலும் மற்றும் அவரது குழந்தையின் நஞ்சுக்கொடி வழியாகவும் நுழைகிறது.
கர்ப்பிணிப் பெண்ணின் குழந்தையானது தாயை விட அதிக இரத்த செறிவை உருவாக்கும், ஏனென்றால் குழந்தையின் வளரும் உடலானது ஆல்கஹாலில் இருந்து எளிதாக விடுபட முடியாது.
கர்ப்பிணிப் பெண்கள் மது அருந்துவதால், குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் உணவை அது தடுக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மது குடித்தால், இதன் விளைவாக அவர்களுடைய குழந்தையின் உறுப்பு வளர்ச்சி பாதிப்படைவதோடு, நிரந்தர மூளை பாதிப்பை ஏற்படுத்தும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் பால்: எந்த வகையான பால் கர்ப்பிணிகளுக்கு சிறந்தது?
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ரெட் ஒயின் குடிக்கக் கூடாது. தற்போது, கர்ப்பமாக இருக்கும் போது குடிப்பதற்கு பாதுகாப்பாக எந்தவொரு ஆல்கஹாலும் இல்லை. கூடுதலாக, கர்ப்ப காலத்தில் அதிக குடிப்பழக்கத்தில் ஈடுபடும் பெண்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்ததாக எந்த பதிவும் இல்லை.
கர்ப்ப காலத்தில் எந்தவொரு மதுபானமும் குடிப்பது ஆபத்தானது, மேலும் மதுபானத்தை இந்த சமயத்தில் குடித்தால் அது எப்போது வேண்டுமானாலும் குழந்தை மற்றும் தாய்க்கு தீங்கு விளைவிக்கும். பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், ஒரு பெண் கர்ப்பமாக இருக்க முயற்சிக்கும் போது அல்லது கர்ப்ப காலத்தில் ரெட் ஒயின் அல்லது மது அருந்தக்கூடாது.
கர்ப்பமாக இருக்கும் போது ரெட் ஒயின் குடிக்க விரும்பாத பெண்கள் ஆன்லைனிலும் மற்றும் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியை நாடலாம். உறுதியான ஆலோசனையைப் பெறுவதற்கு ஒரு மருத்துவரை அணுகலாம்.
Yes
No
Written by
aviraparaiyar
aviraparaiyar
கர்ப்ப காலத்தில் செட்டிரிசைன்: பொருள், அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் | Cetirizine in Pregnancy: Meaning, Risks & Side Effects in Tamil
குழந்தையின் நகர்வு ஏன் அடிவயிற்றுப் பகுதியில் உணரப்படுகிறது? | Why you are feeling baby movement in lower abdomen in Tamil
கர்ப்ப காலத்தில் படபடப்பிற்கான அறிகுறிகள், காரணம் & சிகிச்சை | Palpitation in Pregnancy: Symptoms, Causes & Treatment in Tamil
கர்ப்ப காலத்தில் பர்கர் நன்மைகள் & விளைவுகள் | Burger During Pregnancy Benefits & Effects
பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு புற்றுநோய் அறிகுறிகள்
கருக்கலைப்புக்குப் பிறகு மார்பக வலி மற்றும் வலி நிவாரண முறைகள் | Breast Pain After Abortion: Pain Relief Methods in Tamil
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
Kumkumadi | Ubtan | Vitamin C | Tea Tree | Aloe Vera | Rose Water | Skin - Hair | SHOP BY CONCERN | Hairfall | Dry and Damaged Hair | Hair Growth | Shop By Ingredient | Onion | Coconut | Skin - Fertility | By Concern | PCOS | Pregnancy Test Kit | Fertility For Her | Ovulation Test Kit | Cloth Diaper | Maternity dresses | Stretch Marks Kit | Stroller |