

Pregnancy
2 February 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது
முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? தலைமுடி மந்தமான அல்லது சிக்கான நிலையில் இருப்பது கவலை தருகிறதா? பல்வேறு வெளிப்புற காரணிகளால், முடி மற்றும் உச்சந்தலையில் பிரச்சனைகள் பொதுவாக ஏற்படுவதுண்டு. இருப்பினும், அது கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லை.
முடி வளர்ச்சி அல்லது மற்ற உச்சந்தலை சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆனியன் ஹேர் கேர் ஆயில் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் மயிர்க்கால்களை வலிமையாக்கி முடியின் மொத்த அளவை அதிகரிக்கிறது. பளபளப்பான மற்றும் மேம்பட்ட முடி வலிமையும் கிடைக்கிறது.
உங்கள் முடியின் கூறுகள் கெரட்டின் மூலம் உருவாக்கப்படுகின்றன. கெரட்டினில் கந்தகம் உள்ளதையும் நாம் அறிவோம். தலைமுடி வளரத் தேவையான பராமரிப்பை கந்தகம் வழங்குகிறது. கூடுதலாக, இது உங்கள் முடியின் வளர்ச்சியை நீட்டிக்கிறது. ஆனியன் ஆயிலில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உச்சந்தலையில் தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது.
ஆனியன் ஆயிலில் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குவதைத் தடுக்கும் அத்தியாவசிய ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. உடலில் ஃப்ரீ ரேடிக்கல்கள் உருவாகினால், வயதாகும் செயல்முறைக்கு பங்களிக்கக்கூடும். உதாரணமாக, இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் மயிர்க்கால்களுக்குத் தீங்கு விளைவித்து, தலைமுடியை மிகவும் மெலிதாக்கும்.
1. ஒரு கைப்பிடி அளவு வெங்காயத்தை எடுத்து, அதைச் சாறு எடுக்கவும். மீதமுள்ள வெங்காயத்துடன், வெங்காயத்தில் இருந்து பேஸ்ட்டை உருவாக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து அத்துடன் வெங்காய விழுது மற்றும் வெங்காயச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
3. கலவையை ஒரு கொதி வரும் வரை கொதிக்க விடவும். அவ்வப்போது நன்றாகக் கலக்கவும். கலவை ஒரு கொதி வந்த பிறகு அடுப்பை அணைத்து ஒரு மெல்ல துணியால் வடிகட்டினால் ஆனியன் ஆயில் தயார்! காற்று புகாத கன்டெயினரில் சேமிக்கவும்.
சிறந்த முடிவைப் பெற ஆனியன் ஹேர் ஆயிலை தினசரி பயன்படுத்துவது நல்லது. ஆனியன் ஆயிலை பிரயோகித்து தலைமுடியில் சுமார் அரை மணி நேரம் விடவும். பிறகு லேசான கண்டிஷனர் அல்லது ஷாம்பு கொண்டு அலசலாம். சிறந்த முடிவுக்கு, ஆனியன ஆயில் சிகிச்சையைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
ஆனியன் ஆயிலின் மணம் பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இருப்பினும், அந்த மணம் அதிக நேரம் நீடிக்காது மற்றும் பொதுவாக நன்கு அலசிய பின் மறைந்துவிடும். ஆனியன் ஆயிலை உச்சந்தலையில் அதிகம் தடவ வேண்டாம். இது முடி உதிர்தல், வறட்சி மற்றும் அரிப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கும். தற்போது, ஆனியன் ஆயில் ஹேர் கேர் காம்போ சலுகைகளின் கீழ் ஏராளமான தயாரிப்புகள் கிடைக்கின்றன.
ஆனியன் ஆயிலின் உதவியுடன் முடி பராமரிப்பை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை அறிந்துள்ள நிலையில் இன்றே அதை முயற்சிக்கவும். நீங்கள் சிறந்த முடிவுகளைக் காண குறைந்தது மூன்று மாதங்கள் ஆகலாம் என்றாலும், இதனால் கிடக்கும் பலன் மதிப்புமிக்கது. இருப்பினும், நீங்கள் ஏற்கனவே மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் முடி பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், ஆனியன் ஆயில் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை தொடர்புகொள்வது நல்லது.
Yes
No

Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips







கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கா? அப்படியென்றால் என்ன, எப்போது உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்? (Bleeding During Pregnancy? What Does It Mean & Should You Consult A Doctor In Tamil)

கர்ப்ப காலத்தில் இடுப்பு வலி: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை(Pain in Groin During Pregnancy: Causes, Symptoms, and Treatment In Tamil)

When Will My Menstrual Cycle Resume After Pregnancy in Tamil |கர்ப்பத்திற்குப் பிறகு எனது மாதவிடாய் சுழற்சி எப்போது மீண்டும் தொடங்கும் ?

கருப்பையக கருவூட்டல் மூலம் கர்ப்பமாவதற்கான வாய்ப்புகள் யாவை? (What Are the Chances of Getting Pregnant with Intrauterine Insemination In Tamil)

குழந்தை பிறந்த பிறகு வரும் மாதவிடாய் பற்றிய தகவல்கள்

செப்சிஸ்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை மற்றும் அபாயங்கள்(Sepsis: Symptoms, Causes, Treatment, and Risks In Tamil)

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |