hamburgerIcon

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Pregnancy Journey arrow
  • ஒவ்வொரு பெண்ணும் முயற்சிக்க வேண்டிய 30 பேபி பம்ப் போட்டோஷூட் ஐடியாக்கள்| Best 30+ Baby Bump Photoshoot Ideas You Should Try In Tamil arrow

In this Article

     ஒவ்வொரு பெண்ணும் முயற்சிக்க வேண்டிய 30 பேபி பம்ப் போட்டோஷூட் ஐடியாக்கள்| Best 30+ Baby Bump Photoshoot Ideas You Should Try In Tamil

    Pregnancy Journey

    ஒவ்வொரு பெண்ணும் முயற்சிக்க வேண்டிய 30 பேபி பம்ப் போட்டோஷூட் ஐடியாக்கள்| Best 30+ Baby Bump Photoshoot Ideas You Should Try In Tamil

    28 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    பிரக்னன்ஸி ஒரு பெண்ணின் மிக அழகான மற்றும் மேஜிக் போன்ற ஒரு அனுபவமாகும். இந்த அழகான நினைவுகளைப் பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும் சிறந்த வழிகளில் ஒன்று, பேபி பம்ப் போட்டோஷூட்.

    பெண்கள், ப்ரீ பேபி போட்டோஷூட்டிற்கு முயற்சி செய்யக்கூடிய சில ஐடியாக்கள் இங்கே உள்ளன.

    1.வயிற்றில் ஃபோக்கஸ் வைத்தல் (Keep the focus on the belly)

    போட்டோ ஷூட்டின்போது வயிற்றை மட்டும் ஃபோக்கஸ் செய்வது ஒரு தனித்துவமான யோசனை. இதைச் செய்ய, பிரக்னன்ட்டாக இருக்கும் தாயின் வயிறு மற்றும் அவரது கைகளில் வயிற்றைத் தாங்கி இருக்கும்படி போஸ் கொடுப்பது, கூடுதல் அழகை சேர்க்கும் அத்துடன் விளக்கு ஏற்றி வைப்பது அட்டகாசமாக இருக்கும்.

    2.ஃபேமிலி பிக்ச்சர்(A family picture)

    அனைத்து குடும்ப உறுப்பினர்களையும், அதாவது மூத்த குழந்தைகளுடன் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து ப்ரீ பேபி போட்டோஷூட்டை எடுத்துக்கொள்ளவும். குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினரை வரவேற்பதில் அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த இந்த ஃபேமிலி பிக்ச்சர் சிறந்த வழியாகும்.

    3.அவுட்டோர் போட்டோஷூட்(Outdoor photoshoot)

    அழகான பேபி பம்ப் போட்டோக்களை உருவாக்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, அவுட்டோரில் போட்டோ எடுப்பதாகும்.

    4.ஒன்றாக சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ளவும்(Take photos together)

    பேரண்ட்ஹுட் என்பது இரு பார்ட்னர்களும் ஷேர் செய்து கொள்ளும் பொறுப்பு. எனவே, இந்த போட்டோஷூட்களில் ஒருவர் தனது பார்ட்னரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    5.சரியான இடத்தைக் கண்டறியவும்(Find a perfect field)

    பசுமையான புற்கள் மற்றும் வறண்ட வயல்களில் போட்டோக்களை கிளிக் செய்வது குழந்தைகளின் பம்ப் போட்டோஷூட்டிற்கு ஏற்றது, ஏனெனில் இதுபோன்ற இடங்கள் போட்டோக்களுக்கு தனித்துவமான மற்றும் அழகியல் பின்னணியை அளிக்கிறது.

    6.உங்கள் நன்மைக்காக மலர்களைப் பயன்படுத்துங்கள்(Use flowers to your advantage In Tamil)

    பேபி பம்ப் போட்டோஷூட்களுக்கான ட்ரெண்டில் மலர் கிரீடங்களுக்கு தனித்துவமான இடமுண்டு. மேலும், ப்ரீ பேபி போட்டோஷூட்களில் உன்னதமாக உணர ஒருவர் தங்கள் போட்டோஷூட்டில் பின்வருவதைப் போல் முயற்சி செய்யலாம்.

    7.பனியுடன் விளையாட்டு(Play with the cold)

    குளிர்ந்த பகுதிகளில் பேபி பம்ப் போட்டோஷூட் அழகாக இருக்கும். ஏனெனில் அவை பேபி பம்ப் போட்டோக்களுக்கு மயக்கும் வெண்ணிற பின்னணியைக் கொடுக்கும்.

    8.போட்டோஷூட்டில் பெட்களைச் சேர்க்கவும்(Include the pets)

    சில பெற்றோர்களுக்கு, அவர்களின் பெட்டான நாய் அல்லது பூனை தான் முதல் குழந்தை, எனவே பேபி பம்ப் போட்டோஷூட்டில் பெட்களைச் சேர்ப்பது நல்ல பீலைத் தரும்.

    9.போட்டோக்களில் ஸ்பார்க்கிள்களைச் சேர்க்கவும்(Add sparkles to the photos)

    மெட்டர்னிட்டி போட்டோஷூட்டை தனித்துவமாக்க, அதில் ஸ்பார்க்கிள்களைச் சேர்க்கலாம். இது போன்ற போட்டோஷூட்கள் தற்போது கர்ப்பிணிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

    10.அனைவரின் கைகளையும் டெக் மீது வைத்து ஒரு போட்டோவை எடுக்கலாம்(All hands on deck)

    வருங்காலக் குழந்தைக்கான பெற்றோர் தங்கள் பாசத்தை வெளிப்படுத்த பெற்றோர் இருவரும் குழந்தை பம்ப் மீது தங்கள் கைகளை வைத்து ஒரு போட்டோவை எடுக்கலாம். ஒரு குடும்பமாக அவர்களின் பிணைப்பு மற்றும் அன்பை வலியுறுத்த அவர்களின் திருமண மோதிரத்தையும் போட்டோவில் சேர்க்கலாம்.

    11.சோனோகிராம் சேர்க்கவும்(Include the sonogram)

    குடும்பத்தில் புதிய குழந்தையின் வரவேற்பைக் குறிக்கும் சிறந்த வழிகளில் ஒன்று. ப்ரீ பேபி போட்டோஷூட்டில் சோனோகிராம் முடிவுகளைக் காண்பிப்பதாகும்.

    12.அண்ணன் அல்லது அக்காவின் பாசப் பிணைப்பு(Big brother or sister bonding In Tamil)

    பேபி பம்ப் போட்டோஷூட்டில் குழந்தையின் அண்ணன் அல்லது அக்காவை சேர்த்துக் கொள்வது நல்ல யோசனையாக இருக்கும். இந்த புகைப்படங்களில் ஒரே நிறத்தில் உள்ள ஆடைகளை அணிந்து குடும்பத்தின் மகிழ்ச்சியை வெளிகொண்டுவரலாம்.

    13. ஒரு பேபி பம்ப்கீனுடன் போட்டோ(Keep a baby pumpkin)

    பேபி பம்ப் போட்டோஷூட்டிற்கு பம்ப்கீனை சரியான நேரத்தில் ஒருவர் பயன்படுத்தலாம். இது வளர்ந்து வரும் வயிற்றை போலவே இருப்பதுடன் அப்பாவின் வேடிக்கையான மற்றும் மகிழ்ச்சியான படத்தை அளிக்கும்.

    14.சில்ஹவுட் போட்டோ(Capturing silhouette)

    ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் முயற்சிக்க வேண்டிய சிறந்த பேபி பம்ப் போட்டோஷூட் யோசனைகளில் இதுவும் ஒன்றாகும். இதில் தாயின் பேபி பம்பின் நிழற்படத்தை வெளிக்கொணர்ந்து, குறைந்த வெளிச்சத்தில் கர்ப்பத்தின் அழகை படம்பிடிக்க முயற்சி செய்யலாம்.

    இதையும் படிக்கலாமே! - குழந்தையை பாதுகாக்கும் முறை

    15.புன்னகையைச் சேர்த்தல்(Adding smiles)

    மெட்டர்னிட்டி பிக்ச்சர்களில் புன்னகையை படம் பிடிப்பது எதிர்கால குழந்தையின் வரவேற்பைக் கொண்டாட சிறந்த வழியாகும்.

    16.பொருத்தமான ஆடைகளை அணிதல்(Wearing matching clothes)

    பேபி பம்ப் போட்டோஷூட்களில் பொருத்தமான ஆடைகளை அணிவது குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையை வெளிப்படுத்த சரியான வழியாகும்.

    17.கிராஃபிட்டி வாலுடன் ஒரு போஸ்(Add a graffiti wall)

    தாய்மார்கள் பேபி ஷூட் பிக்ச்சர்களை கிராஃபிட்டி வாலுக்கு முன் எடுத்த போட்டோக்களை ஆன்லைனில் பதிவிடுகிறார்கள். குழந்தைகள் சம்மந்தப்பட்ட புகைப்படத்தில் ஸ்ட்ரீட் ஆர்ட்டை சேர்ப்பது சரியானதாகும்.

    18.குழந்தைகளின் ஷூக்கள் (Include baby shoes)

    பிக்ச்சரில் ஒரு ஜோடி பேபி ஷூக்களைச் சேர்ப்பதன் மூலம், பேபி பம்ப் போட்டோக்கள் அழகாகவும், இதயத்தை வருடுவதாகவும் இருக்கும்.

    19.மெத்தையில் அன்புமழை (Cuddle on the couch)

    பேபி பம்ப் போட்டோகிராஃபிக்கு வசீகரத்தை சேர்க்க இன்டோர் போட்டோஷூட்டும் பயன்படும். சரியான போட்டோஷூட்டிற்காக ஒருவர் தனது பார்ட்னருடன் அழகான மெத்தையில் குழந்தையின் அக்கா அல்லது அண்ணனுடன் போஸ் கொடுக்கலாம்.

    20.பேபி ரூமில் ஒரு கிளிக் (Click it in the baby's room)

    பிரசவத்திற்கு முன் ஒரு பெண் நர்சரியை கச்சிதமாக்க அதிக நேரத்தை செலவிடுகிறார் எனில் வெறும் சில போட்டோக்கள் போதுமா? அந்த இடம் தாய்க்கு பல நினைவுகளை அளித்திருக்கும் அல்லவா, ஆகையால் கூடுமானவரை நினைவுகளை மேம்படுத்த பல போட்டோக்களை எடுப்பது நல்லது.

    21.லெட்டர் போர்டு பயன்படுத்தவும்(Use letter board)

    ப்ராப்ஸ் லெட்டர் போர்டைப் பயன்படுத்துவது, போர்டில் எழுதப்பட்ட வேடிக்கையான அல்லது அன்பான செய்தியுடன் அற்புதமான பேபி பம்ப் போட்டோக்களை உருவாக்க உதவும்.

    22.கேண்டிட் ஷாட்கள் சிறந்தவை(Candid shots are best)

    கேண்டிட் ஷாட்கள் பிரக்னன்ஸியில் நிகழ்நேர செயல்பாடுகளைப் படம்பிடித்து, ஃபில்ட்டர் செய்யப்படாத பிரக்னன்ஸியை படம்பிடிப்பதற்கான சிறந்த வழியாகும்.

    23.கிரீன்ஹவுஸில் பிக்ச்சர்களை எடுக்கவும்(Take pictures in the greenhouse)

    இயற்கையின் மடியில் ஒரு குழந்தையை வைத்திருக்க விரும்பும் ஒரு பெண்ணுக்கு கிரீன்ஹவுஸ் ஒரு சரியான இடமாகும்.

    24.வளைவுகளைக் காட்டுங்கள்(Show the curves)

    வெவ்வேறு கோணங்களில் இருந்து படங்களை எடுப்பதன் மூலம் பேபி பம்பின் வெவ்வேறு வளைவுகளைப் படம் பிடிக்க முயற்சிக்கவும்.

    25.போட்டோகிராப்களுக்கு கலர் ஸ்மோக்குகளைச் சேர்க்கவும்(Add color smokes to photographs)

    வைப்ரன்ட் போட்டோக்களை உருவாக்க, ஒருவர் தனது பேபி பம்ப் போட்டோஷூட்டின் பின்னணியாக ரெயின்போ ஸ்மோக்கைப் பயன்படுத்தலாம்.

    26.அண்டர்வாட்டர் போட்டோஷூட்(Underwater photoshoot)

    நீருக்கடியில் பேபி பம்ப் போட்டோஷூட் என்பது பேபி பம்ப்க்கு தனியான ஃபோக்கஸ் கொடுத்து எடுக்கப்படும் ஒரு தனித்துவமான வழியாகும்.

    27.பாரம்பரிய உடைகளை அணியுங்கள்(Wear traditional outfits)

    பாரம்பரிய உடைகள் அடையாள உணர்வைச் சேர்க்கும் மற்றும் ப்ரீ பேபி போட்டோ ஷூட்களில் கலாச்சார பின்னணியைச் சேர்க்கும்.

    28.குழந்தைக்கும் ஒரு ஸ்போர்ட்ஸ் ஜெர்சி(Feature a sports jersey)

    ப்ரீ பேபி போட்டோஷூட்களில் ஸ்போர்ட்ஸ் ஜெர்சிகளை இணைப்பது அட்டகாசமான யோசனையாக இருக்கும்.

    29.வித்தியாசமான ஆடைகளை அணியுங்கள்(Wear costumes )

    தாய்மார்கள் தங்களுக்குப் பிடித்தமான ஆடைகளை போட்டோஷூட்களில் போட்டுக் கொள்ளலாம், அவை வித்தியாசமான ஆடையாக இருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

    30.ஸ்டுடியோவைத் தேர்ந்தெடுக்கவும்(Choose a studio)

    பேபி பம்ப் போட்டோஷூட் என்பது பலருக்கு சவாலான பணியாக இருக்கலாம். ஆனால் அதை ஒரு தொழில்முறை ஸ்டுடியோவின் உதவியுடன் எளிதாக்கலாம். அவர்கள் உங்களுக்கு பிடித்தமான செட்களை நீங்க விரும்பியபடி அமைத்து கொடுக்கலாம்.

    மேற்கண்ட யாவும் சில அற்புதமான பேபி பம்ப் போட்டோஷூட் ஐடியாக்கள், நீங்க அவற்றை தாராளமாக முயற்சி செய்யலாம்.

    Tags

    Photoshoot during pregnancy in bengali, maternity photoshoot in tamil, tips for maternity photoshoot in tamil, outfits for maternity photoshoot in tamil, poses idea for maternity photoshoot in telugu, top pregnancy photoshoot ideas in tamil

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.