hamburgerIcon

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Pregnancy Journey arrow
  • கர்ப்பிணி பெண்கள் அதிகமாக வாயுவை வெளியேற்றுகிறார்களா?(Do Pregnant Women Fart A Lot in Tamil) arrow

In this Article

    கர்ப்பிணி பெண்கள் அதிகமாக வாயுவை வெளியேற்றுகிறார்களா?(Do Pregnant Women Fart A Lot in Tamil)

    Pregnancy Journey

    கர்ப்பிணி பெண்கள் அதிகமாக வாயுவை வெளியேற்றுகிறார்களா?(Do Pregnant Women Fart A Lot in Tamil)

    28 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    பெண்களின் உடலில் பல மாற்றங்களை கர்ப்ப காலம் ஏற்படுத்துகிறது. உடலின் பல பகுதிகளை உணர்ச்சி மிகுந்ததாக இது மாற்றுகிறது. எதிர்பாராத முடி வளர்ச்சி முதல் மலச்சிக்கல், ஏப்பம் என கர்ப்ப காலத்தில் உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதைப் போலவே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாயு தொல்லை ஏற்படுகிறது.

    இது ஆச்சரியம் தரக் கூடியதாக இருந்தாலும், இதுகுறித்து வெட்கப்பட ஒன்றுமே இல்லை. ஹார்மோன்கள் மிகுதியாக உற்பத்தியாகுவதன் காரணமாகவே கர்ப்ப காலத்தில் நாற்றத்துடன் கூடிய வாயு வெளியேறுகிறது. இந்த ஹார்மோன்களின் உற்பத்தியானது இரைப்பை மற்றும் குடல்களின் செயல்பாடுகளை குறைக்கிறது.

    இதில் நல்ல செய்தி என்னவென்றால் வாயு பிரச்சினையை நாம் கட்டுப்படுத்த முடியும். இதை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், வீட்டு முறை சிகிச்சைகள் மூலமாக வாயுவை கட்டுப்படுத்தலாம் அல்லது அதன் நாற்றத்தை குறைக்கலாம். இன்னும் சிறப்பான செய்தி என்னவென்றால், மிகுதியாக தண்ணீர் அருந்துவது, உடற்பயிற்சி செய்வது மற்றும் செயற்கையாக இனிப்பூட்டப்பட்ட அல்லது கார்பனேட் குளிர்பானங்களை தவிர்ப்பதன் மூலமாக இந்தப் பிரச்சினைக்கு நிவாரணம் பெறலாம்.

    கர்ப்பத்திற்கான ஆரம்பகால அறிகுறியா வாயு?(Is Gas an Early Pregnancy Sign in Tamil)

    • கர்ப்ப காலத்தின்போது, வழக்கமான உடலுக்கு கிடைக்கும் சில கட்டுப்பாடுகள் பெண்களின் உடலுக்கு கிடைக்காது. தசைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. வாயு உற்பத்தி ஆகலாம் மற்றும் இது கர்ப்பத்திற்கான ஆரம்பகால அறிகுறியாகும்.

    • முதலாவது வாரத்தில், பெண்களின் உடலில் மிகுதியான வாயு உற்பத்தி ஆகக் கூடும். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில், மாதவிலக்கு தவறவிட்ட 1 முதல் 2 வாரங்களுக்கு உங்கள் உடலில் வாயு பிரச்சினை நீடிக்கக் கூடும்.

    கர்ப்ப காலத்தின்போது வாயு நாற்றத்துடன் இருப்பது இயல்பானதா?(Is Smelly Gas Normal During Pregnancy in Tamil)

    கர்ப்ப காலத்தின் ஆரம்ப கால அறிகுறிகளில் ஒன்று, அழுகிய முட்டை வாடையுடன் வாயு வெளியேறுவது ஆகும். இதுகுறித்து வெட்கப்பட ஒன்றுமே இல்லை. ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாகுவதன் காரணமாக பெண்களின் செரிமானக் கட்டமைப்புகள் வீக்கம் அடைகின்றன. இதன் எதிரொலியாக அதிக வாயு உற்பத்தியாகிறது. இந்த வாயு உற்பத்தி அசௌகரியமானதாக இருக்கும் மற்றும் வயிற்று வலி, ஏப்பம் அல்லது வயிறு உப்புசம் போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும். சிலருக்கு, இது கர்ப்ப காலத்தின் 9 மாதங்களுக்கும் நீடிக்கும்.

    இதையும் படிக்கலாமே! - கர்ப்பிணிப் பெண்களுக்கு கருப்பையில் இருந்து கருமுட்டை வெளியே வருமா?(Do Pregnant Women Ovulate?In Tamil)

    கர்ப்ப காலத்தில் கெட்ட வாடையுடன் வாயு உருவாக காரணம் என்ன?(What Causes Smelly Gas During Pregnancy in Tamil)

    கர்ப்ப காலத்தின்போது, உடல் ப்ரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன் தான் மிகுதியான வாயு உற்பத்தியை தூண்டும். கர்ப்பத்திற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் மிக அதிக அளவிலான வாயுவை இந்த ஹார்மோன் உற்பத்தி செய்கிறது. இதன் எதிரொலியாக உடலின் தசைகள் ரிலாக்ஸ் அடைகின்றன. குடல் பகுதி தசைகள் ரிலாக்ஸ் அடையும்போது, அதன் காரணமாக செரிமான நடவடிக்கை குறைகிறது. இதனால், வாயு சேர்ந்து கொள்கிறது. இவ்வாறு வாயு ஒன்று கூடுவதன் காரணமாகத்தான் கர்ப்ப காலத்தில் கெட்ட வாடையுடன் அது வெளியேறுகிறது.

    கர்ப்ப காலத்தில் வாயு பிரச்சினைக்கு தீர்வு காண்பது எப்படி?(How to Relieve the Gas Problem During Pregnancy in Tamil)

    • கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாயு பிரச்சினை ஏற்படுவது இயல்பான விஷயம் தான் என்றாலும், மோசமான உணவு மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வதன் காரணமாகவும் இந்தப் பிரச்சினை தூண்டப்படும். தாய்மார்கள் தங்கள் உணவு குறித்து கவனமுடன் இருப்பது அவசியம் ஆகும். அப்போது தான் எந்த உணவு வாயுவை தூண்டுகிறது என்று புரிந்து கொள்ள முடியும்.

    • மிக வேகமாக சாப்பிடுவதைக் காட்டிலும், நிதானமாக, மெதுவாக சாப்பிடுவது சிறப்பாகும். உணவை நன்றாக மென்று, சவைத்து சாப்பிடவும் மற்றும் கூடுதல் வாயுவுடன் சேர்த்து விழுங்குவதை தவிர்க்கவும். ஆக, உடலில் வாயு சேராது. மிக அதிகமாக தண்ணீர் அருந்த முன்னுரிமை அளிக்க வேண்டும். இனிப்பூட்டப்பட்ட அல்லது கார்பனேட் பானங்களை தவிர்க்க வேண்டும்.

    • கர்ப்ப காலத்தில் ஆரம்ப நிலையில், கெட்ட வாடையுடன் வாயு வெளியேறுவது இயல்பான விஷயம் தான் என்றாலும், இதற்கு தீர்வு காண சில வீட்டுமுறை சிகிச்சைகள் இருக்கின்றன. மிக அதிகமாக திரவங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, அதிகமாக தண்ணீர் மற்றும் பழ ஜூஸ் போன்றவற்றை அருந்தலாம். நார்ச்சத்து நிரம்பிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வாயுவை கட்டுப்படுத்த நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் உடலுக்கு இறுக்கம் தராத, சௌகரியமான உடைகளை அணியலாம். உங்கள் ஸ்ட்ரெஸ் அளவுகள் குறைவாக இருப்பதை உறுதி செய்யவும்.

    முடிவுரை

    கர்ப்ப காலத்தில் வாயு பிரச்சினை என்பது சில மாதங்களுக்கு நீடிக்கலாம் அல்லது கர்ப்ப காலம் முழுவதும் நீடிக்கலாம். குறிப்பாக இது ஹார்மோன்களின் சுரப்பு அதிகமாகுவதால் நிகழுகிறது. கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கெட்ட வாடையுடன் வாயு வெளியேறலாம். ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வது மற்றும் மிக அதிகமாக தண்ணீர் அருந்துவது ஆகிய நடவடிக்கைகளை தவிர்ப்பதன் காரணமாக இவ்வாறு நடக்கலாம். வயிறு உப்புசம், ஏப்பம் மற்றும் கெட்ட வாடையுடன் வாயு வெளியேற்றம் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க மிக கூடுதலாக தண்ணீர் அருந்த வேண்டும். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மற்றும் உடலுக்கு நிறைய பயிற்சிகள் அளிக்க வேண்டும். வாயு சேருவதை நீங்கள் முழுமையாக தவிர்க்க முடியாது என்றாலும், அந்தப் பிரச்சினையில் இருந்து நீங்கள் நிவாரணம் பெறலாம் அல்லது உடலில் சேரக் கூடிய வாயுவின் அளவை குறைக்கலாம்.

    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் :

    வாயு காரணமாக கர்ப்பம் பாதிக்கப்படுமா?(Will a gas problem affect pregnancy? In Tamil)

    கர்ப்ப காலத்தின்போது சுரக்கின்ற அதிகப்படியான ஹார்மோன்களால் உற்பத்தியாகும் வாயு அல்லது வயிறு உப்புசம் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு அசௌகரியம் ஏற்படுவது இயல்பான விஷயம் தான். எனினும், இந்த தொந்தரவுகளால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. நீண்ட காலத்திற்கு வாயு பிரச்சினை நீடித்தால் அல்லது அதனுடன் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

    Tags :

    Tags :

    Gas is an Early Pregnancy Symptom in Tamil, Smell in Gas During Pregnancy in Tamil, Is Gas affect your Pregnancy in Tamil, How to relieve the Gas problem During Pregnancy in Tamil, Causes of Farting in Pregnancy in Tamil, Do Pregnant Women Fart A Lot in English, Do Pregnant Women Fart A Lot in Telugu, Do Pregnant Women Fart A Lot in Bengali

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Dhanalakshmi Pillai

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Stem Cell Banking

    Stem Cell Banking

    தொப்புள் கோடி இரத்த சேமிப்பு என்றால் என்ன, அதை ஏன் செய்ய வேண்டும்?|What is Cord Blood Banking and Why Should You Get It Done in Tamil

    Image related to Medications

    Medications

    உங்கள் கர்ப்ப காலத்தில் ஈகோஸ்ப்ரின் 75 ஐ எப்போது எடுக்கத் தொடங்க வேண்டும்? | When Should You Take Ecosprin 75 During Your Pregnancy in Tamil

    Image related to Pregnancy Journey

    Pregnancy Journey

    இந்தியாவில் சிறந்த கார்ட் செல் (தொப்புள் கொடி பேங்க்) வங்கிகளை எவ்வாறு தேர்வு செய்வது |How To Choose The Right Cord Cell Banks In India in Tamil

    Image related to Postnatal Care

    Postnatal Care

    பிரசவத்திற்குப் பிறகான கருத்தடை: செயல்முறை மற்றும் சிக்கல்கள் (Postpartum Sterilization: Procedure & Complications In Tamil)

    Image related to Pregnancy Journey

    Pregnancy Journey

    ஒவ்வொரு பெண்ணும் முயற்சிக்க வேண்டிய 30 பேபி பம்ப் போட்டோஷூட் ஐடியாக்கள்| Best 30+ Baby Bump Photoshoot Ideas You Should Try In Tamil

    Image related to Pregnancy Journey

    Pregnancy Journey

    கர்ப்ப காலத்தில் டிராகன் பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா?(Is It Safe To Eat Dragon Fruit During Pregnancy in Tamil)

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.