
பிசிஓஎஸ் (PCOS), கருமுட்டை வெளியேற்றத்தில் சிக்கல், கர்ப்பப்பை அல்லது கர்ப்பப்பை வாய் பகுதியில் பிரச்சனை, எண்டோமெட்ரியோசிஸ் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு கர்ப்பப்பை உள்ளே செயற்கையாக விந்தணு செலுத்துகின்ற கருப்பையக கருவூட்டல் (ஐயூஐ) சிகிச்சை மூலமாக கருத்தரிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பிரச்சனைகள் பெண்கள் இயல்பாகவே கர்ப்பம் அடைவதற்கு தடையாக அமையும். எனவே, இம்முறையில் ஒரு ஊசி போன்ற சாதனத்தைக் கொண்டு கர்ப்பப்பை உள்ளே விந்தணு செலுத்தப்படுகிறது. இது வெற்றி அடைந்து, கரு உருவாகும் பட்சத்தில் அதிலிருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அறிகுறிகள் தென்படத் தொடங்கும்.
ஐயூஐ சிகிச்சைக்குப் பிறகு, கர்ப்பத்தை உறுதி செய்வதற்காக காத்திருப்பது மிகுந்த மன அழுத்தத்தை அல்லது கவலையை உண்டாக்குகின்ற விஷயமாகும். கர்ப்பத்தை உறுதி செய்ய வீட்டிலேயே நீங்கள் பரிசோதனை செய்து கொள்ள நினைத்தால் அதற்கு இரண்டு வார காலம் காத்திருக்க வேண்டும். கர்ப்பத்தை உறுதி செய்ய இரத்தப் பரிசோதனை மிகவும் பலன் தரக் கூடிய பரிசோதனை முறையாகும். ஏனென்றால், அதன் முடிவுகள் துல்லியமாக இருக்கின்றன. இரத்தப் பரிசோதனை செய்யும்போது, சில பெண்களுக்கு கர்ப்பத்திற்கான உடல் ரீதியிலான அறிகுறிகள் தென்படலாம். சிலருக்கு அறிகுறிகளை உணரும் வகையில் கர்ப்பகால ஹார்மோன்களை வெளிப்படுத்தும் அளவுக்கு இரத்த ஓட்டம் இல்லாமல் இருக்கலாம்.
கருமுட்டை கருத்தறித்த பிறகு 4 முதல் 6 வாரங்களுக்கு ஸைகோட் கர்ப்பப்பை உள்ளே நுழையாது. கரு பதிவது 5 நாட்கள் வரையிலும் நடைபெறும். எச்சிஜி (HCG) அளவுகள் அதிகரிக்கும் சில நாட்கள் வரையில், கர்ப்ப பரிசோதனை மூலமாக கர்ப்பத்தை உறுதி செய்ய இயலாது. ஆக, சிகிச்சைக்குப் பிறகு இரண்டு வாரங்கள் அல்லது 14 நாட்களுக்குப் பிறகு பரிசோதனை செய்வது சிறப்பாக அமையும்.
ஐயூஐ அல்லது ஐவிஎஃப் சிகிச்சை மூலமாக கர்ப்பம் தரிக்கும்போது ஏற்படும் அறிகுறிகள் என்பது, உடலுறவு மூலமாக நிகழும் இயல்பான கர்ப்பத்திற்கான அறிகுறிகள் போலவே இருக்கும். கரு எப்படி உருவாகிறது என்பது ஒரு விஷயம் அல்ல. எப்படி இருந்தாலும் உடல் ஒரே மாதிரியான ஹார்மோன்களைத் தான் வெளியிடும். அதே சமயம், கர்ப்பத்தை வெறுமனே அறிகுறிகளை வைத்து உறுதி செய்துவிட இயலாது. ஏனென்றால், ஒவ்வொரு பெண்களுக்கும் வெவ்வேறு மாதிரியான அறிகுறிகள் தென்படுகின்றன. ஒரு பெண் கர்ப்பம் அடைந்துள்ளாரா என்பதை பரிசோதனை செய்ய இரத்த பரிசோதனை ஒன்று தான் சிறப்பான வழிமுறையாகும்.
கரு பதியும் போது நிகழக்கூடிய உதிரப்போக்கு என்பது மாதவிலக்கு காலத்திற்கு முந்தைய வெள்ளைப்படுதல் போன்றே இருக்கும். ஐயூஐ சிகிச்சையை தொடர்ந்து இரண்டு வாரங்களில், ஒரு கருவானது தன்னை கர்ப்பப்பை உள்ளே நிலைநிறுத்திக் கொள்ளும்போது இயல்பாகவே உதிரப்போக்கு ஏற்படும். சில பெண்களுக்கு இந்த அறிகுறிகள் தென்படாது. அதே சமயம், கருத்தரித்த 6 முதல் 12 நாட்களிலும் இந்த உதிரப்போக்கு நிகழலாம். உதிரப்போக்குடன் சேர்த்து லேசான சுருக்கங்கள்கள் உண்டாகும்.
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மாதவிலக்கு ஏற்படுவது தாமதமாகலாம். இந்த சமயத்தில் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே வெள்ளைப்படுதல் மற்றும் கர்ப்பப்பை சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
ஐயூஐ சிகிச்சை மூலமாக ஏற்படும் பொதுவான பக்கவிளைவு என்னவென்றால் மார்பகங்கள் இலகுவானதாக மாறும் மற்றும் உணர்ச்சி மிகுந்ததாக, வலி உடையதாக இருக்கும். எனினும், மாதவிலக்கு தாமதம் ஆன பிறகும் கூட, மார்பகங்கள் தொடர்ந்து இலகுவாக நீடித்தால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
ஐயூஐ சிகிச்சைக்குப் பிறகு பலவீனமாக மற்றும் சோர்வாக உணருவது இயல்பான விஷயம் தான். உடல் சோர்வு மற்றும் தூக்க உணர்வு போன்றவற்றுக்கு புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் காரணமாக அமைகின்றன. கர்ப்பத்திற்கு தயாராகும்போது நம் உடல் மிகுந்த ரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலமாக அதிக ஆற்றலை ஏற்படுத்திக் கொள்ளும். ஓஸ்ட்ரோஜன் ஹார்மோன் மிக அதிகமாக உற்பத்தி ஆகும்போது, வயிறு காலியாகுவதன் காரணமாக சோர்வு ஏற்படும். குமட்டல் அல்லது காலை நேர சோர்வு என்பது, ஐயூஐ சிகிச்சை காரணமாக உருவாகும் ஹார்மோன்களின் விளைவாக ஏற்படக் கூடியதாகும். ஆனால், எல்லோருக்கும் இந்த அனுபவம் நிகழாது.
ஹார்மோன்களின் மாற்றங்கள் காரணமாக ஒருவருக்கு உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற வேட்கை அதிகரிக்கலாம் அல்லது சில சமயம் வெறுப்புணர்வு உண்டாகலாம். உடலில் மினரல்களின் பற்றாக்குறை காரணமாக உணவு வேட்கை உண்டாகும். எனினும், இந்த அறிகுறிகளை கவனித்து, அது குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
உடலில் புரோஜெஸ்டிரோன் அதிகரிப்பதன் காரணமாக வெப்பம் அதிகரிக்கும். உடல் வெப்பம் 20 நாட்களுக்கும் மேலாக அதிகமாகவே உள்ளது என்றால் அது கர்ப்பம் அடைந்துள்ளதற்கான அறிகுறிகளில் ஒன்றாகும்.
இதையும் படிக்கலாமே! - 10-வார கர்ப்பகால வயிற்றின் அளவு: எது இயல்பானது, எது இயல்பில்லை?
ஆண் துணை அவரது விந்தணு சேகரிப்பை, கருத்தரித்தல் மையத்திற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுவார். விந்தணுவானது முதலில் சுத்தம் செய்யப்படும். விந்தணுவை சுத்தம் செய்த பிறகு, அதிலிருந்து ஆரோக்கியமான விந்தணுக்களை ஆய்வக ஊழியர் பிரித்தெடுப்பார். கர்ப்பப்பை உள்ளே நுழையத் தேவையில்லாத விந்து திரவத்தை அவர்கள் பிரித்தெடுப்பார்கள்.
கர்ப்பம் அடைவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதற்கு, கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த உயிரணுக்களை கர்ப்பப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பெண்ணை மருத்துவர் ஒரு டேபிள் மீது படுக்க வைப்பார். இதற்குப் பிறகு ஒரு மெல்லிய குழாய் அல்லது கேத்தடர் ஒன்றை மருத்துவர் கர்ப்பப்பை உள்ளே செலுத்துவார்.
ஐயூஐ சிகிச்சையை மேற்கொள்ள 20 முதல் 25 நிமிடங்கள் தேவைப்படும். இந்த சிகிச்சைக்கு மயக்கவியல் நிபுணர் தேவையில்லை. சிகிச்சை முடிந்த பிறகு 20 நிமிடங்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு பெண்ணிடம் அறிவுறுத்தப்படும். ஏனெனில், இந்த சிகிச்சையின் பக்க விளைவாக சில பெண்களுக்கு மயக்கம் அல்லது மிதமான சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகள் உருவாகக் கூடும்.



This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |