This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

கவனமாக  இருக்க வேண்டிய தருணம்: பொய் வலிக்கான 3 அறிகுறிகள் (Be aware: 3 signs of false labour In Tamil)

Labour & Delivery
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 29, 2026
கவனமாக  இருக்க வேண்டிய தருணம்: பொய் வலிக்கான 3 அறிகுறிகள் (Be aware: 3 signs of false labour In Tamil)
Likes13 Likes|
Read time8 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • ப்ராக்ஸ்டன்-ஹிக்ஸ் எனப்படும் பொய் வலி பிரசவ தேதிக்கு அருகில் ஏற்படக்கூடியது; இது உங்கள் உடல் பிரசவத்திற்கு தயாராகிறது என்பதை குறிக்கிறது.
  • பொய் வலியின் அறிகுறிகள்: இரத்தப்போக்கு இல்லாமை, ஒழுங்கற்ற வலி, அடி வயிற்றில் மட்டும் வலி, நிலை மாற்றும் போது வலி குறைதல் ஆகியவை.
  • உண்மையான பிரசவ வலியில் இரத்தப்போக்கு, பனிக்குடம் உடைதல், அடிக்கடி வலுவான சுருக்கங்கள், கீழ் முதுகு வலி, கருப்பை வாய் விரிவடைதல் போன்றவை இருக்கும்.
  • பிரசவத்திற்கு தயாராக என்ன உதவும்? Explore our Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g.
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Rating4.9
Organic Aloe Vera (300 ml)
Organic Aloe Vera (300 ml)
Rating4.4
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7

பிரசவ தேதியை நெருங்கும்போது, ​​இந்த ப்ராக்ஸ்டன்-ஹிக்ஸ் (Braxton-Hicks) என்ற பொய் வலியை அனுபவிக்கும் பல கர்ப்பிணிப் பெண்கள் ஏமாந்து போகக்கூடும். பொய் வலியால் கர்ப்பிணி பெண்ணுக்குத் தேவையற்ற மன அழுத்தம் உண்டாகலாம். இது ஒரு நியாயமற்ற விஷயமாகவே தோன்றும்! இருப்பினும், இதில் உள்ள ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ப்ராக்ஸ்டன்-ஹிக்ஸ் எனப்படும் பொய் பிரசவ வலியை நீங்கள் உணரும் போது, உங்கள் குழந்தையைப் பெறுவதற்கு நீங்கள் முழுவதுமாகத் தயாராகிறீர்கள் என்று அர்த்தம். ஒரு சில நேரங்களில் இது பிரசவ வலி வருவதற்கு முன் ஏற்படும் ஒரு அறிகுறியாக இருக்கலாம். இருந்தாலும் கூட, இந்த பொய் வலி என்பது பிரசவ வலி ஏற்படுவதற்கு சில நாட்கள் முன்னரே அல்லது சில வாரங்களுக்கு முன்னரே கூட ஏற்படலாம் என்பதால் இந்த பொய் வலியை வைத்து எதையும் உறுதியாக சொல்லிவிட முடியாது.

எனக்கு ஏற்படும் பிரசவ வலி உண்மையானதா? (Are my contractions real In Tamil)

உங்களுக்கு ஏற்பட்டுள்ளது பொய் வலி தானே தவிர, பிரசவ வலி அல்ல என்பதை பின்வரும் அறிகுறிகள் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்:

இரத்தப் போக்கு எதுவும் ஏற்படவில்லை. யோனியில் இருந்து வெளியேற்றம் காணப்பட்டாலும் அது இரத்தம் கலந்ததாகவும் பின்க் நிறத்திலும் இல்லாமல் பிரவுன் நிறத்தில் இருக்கும் பட்சத்தில் அது பொய் வலியாக இருக்கலாம். உடலுறவு அல்லது உட் சோதனை செய்யும்போது சளி போன்று தோன்றக்கூடிய பிரவுன் நிற வெளியேற்றத்தை ஏற்படுத்தும் - ஆனால், அது உண்மையான போக்கு அல்ல.

அம்மோனியா போன்ற வாசனை கொண்ட திரவம் வெளியேறுதல். கவலைக் கொள்ள வேண்டாம். அது சிறுநீர் தானே தவிர பனிக்குட நீர் அல்ல. ஏனெனில், பனிக்குட நீர் எந்த ஒரு வாசனையையும் கொண்டிருக்காது. அது மட்டும் இல்லாமல் அது பனிக்குடம் உடைந்தால் அதிலிருந்து வெளிவரும் நீரை நம்மால் நிறுத்த முடியாது. சிறுநீர் கழிப்பது போல அது எந்த ஒரு நிறுத்தமும் இல்லாமல் வெளியேறுவதை நீங்கள் உணரலாம்.

விட்டு விட்டு ஏற்படும் முன்கூட்டிய பிரசவ வலி. பிரசவ வலியைப் போலவே ஏற்படும் முன்கூட்டிய ப்ராக்ஸ்டன்-ஹிக்ஸ் பிரசவ வலி உங்களை எளிதில் ஏமாற்றக்கூடும். கொடுக்கப்பட்ட பிரசவ தேதியை விட ஒரு வாரம் தள்ளிப்போனாலும் கூட உங்களுக்கு இது போன்ற பொய் வலி ஏற்படலாம். அதனை பின்வருமாறு நீங்கள் உணரலாம்:

  • ஒழுங்கற்றதாக இருக்கும் (சீரான இடைவெளியில் நடைபெறாது)

  • படிப்படியான வலியாக இருக்காது (நேரத்தைப் பொருத்து வலி தீவிரமடையாது)

  • கீழ் முதுகு பகுதியைக் காட்டிலும் அடி வயிற்றில் கடுமையான வலி.

  • நிலையை மாற்றும் போதோ அல்லது செயலை மாற்றும் போதோ வலியில் மாற்றம் உண்டாவது (வேறு பக்கமாக திரும்பும் போது ஒரு வேலை வலி இல்லாமல் போகலாம், எனவே சற்று கீழ்நோக்கி நிலையை மாற்றும்போது வலி குறைகிறதா என்று கவனிக்கவும்)

  • குழந்தையின் அசைவுடன் கூடிய வலி

உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அதனை தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்: உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டாலோ அல்லது உங்களுக்கு பிரசவ வலி வந்துவிட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகித்தாலோ மருத்துவரை அணுகுவது நல்லது. சில சமயம் தேவையில்லாமல் கூட நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல நேரலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் இருப்பது சில சமயங்களில் பாதகமாக முடியலாம். இம்மாதிரியாக ஏற்படும் முன்கூட்டிய பிரசவ வலியானது ஒரு சில மணி நேரம் அல்லது ஒரு மாதம் அல்லது அதற்கும் கூடுதலாக நீடிக்கலாம். இம்மாதிரியான முன்கூட்டிய பிரசவ வலி ஏற்படுவதற்கான அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடும். (ஒரே பெண்ணின் வெவ்வேறு பிரசவத்தின் போதும் கூட)

இது சாதாரண வலி தான் என்பதை நான் எவ்வாறு தெரிந்து கொள்வது? (How to know if the labor pain is normal In Tamil)

கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் பிரசவ வலிக்கும் பொய் வலிக்கும் இடையே குழப்பமடைகிறார்கள். ஒரு பெண் தனக்கு பிரசவ வலி வந்துவிட்டதை அறிந்து கொள்ள உதவும் சில அறிகுறிகள் பின்வருமாறு.

  • இரத்தப்போக்கு

  • அடிக்கடி ஏற்படும் வலுவான சுருக்கங்கள்

  • பனிக்குடம் உடைதல்

  • கீழ் முதுகு மற்றும் வயிறு வலி

  • கருப்பையின் வாய் விரிவடைதல்

  • குழந்தை கீழ்நோக்கி இறங்குதல்

  • வயிற்றில் பிடிப்புகள் மற்றும் அதிகரித்த முதுகுவலி

  • வயிற்றுப்போக்கு

  • உடல் எடை அதிகரிப்பு நின்றுபோதல்

  • மூட்டுகள் பலவீனமான ஒரு உணர்வு

  • சோர்வு

பிரசவ வலியை ஏற்படுத்த உதவும் உடற்பயிற்சிகள் (Exercises for inducing labor)

  • பிரசவ வலியைத் தூண்டும் வேகமான உடற்பயிற்சிகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பிரசவ வலியைத் தூண்டும் இந்தப் பயிற்சிகள் கர்ப்பகாலத்தில் எந்த விதமான ஆபத்தும் இல்லாத கர்ப்பிணிப் பெண்களால் பயிற்சி செய்யப்படலாம்.

  • கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் தங்கள் கால்களை அகலமாக வைத்திருப்பதுண்டு. இருப்பினும், அவர்கள் கால்விரல்களை இணையாக கொண்டு வருவதன் மூலமாக, இது விலா எலும்புகளை பிரிக்க உதவுகிறது. இது கீழ் முதுகில் போதுமான அளவு இடத்தை அளிக்கிறது. இதனால் எளிதில் பிரசவ வலி தூண்டப்பட்டு குழந்தை பிறக்க உதவுகிறது.

  • நீங்கள் நிற்கும் போது வயிற்றை முன்னோக்கி தள்ள வேண்டாம். அதற்கு பதிலாக, கணுக்கால் மற்றும் இடுப்பை ஒரே மாதிரியாக சீரமைக்க முயற்சி செய்யுங்கள். இது ஒரு எளிதான தோரணை மற்றும் குழந்தை நல்ல நிலையை நோக்கிச் செல்ல உதவுகிறது. மேலும் கர்ப்பிணிப் பெண்கள் உட்கார்ந்திருக்கும் போது குனியாமல் இருப்பது நல்லது.

  • அகன்ற கால் நிலைகளில் பெர்திங் பந்தில் உட்காரவும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் உங்கள் உடலை பிரசவத்திற்குத் தயார்படுத்த உதவுகிறது. இது கர்பப்பை வாய் திறக்க உதவுகிறது மற்றும் அதன் விரிவாக்கத்தை ஊக்குவிக்கிறது. வட்ட வடிவிலான இடுப்பு சுழற்சிகள், லேசான துள்ளல் மற்றும் பிரசவ வலியைத் தூண்டும் அசைந்தாடுதல்கள்.

  • பிரசவத்தின் போது குழந்தையின் தலைக்கு இடமளிக்க, இடுப்பு எலும்புகள் இழுக்கப்பட்டு பிரிக்கப்படுகின்றன. கூபகச் சாய்வு பயிற்சிகளை செய்வதன் மூலம் மூட்டுகளை தளர்த்தலாம். முதுகு தரையில் படுமாறு படுத்துகொண்டு, கால்களை தட்டையாக வைத்து, பின்னர் முழங்கால்களை வளைக்கவும். இப்போது இடுப்பை மெதுவாக தூக்கி உடலுக்கு இணையாக வையுங்கள். பத்து வினாடிகள் இந்த நிலையில் இருந்த பிறகு, இயல்பு நிலைக்கு திரும்பவும். ஒரு சில முறை இதனை செய்யலாம்.

  • · உங்கள் யோகா அல்லது நடன வகுப்பு மூலமாக பட்டர்ஃபளை போஸ் பற்றி கேள்விபட்டு இருப்பீர்கள். இந்த ஆசனம் இடுப்பு மூட்டுகள் நெகிழ்வாக இருப்பதை உறுதி செய்கிறது. மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், எளிதாக குழந்தையை பிரசவிக்கவும் உதவுகிறது. இந்த ஆசனத்தை செய்ய, நிமிர்ந்து உட்கார்ந்து, பாதங்களை ஒன்றாக இணைத்து வையுங்கள். முழங்கால்களை வளைத்து, கால்களை உடலை நோக்கி இழுத்து வைக்கவும். இது உள் தொடைகள் மற்றும் இடுப்பில் ஒரு நீட்சியை ஏற்படுத்த உதவும். இந்த பயிற்சி செய்யும் போது இடையில் சுவாசிக்க மறக்காதீர்கள்.

  • கர்ப்ப காலத்தில் நடைபயிற்சி போன்ற லேசான கார்டியோ பயிற்சிகள் எக்கச்சக்கமான பலன்களைக் கொண்டுள்ளன. பிரசவ வலியைத் தூண்டுவதற்கு நடைப்பயிற்சி உங்களுக்கு உதவலாம். இது கர்ப்பப்பை வாய் விரிவடைவதற்கும், குழந்தையை கீழ்நோக்கி இடுப்புப் பகுதிக்கு தள்ளவும் உதவுகிறது.

  • லுன்ஜஸ் (Lunges) பயிற்சியானது இடுப்புகளை நீட்சி அடைய செய்யவும், கர்பப்பை வாய் திறக்கவும் உதவுகின்றன. இதன் விளைவாக, குழந்தை சரியான பிறப்பு நிலைக்கு வருகிறது. லுன்ஜஸ் பயிற்சி செய்வதற்கு முதலில் நேராக நிற்கவும். பின்னர் ஒரு காலால் ஒரு பெரிய அடியை முன்னோக்கி எடுத்து வைக்கவும். முழங்கால் கணுக்கால் மேல் இருக்க வேண்டும். மற்ற கால் கீழ்நோக்கிய நிலையில் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். தொடக்க நிலைக்குத் திரும்பி, மற்ற காலைப் பயன்படுத்தி மறுபடியும் இதையே செய்யவும்.

இதையும் படிக்கலாமே! - கர்ப்பக்காலத்தில் ஏற்படும் வாயு மற்றும் வயிறு உப்பசத்தை எப்படி கையாள்வது ?

பிரசவ வலியைத் தூண்டும் பயிற்சிகளை யாரெல்லாம் செய்யக்கூடாது? (Who should not do exercises for inducing labor In Tamil)

குழந்தையை பிரசவிப்பதில் குறைந்த அல்லது எந்த ஒரு ஆபத்தும் இல்லாத கர்ப்பிணிப் பெண்களுக்கே வழக்கமான உடற்பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு, வலியுடன் கூடிய பிடிப்புகள், வயிற்று வலி, பனிக்குட நீர்க்கசிவு, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல், தசை பலவீனம், மார்பு வலி, கெண்டைக்காலில் வலி போன்றவற்றை அனுபவிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது.

பிரசவத்தைத் தூண்டும் உடற்பயிற்சிகளை செய்வதற்கு முன் உங்கள் மகப்பேறு நல மருத்துவரை அணுகவும். குழந்தையைப் பிரசவிப்பதில் அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிப் பெண்கள் இதனை நிச்சயமாக பின்பற்ற வேண்டாம்.

உண்மை மற்றும் பொய் பிரசவ வலிக்கு இடையே வித்தியாசங்கள் உள்ளன. உண்மையான பிரசவ வலி மற்றும் பொய் பிரசவ வலி ஆகிய இரண்டின் அறிகுறிகளைப் பற்றி தெரிந்துகொள்வது, அவர்களுக்கு ஏற்பட்டது உண்மையான பிரசவ வலி தானா இல்லையா என்பதை அறிய உதவும்.

TAGS :

labor pain in tamil, symptoms of labour pain in tamil, false labour meaning in tamil, sumptoms of false labor in tamil, Be aware: 3 signs of false labour In English, Be aware: 3 signs of false labour In Hindi, Be aware: 3 signs of false labour In Telugu, Be aware: 3 signs of false labour In Bengali

பிரசவத்திற்கு தயாராகும் அம்மாக்களால் நம்பப்படுபவை

பிரசவ காலத்தை அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ள, உங்கள் உடலை வலுப்படுத்தும் சரியான ஆதரவு உங்களுக்குத் தேவை.

Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g

Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g

Fades Stretch Marks | Improves Digestion | Reduces Stress

534 Moms bought
₹917₹129829% Off
Rating
4.9
(50)
Organic Aloe Vera (300 ml)

Organic Aloe Vera (300 ml)

Nurtures Skin & Hair | Reduces Suntan | Soothes Burns | Enhances Hair Resilience

4179 Moms bought
₹289₹32912% Off
Rating
4.4
(45)
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2016 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.