Care for Baby
19 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
குழந்தை ஏன் இவ்வளவு சத்தமாக அழுகிறது? குழந்தை அழுவதை தடுப்பது எப்படி? இவை பெற்றோர்களுக்கு, குறிப்பாக புதிய பெற்றோர்களுக்கு இருக்கும் மிகவும் பொதுவான கேள்விகள். நேர்மையாக சொல்வதென்றால்: அழும் குழந்தையைக் கையாள்வது சவாலானது. இந்த பிளாக் தங்கள் குழந்தைகள் அழும்போது அவர்களை சமாதானப்படுத்த பெற்றோர்கள் செய்யக்கூடிய சில வித்தியாசமான விஷயங்களை அறிய வைக்கிறது.
குழந்தைகள் பல காரணங்களுக்காக அழுகிறார்கள். ஆனால், அவை அனைத்தும் ஒரே கேள்விக்கு தொக்கி நிற்கின்றன: அவர்களுக்கு என்ன வேண்டும்? குழந்தைகள் தங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் தொடர்புகொள்வதற்கான தேவைகளுடனேயே பிறக்கிறார்கள். இருப்பினும், அவர்கள் தங்கள் பெற்றோருடன் தொடர்பு கொள்ள தெரியாது, எனவே அதற்கு பதிலாக அவர்கள் அழுகிறார்கள். இதன் விளைவாக, குழந்தை ஏன் அழுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.
குழந்தை அழுதுகொண்டே இருப்பது என்பது பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பொதுவான சவால். அழும் குழந்தையை அமைதிப்படுத்த பல வழிகள் உள்ளன. ஆனால், அவை அனைத்தும் எல்லா குழந்தைக்கும் வேலை செய்யாது. நேர்மையாக சொல்வதென்றால், ஒரு குழந்தையின் அழுகையை நிறுத்த ஒரு அளவுகோலோடு பொருந்தக்கூடிய எந்தத் தீர்வும் இல்லை. அழும் குழந்தைக்கு என்ன உதவக்கூடும் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி, வெவ்வேறு முறைகளுடன் பரிசோதித்து, உங்கள் குழந்தைக்கு எது சரியாக வேலை செய்கிறது என்பதை கண்டறிவதாகும்.
குழந்தைகள் அழுவது இயற்கையானது, குறிப்பாக குழந்தை அழுவதை நிறுத்த முடியாதபோது பெரியவர்கள் தங்கள் குழந்தையின் தொடர் அழுகையால் விரக்தியடைவதும் பொதுவானது. மேலும் அழும் குழந்தையை சமாதானப்படுத்த பெற்றோர் செய்யக்கூடிய சில விஷயங்கள் இங்கே:
இதமான குரலில் குழந்தையுடன் பேசுங்கள்
குழந்தையை கட்டிப்பிடித்து இதமாக இறுக்கி அணைத்துக் கொள்ளுங்கள்
குழந்தைக்கு ஒரு பசிஃபையர் அல்லது ஒரு பாட்டில் தண்ணீர் / பால் போன்று பசியாற்ற ஏதாவது கொடுங்கள்
இசையை கேட்கச் செய்யுங்கள் அல்லது அமைதியாக மெல்லிய குரலில் பாடல்களைப் பாடவும்
அவர்களின் முதுகு அல்லது வயிற்றை இதமாகத் தேய்க்கவும்
அவர்களை ஒரு ஸ்ட்ரோல்லர் அல்லது கேரியரில் வாக்கிங் அழைத்துச் செல்லவும்
தூங்கச்செய்வதறகான தாலாட்டுப்பாடல்களை முயற்சிக்கவும்
இருப்பினும், ஒரு குழந்தையின் அழுகை தொடரும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும், எடுத்துக்காட்டாக, ஷேக்கன் பேபி சிண்ட்ரோம் நோய் அறிகுறியின் வெளிப்பாடாக இருக்கலாம்.
ஷேக்கன் பேபி சிண்ட்ரோம் (எஸ்.பி.எஸ்) என்பது ஒரு குழந்தை அல்லது இளம் குழந்தையின் வலுவான உடல் நடுக்கத்தால் ஏற்படும் மூளையில் ஏற்படும் சேதம் ஆகும். கடுமையான நடுக்கத்தினால் ஏற்படும் இயக்கம் மூளை மண்டை ஓட்டிற்குள் முன்னும் பின்னுமாக துள்ளி விழ காரணமாகிறது. இதனால் சிராய்ப்பு, இரத்தப்போக்கு மற்றும் (சில சந்தர்ப்பங்களில்) நிரந்தர மூளை சேதத்தை ஏற்படுத்தும். இது மூளை மற்றும் மூளைக்கு செல்லும் நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும், அதே போல் வீக்கத்திற்கும் வழிவகுக்கும்.
ஷேக்கன் பேபி சிண்ட்ரோம் ஆனது மனவளர்ச்சிக் குறைபாடு மற்றும் குருட்டுத்தன்மை போன்ற வாழ்நாள் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சில சந்தர்ப்பங்களில், ஷேக்கன் பேபி சிண்ட்ரோம் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும். காயத்தின் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லாததால் நோய்க்குறியைக் கண்டறிவது பெரும்பாலும் கடினம். இருப்பினும், குழந்தைக்கு எஸ்.பி.எஸ் இருப்பதாக சந்தேகித்தால், உள் இரத்தப்போக்கு அல்லது வீக்கம் இருக்கிறதா என்பதை தீர்மானிக்க குழந்தைக்கு மூளை ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ செய்யப்பட வேண்டும்.
குழந்தைகள் அழுவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று அழுக்கான டயப்பர்கள். அசுத்தமான டயப்பர்கள் டயபர் தடிப்புகளை ஏற்படுத்தும், இது குழந்தைகளுக்கு மிகவும் எரிச்சலூட்டும் கண்டிஷனை ஏற்படுத்தும். குழந்தை அழுகிறது என்றால், டயப்பரை சரிபார்த்து மாற்றுவதன் மூலம் அழுகையை நிறுத்த உதவும்.
அழுவதற்கு ஒரு மற்றொரு பொதுவான காரணம் பசி ஆகும். குழந்தை அழுகிறது என்றால், குழந்தைக்கு உணவளித்து நெடு நேரம் ஆகிவிட்டதால் அடுத்த வேலை உணவிற்காக அவர்களுக்கு பாட்டில் பால் அல்லது தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கவும். அதிகப்படியான உணவளிப்பதால் ஏற்படும் அசௌகரியம் காரணமாகவும் குழந்தைகள் அழலாம்.
டயப்பர் சுத்தமாக இருந்தும், குழந்தைக்கு உணவளிக்கப்பட்ட பின்னரும், குழந்தை தொடர்ந்து அழும்போது ஒரு பெற்றோர் செய்ய வேண்டிய முதல் மற்றும் முக்கியமான விஷயம் அவர்களின் உடல் வெப்பநிலையை சரிபார்ப்பது ஆகும். அவர்களின் வெப்பநிலை சராசரியாக இருக்கிறதா மற்றும் அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று சரிபார்க்கவும். வெப்பநிலை அதிகமாக இருந்தால், மருத்துவ நிபுணரை சந்திக்கவும்.
பாலில் மட்டுமே அருந்தும் குழந்தைகளுக்கு கூட வாயுக்கள் இருக்கலாம். குழந்தையின் அழுகை இடைவிடாமல் இருந்தால், அவர்களுக்கு வாயுவாக இருக்கலாம் என்று பெற்றோர் நினைத்தால், அவர்கள் ஏப்பம் விடுவதற்கு தோளில் சாய்த்து மெதுவாக தட்டிக்கொடுக்கலாம் அல்லது வயிற்று மசாஜ் கொடுக்க முயற்சிக்கவும். இவை குழந்தைகளை அழுகையிலிருந்து விடுவிக்க உதவலாம்.
சில நேரங்களில் ஒரு குழந்தை உரத்த சத்தங்களால் பயந்து அழுகிறது. குழந்தை உரத்த சத்தங்களால் திடுக்கிட்டு இருந்தால், பின்னணியில் சில மென்மையான தாலாட்டு சத்தத்தை இசைக்க முயற்சிக்கவும். ஒரு அமைதியான, இனிமையான பாடல் குழந்தையை தூங்க வைக்க உதவும்.
குழந்தைகள் மற்றவர்களைப் போலவே சலிப்படையலாம். அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டால் கூட அழத் தொடங்கலாம். மெதுவாக பேசவோ அல்லது மென்மையான பாடல் அல்லது தாலாட்டு பாடவோ முயற்சிக்கவும். சில நேரங்களில் குழந்தைக்கு நம் அருகாமையும் மற்றும் கவனமும் தேவைப்படும். குழந்தைகளை தூக்கி, பாடும்போதோ அல்லது அவர்களுடன் பேசும்போதோ மெதுவாக குழந்தையை அசைக்கவும்.
இதையும் படியுங்கள் - குழந்தைகள் குளிக்கும் நேரத்தை வேடிக்கையாகவும், குழந்தைகளுக்கு ரசிக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கான 5 வழிகள்
அறையானது மிகவும் குளிராகவோ அல்லது மிகவும் சூடாகவோ இருந்தால் குழந்தையின் அழுகைக்கு வழிவகுக்கும். பெற்றோர் அறை வெப்பநிலையை சரிபார்த்து, குழந்தைக்கு மிகவும் சூடாகவோ அல்லது குளிராகவோ இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அடிக்கடி ஏற்படும் வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் குழந்தைகளுக்கு அதிக திணறலை ஏற்படுத்தும்.
Yes
No
Written by
chandrikaiyer
chandrikaiyer
சிஸ்டோசெல்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
செப்சிஸ்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை மற்றும் அபாயங்கள்
பிரசவத்திற்கு பிறகான பிறப்புறுப்பு தொற்று( பியூர்பெரல் செப்சிஸ்): அறிகுறிகள், காரணங்கள், அபாயங்கள் மற்றும் சிகிச்சை
மைலோமென்னின்கோசெல் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை
கர்ப்ப காலத்தில் பாப்கார்னின் நன்மைகள் & அபாயங்கள்
தொடை சிராய்ப்பு: அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Mylo is a master brand offering solutions through it's subsidiaries - Mylo Care and Mylo Baby.
Mylo Care offers science backed, expert led solutions across multiple health concerns.
Mylo Baby is a one stop solution for young parents for all their baby's needs.
Hairfall | Dry and Damaged Hair | Shop By Ingredient | Onion | Aloe Vera Range For Hair | Coconut | Neelibrigandi | Skin - Bath & Body | By Ingredient | Skin - Pregnancy & New Mom | Skin - Health & Wellness | Digestive Health | Lactation | Pain management | By Ingredient | Saffron | Shatavari | Nivarini | Skin - Weight | Weight Management |