Want to raise a happy & healthy Baby?
Pregnancy Journey
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த சில உணவுப் பொருட்களை உட்கொள்வதைக் கைவிட வேண்டி இருக்கும். ஏனெனில், பல உணவுப் பொருட்கள் கர்ப்பிணிப் பெண்ணின் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருப்பதில்லை. அதில் காபியும் ஒன்று. பழங்காலத்திலிருந்தே, கர்ப்ப காலத்தில் காபி அருந்துவது குழந்தையின் சரியான வளர்ச்சிக்கு ஏற்றதா என்ற விவாதம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் காபி குடிக்கலாமா? வாருங்கள் இது பற்றி அறிவோம்.
நம்மில் பலர் நம் நாளை காபி குடிப்பதில் இருந்து தான் தொடங்குவோம். மேலும், இது கைவிட முடியாத பழக்கங்களில் ஒன்று என்றும் சொல்லலாம்; கர்ப்பிணிப் பெண்கள் காபி அருந்தும் பழக்கத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டிய அவசியமில்லை. கர்ப்பத்தின் போது மிகக் குறைந்த அளவில் காஃபின் உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. அதே போல் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது நல்லது.
கர்ப்பமாக இருக்கும்போது நான் காபி குடிக்கலாமா? அதனால் ஏதேனும் நன்மைகள் உண்டா? நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்கு 1-2 கப் காபி அல்லது 200 கிராம் அளவு காபி குடிக்கலாம். காஃபின் உட்கொள்வது கருச்சிதைவு போன்ற ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் காபி அருந்தும் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது. காபி அருந்துவது கர்ப்பத்திற்கு நல்லது என்ற கூற்று உண்மையல்ல என்று சொல்லி பெரும்பாலான மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் காஃபின் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர், கர்ப்ப காலத்தில் மிகக் குறைந்த அளவிலும், எப்போதாவதும் அருந்துகிறீர்கள் என்றால், காபி குடிப்பது ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது.
கர்ப்பமாக இருக்கும்போது காஃபின் எடுத்துக் கொள்வது ஏன் தடைச் செய்யப்பட்டுள்ளது? காபியில் இருந்து கிடைக்கும் காஃபின் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது, உடலில் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது, மேலும் பதட்டத்தைக் கூட ஏற்படுத்தலாம். காஃபினின் சிதைவு மெதுவாக ஏற்படுவதால் அது இரத்தத்தில் நீண்ட நேரம் இருக்கும். அதிக அளவில் உட்கொண்டால், காஃபின் பெண்ணின் உடலில் உள்ள நஞ்சுக்கொடியைக் கடந்து, குழந்தையின் இரத்த ஓட்டத்தில் நுழையும். இது வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, கர்ப்ப காலத்தில் காஃபின் பொதுவாகத் தவிர்க்கப்படுகிறது.
காஃபின் இல்லாமல் இருக்க முடியவில்லையா? கர்ப்பமாக இருந்தால், உங்கள் தினசரி வழக்கத்திலிருந்து காஃபினை முற்றிலுமாக குறைக்க வேண்டிய அவசியமில்லை. ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளின்படி, கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 200 மில்லி கிராம் காஃபின், அதாவது நாளொன்றுக்கு சுமார் 1-2 கப் உட்கொள்வது கெடுதல் அளிக்காது. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் காபியைக் குறைந்த அளவில் உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.
இதை விட அதிகமான காஃபின் பாதுகாப்பானது இல்லை, ஏனெனில், இது கர்ப்பிணிப் பெண்ணின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, அவரது குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
காஃபின் காபியில் மட்டுமே உள்ளது என முடிவு செய்யாதீர்கள். காஃபின் கொண்ட பல உணவுகள் மற்றும் பிற பானங்கள் உள்ளன. கர்ப்பத்தின் போது பெண்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள பொருட்கள் குறித்து விழிப்புணர்வு கொண்டிருப்பது அவசியம். எனவே, அந்த உணவுகளில் என்ன இருக்கிறது என்பதையும், அவற்றில் காஃபின் இருந்தால், அந்த உணவுகளை உட்கொள்வதால் எவ்வளவு காஃபின் உட்கொள்கிறார்கள் என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் காபி குடிப்பது தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், அது உட்கொள்ளும் அளவைப் பொறுத்ததே ஆகும்.
காபியைத் தவிர, பொதுவாக உண்ணப்படும் உணவுகள் மற்றும் பானங்கள், காஃபின் கொண்டவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவை கர்ப்பிணிப் பெண்களால் தவிர்க்கப்பட வேண்டும் அல்லது மிகக் குறைந்த அளவில் உட்கொள்ளப்பட வேண்டும் -
சோடா
கிரீன் டீ/ பிளாக் டீ
எனர்ஜி டிரின்க்ஸ்
சாக்லேட்டுகள்
சப்ளிமெண்ட்ஸ்
குரானா
சாக்லேட் கொண்ட பேக் செய்யப்பட்ட உணவுகள்
காபி லிக்கர்
பீ நட் பட்டர் பார்கள்
காஃபின் நீக்கப்பட்ட தேநீர் மற்றும் காபி போன்ற மாற்று வழிகளை முயற்சி செய்யலாம். காலையில் காபி சாப்பிடுவதற்கான முக்கிய காரணங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது. இரத்த ஓட்டத்தில் அதிக காஃபின் நுழைவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி கவலை இல்லாமல் பானத்தை அனுபவிக்க காஃபின் நீக்கப்பட்ட காபி அல்லது தேநீர் ஒரு சிறந்த வழியாகும்.
ஜூஸ் அல்லது தண்ணீரை உட்கொள்வது கர்ப்ப காலத்தில் காஃபின் உட்கொள்வதைக் குறைப்பதற்கான மற்ற மாற்று வழிகள் ஆகும்.
ஆய்வுகளின்படி, ஒரு கர்ப்பிணிப் பெண் ஒரு நாளைக்கு 1-2 கப் காபிக்கு மேல் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது குழந்தையின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். அதிக அளவில் காபி அருந்துவது கருவில் உள்ள குழந்தையைப் பல வழிகளில் பாதிக்கலாம் மற்றும் கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தைக் கூட அதிகரிக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களில் உள்ள மூலப்பொருட்களின் பட்டியலை சரிபார்த்து அதிலுள்ள காஃபின் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அதிக அளவு சோடா, எனர்ஜி பானங்கள் அல்லது கிரீன் டீ போன்றவற்றைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் அதிகமாக காஃபின் உட்கொண்டதாக உணர்ந்தால், நிறைய தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் இருந்து காஃபினை வெளியேற்றுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று. கர்ப்ப காலத்தில் காஃபின் உட்கொள்வது குறித்த ஏதேனும் சந்தேகங்களுக்கு உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
https://kidshealth.org/en/parents/preg-caffeine.html
https://health.clevelandclinic.org/caffeine-and-pregnancy-how-does-caffeine-affect-my-baby/
Yes
No
Written by
Avira Paraiyar
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
Onion | Coconut | Skin - Fertility | By Concern | PCOS | Pregnancy Test Kit | Fertility For Her | Ovulation Test Kit | Fertility For Him | By Ingredient | Chamomile | Shatavari | Ashwagandha | Myo-inositol | Skin - Pregnancy & New Mom | By Concern | Stretch Marks Cream | Maternity Wear | Lactation | Maternity Gear | Cloth Diaper | Maternity dresses | Stretch Marks Kit | Stroller |