This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

பிரசவத்திற்கு பிறகு வரும் முதுகு வலி: காரணங்கள், சிகிச்சைகள், நிவாரணத்திற்கான குறிப்புகள்

Back Pain
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
பிரசவத்திற்கு பிறகு வரும் முதுகு வலி: காரணங்கள், சிகிச்சைகள், நிவாரணத்திற்கான குறிப்புகள்
Read time6 min

அறிமுகம்

ஒரு பெண் குழந்தையை பிரசவித்த பிறகு, அவள் சமாளிக்க வேண்டிய கடைசி விஷயம் முதுகு வலி தான். துரதிஷ்டவசமாக, இதனை பல பெண்கள் அனுபவிக்கின்றனர். உண்மையில், 80% பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு முதுகுவலியை அனுபவிக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, முதுகுவலி ஏற்பட காரணம் என்ன? மேலும், முக்கியமாக, இதிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்? இந்த பதிவு மூலமாக பிரசவத்திற்குப் பிந்தைய முதுகுவலிக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் மற்றும் நிவாரணத்திற்கான சில டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.

பிரசவத்திற்கு பிந்தைய முதுகு வலி என்றால் என்ன ?

பிரசவத்திற்குப் பிந்தைய முதுகுவலி என்பது பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் ஒரு பொதுவான நிகழ்வு. பிரசவம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உணர்ச்சி சார்ந்த மன அழுத்தம் உட்பட இந்த வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதிர்ஷ்டவசமாக, இந்த அசெளகரியத்தை போக்கவும், இதிலிருந்து நிவாரணம் பெறவும் ஒருவர் பல விஷயங்களைச் செய்யலாம்.

பிரசவத்திற்குப் பிந்தைய முதுகுவலிக்கான பொதுவான காரணங்களில் ஒன்று பிரசவத்தின் போது ஏற்பட்ட உடல் அழுத்தமாகும். ஒரு பெண்ணின் உடலானது கர்ப்பமாக இருக்கும்போதும் மற்றும் பிரசவத்தின் போதும் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. மேலும், அப்பெண்ணின் முதுகு நிறைய அழுத்தத்திற்கு ஆளாகிறது. இது தசை நோவுகள், வலிகள் மற்றும் வழக்கமான சோர்வுக்கு வழிவகுக்கும்.

பிரசவத்திற்கு பிந்தைய முதுகு வலி ஏற்படக் காரணம் என்ன?

கர்ப்ப காலத்தில் கிட்டத்தட்ட எல்லா பெண்களுக்கும் ஓரளவு முதுகு வலி ஏற்படும். இது பொதுவாக அவர்களின் அதிகப்படியான உடல் எடை, ஈர்ப்பு மையத்தில் மாற்றம் மற்றும் அவர்களின் மூட்டுகள் மற்றும் தசைநார்களை தளர்த்தும் ஹார்மோன்கள் ஆகியவற்றால் ஏற்படுகிறது. நல்ல செய்தி என்னவென்றால், கர்ப்பம் காரணமாக ஏற்படும் முதுகுவலி என்பது பொதுவாக தற்காலிகமானது தான்.

பிரசவத்திற்குப் பின் முதுகுவலி ஏற்பட ஒரு பொதுவான காரணம் பலவீனமான வயிற்று தசைகள் ஆகும். வயிற்றுத் தசைகள் முதுகெலும்பிற்கு ஆதரவு அளிக்கின்றன. எனவே அவை பலவீனமாக இருக்கும்போது, கீழ் முதுகில் வலி ஏற்படலாம். மோசமான தோரணை மற்றும் தாய்ப்பால் கொடுத்தல் ஆகியவற்றால் இந்த வலி அடிக்கடி அதிகரிக்கிறது.

பிரசவத்திற்குப் பிந்தைய முதுகுவலி ஏற்பட மற்றொரு சாத்தியமான காரணம் கூபகத் தளத் தசைகள் அல்லது தசைநார்களின் காயம் ஆகும். இந்த காயங்கள் பெரும்பாலும் சுக பிரசவத்தின் காரணமாக ஏற்பட்டவை ஆகும். ஆனால், இது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்களுக்கும் ஏற்படலாம்.

பிரசவத்திற்குப் பிந்தைய முதுகுவலி என்பது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?

பிரசவத்திற்குப் பிறகு சில நாட்களுக்கு அல்லது ஒரு வாரத்திற்கு வலி மற்றும் அசௌகரியம் இருப்பது பொதுவானது. பெரும்பாலான பெண்களுக்கு, வலி தானாகவே போய்விடும். ஆனால், ஒரு சில பெண்களுக்கு வலி பல மாதங்கள் நீடிக்கும். பெரும்பாலான சூழ்நிலைகளில், பிரசவத்திற்குப் பிந்தைய முதுகுவலி என்பது நேரம் மற்றும் சுய கவனிப்பு மூலம் தானாக நீங்கிவிடும்.

பிரசவத்திற்குப் பிந்தைய முதுகுவலி குறித்து எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண் முதுகுவலியை அனுபவித்தால், இது அவளுக்கு மட்டும் நிகழவில்லை என்பதை முதலில் புரிந்துகொள்வது அவசியம். உண்மையில், அமெரிக்கன் பெண் பாலுறுப்பு மற்றும் மகப்பேறியல் மருத்துவக் கல்லூரியின் கூற்றுப்படி, புதிதாக குழந்தையை பெற்றெடுத்த 70% தாய்மார்கள் பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் ஓரளவு முதுகுவலியை அனுபவிப்பார்கள் என கூறுகிறது.

சுய-பராமரிப்பு நடவடிக்கைகள் மூலம் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்றாலோ, அல்லது ஒருவருக்கு தாங்க முடியாத வலி இருந்தாலோ, உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது அவசியம். அவர்கள் உங்கள் வலிக்கான பிற சாத்தியமான காரணங்கள் என்ன என்பதை கண்டுபிடிக்கலாம் மற்றும் அதற்கு எவ்வாறு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பது என்ற வழிகாட்டுதலை வழங்கலாம்.

பிரசவத்திற்குப் பிந்தைய முதுகுவலிக்கான சிகிச்சைகள் :

பிரசவத்திற்குப் பிந்தைய முதுகுவலியில் இருந்து நிவாரணம் பெற உதவும் பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. அவற்றில் மிகவும் பொதுவான மற்றும் பயனுள்ள சிகிச்சைகளில் சில பின்வருமாறு

1.ஐஸ் அல்லது வெப்ப சிகிச்சை :

பாதிக்கப்பட்ட பகுதியில் ஐஸ் அல்லது வெப்பத்தைப் பயன்படுத்துவது வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவும்.

2. மசாஜ் :

பாதிக்கப்பட்ட பகுதியில் மசாஜ் செய்வது இறுக்கமான தசைகளை தளர்த்தவும், வலியில் இருந்து நிவாரணம் பெறவும் உதவும்.

3. உடற்பயிற்சி :

முதுகு மற்றும் வயிற்று தசைகளை வலுப்படுத்தும் எளிதான உடற்பயிற்சிகள் முதுகெலும்பிற்கு ஆதரவு வழங்கவும் வலியைக் குறைக்கவும் உதவும்.

4. வர்ம முறை பராமரிப்பு :

முதுகுத்தண்டினை சரிசெய்வதன் மூலமாக நரம்புகளின் அழுத்தத்தைக் குறைக்கவும், முதுகெலும்பு சீரமைப்பை மேம்படுத்தவும், வலியைக் குறைக்கலாம்.

5. குத்தூசி மருத்துவம் :

பல நூற்றாண்டுகள் பழமையான இந்த சிகிச்சையானது உடலில் குறிப்பிட்ட புள்ளிகளில் மெல்லிய ஊசிகளை குத்துவதை உள்ளடக்கியது. இது உடல் முழுவதும் ஆற்றல் ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் குணப்படுத்துவதைத் தூண்டுகிறது மற்றும் வலியைக் குறைக்கும் என்று கருதப்படுகிறது.

பிரசவத்திற்குப் பிந்தைய முதுகுவலியில் இருந்து நிவாரணம் பெற உதவும் சில டிப்ஸ் பின்வருமாறு :

1. உங்களால் முடிந்தவரை ஓய்வெடுங்கள் :

இதனை சொல்வது எளிது. ஆனால் புதிதாகப் பிறந்த குழந்தையை வைத்திருக்கும் ஒருவர் ஓய்வெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. இருப்பினும், குழந்தை தூங்கும் போது தூங்க முயற்சி செய்யுங்கள் அல்லது ஒரு மணி நேரம் குழந்தையை யாரையாவது கவனித்துக்கொள்ள சொல்லிவிட்டு ஓய்வெடுக்கலாம்.

2. ஆதரவு தரும் ஆடைகளை அணியுங்கள் :

ஒரு ஆதரவு தரும் ப்ரா மற்றும் வசதியான காலணிகள் உங்கள் முதுகில் உள்ள சிரமங்களை போக்க உதவும். நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால், உங்களுக்கு நல்ல நர்சிங் ப்ரா இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு போதுமான ஆதரவை வழங்கும்.

3. எளிதான நீட்சி பயிற்சிகள் அல்லது யோகா பயிற்சிகளை முயற்சிக்கவும் :

சில எளிதான நீட்சி பயிற்சிகள் அல்லது யோகா பயிற்சிகள் உங்கள் முதுகு தசைகளில் பதற்றத்தை போக்க உதவும். எந்தவொரு புதிய உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம்.

முடிவுரை

கர்ப்பம் மற்றும் குழந்தையை பிரசவித்தல் என்பது அற்புதமான அனுபவம். ஆனால், அவை ஒருவரின் உடலையும் பாதிக்கலாம். பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண் முதுகுவலியால் அவதிப்பட்டால், அது முற்றிலும் இயல்பானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது புதிதாக குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் அனுபவிக்கும் மிகவும் பொதுவான பிரச்சனையாகும். ஆனால் இந்த அசௌகரியத்தை குறைக்க ஒருவர் ஒரு சில விஷயங்களை செய்யலாம். உங்களுக்கு என்ன சிகிச்சைகள் சரியாக இருக்கும் என்பதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசியுங்கள். மேலும், முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெற இங்கே பகிரப்பட்டுள்ள சில குறிப்புகளை நீங்கள் முயற்சி செய்யலாம். தாய்மை மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பற்றிய பதிவுகளுக்கு மைலோ ஃபேமிலியைப் பார்வையிடவும்.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.