hamburgerIcon
login
STORE

VIEW PRODUCTS

ADDED TO CART SUCCESSFULLY GO TO CART

Article continues after adveritsment

Article continues after adveritsment

  • Home arrow
  • Constipation arrow
  • பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மலச்சிக்கல்: சிகிச்சையளிப்பது எப்படி.  arrow

In this Article

    பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மலச்சிக்கல்: சிகிச்சையளிப்பது எப்படி. 

    Constipation

    பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மலச்சிக்கல்: சிகிச்சையளிப்பது எப்படி. 

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    Article continues after adveritsment

    பிரசவத்திற்குப் பிறகு மலச்சிக்கல்

    பிரசவத்திற்குப் பின் ஏற்படும் இந்த நிலை தாய்க்கு சற்று அசௌகரியமாக இருக்கும். பிரசவத்திற்குப் பின் இரத்தப்போக்கு, மார்பகங்களில் கசிவு, ஸ்டிரெச் மார்க்ஸ் மற்றும் சிசேரியன் போன்ற நிலைமைகள் பொதுவானவை. அத்தகைய அசெளரியங்களில் ஒன்று தான் பிரசவத்திற்குப் பிறகான மலச்சிக்கலும்.

    எனவே, பெண்கள் தங்கள் குடல் இயக்கத்தில் சிறிய மாற்றத்தை எதிர்கொண்டு மலச்சிக்கலை அனுபவித்தால், அவர்கள் பிரசவத்திற்குப் பிறகும் மலச்சிக்கலை சந்திக்க நேரிடும். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலான பெண்களுக்கு இது தொடராது என்பதையும் இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

    பிரசவத்திற்குப் பிறகு மலச்சிக்கல் என்றால் என்ன?

    பிரசவத்திற்குப் பிறகு மலச்சிக்கல் என்பது ஒவ்வொரு தாயும் பிரசவத்த பிறகு கடந்து செல்ல வேண்டிய ஒன்றாகும். மலச்சிக்கல் என்பது ஒரு நபருக்கு ஒரு வாரத்தில் மூன்றுக்கும் குறைவான குடல் அசைவுகள் அல்லது வழக்கமான குடல் அசைவுகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருத்தல். பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மலச்சிக்கலின் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

    • குடல் இயக்கத்தில் ஒழுங்கற்றத்தன்மை.

    • மலம் கழிக்கும் போது சிரமத்தை எதிர்கொள்வது, மலம் கடினமாகவும் வறண்டதாகவும் இருப்பதால், குடல் இயக்கத்தின் போது வலி மற்றும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

    • வயிறு அல்லது மலக்குடலில் வலியை அனுபவித்தல், குறிப்பாக குடல் இயக்கத்திற்குப் பிறகு இதுபோன்று ஏற்படுதல்.

    • வயிறு உப்புசம் அல்லது வாயு ஏற்படுதல்.

    பிரசவத்திற்குப் பின் மலச்சிக்கலுக்கான காரணங்கள்:

    பிரசவத்திற்குப் பின் மலச்சிக்கலுக்கு பல காரணங்கள் உள்ளன. இந்தக் காரணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. பிரசவத்திற்குப் பிறகான மலச்சிக்கலுக்கான பொதுவான காரணங்களில் சில பின்வருமாறு:

    • பிரசவத்தில் போடப்படும் தையல்கள்

    சிசேரியன் பிரசவத்திற்கு உள்ளான பெண்களின் செரிமான அமைப்பு முழுமையாக குணமடைய மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகலாம். பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மலச்சிக்கலுக்கு இதுவும் ஒரு காரணம். பிறப்புறுப்பு வழி பிரசவம் உள்ள பெண்களுக்கு, எபிசியோட்டமியில் உள்ள தையல்கள் அசௌகரியத்திற்கு காரணமாக இருக்கலாம்.

    • மூல நோய்

    எடை அதிகரிப்பு மற்றும் வயிற்றில் குழந்தையை சுமப்பதால் நிலையான அழுத்தம் ஏற்படுவதன் காரணமாக கர்ப்ப காலத்தில் ஒரு தாய்க்கு மூல நோயை ஏற்படுத்தலாம். இந்த நிலை செரிமான அமைப்பில் வலி மற்றும் அடைப்புகளை ஏற்படுத்தும். இது பிரசவத்திற்குப் பிறகு மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

    • இடுப்பு பகுதியில் அசாதாரண நிலைகள்

    பிரசவத்தின் போது, ஒரு பெண்ணின் இடுப்புத் தளம் மற்றும் மலம் வெளியேறும் பகுதி சுருங்கி விரியும். இது குடல் இயக்கத்தின் போது சிரமத்தை ஏற்படுத்துகிறது மற்றும் மல வெளியேற்றத்தை கடினமாக்குகிறது.

    • ஒழுங்கற்ற தூக்கம்

    ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் சவாலான வேலையாகும். மேலும் பெற்றோர்கள் தங்கள் தூக்கத்தை தொலைக்க வேண்டி இருக்கும். தூக்க முறைகளில் ஏற்படும் இந்த மாற்றங்கள் சோர்வு மற்றும் குடல் பழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

    • மன அழுத்தம்

    குழந்தை பிறந்த பிறகு பெற்றோர் அனுபவிக்கும் ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை மற்றும் அவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் இருப்பதால் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த கட்டத்தில் மன அழுத்தத்தை அனுபவிப்பது இயல்பானது. குறிப்பாக, கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் ஈடுபாட்டின் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். மேலும், இந்த மன அழுத்த ஹார்மோன்கள் தாய்மார்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

    • நீரிழப்பு மற்றும் மோசமான உணவு

    ஒழுங்கற்ற தூக்கம் மற்றும் உணவு, தண்ணீரை குறைவாக எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றால் பிரசவத்தின் போது பெண்கள் தங்கள் உடல்நலத்தில் அதிக அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். இது உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது சில மாற்றங்களை ஒரு தாய் அனுபவிக்கக் கூடும். இது குடல் இயக்கங்களில் அசாதாரண நிலைகளுக்கு வழிவகுக்கும்.

    • உடற்பயிற்சி இல்லாமை

    பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில், பெரும்பாலான பெண்களுக்கு உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை. இதனால், அவர்களின் செரிமான செயல்பாடுகளின் வேகம் குறைகிறது. மற்ற தசைகளைப் போலவே, மனித குடலும் வலுவாகவும் நெகிழ்வான இயக்கமாகவும் இருக்க வழக்கமான உடற்பயிற்சி தேவை.

    • மருந்துகள்

    தையல், சுளுக்கு, கிழிப்பு, மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வலிகள் போன்றவற்றால் ஏற்படும் வலிகளைச் சமாளிக்க தாய் பல மருந்துகளைச் சாப்பிட வேண்டும். இந்த மருந்துகளின் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று மலச்சிக்கல்.

    • பிரசவத்திற்குப் பிறகான மருந்துகள்

    பிரசவத்திற்குப் பிந்தைய வைட்டமின்கள் போன்ற சப்ளிமெண்ட்ஸ் ஒரு தாயை குணப்படுத்தும் செயல்முறையில் முழுவதும் ஊட்டமளிக்கிறது. ஒரு பெண்ணுக்கு சிசேரியன் பிரசவம் நடந்தால், மருத்துவர்கள் இரும்புச் சத்துக்களை பரிந்துரைக்கலாம். இரத்த சிவப்பணு உற்பத்திக்கு இரும்புச் சத்துக்கள் இன்றியமையாதவை என்றாலும், அவை மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும்.

    இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்கு பிந்தைய வாயு பிரச்சினை: காரணங்களும், தீர்வுகளும்

    பிரசவத்திற்குப் பிறகான மலச்சிக்கல் நிவாரணத்திற்கு நீங்கள் என்ன செய்யலாம்

    • பிரசவத்திற்குப் பிந்தைய மலச்சிக்கலை கையாள்வது மிகவும் கடினமான பணி அல்ல. இதை எதிர்கொள்ளும் எந்தவொரு பெண்ணும் பிரசவத்திற்குப் பின் மலச்சிக்கல் நிவாரணத்திற்கான கீழே பட்டியலிடப்பட்ட உதவிக்குறிப்புகளைப் பின்பற்றலாம்:

    • ஒருவருக்கு மலச்சிக்கல் இருந்தால், அவர்கள் முதலில் கவனிக்க வேண்டியது அவர்களின் உணவு முறையைதான். நார்ச்சத்து உள்ள உணவை உண்ணுங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்க்கவும். உணவில் கொடிமுந்திரி போன்ற சில இயற்கை மலமிளக்கிகள் இருப்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கவும்.

    • தண்ணீர் மற்றும் பிற திரவ உணவுகளை தவறாமல் குடிப்பதன் மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் சரியான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    • மலச்சிக்கலுக்கு மிகவும் பயனுள்ள சிகிச்சை உடற்பயிற்சி ஆகும். ஒரு தாய் தனது செரிமான அமைப்பைத் தூண்டுவதற்கு தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    • பிரசவத்திற்குப் பின் மலச்சிக்கலை எதிர்கொள்ளும் பெண்களின் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் நல்ல மன ஆரோக்கியத்தைப் பெறவும் தியானம் அல்லது சூடான குளியல் போன்ற நிதானமான பயிற்சிகளை முயற்சிக்க வேண்டும்.

    • குடல்களை நகர்த்துவதற்கான தூண்டுதலை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். பிரசவத்திற்குப் பிறகான மலச்சிக்கல் மோசமாகும் என்பதால், மலத்தை வெளியேற்றாமல் இருந்துவிட முயற்சி செய்யாதீர்கள்.

    • கழிப்பறையில் ஸ்குவாட் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த உங்கள் கால்களுக்குக் கீழே ஒரு ஸ்டூலை வைத்துக் கொள்ளலாம்.

    • பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மலச்சிக்கலை போக்க மலமிளக்கிகள் போன்ற மருந்துகளையும் நீங்கள் சாப்பிடலாம்.

    • மகப்பேறுக்கு பிறகான மலச்சிக்கல் பற்றி குழந்தையைப் பெற்ற தாய் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இதுதான். இது ஒரு சவாலான கட்டமாகத் தோன்றினாலும், அது இறுதியில் சரியாகிவிடும். மேற்கூறிய அனைத்து குறிப்புகளும் பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு மலச்சிக்கலை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர உதவும்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    Article continues after adveritsment

    Article continues after adveritsment

    Article continues after adveritsment

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.