In Vitro Fertilization (IVF)
15 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
குழந்தையின்மைக்கான சிகிச்சை குறித்து விவாதிக்கும் தம்பதியர்களுக்கு, ஒரு மருத்துவர் பரிந்துரை செய்யக் கூடிய சிகிச்சை முறைதான் செயற்கை கருவூட்டல் முறையாகும். கர்ப்பம் அடைய முடியாமல் தவிக்கும் பல தம்பதியர்கள் இந்த எளிமையான சிகிச்சை முறை மூலமாக பலன் அடைய முடியும். இதில் எதிர் விளைவுகள் மிகவும் குறைவு.
ஒரு பெண்ணின் கருப்பை வாய், பெலோஃபியன் டியூப் அல்லது கர்ப்பப்பை உள்ளே நேரடியாக விந்தணுவை செலுத்தி செயற்கை கருவூட்டல் முறை மேற்கொள்ளப்படுகிறது. கர்ப்பப்பை உள்ளே மருத்துவர் விந்தணுவை உள் செலுத்தும் முறையை தான் intrauterine insemination (IUI) என்று சொல்கிறோம். மேலும் குழந்தையின்மைக்கான சிறந்த சிகிச்சை முறையாக இது இருக்கிறது. இது எந்த அளவுக்கு பலனுள்ளது?
IUI சிகிச்சை முறையில், விந்தணுவின் பயணம் எளிமையாகிறது, எந்த ஒரு தடையும் தவிர்க்கப்படுகிறது. குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் பரிந்துரை செய்யும் முதலாவது தீர்வு இதுவாகத்தான் இருக்கும். கருத்தரித்தல் செய்வதற்காக கர்ப்பப்பையில் இருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கரு முட்டைகள் வெளிவரும்போது, செறிவூட்டப்பட்ட, சுத்தமான விந்தணு உடனடியாக கர்ப்பப்பை உள்ளே செலுத்தப்படுகிறது. செயற்கை கருவூட்டல் சிகிச்சையில், விந்தணுவானது பெலோஃபியன் டியூப் வழியே பயணித்து, ஏற்கனவே முதிர்ச்சி அடைந்த நிலையில் உள்ள கருமுட்டையுடன் சேர்ந்து கருத்தரிக்கும். இறுதியாக கர்ப்பம் உண்டாகும்.
குழந்தையின்மைக்கான காரணங்களைப் பொறுத்து, IUI சிகிச்சை என்பது வழக்கமான சுழற்சி அல்லது கருத்தரித்தலுக்கான மருந்துகளுடன் சேர்த்து மேற்கொள்ளப்படுகிறது.
IUI என்பது நேரடியான சிகிச்சை முறையாகும். குறைவான தொழில்நுட்ப நடவடிக்கைகளை கொண்ட இந்த சிகிச்சை முறையானது, கருத்தறித்தலுக்கான மற்ற சிகிச்சை முறைகளைக் காட்டிலும் குறைந்த செலவில் மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது. பெண் கர்ப்பம் அடைவதற்கான சாத்தியக்கூறுகளை இது அதிகரிக்கிறது. ஆனால், ஒவ்வொரு நபரின் உடலும் தனித்துவ குணம் மிகுந்தது என்ற சூழலில், எல்லோருக்கும் IUI சிகிச்சை வெற்றிகரமானதாக அமையும் என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது.
செயற்கை கருவூட்டல் சிகிச்சையில் பங்கேற்பதற்கு முன்னதாக நீங்கள் கருமுட்டை உற்பத்தியை தூண்டக் கூடிய மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கலாம். உங்கள் கணவர் அல்லது தானம் செய்பவரிடம் இருந்து விந்தணு பெறப்படும். ’ஸ்பெர்ம் வாஷிங்’ என்ற முறையில், உங்கள் விந்தணுவில் இருந்து திறன் மிகுந்த அணுக்கள் பிரித்தெடுத்து செறிவூட்டப்படும். இதற்குப் பிறகு, அந்த விந்தணுவை மருத்துவர் கருப்பை உள்ளே செலுத்துவார். அந்த விந்தணு மூலம் கருமுட்டை கருத்தரித்து, கருப்பையின் லைனிங் மீது படரத் தொடங்கினால், கர்ப்பம் உறுதியாகிவிடும்.
முறைப்படியான சிகிச்சைக்கு முன்னதாக, செயற்கை கருவூட்டலுக்கு மிக கவனமான திட்டமிடல் தேவைப்படும்.
விந்தணு மாதிரியை தயார் செய்வது: உங்கள் கணவர் விந்தணு மாதிரியை மருத்துவரின் கிளினிக்கிற்கு கொண்டு வருவார் அல்லது தானம் செய்யும் நபரிடம் இருந்து பெறப்பட்ட விந்தணுவானது உறைநிலையில் வைத்து வயல் மூலமாக கொண்டு வரப்படும். அந்த மாதிரி விந்தணுவில் மிகவும் விறுவிறுப்பாக உள்ள விந்தணுக்கள் பிரித்து எடுக்கப்படும். லோயர் கிரேடு விந்தணுவில் இருந்து ஆரோக்கியமான விந்தணு பிரிக்கப்படும். இது தவிர, விந்தணு அல்லாத மாற்று நடவடிக்கைகள் கருப்பையில் உள்ளே ஊடுருவுவதை தடுக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்படும். மிகக் குறைவான அளவில், உயர் தரத்தில் செறிவூட்டப்பட்ட ஆரோக்கியமான விந்தணுக்களை உட்செலுத்துவதன் மூலமாக கர்ப்பத்திற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.
கருமுட்டை சுழற்சியை கண்காணிப்பது: கருமுட்டை சுழற்சியை கண்காணிப்பது மிக முக்கியமானது. ஏனென்றால் IUI சிகிச்சைக்கு திட்டமிடுவது சிக்கலானது. இந்த சிகிச்சையை மேற்கொள்வதற்காக, உடலில் இருந்து லூயிடினைசிங் ஹார்மோன் எப்போது பெருமளவில் வெடித்து வெளிக் கிளம்பி வருகிறது என்பதைக் கண்டறிய வீட்டிலேயே சிறுநீரில் கருமுட்டை பரிசோதனை செய்வதற்கான கிட் ஒன்று வழங்கப்படும்.
கருப்பை மற்றும் முட்டைகளின் வளர்ச்சியை பார்வையிடுவதற்கு டிரான்ஸ்வேஜினல் அல்ட்ராசவுண்ட் என்ற பரிசோதனையை மருத்துவர் மேற்கொள்வார். Human Chorionic Gonadotropin (HCG) ஊசிகள் அல்லது மாத்திரைகள் உட்செலுத்தப்படலாம். இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருமுட்டைகளை சரியான தருணத்தில் வெளிக்கொணர உதவும்.
சரியான நேரத்தை முடிவு செய்வது: பெரும்பாலான IUI சிகிச்சைகள் கருமுட்டை வெளியான ஒன்று அல்லது இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்படுகிறது. சிகிச்சைக்கான சரியான நேரம் மற்றும் இதர விஷயங்களை மருத்துவர் முடிவு செய்வார்.
IUI சிகிச்சை முறைக்கு தேவையான விந்தணுக்களை சேகரிக்க பல வழிமுறைகள் உள்ளன. மிகவும் பிரபலமான முறை என்னவென்றால், மருத்துவரின் கிளினிக் அல்லது ஆய்வகத்தில் இருந்து வழங்கப்படும் ஸ்டெர்லைடு கிளாஸ் அல்லது பிளாஸ்டிக் கப் உள்ளே ஒரு ஆண் சுயஇன்பம் மூலமாக விந்தணுவை சேகரிப்பதாகும். ஆணின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதுதவிர, மருத்துவர்களால் வழங்கப்படும் பிரத்யேக ஆணுறையை அணிந்து கொண்டு ஆண் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலமாகவும் விந்தணு சேகரிக்கப்படும். விந்தணு சிறுநீர் பையில் சென்று தங்கக் கூடிய Retrograde ejaculation பாதிப்பு ஒருவருக்கு இருக்குமானால் அவரது சிறுநீரில் இருந்து ஆய்வகத்தில் பிரித்து எடுக்கப்படும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் IUD: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அபாயங்கள்
விந்தணு சேகரிக்கப்பட்ட பிறகு, அந்த மாதிரி விந்தணு ஆய்வகத்தில் வைத்து சுத்தம் செய்யப்படும். விந்தணுவில் இருந்து விந்து திரவம் பிரித்து எடுக்கப்படும். மேலும் விந்தணு செறிவூட்டப்படும் (விந்தணு திரவம் உள்சென்றால் பெண்ணின் கருப்பை உள்ளே பிடிப்பு ஏற்படுத்தக் கூடும்). இதற்கு இரண்டு மணி நேரம் ஆகலாம்.
பெண்ணின் கருமுட்டை வெளியாகுவதற்கு முன்பாக IUI மேற்கொள்ளப்படும். சிகிச்சைக்கான விந்தணு தயாராகிவிட்டால், IUI சிகிச்சையான குறுகிய நேரத்தில் விரைவாக செய்து முடிக்கப்படும். கிளிக்கில் டேபிள் மீது படுத்திருக்கும் நோயாளியின் பெண்ணுறுப்பு வழியாக ஸ்பெகூலம் என்னும் கருவியை செலுத்தி, அவரது கருப்பையை மருத்துவர் ஆய்வு செய்வார். இதற்குப் பிறகு, கருப்பை வாய் அருகே பொருத்தப்படும் கேத்தடர் (சிறிய டியூப்) வழியாக, செறிவூட்டி வைக்கப்பட்ட விந்தணுக்கள் உள்செலுத்தப்படும். இந்த சிகிச்சை பெரும்பாலும் வலி இல்லாமல் முடியும். ஒருசில பெண்களுக்கு கொஞ்சம் லேசான பிடிப்பு ஏற்படலாம். IUI சிகிச்சை செய்து முடித்த பிறகு, ஒரு சில பெண்களுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.
Yes
No
Written by
gajalakshmiudayar
gajalakshmiudayar
கர்ப்ப காலத்தில் சோயாபீன்சின் நன்மைகள், அபாயங்கள் மற்றும் டிப்ஸ்
கர்ப்ப காலத்தில் கீரையின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்
கர்ப்ப காலத்தில் தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள்
பெரிமெனோபாஸ்: காரணங்கள், அறிகுறிகள், அபாயங்கள் & சிகிச்சை
கர்ப்ப காலத்தில் இடுப்பு வலி: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
கர்ப்ப காலத்தில் பன்னீர் நல்லதா? இதன் நன்மைகள், பக்க விளைவுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Mylo is a master brand offering solutions through it's subsidiaries - Mylo Care and Mylo Baby.
Mylo Care offers science backed, expert led solutions across multiple health concerns.
Mylo Baby is a one stop solution for young parents for all their baby's needs.
Dark Circles | Skin hydration | Stretch Marks | Shop By Ingredient | Kumkumadi | Ubtan | Vitamin C | Tea Tree | Aloe Vera | Skin - Hair | Hairfall | Dry and Damaged Hair | Shop By Ingredient | Onion | Aloe Vera Range For Hair | Coconut | Neelibrigandi | Skin - Bath & Body | By Ingredient | Skin - Pregnancy & New Mom |