Browse faster in app
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Vaginal Bleeding arrow
  • கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு காரணங்கள் arrow

In this Article

    கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு காரணங்கள்

    Vaginal Bleeding

    கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு காரணங்கள்

    15 March 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    கர்ப்ப காலத்தில் ஸ்பாட்டிங் அதாவது இரத்தப்போக்கு அடிக்கடி ஏற்படுவது சகஜமே, குறிப்பாக முதல் மூன்று மாதத்தில் இரத்தப்போக்கு ஏற்பட்டால் பயப்படவேண்டாம். மிக அரிதாக, இரத்தப்போக்கு ஏதேனும் ஆபத்தான பிரச்சனை இருப்பதற்கு அறிகுறியாக கூட இருக்கலாம். நீங்களும் உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்ய இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்வது அவசியம்.

    கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் ஏற்படும் இரத்தப்போக்கு

    கர்ப்ப காலத்தின் முதல் 12 வாரத்திற்குள் 25% பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படுகிறது. கர்ப்பத்தின் தொடக்கத்தில் இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:

    கருப்பதித்தல் நடக்கும் போது நேரும் இரத்தக்கசிவு

    பொதுவாக கருத்தரித்த அடுத்து 6-லிருந்து 12 நாட்களுக்குள், கருப்பை சுவரில் கருவுற்ற முட்டை கருப்பதிப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு சிறிது இரத்தப்போக்கு (ஸ்பாட்டிங்) ஏற்படும். சில பெண்கள் இந்த இரத்தப்போக்கை மாதவிடாய் என தவறாக எண்ணி அவர்கள் கர்ப்பம் தரித்திருப்பதையே உணராமல் இருப்பார்கள். இந்த இரத்தப்போக்கு சில மணிநேரத்திலிருந்து சில நாட்கள் வரைக்கூட நீடிக்கும். ஆனால், இது நிச்சயமாக ஆபத்துக்குரியது அல்ல.

    கருச்சிதைவு

    இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று கருச்சிதைவாகும். ஏனெனில், இது பொதுவாக, கர்ப்பத்தின் முதல் 12 வாரங்களிலேயே ஏற்படுகிறது. அது மட்டுமின்றி, கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதத்தில் ஏற்படும் இரத்தப்போக்கானது எப்போதுமே கருச்சிதைவின் அறிகுறியாகத் தான் இருக்கும் என்றும் சொல்ல முடியாது. சொல்லப்போனால், அல்ட்ராசவுண்ட் மூலம் குழந்தையின் இதயத் துடிப்பு கண்டறியப்பட்ட பிறகு கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் இரத்தப்போக்கு இருக்கும் 90% மேலான பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதில்லை.

    அடிவயிற்றுப் பகுதியில் ஏற்படும் பயங்கரமான வலி மற்றும் கருப்பை வாயிலிருந்து வெளிப்படும் திசு ஆகியவை கருச்சிதைவின் மேலும் சில அறிகுறிகளாகும்.

    வேற்றிடச்சூல்/எக்டோபிக் கர்ப்பம்

    கருப்பைக்கு வெளியே, பொதுவாக இனப்பெருக்க பாதையில் கருபதித்தல் ஏற்பட்டால் அது எக்டோபிக் கர்ப்பம் எனப்படுகிறது. கருவின் தொடர் வளர்ச்சியின் காரணமாக ஃபலோபியன் குழாய் வெடித்தால் பெண்ணின் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படலாம்.

    தோராயமாக 2% கர்ப்பங்களில் மட்டுமே எக்டோபிக் கர்ப்பம் நிகழ்கிறது.

    பயங்கரமான வயிற்று வலி அல்லது இடுப்பு வலி, இளகிய கருப்பை வாய் மற்றும் தலைச்சுற்றல் ஆகியவை எக்டோபிக் கர்ப்பத்தின் அறிகுறிகளாகும்.

    கருப்பை கர்ப்பம்

    இது கர்ப்பகால ட்ரோபோபிளாஸ்டிக் நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அரிய நோயில், குழந்தைக்கு பதிலாக பிறழ்ந்த திசுக்கள் உருவாகின்றன. அரிதாக அந்த செல் தீங்கு விளைப்பதாகவும் அது மற்ற உறுப்புகளில் பரவக்கூடிய வலுப்பெற்றதாகவும் இருக்கிறது.

    தீவிர அறிகுறிகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி விரைவாக கருப்பை வீக்கத்தை ஏற்படுத்துவது மோலார் கர்ப்பத்தின் அறிகுறிகளாகும்.

    கர்ப்ப காலத்தின் போது ஆரம்ப காலத்தில் வெளிப்படும் கரு சிவப்பு இரத்த கட்டிகள் அல்லது இரத்தப்போக்கானது கருப்பைவாய் மாற்றத்தின் விளைவினால் ஏற்படுவதே ஆகும். கர்ப்ப காலத்தில் கருப்பைக்கு கூடுதல் இரத்தம் பாயும். இந்த இரத்தப்போக்கு உடலுறவுக்கு பின் அல்லது பாப் சோதனையின் (கருப்பை வாய் சோதனை) போது கருப்பையில் ஏற்படும் தொடர்பினாலும் ஏற்படலாம். இவ்வகை இரத்தப்போக்கை எண்ணி கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை.

    தொற்றக்கூடிய நோய்

    கருப்பைவாயில் ஏற்படும் நோய், பிறப்புறுப்பில் ஏற்படும் அழற்சி, அல்லது கிளமிடியா, கோனோரியா, அல்லது ஹெர்பெஸ் போன்ற பயங்கரமான நோயினாலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் இரத்தப்போக்கு ஏற்படலாம்.

    இரண்டாம் மற்றும் மூன்றாம் டிரைமெஸ்டர்களில் ஏற்படும் இரத்தப்போக்கு

    இது தாய் அல்லது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பை குறிப்பிடக்கூடியதால், கர்ப்பக்காலத்தின் கடைசி மாதங்களில் ஏற்படும் இரத்தப்போக்கு ஆபத்தானவையாக இருக்கும். ஒருவேளை ஒரு கர்ப்பிணி ஆரம்பக்காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் டிரைமெஸ்டர்களில் இரத்தப்போக்கு ஏற்பட்டால், விரைவாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

    கடைசி மூன்று மாதங்களில் ஏற்படும் இரத்தப்போக்கிற்கான சாத்தியமான காரணங்கள் பின்வருமாறு:

    பிறப்பிற்கு முந்தைய நஞ்சுக்கொடி

    இந்நிலை கருப்பையின் அடிப்பாகத்தில் நஞ்சுக்கொடி உருவாகும் போது ஏற்படும், அதுமட்டுமின்றி இது கருப்பை வாயை முழுமையாகவோ அல்லது பாதியாகவோ மறைக்கக்கூடாது. மூன்றாம் மூன்று மாதங்களில் 200-இல் ஒரு கர்ப்பத்திற்கு நஞ்சுக்கொடி கீழிறக்கம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அது வலியை தருவதில்லை என்றாலும், நஞ்சுக்கொடி கீழிறக்கம் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவேண்டிய ஒரு பிரச்சனையாகும்.

    இதையும் படிக்கலாமே! - 8 வார கர்ப்பத்தின்போது ரத்தக்கசிவு

    நஞ்சுக்கொடி தகர்வு

    தோரயமாக கர்ப்பங்களில் 1% குழந்தைப்பேரின் போதோ அல்லது அதற்கு முன்னரோ கருப்பை சுவரிலிருந்து நஞ்சுக்கொடி பிரிந்து நஞ்சுக்கொடி மற்றும் கருவின் இடையில் இரத்தவெள்ளத்தை ஏற்படுத்துகிறது. நஞ்சுக்கொடி தகர்வு ஏற்படுவதினால் தாய் மற்றும் குழந்தையின் உயிரிக்கு ஆபத்தும் ஏற்படலாம்.

    இடுப்பு வலி, பிறப்புறுப்பு கட்டிகள், கருப்பை வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை நஞ்சுக்கொடி தகர்வினால் ஏற்படும் மற்ற அறிகுறிகள்.

    அடிவயிறு கிழிபடுதல்

    அரிதாக, முந்தைய மகப்பேறில் ஏற்படும் சி-செக்ஷன் தழும்பிற்கு அடுத்த கர்ப்ப காலத்தில் பாதிப்பேற்படலாம். கருப்பையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் உடனடியாக சி-செக்ஷன் செய்வது அவசியம். ஏனெனில், அது ஆபத்தானது. சுகப்பிரசவத்திற்கான மற்றொரு அறிகுறி வயிற்று வலி மற்றும் புண் ஆகும்.

    வாசா ப்ரீவியா

    இத்தகைய அரிதான சூழ்நிலையில், நஞ்சுக்கொடி அல்லது தொப்புள் கொடியின் உள் உறுப்புகள் அல்லது வளர்ந்து வரும் குழந்தையின் உறுப்புகள் கர்ப்பிணி பெண்ணின் பிறப்புறுப்பினுள் செல்கிறது.

    வாசா ப்ரீவியா எனும் நிலை குழந்தைக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது, ஏனெனில் இரத்த நாளங்கள் வெடிப்பது மட்டுமின்றி கடுமையான இரத்தப்போக்கு மற்றும் ஆக்ஸிஜன் இழப்புக்கும் வழிவகுக்கிறது. உட்புற இரத்தப்போக்கு மற்றும் சீரில்லாத கருவின் இதயத் துடிப்பு ஆகியவை வாசா ப்ரீவியாவின் இரண்டு அறிகுறிகளாகும்.

    ப்ரீடெர்ம் டெலிவரி (குறைப்பிரசவம்)

    கர்ப்ப காலத்தின் கடைசியில் கர்ப்பிணி பெண்ணிற்கு இரத்தப்போக்கு ஏற்படுகிறது என்றால் பிரசவம் நேரப்போகிறது என்று அர்த்தம். கருப்பையின் நுழைவாயிலை மூடும் சளி பிரசவம் ஆவதற்கு சில நாட்கள் மற்றும் வாரங்களுக்கு முன்பு யோனியிலிருந்து வெளிப்படும் போது, அது பொதுவாக இரத்தப்போக்கை ஏற்படுத்தும்.

    கர்ப்ப காலத்தில் 37 ஆவது வாரத்திற்கு முன்பே இரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுதல் அவசியம். ஏனெனில், அது குறைப்பிரசவமாகவும் இருக்கலாம்.

    சுருக்கம்

    பொதுவாக கர்ப்பிணி பெண்கள் முடிந்தவரை கவனமாக இருக்க வேண்டும். அதோடு பயணம் மற்றும் கடினமான வேலை செய்தல் போன்றவற்றை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கிற்கான அடிப்படை காரணத்தை அறிய கர்ப்பிணிகளுக்கு அல்ட்ராசவுண்ட் சோதனை செய்யப்படுதல் வேண்டும். முழுமையான பரிசோதனையின் பகுதியாக, ஒரே நேரத்தில் வயிறு மற்றும் கருப்பை அல்ட்ராசவுண்ட் சோதனைகள் அடிக்கடி மேற்கொள்ளப்படுகின்றன.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    aviraparaiyar

    aviraparaiyar

    Read from 5000+ Articles, topics, verified by MYLO.

    Download MyloLogotoday!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    100% Secure Payment Using

    Stay safe | Secure Checkout | Safe delivery

    Have any Queries or Concerns?

    CONTACT US
    +91-8047190745
    shop@mylofamily.com
    certificate

    Made Safe

    certificate

    Cruelty Free

    certificate

    Vegan Certified

    certificate

    Toxic Free

    About Us

    Trusted by 10+ million young parents Mylo is India’s #1 Pregnancy & Parenting App. Mylo app will guide you through your whole parenting journey. Download now

    All trademarks are properties of their respective owners.2017-2023©Blupin Technologies Pvt Ltd. All rights reserved.