This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

உடலுறவுக்குப் பிறகு எத்தனை நாட்களில் கருவுற்றத்தை சோதனை செய்யவேண்டும்? (After how many days of sex can you check for pregnancy In Tamil)

Conception
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 28, 2026
உடலுறவுக்குப் பிறகு எத்தனை நாட்களில் கருவுற்றத்தை சோதனை செய்யவேண்டும்? (After how many days of sex can you check for pregnancy In Tamil)
Likes15 Likes|
Read time5 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • உடலுறவுக்குப் பிறகு துல்லியமான பிரக்னன்ஸி டெஸ்ட் முடிவுக்கு இரண்டு வார விதியைப் பின்பற்ற வேண்டும், குறிப்பாக 28 நாள் சுழற்சி கொண்ட பெண்களுக்கு இது சிறந்த முறையாகும்.
  • மாதவிடாய் தவறிய பிறகு காலையில் எழுந்தவுடன் ஹோம் டெஸ்ட் கிட் மூலம் டெஸ்ட் செய்வது சிறந்தது, ஏனெனில் எச்.சி.ஜி ஹார்மோன் அப்போது அதிக செறிவில் இருக்கும்.
  • தசைப்பிடிப்புகள், மார்பக வலி, குமட்டல், சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட் செய்வது அவசியம்.
  • பிரக்னன்ஸி டெஸ்ட் கிட் தேடுகிறீர்களா? Explore our Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns.
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating4.0
Organic Aloe Vera (300 ml)
Organic Aloe Vera (300 ml)
Rating4.4
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
Rating4.3

கருத்தடை சாதனத் தோல்வி அல்லது பாதுகாப்பற்ற உடலுறவினால் நீங்கள் கருவுற்றதாக உணர்ந்தால், உடலுறவுக்குப் பிறகு பிரக்னன்ஸியை எப்போது சரிபார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இந்தக் கட்டுரை உதவும்.

இதுபோன்ற குழப்பமான கேள்விக்கான பதில் மிகவும் எளிதானது, நீங்கள் எவ்வளவு டெஸ்ட் செய்கிறீர்களோ, அவ்வளவு அதிக வாய்ப்புகள் துல்லியமான முடிவுகளைக் உங்களுக்கு காண்பிக்கும். மேலும் சிறந்த பதில் இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

உடலுறவுக்குப் பிறகு பிரக்னன்ஸியை எப்போது பரிசோதனை செய்வது (When to check for pregnancy after sex In Tamil)

இரண்டு வார விதி (Two-weeks rule)

அதற்கான பதில் இரண்டு வார விதியில் உள்ளது. பிரக்னன்ஸி டெஸ்ட்டை எடுக்க உடலுறவுக்கு பின் இரண்டு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். முறையான 28 நாள் மாதவிடாய் சுழற்சி கொண்ட பெண்களுக்கு இந்த முறை துல்லியமான முடிவுகளை வழங்கும். பிறப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம் அல்லது உட்கொள்ளும் மருந்து போன்ற காரணங்களால் பல பெண்கள் சரியான 28 நாள் சுழற்சியை கொண்டிருப்பதில்லை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டியது அவசியம்.

மாதவிடாய் தவறிய பிறகு (After missing your period)

உங்கள் மாதவிடாய் தொடங்கும் நாள் அல்லது சுழற்சி தாமதமாகிறது என்பதை நீங்கள் உணரும் நாள், உடலுறவுக்குப் பிறகு கர்ப்பம் தரித்திருக்கிறீர்களா என்பதைச் சரிபார்க்க பொருத்தமானதாகும். டெஸ்ட் குழப்பமான முடிவுகளைக் காட்டினால், அடுத்த நாளே மீண்டும் டெஸ்ட் செய்து பார்க்கலாம். எச்.சி.ஜி ஹார்மோன் அதிக அளவில் செறிவூட்டப்பட்டிருப்பதால், காலையில் எழுந்தவுடன் டெஸ்ட் செய்வது சிறந்த முடிவை தெரிவிக்கும்.

நீங்கள் நெகட்டிவான முடிவைக் கண்டால், இரண்டு நாட்கள் காத்திருந்து மீண்டும் டெஸ்ட் செய்து பார்க்கவும். ஆரம்பகால பிரக்னன்ஸி காலத்தில் எச்.சி.ஜி ஹார்மோன்கள் இரட்டிப்பாகும்.

உடலுறவுக்குப் பிறகு கருவுற்றத்தை சோதனை செய்வது எப்படி? (How do you check for pregnancy after sex In Tamil)

பெண்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவதற்கு முன்னதாகவே டெஸ்ட்களை செய்து, அவர்கள் பிரக்னன்ட்டாக இல்லை என்று முடிவு செய்கிறார்கள். முதல் மூன்று மாதங்களில் ஸ்பாட் அல்லது இரத்தப்போக்கு ஏற்பட்டால் அது குழப்பம் மிகுந்ததாக இருக்கலாம். கூடுதலாக, உங்கள் அடுத்த மாதவிடாய் சுழற்சிக்கு முன் அல்லது உடலுறவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் பிரக்னன்ஸி டெஸ்ட்டை செய்வது தவறான நெகட்டிவ் முடிவுக்கு வழிவகுக்கும்.

டெஸ்ட் முடிவுகளுக்கும் தேவையற்ற மனக் கவலைகளுக்கும் ஆளாகாமல் இருக்க, பிரக்னன்ஸி டெஸ்ட்டின் சரியான செயல்முறையை நாங்கள் மேலே விவரித்துள்ளோம்.

ஹோம் டெஸ்ட் கிட் (Home test kit)

எந்தவொரு மெடிக்கல் ஸ்டோரிலும் சிம்பிள் ஹோம் டெஸ்ட் கிட் கிடைக்கும்.

நீங்கள் செய்ய வேண்டியவை (All you need to do is)

  • ஒரு கப்பில் யூரீனை கலெக்ட் செய்துகொள்ளவும்.

  • டெஸ்டிங் ஸ்டிக்கின் டிப்பை கப்பில் வைக்கவும்.

  • சில வினாடிகள் அப்படியே வைத்திருங்கள்.

  • பாசிட்டிவ் முடிவுக்கு இரண்டு ரெட் லைன்களைக் காண்பீர்கள்.

  • சிங்கிள் ரெட் லைன் தெரிந்தால் முடிவு நெகட்டிவ் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

மற்றொரு வகை டெஸ்டிங் கிட், யூரின் ஓட்டத்திற்கு அருகே நீங்கள் வைத்திருக்கக்கூடிய ஒரு சிறிய பிளேட்டைக் கொண்டுள்ளது. இது யூரினை கிட்டின் நடுப்பகுதியில் உறிஞ்சி முடிவைக் காட்டுகிறது. இது பாசிட்டிவ் முடிவுக்கான பிளஸ் சைனையும் நெகட்டிவ் முடிவுக்கான மைனஸ் சைனையும் காட்டும்.

நெகட்டிவ் முடிவு (Negative result)

டெஸ்ட் நெகட்டிவான முடிவைக் காட்டினால், நீங்கள் பிரக்னன்ட்டாக இல்லை எனலாம். ஆனால் கிட்டானது நீங்கள் பிரக்னன்ட்டாக இருப்பதுபோன்ற முடிவை பின்வரும் காரணங்களால் காட்டலாம் -

  • டெஸ்ட் கிட் காலாவதி.

  • நீங்கள் டெஸ்ட்டை தவறான வழியில் எடுத்தால்.

  • மிக விரைவாக டெஸ்டை எடுத்திருந்தால்.

  • டெஸ்டுக்கு முன் நீங்கள் அதிக அளவு ஃப்ளூயிட்களை பருகியிருந்தால் உங்கள் யூரின் நீர்த்தப்பட்டிருக்கும் அப்போது கிட் தவறான முடிவைக் காட்டலாம்.

  • நீங்கள் மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால், அப்போதும்கூட தவறான முடிவுகளை கிட் கொடுக்க வாய்ப்புள்ளது.

பிரக்னன்ஸிக்கான அறிகுறிகள் (Signs of Pregnancy)

பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகும் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பும், பிரக்னன்ஸிக்கு வழிவகுக்கும் பின்வரும் சிம்ப்டன்களை நீங்கள் காணலாம்.

  • தசைப்பிடிப்புகள் ( Cramps)

பிரக்னன்ஸியின் முதல் சில வாரங்களில் வயிற்றுப் பகுதியில் பிடிப்புகள் ஏற்படுகின்றன, அது நீங்கள் மாதவிடாயை நெருங்கிவிட்டதாக ஒரு உணர்ச்சி ஏற்படும், ஆனால் அது உண்மை இல்லை.

  • மார்பகங்களின் வலி ( Breasts hurt)

நீங்கள் பிரக்னன்ட்டாக இருக்கும்போது, ​​உங்கள் உடலில் குழந்தையின் வளர்ச்சியை சப்போர்ட் செய்ய உங்கள் உடல் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோனை அதிக அளவில் உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இதனால், இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது உங்கள் மார்பகங்கள் மென்மையாகவும் பெரிதாகவும் தோன்றும். மார்பக நரம்புகள் கருமையாகத் தோன்றலாம், அத்துடன் முலைக்காம்புகளில் சிறு வெடிப்புகளும் ஏற்படலாம்.

இதையும் படிக்கலாமே! - ஆரம்பகால பிரக்னன்ஸிக்கு உங்கள் வயிற்றை எவ்வாறு செல்ஃப் எக்ஸமைன் செய்வது

  • அமைதியற்ற நிலை ( Uneasy)

இதுபோன்ற தருணங்களில் குமட்டல், சோர்வு, உணவின்மீது நாட்டமின்மை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல்வலி போன்றவற்றை நீங்கள் உணரலாம்.

பாலுறவில் ஆக்டிவாக இருக்கும் பெண்கள், மேற்கூறிய அறிகுறிகளில் எவையேனும் சில அல்லது அனைத்தையும் அனுபவித்தால், ஹோம் டெஸ்டை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அவர்கள் மகப்பேறு காலங்களில் இருக்கும்போது, ​​ஒவ்வொரு மாதமும் பிரக்னன்ஸி ஏற்படலாம். சந்தேகம் இருந்தால், டெஸ்ட் செய்வது சிறந்த வழி அத்துடன் பிளட் டெஸ்ட் மூலம் உறுதிப்படுத்துவதும் அவசியம். வீட்டிலேயே அடிக்கடி டெஸ்ட் செய்து, முடிவைப் பற்றிக் கவலைப்படுவதற்குப் பதிலாக மருத்துவரிடம் சென்று எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம்.

பாசிட்டிவான முடிவை ஹோம் கிட் மட்டுமே உறுதிப்படுத்தாது. முழுவதும் கிட்டை நம்புவதும் கூடாது. உடலுறவுக்குப் பிறகு பிரக்னன்ஸியை எப்போது சரிபார்க்க வேண்டும் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், நீங்கள் ஒரு மகப்பேறு மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். மேலும் நீங்கள் மருத்துவரிடம் உங்களைப் பரிசோதிக்கக் கூறலாம். குறிப்பாக இரத்த/சிறுநீர் பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் மூலம் உங்கள் பிரக்னன்ஸியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

Tags

Pregnancy Test After Sex in English, Pregnancy Test After Sex in Hindi, Pregnancy Test After Sex in Bengali, Pregnancy Test After Sex in Telugu

கருவுறுதலை எதிர்நோக்கும் பெண்களின் நம்பிக்கைக்குரிய தேர்வு

வீட்டிலேயே துல்லியமாகவும் தனிமையில் சரிபார்க்க உதவும் சாதனங்கள் உங்கள் சந்தேகங்களை விரைவில் தீர்க்கும்.

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

440 Moms bought
₹999₹154535% Off
Rating
4.0
()
Organic Aloe Vera (300 ml)

Organic Aloe Vera (300 ml)

Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience

4178 Moms bought
₹289₹32912% Off
Rating
4.4
(45)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest

4340 Moms bought
₹499₹64923% Off
Rating
4.3
(91)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.