Want to raise a happy & healthy Baby?
Pregnancy Journey
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
மலட்டுத்தன்மை என்பது இன்று பலர் சந்திக்கும் சவாலான ஒரு விஷயங்களில் ஒன்று ஆகும். இருப்பினும் இதனை சமாளிக்க பல தீர்வுகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஐயூஐ முறை. செயற்கை விந்தூட்டல் அல்லது ஐயூஐ என்பது குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஒரு பெண்ணின் மலட்டுத்தன்மையை சமாளிக்க அவளின் கருப்பையில் நேரடியாக விந்தணுவை வைக்கும் ஒரு செயற்கை விந்தேற்றம் ஆகும். தம்பதிகள் மற்றும் தனியாக குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் தனிநபர்களிடையே அடிக்கடி பயன்படுத்தப்படும் கருவுறுதல் சிகிச்சை முறை இது ஆகும்.
கருவுறுதல் இயற்கையாக நடைபெறுவதற்கு, விந்தணுவானது பெண்ணுறுப்பில் இருந்து கருப்பைவாய்க்கு செல்ல வேண்டும். அங்கிருந்து அது கருப்பைக்கும், பின்னர் இறுதியில் ஃபலோப்பியன் குழாய்க்கும் சென்றடைகிறது. மொத்த விந்தணுக்களில், ஐந்து சதவீதம் மட்டுமே பெண்ணுறுப்பில் இருந்து கருப்பைக்கு செல்கிறது. பெண்ணின் சூலகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, முட்டையானது ஃபலோப்பியன் குழாய்க்கு செல்கிறது. ஃபலோப்பியன் குழாயில் விந்தணுவும் முட்டையும் தொடர்பு கொள்ளும்போது, கருத்தரித்தல் நடைபெறுகிறது. ஐயூஐ செயல்முறையின்போது, விந்தணுக்கள் சேகரிப்பட்ட பின் சுத்தம் செய்யப்பட்டு செறிவூட்டப்படுகிறது. இதனால் தரம் வாய்ந்த விந்தணுக்கள் மட்டுமே மீதமிருக்கும். இப்போது விந்தணுவானது வடிகுழலைப் பயன்படுத்தி (மெல்லிய குழாய்) நேரடியாக கருப்பையில் வைக்கப்படுகிறது. இதனால் அது ஃபலோப்பியன் குழாய்க்கு அருகில் கொண்டு செல்லப்படுகிறது. விந்தணு முட்டையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரமும், தூரமும் ஐயூஐ மூலம் குறைக்கப்படுகிறது. இது விந்தணு மற்றும் முட்டையின் கருத்தரித்தலை எளிதாக்குகிறது. இது எதிர்காலத்தில் அந்த பெண் கருத்தரிப்பதை சாத்தியமாக்குகிறது.
இன்ட்ரா யூட்ரைன் இன்செமினேஷன் அல்லது ஐயூஐ என்பது விந்நணு டோனரைப் பயன்படுத்துவதன் மூலமாக ஒரே பாலினத்தை சேர்ந்த பெண் தம்பதிகள் அல்லது கணவர் இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் பெண்ணுக்கு கருத்தரிக்க உதவும் ஒரு வழி ஆகும்.
கருப்பைவாய் கோழை அல்லது கருப்பைவாய் சார்ந்த பிற பிரச்சனை உள்ள பெண்கள்.
குறைந்த எண்ணிக்கையிலான விந்தணு.
மலட்டுத்தன்மை உடைய பெண் அல்லது வேறொரு பெண்ணுடன் தொடர்பிலுள்ள ஒரு பெண்ணுக்கு டோனர் விந்தணு சிறந்த தேர்வு.
விந்து ஒவ்வாமை. சில எதிர்பாராத நிகழ்வுகளில், ஒரு பெண்ணுக்கு தன் கணவரின் விந்தணு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். இது அவளின் பெண்ணுறுப்பில் எரிச்சல், வீக்கம் மற்றும் சிவத்தலை ஏற்படுத்தலாம். இது போன்ற நேர்வுகளில் ஐயூஐ வெற்றிகரமாக செயல்படும்.
விவரிக்க முடியாத மலட்டுத்தன்மை. ஒரு தம்பதியால் எதனால் கருத்தரிக்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் போகும் போது இது நிகழ்கிறது.
ஐயூஐ செயல்முறையின் தொடக்கம் முதல் இறுதி வரை 4 வாரங்கள் (அல்லது 28 நாட்கள்) உள்ளன. பொதுவாக மாதவிடாய் சழற்சியின் அதே நாட்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஐயூஐ செயல்முறைக்கு உட்படுத்தப்படும் முன்னதாக, அந்த தம்பதிக்கு இரத்த சோதனைகள், விந்தணு சார்ந்த சோதனைகள், அல்ட்ராசவுண்டு அல்லது பிற பரிசோதனை முறைகள் பலவற்றை உள்ளடக்கிய மருத்துவ சோதனைகள் செய்யப்படுகிறது.
ஒரு சிலருக்கு ஐந்து நாள் வாய்வழி கருத்தரித்தல் சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் சிலருக்கு ஊசி மூலம் இரண்டு வாரங்கள் வரை மருந்து அளிக்கப்படுகிறது. இது ஓவுலேஷன் செயல்முறை நடைபெறுவதை ஊக்குவிக்கிறது. இருப்பினும், இது போன்ற மருந்துகள் அனைவருக்கும் தேவைப்படாது. விந்தேற்றம் செயல்முறையானது விரைவாக நடைபெறும். ஒரு சில நிமிடங்களிலேயை விந்தணுவை செலுத்தி விடலாம். விந்தேற்றம் செய்யப்பட்ட இரண்டு வாரங்கள் கழித்து ஒரு பெண் கர்ப்பமாக உள்ளரா என்பதற்கான சோதனையை செய்து கொள்ளலாம்.
இந்த செயல்முறையின் வெற்றியானது, மலட்டுத்தன்மைக்கான காரணத்தைப் பொறுத்து மாறுபடும். விவரிக்கப்படாத மலட்டுத்தன்மையின் நேர்வுகளில் கூட ஐயூஐ கருவுறுதல் முறையானது பெரும்பாலும் வெற்றியடைந்துள்ளது. எண்டோமெட்ரியோசிஸ், ஃபலோப்பியன் குழாய் சார்ந்த பிரச்சனைகள் அல்லது விந்தணுவின் இணைதல் திறன் போன்ற காரணங்களால் ஐயூஐ வெற்றியடையாமல் போகலாம். இது போன்ற நேர்வுகளில், இன் விட்ரோ கருத்தரித்தல் (ஐவிஎஃப்/IVF) முறை சிறந்த ஆப்ஷனாக அமையும்.
கருவுறுதலுக்கான மருந்துகளுடன் இணையும் போது, ஐயூஐ முறை மூலமாக கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். கருவுறுதலுக்கான மருந்துகளுடன், ஒரு பெண் கருத்தரிப்பதற்கான வாய்ப்பானது 20% அதிகரிக்கிறது. மலட்டுத்தன்மைக்கான காரணம் மற்றும் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் தம்பதியின் வயது ஆகியவை ஐயூஐ சிகிச்சையின் வெற்றியை பாதிக்கும் காரணிகள் ஆகும். கருவுறுதல் விகிதம் ஒரு இயற்கையான கருத்தரிப்பைப் போலவே (சுமார் 20 சதவீதம்) இருப்பதால், ஐயூஐ கருவுறுதலுக்கான வாய்ப்புகளை இயற்கையான வெற்றி விகிதம் வரை அதிகரிக்க உதவுகிறது.
ஐயூஐ சிகிச்சை எடுத்த இரண்டு வாரங்கள் கழித்து நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்களா என்பதை கண்டுபிடித்து விடலாம். ஒரு சில பெண்கள் முன்கூட்டியே கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இருப்பினும், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதைக் கண்டுபிடிக்க, நீங்கள் எப்போது இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் அல்லது வீட்டில் எப்போது சிறுநீர் சோதனை செய்து பார்க்கலாம் என்ற ஆலோசனையை மருத்துவர் உங்களுக்கு வழங்குவார்.
வயது என்பது ஐயூஐ சிகிச்சையின் வெற்றி விகிதத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான காரணி ஆகும். ஐயூஐ கருவுறுதல் சிகிச்சை மூலமாக ஒரு பெண் கருத்தரிக்க தனது 40 வயதிற்குள் இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு பெண் முதிர்ச்சியடையும் போது, அவளின் முட்டை வெளியிடும் திறன் இயற்கையாகவே குறைகிறது. மேலும் முட்டையின் தரமும் குறைவாகிறது.
20 முதல் 30 வயது வரை: 17.6%
31 முதல் 35 வயது வரை: 13.3%
36 முதல் 38 வயது வரை: 13.4%
39 முதல் 40 வயது வரை: 10.6%
40 வயதிற்கு மேல்: 5.4%
ஐயூஐ சிகிச்சைக்கு முன்னும், அதற்கு பின்னரும் கூட நீங்கள் உடலுறவில் ஈடுபடலாம். ஐயூஐ சிகிச்சை செய்து கொண்ட நாளிலோ அல்லது அதற்கு அடுத்த நாளிலோ உடலுறவு வைத்துக்கொள்ளும் போது கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
இதையும் படிக்கலாமே! - ஐயூஐ (IUI) மூலமாக கர்ப்பம் அடைந்ததற்கான ஆரம்பகால அறிகுறிகள் என்னென்ன?
மலட்டுத்தன்மை சிக்கல்கள் உள்ள நபர்களுக்கு ஐயூஐ சிகிச்சை என்பது கருத்தரிக்க உதவும் ஒரு சிறந்த சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை வெற்றியடைய நீங்கள் ஒரு சில முறைகள் முயற்சி செய்ய வேண்டும் என்றாலும் கூட, கருவுறுதல் வாய்ப்பு இதன் மூலம் அதிகரிக்கிறது. இந்த சிகிச்சையின் வெற்றி வாய்ப்பானது மலட்டுத்தன்மையை கண்டறிய செய்யப்பட்ட சோதனை, வயது மற்றும் நேரத்தை பொறுத்து மாறுபடும்.
Yes
No
Written by
Avira Paraiyar
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
Skin brightening | Acne & Blemishes | Skin hydration | Dark Circles | Blackheads & Pimples | Skin Moisturizer | Skin Irritation | Shop By Ingredient | Kumkumadi | Ubtan | Vitamin C | Tea Tree | Aloe Vera | Rose Water | Skin - Hair Care | SHOP BY CONCERN | Hairfall | Dry and Damaged Hair | Hair Growth | Shop By Ingredient | Cloth Diaper | Maternity dresses | Stretch Marks Kit | Stroller |