Updated on 3 November 2023
ஒரு பெண் கருவுற்றவுடன் பல மாற்றங்களைச் சந்திக்கிறாள். உணர்வு மற்றும் மன ரீதியாக மட்டுமல்லாமல், உடல் ரீதியான மாற்றங்களுக்கும் ஆளாகிறாள். ஏனென்றால், பெண்ணின் உடலாலனது தாய்யாகும் எதிர்கால பயணத்திற்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் மார்பக மாற்றங்கள் ஆனது உங்கள் உடலில் ஏற்படும் தெரியக்கூடிய உடல் மாற்றங்களில் ஒன்றாகும். உங்கள் மார்பகங்கள் கர்ப்பத்தின் தொடக்கத்திலிருந்தே மாறத் தொடங்கும், இது உங்கள் உடல், குழந்தையின் வருகைக்குத் தயாராகும் ஒரு வழியாகும். கர்ப்பத்தின் மிகவும் பொதுவான அறிகுறி தவறும் மாதவிடாயாக இருந்தாலும், மார்பக மாற்றங்கள் மற்றும் மார்பக வலி ஆகியவை கருத்தரித்த இரண்டு வாரங்களுக்குள் நீங்கள் கவனிக்கக்கூடிய ஆரம்ப அறிகுறிகளாகும்.
ஆரம்ப கர்ப்ப கால மார்பக மாற்றத்திற்கான காரணங்கள் யாவை? உங்கள் மார்பகங்கள் இப்போது மிகவும் மென்மையாகவும், முலைக்காம்புகள் அதிக உணர்திறன் கொண்டதாகவும், அசௌகரியமாக இருப்பதையும் நீங்கள் எளிதாக வேறுபடுத்தி அறியலாம். இவை அனைத்தும் உங்கள் உடல் இப்போது எல்லா வகையிலும் ஒரு தாயாக மாறத் தயாராகி வருகிறது என்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
கர்ப்பத்தின் மிக முக்கியமான தாக்கங்களில் ஒன்று உங்கள் உடலில் உள்ள ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் தாக்கம் ஆகும். உங்கள் உடலில், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய இரண்டு ஹார்மோன்கள் பாலூட்டுவதற்கு மார்பகங்களை தயார்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் பெரும்பாலான கர்ப்ப கால மார்பக மாற்றங்களுக்கு வழிவகை செய்கின்றன.
ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ப்ரோலாக்டின் போன்ற கர்ப்ப ஹார்மோன்கள் கருத்தரித்த பிறகு உங்கள் உடலால் உற்பத்தி செய்யப்படுகின்றன, இவை உங்கள் மார்பகங்களைத் தூண்டி, உங்களுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு உணவளிக்க தயாராக்கும் பொருட்டு, உங்கள் பால் சுரப்பிகளை விரிவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த நாட்களில் நீங்கள் அனுபவிக்கும் வாவ்-கிளிவேஜ் தருணமானது இந்த ஹார்மோன்களின் நேரடி விளைவாகும். நீங்கள் அனுபவிக்கும் வலி உண்மையில் உங்கள் மார்பகங்கள் பாலூட்டுவதற்குத் தயாராகி வருகின்றன என்பதற்கான அறிகுறியாகும், மேலும் இந்த வலியானது உங்கள் கர்ப்பம் முழுவதும் மாறுபடும். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில், பெரும்பாலான பெண்கள் திசு விரிவாக்கம் காரணமாக மார்பக மென்மை மற்றும் புண் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
முதலாவதாக, இரண்டு கர்ப்ப ஹார்மோன்களால் உங்கள் உடல் முழுவதும் இரத்த அளவு அதிகரிப்பு ஏற்படும்: அவை புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் (ஹெச்சிஜி). இதன் விளைவாக, உங்கள் மார்பகங்கள் பெரிதாகத் தொடங்குகின்றன அல்லது கனமாகின்றன.
அடுத்து, இந்த ஹார்மோன்கள் காரணமாக உங்கள் உடலில் உள்ள நிறமி(பிக்மெண்ட்) செல்கள் அல்லது மெலனோசைட்டுகள் மாற்றத்திற்கு உள்ளாகின்றன. மெலனோசைட்டுகள் உங்கள் முலைக்காம்புகளின் நிறத்திற்கு காரணமான செல்கள். எனவே, உங்கள் குழந்தை உங்கள் முலைக்காம்புகளை மிகவும் தனித்துவமாகப் பார்க்க, உங்கள் உடல் உங்கள் முலைக்காம்புகளின் வெளிறிய செல்களைக் கீழே தள்ளத் தொடங்குகிறது, இருண்ட செல்களை மேற்பரப்பில் தோன்றச் செய்கின்றன. இது உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க துவங்கும் போது உங்கள் முலைக்காம்புகளை உங்கள் குழந்தை எளிதாக கவனிக்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் மார்பக மாற்றங்களைப் பற்றிய விஷயங்களில் ஒரு சில பெண்கள் உணர்திறன் அதிகம் வாய்ந்த முலைக்காம்புகளை அனுபவிப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். நீங்கள் எந்த மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்
கர்ப்பத்தின் தொடக்கத்தில், மார்பக வீக்கம், மென்மையான மார்பகங்கள் அல்லது மார்பக புண் மற்றும் உங்கள் மார்பகங்களில் கனமான உணர்வு போன்ற பலவித மாற்றங்களை நீங்கள் உணரலாம்.
முதல் மூன்று மாதங்களில், உங்கள் மார்பகங்களில் உள்ள நரம்புகள் பெரிதாகவும், பார்வைக்கு எளிதாகவும் தோன்றும். உங்கள் மார்பகங்களின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும், ஆனால் உங்கள் உடல் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப முதல் சில வாரங்களுக்குப் பிறகு மார்பக மென்மை மற்றும் வலி உணர்வு போன்றவை மெதுவாக மறைந்துவிடும். உங்கள் முலைக்காம்புகள் பெரிதாகவும் அதிக உணர்திறன் உடையதாகவும் ஆகலாம், மேலும் அரியோலாவின் நிறம் கருமையாகலாம்.
உங்கள் மார்பகங்களின் உள்ளே இருந்து பால் குழாய்கள் உருவாகுவதால், மார்பகங்கள் கனமாகவும் நிரம்பயுள்ளதாகவும் இருக்கும். இரண்டாவது மூன்று மாதங்களின் நடுப்பகுதியில், நீங்கள் கொலஸ்ட்ரம் போன்ற ப்ரீ-மில்க் அல்லது தாய்ப்பாலின் ஆரம்ப வடிவத்தை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கலாம். சில பெண்கள் இந்த கசிவை பிரச்சினையாக கருதலாம், ஆனால், இது சாதாரணமானது மற்றும் கவலைப்படவேண்டியதில்லை.
உங்கள் உடல் கர்ப்பத்தின் முடிவில், பிரசவத்தை நெருங்கும் போது, உங்கள் மார்பகங்கள் கனமாகவும் நிறைவாகவும் மாறும். கூடுதலாக, உங்கள் முலைக்காம்புகள் அவற்றின் இயல்பான அளவை விட கணிசமாக பெரியதாக மாறும், மேலும் அரியோலா இன்னும் கருமையாகிவிடும். இவை அனைத்தும் பிரசவத்திற்கு உடல் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதற்கான அறிகுறிகளாகும். மார்பகங்கள் சிறிதளவு நீள்வதால், நீங்கள் அரிப்பையும் கூட சில நேரங்களில் உணரலாம்.
முதல் மூன்று மாதங்களில், உங்கள் மார்பகங்களில் சில வலிகள் மற்றும் பிற கர்ப்ப கால மார்பக மாற்றங்களை அனுபவிப்பீர்கள். உங்கள் மார்பகங்கள் உங்கள் குழந்தையின் முதல் உணவான - கொலஸ்ட்ரத்தை உருவாக்கும் வரை உங்கள் மார்பகங்களின் அளவு மற்றும் வடிவம் மாறுவதை நீங்கள் தொடர்ந்து கவனிக்கலாம்! கர்ப்ப காலத்தில் மார்பக வலியிலிருந்து விடுபட மருந்துகளை உட்கொள்வது மற்றும் பிற மருந்துகளைத் தேர்ந்தெடுப்பதுடன், கர்ப்ப கால மார்பக மாற்றங்களால் நீங்கள் எதிர்கொள்ளும் அசௌகரியம் மற்றும் வலியைப் பற்றி உங்கள் துணைக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
முதலில் சில வசதியான, சிறந்த மற்றும் மார்பக எடையை நன்கு தாங்கக்கூடிய ப்ராக்களை வாங்கவும். அண்டர்வைர் ப்ராக்கள் மற்றும் செயற்கைப் பொருட்கள் கொண்ட ப்ராக்களை வாங்குவதைத் தவரிக்கவும். இவை உங்கள் மென்மையான மார்பகங்கள் மற்றும் முலைக்காம்புகளைப் புண்ணாக்கும்.
உங்கள் விலா எலும்பு விரிவடைந்து, உங்கள் மார்பகங்கள் வளரத் தொடங்கும் போது நீங்கள் நிம்மதியாக சுவாசிக்க உதவும் சில கூடுதல் கொக்கிகள் இருக்கும், மெட்டர்னிட்டி(மகப்பேறு) ப்ராக்களையும் தேர்ந்தெடுக்கலாம்.
உங்கள் கர்ப்ப கால நடுப்பகுதியில், நர்சிங் ப்ராக்களுக்கும் நீங்கள் மாறலாம். உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது இந்த ப்ராக்கள் பயனுள்ளதாக இருக்கும், எனவே நீங்கள் இப்போதே அவற்றைப் அணிந்து பழகிக்கலாம்! அவை மெட்டர்னிட்டி ப்ராக்களின் வசதியுடன் வருகின்றன, அதே நேரத்தில் உடனடி கிளிப்-டவுன் கப்கள் தாய்ப்பால் கொடுக்கும் முழு செயல்முறையையும் எளிதாக்குகின்றன.
எல்லா பெண்களும் ப்ரா இல்லாமல் தூங்குவதை விரும்புவதில்லை. இருப்பினும், நீங்கள் தூங்கும் போது ப்ராக்களை அணிய விரும்பினால், ஸ்லீப் ப்ராக்களைத் தேர்வு செய்யவும், ஏனெனில் அவை பரந்த பட்டைகள் மற்றும் மென்மையான காட்டன் லைனிங்குடன் வருகின்றன.
கர்ப்ப காலத்தில் நீங்கள் உடற்பயிற்சி செய்யக் கருதினால், நம்பமுடியாத அளவிற்கு வசதியாகவும், கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதற்காகவே தயாரிக்கப்பட்டவையாகவும் இருக்கும் ஸ்போர்ட்ஸ் ப்ராக்களைத் தேர்வு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் கர்ப்ப காலம் முழுவதும் உங்கள் ப்ரா அளவு மாறுபட்டுக் கொண்டே இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். கர்ப்பம் உங்கள் கப் அளவை ஒன்று அல்லது இரண்டு அதிகரிக்கலாம். உங்கள் விலா எலும்பு வளரும்போது, உங்கள் பேண்ட் அளவு 26 முதல் 30 வாரங்களுக்குள் அதிகரிக்கலாம். உங்கள் கர்ப்பத்தின் பிற்பகுதியில், உங்கள் கப் அளவு மீண்டும் அதிகரிக்கலாம். பிரசவத்திற்குப் பிறகு, நீங்கள் தாய்ப்பால் புகட்டத் தயாராகும் போது, உங்கள் மார்பகங்கள் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கப் அளவு வளரும். நீங்கள் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த் பின், கர்ப்பத்தின் பிற்பகுதியில் உங்கள் மார்பகங்கள் அவற்றின் முந்தை அளவிற்கு சுருங்கிவிடும்.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது விரிவடையும் மார்பகங்களுக்கு இடமளிக்க ஒன்று அல்லது இரண்டு ப்ராக்களை மட்டும் வாங்குவது நல்லது. தாய்ப்பால் கொடுக்கும் முதல் சில வாரங்கள் மற்றும் உங்கள் கர்ப்பத்திற்குப் பிறகு (சுமார் 38 வாரங்கள்) உங்களுக்கு சில எலாஸ்டிக் நர்சிங் ப்ராக்கள் தேவைப்படும். நீங்கள் பால் புகட்டத் தொடங்கும் போது, உங்கள் மார்பகங்கள் மேலும் கணிசமாக விரிவடையும்.
கர்ப்ப கால மார்பக மாற்றங்களைச் சமாளிக்க உதவும் மிக முக்கிய வீட்டு வைத்தியம் அதிக தண்ணீர் குடிப்பதாகும். இருப்பினும், உங்கள் உடலில் நிறைய தண்ணீர் இருப்பது உங்கள் மார்பகங்களில் அசௌகரியம் மற்றும் வேதனையை ஏற்படுத்தும். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் கூடுதல் திரவங்கள் மற்றும் ஹார்மோன்களை வெளியேற்ற உதவுங்கள். உங்கள் பானத்தில் சிறிது இஞ்சி அல்லது எலுமிச்சையை கலந்து பருகினால் வேதனை மற்றும் வலி குறையும்.
ஒரு குறுகிய காலத்திற்கு சோடியம் உட்கொள்வதைக் குறைப்பதன் மூலம் மார்பக வலியைப் போக்கலாம். உங்கள் உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும், ஏனெனில், உப்பினை உட்கொள்வது இரத்தத்தின் அளவைக் கட்டமைக்க இன்றியமையாதது.
நார்ச்சத்து நிறைந்த ஆளி விதைகள், மார்பக வலியைக் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பொடித்த ஆளிவிதையை ஒரு தேக்கரண்டி தண்ணீர், பழச்சாறு அல்லது தயிரில் சேர்த்து பருகும் போது குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கிறது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் கர்ப்பதின் போது ஏற்படும் மார்பக வலியைப் போக்கலாம்.
உங்கள் மார்பில் ஒரு ஐஸ் கட்டியை வைத்து அதை ஒரு துண்டு கொண்டு மூடவும். உறைந்த பட்டாணி பையையும் மார்பக வலியைக் குறைக்கப் பயன்படுத்தலாம்!
ஐஸ் பேக் உங்களுக்கு உதவவில்லை எனில், மார்பகத்தை சில நிமிடங்கள் சூடான ஷவரில் காண்பிக்கவும். உங்கள் உடலில் அதிக இறுக்கமான தசைகள் இருந்தால், நீங்கள் இந்த வெப்பத்தால் பயனடையலாம்.
ஆஸ்பிரின், இப்யூபுரூஃபன் மற்றும் நாப்ராக்ஸன் உள்ளிட்ட அசெட்டமினோஃபென் மற்றும் ஸ்டெராய்டல் அல்லாத ஆண்டி-இன்ஃப்ளமேர்ட்டரி மருந்துகள் (என்எஸ்ஏஐடி-கள்) மூலம் கர்ப்ப கால மார்பக வலிக்கு சிகிச்சையளிக்க முடியும். இவை ஓவர்-தி-கவுன்டர் மருந்துகளாக இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
இதையும் தெரிந்து கொள்ளலாமே! - மார்பக நோய்த்தாக்கம் — காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை.
மார்பக மாற்றங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும், மேலும் நீங்கள் அனைத்தையும் அனுபவிக்கலாம் அல்லது அனுபவிக்காமலும் இருக்கலாம் அல்லது அதிக அல்லது குறைந்த அளவில் மார்பக மாற்றங்களை அனுபவிக்கலாம். இருப்பினும், வசதியான மற்றும் நன்றாக தாங்கக்கூடிய ப்ராவைப் பயன்படுத்துவது, தளர்வான மற்றும் வசதியான ஆடைகளில் தூங்குவது மற்றும் மார்பகப் பகுதியைச் சுற்றி மென்மையான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது போன்ற சில எளிய விஷயங்களைச் செய்வதன் மூலம் இந்த மாற்றங்களை எளிதாக சமாளிக்கலாம்.
breast pain during pregnancy in tamil, breast changes during pregnancy in tamil, remedies for breast pain during pregnancy in tamil, Breast Changes And Pain During Early Pregnancy: Causes And Remedies In English, Breast Changes And Pain During Early Pregnancy: Causes And Remedies In Hindi, Breast Changes And Pain During Early Pregnancy: Causes And Remedies In Telugu, Breast Changes And Pain During Early Pregnancy: Causes And Remedies In Bengali
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
গর্ভাবস্থায় আলুবোখরা: উপকারিতা ও ঝুঁকি | Prunes During Pregnancy: Benefits & Risks in Bengali
গর্ভাবস্থায় হিং | ঝুঁকি, সুবিধা এবং অন্যান্য চিকিৎসা | Hing During Pregnancy | Risks, Benefits & Other Treatments in Bengali
স্তনের উপর সাদা দাগ: লক্ষণ, কারণ এবং চিকিৎসা | White Spots on Nipple: Causes, Symptoms, and Treatments in Bengali
গর্ভাবস্থায় পোহা: উপকারিতা, ধরণ এবং রেসিপি | Poha During Pregnancy: Benefits, Types & Recipes in Bengali
গর্ভাবস্থায় মাছ: উপকারিতা এবং ঝুঁকি | Fish In Pregnancy: Benefits and Risks in Bengali
গর্ভাবস্থায় রেড ওয়াইন: পার্শ্ব প্রতিক্রিয়া এবং নির্দেশিকা | Red Wine During Pregnancy: Side Effects & Guidelines in Bengali
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |