This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

குழந்தையின் நகர்வு ஏன் அடிவயிற்றுப் பகுதியில் உணரப்படுகிறது? | Why you are feeling baby movement in lower abdomen in Tamil

Baby Movements
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 19, 2026
குழந்தையின் நகர்வு ஏன் அடிவயிற்றுப் பகுதியில் உணரப்படுகிறது? | Why you are feeling baby movement in lower abdomen in Tamil
Likes37 Likes|
Read time7 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • கர்ப்ப காலத்தில் குழந்தை தனது கை, கால்களை அசைத்து விளையாடுவதால், அடிவயிற்றுப் பகுதியில் உதைத்தல், திரும்புதல், விக்கல் போன்ற பல்வேறு நகர்வுகளை தாய் உணரக்கூடும்.
  • அடிவயிற்றில் குழந்தை உதைப்பது பொதுவாக வலிக்காது, ஆனால் 6வது மாதத்தில் உதை சற்று கடுமையாக இருக்கலாம் மற்றும் வாயுத்தொல்லையில் இருந்து வேறுபடுத்தி உணர முடியும்.
  • அதிக வயிற்றுப்போக்கு, உதிரப்போக்கு, தலைசுற்றல், வீக்கம், அதிக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கர்ப்பிணிப் பெண்கள் உடனடியாக மருத்துவரை ஆலோசனை செய்ய வேண்டும்.
  • கர்ப்ப கால ஆரோக்கியத்திற்கு எது உதவும்? Explore our Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each.
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating4.0
Stretch Marks Kit (Stretch Mark Oil + Stretch Marks Cream - 100ml each)
Stretch Marks Kit (Stretch Mark Oil + Stretch Marks Cream - 100ml each)
Rating4.5
Organic Aloe Vera (300 ml)
Organic Aloe Vera (300 ml)
Rating4.4

உதை மேல் உதை, அடுத்தடுத்த அசைவுகள். ஒவ்வொரு நாளும் உங்கள் அடிவயிற்றுப் பகுதியில் வெவ்வேறு விஷயங்களை உணரலாம். இவற்றில் பெரும்பாலானவை இயல்பானது தான். ஆனால், சில சமயங்களில் குழந்தையின் அசைவு அல்லது இயல்புக்கு மாறான உணர்வு தென்படக் கூடும்.

குழந்தையின் நகர்வு குறித்த உணர்வு அடிவயிற்றுப் பகுதியில் தென்படுவது எதனால் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

என் குழந்தையின் நகர்வு காரணமாக அடிவயிற்றுப் பகுதியில் எனக்கு உணர்வு தென்படுவது ஏன்? (Why am I experiencing movement in my lower abdomen from my baby in Tamil)

இதற்கு முன்பு வரையிலும், குழந்தை உதைத்து விளையாடவும், சிலிர்த்துக் கொள்ளவும் தேவையான இட வசதி இருந்தது. இந்தத் சமயத்தில் தான், தங்களுக்கு நகர்த்தக் கூடிய கை, கால்கள் நமக்கு இருக்கின்றன என்பதை குழந்தை உணர்ந்து கொண்டிருக்கும். ஆக, இந்தத் தருணத்தில் குழந்தையின் நகர்வு என்பது பிறந்த குழந்தைகளுக்கு ஈடானதாக இருக்கும். கால்களை அசைத்தால் என்ன நடக்கிறது என்பதை குழந்தை முயற்சித்துப் பார்த்துக் கொண்டிருக்கும். இந்தத் தருணத்தில் குழந்தையின் உதை என்பது வெவ்வேறு உயரங்கள் மற்றும் இடங்களில் நிகழும். சில சமயம், உங்கள் அடிவயிற்றுப் பகுதியில் இது நிகழுவதாகத் தோன்றும்.

ஒரு கர்ப்பிணிப் பெண் தன்னுடைய அடிவயிற்றுப் பகுதியில் குழந்தை உதைப்பதை உணரும் பட்சத்தில் அது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. வெவ்வேறு நகர்வுகள் மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் எப்படி செயல்படுவது மற்றும் குதூகலமாக இருப்பது எப்படி என்பது குறித்து குழந்தை பரிசோதித்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இதை ஒரு அழகியத் தருணமாக பெண் உணரலாம். கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவரது அடிவயிற்றுப் பகுதியில் குழந்தை நகரும் போது கீழ்காணும் உணர்வு தென்படும்:

  • உதைத்தல்

  • திரும்புதல்

  • விக்கல்

  • கை, கால்களை வளைத்தல்

  • குழந்தை தன் கால்கள் கொண்டு பயிற்சி செய்தல்

அடிவயிற்றுப் பகுதியில் குழந்தை உதைக்கும் போது உங்களுக்கு வலிக்குமா? (Does it hurt when the baby kicks you in the lower abdomen in Tamil)

இல்லை. பொதுவாக பார்க்கப் போனால், அடிவயிற்றுப் பகுதியில் குழந்தை உதைப்பதால் அல்லது குத்து விடுவதால் பெரிய அளவுக்கு வலி ஏற்படாது. ஆனால், அடிவயிற்றுப் பகுதியில் குழந்தையின் நகர்வு காரணமாக ஏற்படும் உணர்வுக்கும், வாயுத் தொல்லையால் ஏற்படும் உணர்வுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை ஒரு கர்ப்பிணிப் பெண் உணர முடியும். உதாரணத்திற்கு, கர்ப்பத்தின் 6ஆவது மாதத்தில் குழந்தையின் உதை சற்று கடுமையானதாக இருக்கும். இதனுடன் புரட்டும் உணர்வு சேர்ந்து கொள்வதால் கர்ப்பிணிப் பெண்கள் அடுத்தடுத்த அதிர்வுகளை உணரலாம். கர்ப்பிணிப் பெண் சில கடுமையான வேலைகளை செய்யும் போது அடிவயிற்றுப் பகுதியில் குழந்தை நகருவதை உணரலாம். ஏனெனில், இந்த சமயத்தில் பனிக்குடத்தில் குழந்தைக்கு கூடுதல் இடவசதி கிடைக்கும்.

எனினும், அடிவயிற்றுப் பகுதியில் தடாலென்ற சத்தத்தை கர்ப்பிணிப் பெண் உணருகிறார் என்றால், அது உங்கள் வயிறு அல்லது முதுகு நோக்கி தள்ளப்படும் குழந்தையின் தலைப்பகுதியால் உண்டாகக் கூடியதாக இருக்கும். கால்களால் இந்த உணர்வு ஏற்படாது.

மருத்துவ சிகிச்சை எப்போது தேவைப்படும் (When you could require medical attention in Tamil)

குழந்தை இடது அடிவயிற்று பகுதி நோக்கி இருப்பதாக ஒரு கர்ப்பிணிப் பெண் உணரும் பட்சத்தில் அல்லது குழந்தை பின்பகுதியை உயர்த்தியவாறு இருக்கிறது என்றால், அந்த சமயத்தில் கர்ப்பிணிப் பெண் தன்னுடைய அடிவயிற்றுப் பகுதியில் கூடுதலான உதையை உணரக் கூடும். குழந்தையின் தலைத் திரும்பும் சமயத்தில் ஏற்படும் வலியை காட்டிலும் இது கூடுதலாக இருக்கக் கூடும். இருப்பினும், பிரசவ தேதிக்கு முன்னதாகவே திரும்பிக் கொண்ட குழந்தையை சரியான முறையில் வைப்பதற்கு மகப்பேறு மருத்துவர் உதவி செய்வார். இதற்குப் பெயர் வெளிப்புற சீஃபாலிக் முறை அல்லது இசிவி (ECV) என்பதாகும். குழந்தையை திருப்புவதற்காக லேசானது முதல் கடுமையான அழுத்தத்தை மருத்துவர் ஏற்படுத்தக் கூடும். கீழ்காணும் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

  • அதிகப்படியான வயிற்றுப்போக்கு

  • உடல் சோர்வு அல்லது மயக்க உணர்வு

  • பெண்ணுறுப்பில் உதிரப்போக்கு அல்லது வழக்கத்திற்கு மாறான கசிவு

  • நெஞ்சு, கை அல்லது கால்களில் வலி

  • 100 டிகிரிக்கும் மேலான உடல் வெப்பநிலை

  • வீக்கம்

  • சிறுநீர் கழிப்பதில் சிரமம்

  • தலைசுற்றல் அல்லது கடுமையான தலைவலி

கர்ப்பமாக இல்லாத சமயத்தில் அடிவயிற்றில் ஏற்படக் கூடிய நகர்வுகளுக்கான காரணம் (Movement in the lower abdomen when not pregnant in Tamil)

கர்ப்பமாக இல்லாத பெண்களுக்கும் அடிவயிற்றில் அசாதாரணமான நகர்வுகள் அல்லது உணர்வுகள் தென்படக் கூடும்.

செரிமானம் போன்ற ஒவ்வொரு உடல் இயக்க செயல்பாடுகள் காரணமாக இதுபோன்ற உணர்வுகள் தென்படலாம். வாயுத்தொல்லை அல்லது வயிறு உப்புசம் காரணமாகவும் கூட இது நிகழக் கூடும். இந்த நகர்வுகளுக்கு என்ன காரணம் என்பதை ஒரு பெண் கண்டறிய முடிந்தால், இதற்கு சிகிச்சை தேவையா, மருத்துவரை பார்க்க வேண்டுமா என்பது குறித்து அவர் முடிவு செய்யலாம்.

1. செரிமானம் (Digestion)

ஒரு நபர் சாப்பிடுகின்ற போது, செரிமானக் கட்டமைப்பு தசைகள் அந்த உணவை வயிற்றில் இருந்து குடல் பகுதிக்கு நகர்த்திக் கொண்டு செல்கிறது. சாப்பிட்ட பிறகு அல்லது சாப்பிட்ட சில மணி நேரத்திற்குப் பிறகு இந்த தசைகள் நகரக் கூடும்.

2. செரிமானக் கோளாறு (Indigestion)

ஒரு பெண்ணுக்கு செரிமானக் கோளாறு ஏற்படுகின்றபோது, அந்தப் பெண் தனது வயிறு விழுங்கப்பட்டதை போல உணருவார். தசை இயக்கத்தை போல இந்த உணர்வு தென்படும்.

3. மாதவிலக்கு (Ovulation)

மாதவிலக்கு சுழற்சியின்போது ஒரு பெண்ணுக்கு வெவ்வேறு உணர்வுகள் தென்படக் கூடும். மாதவிலக்கு தொடங்கும் சமயத்தில், தசைப்பகுதிகளில் ஏற்படும் பிடிப்புகள் காரணமாக அடிவயிற்றுப் பகுதியில் இறுக்கமான நிலை தென்படும். இதுவும் ஒரு நகர்வு போல இருக்கும்.

4. தசை பிடிப்புகள் (Muscle spasms)

ஒரு பெண்ணுக்கு கை, கால்களில் தசை பிடிப்பு ஏற்படுவதைப் போலவே வயிற்றிலும் ஏற்படலாம். தசைகளுக்கு சிரமம் தரும் நடவடிக்கை அல்லது அதிகப்படியான பயன்பாடு காரணமாக இதுபோன்ற பிடிப்புகள் ஏற்படக் கூடும்.

5. கற்பனையான உதைகள் (Phantom kicks)

கர்ப்பமாக இல்லாத பெண்களுக்கும், இல்லாத குழந்தை உதை விடுவதை போன்ற உணர்வு தென்படும். பெரும்பாலான பெண்களுக்கு பிரசவித்த பிறகு இந்த உணர்வு தென்படுகிறது. ஆனால், வேறு சிலருக்கு சில ஆண்டுகள் கழித்து இந்த உணர்வு தென்படும்.

6. குடலில் சிரமங்கள் (Intestinal obstruction)

வயிற்றில் இருந்து செரிமானம் ஆன உணவுப் பொருள்கள் நீண்ட தொலைவு கொண்ட குடல்பகுதி வழியாகவும், உறுப்புகள் வழியாகவும் பயணிக்கும். மலமாக உடலை விட்டு வெளியேறும் முன்பாக இந்த நடவடிக்கை நிகழும். சில சமயம், இந்த செரிமானப் பாதையில் அடைப்பு ஏற்படக் கூடும். இந்த அடைப்பு என்பது பகுதியளவு அல்லது முழுமையானதாக இருக்கும். இவ்வாறு அடைப்பு ஏற்படும்போது, நகர்வுகளை போன்ற தசை பிடிப்புகள் உள்பட பல்வேறு அறிகுறிகளை பெண்கள் உணரக் கூடும்.

7. டைவர்டிகுலிடிஸ் (Diverticulitis)

டைவர்டிகுலிடிஸ் என்பது செரிமானக் கட்டமைப்பில் ஏற்படக் கூடிய பிரச்சனை ஆகும். வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் கழிவறைக்கு செல்ல இயலாமை போன்ற அசாதாரணமான தொந்தரவுகளை இது ஏற்படுத்தக் கூடும். வயிற்றுப் பகுதியில் இது வலியை ஏற்படுத்தும் மற்றும் பிடிப்பு உண்டாக்கும். அதுவும் கூட ஒரு நகர்வு போல தென்படும்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் தடுப்பூசிகள்: கர்ப்ப காலத்தில் டிடி ஊசியை எப்போது போட்டுக் கொள்ள வேண்டும்

முடிவுரை (Conclusion)

அடிவயிற்றில் நகர்வு தென்படுகிறது என்றால், அது குழந்தை ஆரோக்கியமாக வளருகிறது என்பதற்கான அறிகுறியாகும். குழந்தை நகர்ந்து கொண்டே இருப்பதால் இந்த உணர்வு தென்படும். அடிக்கடி மருத்துவரை ஆலோசனை செய்து, அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்து கொள்ளும் பெண்கள், தங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும், எதிர்பார்க்கப்பட்ட அளவிலும் வளர்ச்சி அடைவதை உறுதி செய்து கொள்ளலாம்.

References

1. Linde A, Georgsson S, Pettersson K, Holmström S, Norberg E, Rådestad I. (2016). Fetal movement in late pregnancy - a content analysis of women's experiences of how their unborn baby moved less or differently. BMC Pregnancy Childbirth.

2. Carlberg DJ, Lee SD, Dubin JS. (2016). Lower Abdominal Pain. Emerg Med Clin North Am.

Tags

Movement in my lower abdomen in Tamil, Baby kick hurt's in Tamil, Movement in the lower abdomen when not pregnant in Tamil, Why you are feeling baby movement in lower abdomen in Hindi, Why you are feeling baby movement in lower abdomen in Telugu, Why You Are Feeling Baby Movement in Lower Abdomen in Bengali

கர்ப்பிணித் தாய்மார்களால் நம்பப்படும் பராமரிப்பு

உங்கள் குழந்தையின் ஒவ்வொரு நகர்வையும் ஆரோக்கியமாக கண்காணிக்க, உங்களை பராமரிக்கும் கர்ப்ப கால தயாரிப்புகள் உங்களுக்கு துணை செய்யும்.

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2016 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

438 Moms bought
₹999₹154535% Off
Rating
4.0
()
Stretch Marks Kit (Stretch Mark Oil + Stretch Marks Cream - 100ml each)

Stretch Marks Kit (Stretch Mark Oil + Stretch Marks Cream - 100ml each)

Made with Natural Ingredients | Tightens Skin | Prevents New and Fades Old Stretch Marks |

119588 Moms bought
₹611₹84828% Off
Rating
4.5
(611)
Organic Aloe Vera (300 ml)

Organic Aloe Vera (300 ml)

Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience

4169 Moms bought
₹289₹32912% Off
Rating
4.4
(45)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.