Raise A Happy & Healthy Baby
Get baby's growth & weight tips
Join the Mylo Moms community
Get baby diet chart
Get Mylo App
Want to raise a happy & healthy Baby?
Getting Pregnant
Updated on 1 September 2023
குங்குமப்பூ என்பது ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நறுமண உணவுப்பொருள் ஆகும். இதன் அறிவியல் பெயர் குரோகஸ் சாடிவஸ். இது ஒரு சிறந்த மூலிகையாக இருந்து வந்துள்ளது. குங்குமப்பூ பெரும்பாலும் இனிப்பு உணவுகளில் வண்ணமும் சுவையும் ஊட்டும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
குங்குமப்பூ எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? குங்குமப்பூ மிகவும் மென்மையான மற்றும் நுட்பமான சுவையும் நறுமணமும் அளிப்பது. இது முக்கியமாக உணவுகளுக்கு சுவையைக் கூட்டவும் வெளிர் மஞ்சள் நிறத்தைச் சேர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது பாயசம், பழச்சாறுகள், பிரியாணி போன்ற உணவுகளுடன் நன்றாகப் பொருந்துகிறது. இவை தவிர, இனிப்புகளில் இயற்கையான சுவையூட்டும் பொருளாகக் குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது. அதன் மென்மையான நறுமணமும் வித்தியாசமான சுவையும் கேக்குகள், குக்கீகள், கஸ்டர்டுகள் போன்ற உணவுப்பொருட்களுக்கு சுவை சேர்க்கின்றன. சமையல் வல்லுநர்கள் உணவுக்கு ஒரு அற்புதமான நறுமணத்தை வழங்க வேண்டுமென்றால் பெரும்பாலும் குங்குமப்பூவையே நம்பியுள்ளனர்.
சமையலில் தவிர, குங்குமப்பூ அது அளிக்கும் அற்புதமான நன்மைகளுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பூவின் இந்தச் சிறிய இழை, மனச்சோர்வு, மனநிலை அலைவுகள் ஆகியவற்றுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. குங்குமப்பூவில் உள்ள கூறுகள் உடலில் உள்ள வாத, பித்த, கப தோஷங்களை சமப்படுத்துவதாக அறியப்படுகிறது. ஆயுர்வேதத்தின்படி, இந்த தோஷங்களின் ஏற்றத்தாழ்வுதான் நோய்களுக்கு வழிவகுக்கிறது. குங்குமப்பூ மருத்துவரீதியாக மதிப்புமிக்க பொருளாக விளங்குவதற்கு இதுவே காரணம்.
குங்குமப்பூவின் சில பொதுவான மருத்துவப் பயன்கள் பின்வருமாறு:
இது உயிரணுக்களை குணப்படுத்த உதவுகிறது; அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. குங்குமப்பூவில் உள்ள ஆக்ஸிஜனேற்றத் தடுப்பிகள் (antioxidants) செல்களை நிலையிலா மூலக்கூறுகளிடமிருந்து (free radicals) பாதுகாக்கின்றன. மூளை செல்களை சேதத்திலிருந்து பாதுகாப்பதிலும், எடை இழப்புக்கு உதவுவதிலும், பசியைக் குறைப்பதிலும், மனஅழுத்தம் நீக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதிலும் இந்த ஆக்ஸிஜனேற்றத் தடுப்பிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
குங்குமப்பூவிற்கு காரணமாகவே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பல ஆய்வுகள் குங்குமப்பூவின் இதழ்களும் சூல்முடி (stigma) இழைகளும் மனச்சோர்வின் லேசான முதல் மிதமான அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றன. தினமும் வெறும் 30 கிராம் குங்குமப்பூவானது ஃப்ளூக்ஸெடின் அல்லது சிட்டலோபிராம் போன்ற மனச்சோர்வுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை விட சிறப்பாக செயல்படுகிறது. ஆய்வுகளில் குங்குமப்பூ சேர்த்த மருந்துகள் வழங்கப்பட்ட ஆய்வுக்குட்படுநர்களை பக்க விளைவுகள் மிகக்குறைவாகவே பாதித்தன.
குங்குமப்பூவின் உயர் ஆக்ஸிஜனேற்றத் தடுப்புப் பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் நேரும் சேதத்தைக் குறைப்பதாக அறியப்படுகிறது. புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்கள் தோன்றுவதற்கு, தீங்கு விளைவிக்கும் இந்த மூலக்கூறுகளே காரணமாக அறியப்படுகின்றன. மேலும், குங்குமப்பூவில் உள்ள சேர்மங்கள் பெருங்குடலில் உள்ள புற்றுநோய் செல்களைக் கொன்று அடக்குவதாக அறியப்படுகிறது. மற்றொரு ஆய்வு குங்குமப்பூவின் மிக முக்கியமான பயன்பாடுகளில் ஒன்று புற்றுநோயை எதிர்த்துப் போராடுவது என்பதைக் காட்டுகிறது. குங்குமப்பூவில் உள்ள குரோசின், கீமோதெரபி மருந்துகளை உணரும் திறனை புற்றுநோய் செல்களுக்கு அளிக்கிறது.
குங்குமப்பூவை 20 நிமிடங்கள் முகர்வது அல்லது ஒவ்வொரு நாளும் 30 மி.கி உட்கொள்வது எரிச்சல், தலைவலி மற்றும் பிடிப்புகள் போன்ற மாதவிலக்குக்கு முன் வரும் பல்வேறு அறிகுறிகளைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது மாதவிலக்கு வருமுன் பதற்றத்தைக் குறைத்து உடலில் உற்பத்தி செய்யப்படும் கார்டிசோலின் (மன அழுத்த ஹார்மோன்) அளவையும் குறைக்கிறது.
பல்லாண்டுகளாக, குங்குமப்பூ பாலுணர்வை ஊக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்பட்டு வருகிறது. குங்குமப்பூவைப் பாலில் கலந்து இரவில் பலர் உட்கொள்வதற்கு இதுவே காரணம். ஆண்கள் தினமும் குறைந்தது 30 மி.கி குங்குமப்பூவை உட்கொள்வது விறைப்புத்தன்மை, பாலியல் வீரியம், ஒட்டுமொத்த திருப்தி ஆகியவற்றை மேம்படுத்த உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். பெண்கள் குங்குமப்பூ உட்கொள்வது மேம்பட்ட உராய்வுநீக்கலுக்கும் அதிகரித்த பாலியல் நாட்டத்திற்கும் வழிவகுக்கும்.
பெரும்பாலான இயற்கை எடை இழப்பு மருந்துகள் குங்குமப்பூவை முக்கிய பொருட்களில் ஒன்றாகக் கொண்டுள்ளன. ஏனென்றால், தினசரி குங்குமப்பூவை உட்கொள்வது இயற்கையாகவே பசியைக் கட்டுப்படுத்துவதாகவும் விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்றும் அறியப்படுகிறது. இது செயல்படும் வழிகளில் ஒன்று, குங்குமப்பூ மனநிலையை மேம்படுத்துகிறது. இது குறைவான சிற்றுண்டி உண்ணச் செய்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குங்குமப்பூவை தவறாமல் உட்கொள்வது உடல்நிறை குறியீட்டெண் குறைவதற்கும் உடல் கொழுப்பைக் குறைப்பதற்கும் வழிவகுக்கிறது.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் ரெட் ஒயின்: தொடர்புடைய பக்க விளைவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள்
குங்குமப்பூ பயன்பாட்டினால் உண்டாகும் பயன்களில் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்தல் அடங்கும். அதன் ஆக்ஸிஜனேற்றத்தடுப்புப் பண்புகள் இதை இதயத்தின் நலனுக்கு இன்றியமையாத மூலப்பொருளாக ஆக்குகின்றன. இது அல்சைமர் நோயால் அவதியுறும் நபர்களின் ஞாபகசக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
குங்குமப்பூ எளிதில் உணவில் சேர்க்கப்படக்கூடிய ஒரு உணவுப்பொருள். அதன் நுட்பமான சுவை உணவின் சுவையைப் பெரிதும் மாற்றாது. அதற்குப் பதிலாக, இது உணவுக்கு ஒரு அழகான மஞ்சள் நிறத்தை சேர்க்கிறது. உணவின் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கிறது. இது விலை உயர்ந்தது என்றாலும், அதன் பல நன்மைகளைப் பெற உணவில் ஒரு சிட்டிகை மட்டுமே சேர்த்தால் போதுமானது.
குங்குமப்பூ பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும் இதௌ முன்னெச்சரிக்கைகளுடன் உட்கொள்ள வேண்டும். பெரும்பாலான இயற்கைப் பொருட்களைப் போலவே குங்குமப்பூவும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. இருப்பினும், பின்பற்ற வேண்டிய சில அளவுக் கட்டுப்பாடுகள் உள்ளன.
குங்குமப்பூ பயன்படுத்தும்போது நேர்மறையான நன்மைகளைப் பெற, ஒரு நாளைக்கு 30 மி.கி.க்கு மேல் உட்கொள்ளக்கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது. அதிக அளவில் குங்குமப்பூ நச்சுத்தன்மையுடையதாக இருக்கலாம். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு இது கருச்சிதைவுக்கு வழிவகுக்கக்கூடும். மேலும், குங்குமப்பூவை நம்பகமான இடத்திலிருந்து வாங்குவது அவசியம். கலப்படம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால் குங்குமப்பூத்தூள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
சரியான முறையில் உட்கொண்டால் குங்குமப்பூ ஒரு அற்புதமான மூலிகையாகும். இயற்கைப் பொருட்கள் வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. உணவு உணர்திறன் உள்ளவர்கள் குங்குமப்பூவை உணவில் சேர்ப்பதற்கு முன்பு மருத்துவரைக் கேட்டுக்கொள்வது நல்லது.
References
1. Omidkhoda SF, Hosseinzadeh H. (2022). Saffron and its active ingredients against human disorders: A literature review on existing clinical evidence. Iran J Basic Med Sci.
2. Jackson PA, Forster J, Khan J, Pouchieu C, Dubreuil S, Gaudout D, Moras B, Pourtau L. (2021).Effects of Saffron Extract Supplementation on Mood, Well-Being, and Response to a Psychosocial Stressor in Healthy Adults: A Randomized, Double-Blind, Parallel Group, Clinical Trial. Front Nutr.
What is Saffron in Tamil, What are benefits of Saffron in Tamil, What are the uses of Saffron in Tamil, What are the risk of Saffron in Tamil, Saffron-Benefits, Drawbacks, and More in English, Saffron-Benefits, Drawbacks, and More in Hindi, Saffron-Benefits, Drawbacks, and More in Telugu, Saffron-Benefits, Drawbacks, and More in Bengali
Yes
No
Written by
aviraparaiyar
aviraparaiyar
PCOS Treatment in Homeopathy: The Ultimate Guide to Natural Remedies
PCOS Tests: The Power of Diagnostic Tests in Your Health Journey
PCOD Problem After Marriage: Debunking Common Misconceptions and Finding Solutions
Laparoscopic Ovarian Drilling: A Safe and Effective Solution for PCOS-Related Infertility
Guava in Pregnancy: Your Guide to Benefits, Side Effects & Precautions
Pomegranate in Pregnancy: The Ultimate Guide to Benefits and Precautions
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
By Ingredient | Saffron | Wheatgrass | Skin - Weight | By Concern | Weight Management | By Ingredient | Apple Cider Vinegar | Skin - Bath & Body | By Concern | Body Moisturizer | Brightening | Tan Removal | By Ingredient | Skin - Hygiene | By Concern | UTIs & Infections | Diapers & Wipes | Disposable Diapers | Baby Wipes | Cloth Diaper | Maternity dresses | Stretch Marks Kit | Stroller |