hamburgerIcon
login

VIEW PRODUCTS

ADDED TO CART SUCCESSFULLY GO TO CART

Article continues after adveritsment

Article continues after adveritsment

  • Home arrow
  • Diet & Nutrition arrow
  • கர்ப்ப காலத்தில் கரும்பு ஜூஸ்: தொடர்புடைய நன்மைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்| Sugarcane Juice in Pregnancy: Benefits and Precautions in Tamil) arrow

In this Article

    கர்ப்ப காலத்தில் கரும்பு ஜூஸ்: தொடர்புடைய நன்மைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்| Sugarcane Juice in Pregnancy: Benefits and Precautions in Tamil)

    Diet & Nutrition

    கர்ப்ப காலத்தில் கரும்பு ஜூஸ்: தொடர்புடைய நன்மைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்| Sugarcane Juice in Pregnancy: Benefits and Precautions in Tamil)

    14 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    Article continues after adveritsment

    கர்ப்பம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடிய அற்புதமான மற்றும் திரில்லான அனுபவங்களில் ஒன்றாகும். ஒன்பது மாதங்கள் இன்னொரு மனித உயிரை தனக்குள்ளே சுமந்து செல்வதை கற்பனை செய்து பார்ப்பது சற்று விசித்திரமாகத் தான் இருக்கும். ஒருவர் கருத்தரிக்கும் போதெல்லாம், குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் கிட்டத்தட்ட உடனடியாக தொடங்கிவிடுகிறது. ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் குழந்தை மீது தாய்க்கு உள்ள பொறுப்புகள் காரணமாக இது இயற்கையானது தான். இதனால் தான் கர்ப்ப காலத்தில் கரும்பு சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பதை அறிந்து கொள்வது முக்கியமானது என பல பெண்கள் கருதுகின்றனர்.

    கரும்பு என்பது சர்க்கரை தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளாகும், மக்கள் தினசரி உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களுடன் சர்க்கரையை எடுத்துக்கொள்கிறார்கள். கரும்பின் துணைப் பொருட்களில் வெல்லமும் ஒன்று, இது பெரும்பாலும் சர்க்கரைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. கரும்பு ஜூஸில் அதிக குளுக்கோஸ் இருப்பதால் அதனைக் குடிப்பது நல்லது தானா என்று நாம் கவலைக் கொள்வது உண்டு. இதை மனதில் கொண்டு, கர்ப்ப காலத்தில் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா இல்லையா என்பது இந்தப் பதிவு மூலமாக விளக்கப்பட்டுள்ளது.

    கரும்பு ஜூஸில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு (Nutritional value of sugarcane juice in Tamil)

    கரும்பு ஜூஸில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது அதன் ஆரோக்கிய நன்மைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. கரும்புச் சாற்றில் உள்ள ஊட்டச்சத்து உள்ளடக்கம் மற்றும் 100 மில்லிலிட்டரில் அவற்றின் செறிவு ஆகியவற்றை விவரிக்கும் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    ஊட்டச்சத்து பட்டியல்

    100 மில்லிலிட்டருக்கு செறிவு

    புரதம்

    0 கிராம்

    கொழுப்பு

    0 கிராம்

    கொலஸ்ட்ரால்

    0 மில்லிகிராம்

    கார்போஹைட்ரேட்டுகள்

    21.14 கிராம்

    சர்க்கரை உள்ளடக்கம்

    7.27 கிராம்

    சோடியம்

    44 மில்லிகிராம்

    பொட்டாசியம்

    12 மில்லிகிராம்

    கரும்புச் ஜூஸில் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் இல்லை என்பதால், இரத்தத்தில் ஒழுங்கற்ற கொழுப்புச் சத்துகள் உள்ள பெண்களுக்கு இது பாதுகாப்பானது. இது தவிர, ஒருவருக்கு அதிக யூரிக் அமிலம் அல்லது யூரியா இருந்தால், கர்ப்ப காலத்தில் கரும்புச் ஜூஸ் குடிப்பதால் எந்த பிரச்சனையும் இருக்காது, ஏனெனில் இதில் புரதச்சத்து இல்லை.

    கர்ப்ப காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பது பாதுகாப்பானதா? (Is sugarcane juice safe to consume during pregnancy in Tamil)

    அதிக அளவு கார்போஹைட்ரேட், சோடியம் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் கர்ப்ப காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பது பாதுகாப்பானது. இருப்பினும், ஒரு பெண்ணுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருந்தால், உணவியல் நிபுணர் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசிப்பது முக்கியம். ஏனெனில் பழச்சாற்றில் பல்வேறு வடிவங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது.

    கரும்பு ஜூஸ் கருச்சிதைவை ஏற்படுத்துமா? (Does sugarcane juice cause miscarriage in Tamil)

    "கரும்பு ஜூஸ் கருச்சிதைவை ஏற்படுத்துமா?" என்ற கேள்வியை பல பெண்கள் எழுப்புகின்றனர்.

    இல்லை என்பதே இதற்கான பதில். கரும்பு ஜூஸில் எண்ணற்ற கர்ப்பப் பலன்கள் காரணமாக இருந்தாலும் அல்லது எந்த நச்சுத்தன்மை இல்லாத காரணத்தினாலும், இந்த பழச்சாறு முதல் அல்லது இரண்டாவது டிரைமெஸ்டரில் எந்த கருச்சிதைவையும் ஏற்படுத்தாது. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் கரும்பு ஜூஸ் குடித்தாலும் அது அவர்களுக்கு அசௌகரியம் மற்றும் தொந்தரவையும் ஏற்படுத்தாது.

    இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் கஸ்டர்ட் ஆப்பிள் (சீதாப்பழம்): நன்மைகள் மற்றும் அபாயங்கள்(Custard apple during pregnancy: Benefits & risks In Tamil)

    கர்ப்ப காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of drinking sugarcane juice in pregnancy in tamil)

    1. மலச்சிக்கல் அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியை குணப்படுத்துகிறது (Eases constipation or irritable bowel syndrome)

    மலச்சிக்கல் அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியிலிருந்து விடுபடுவது கர்ப்ப காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முக்கியமான ஒன்றாகும். ஒழுங்கற்ற செரிமான முறைகள், பெருங்குடல் வழியாக நிகழும் முறையற்ற குடல் இயக்கம் மற்றும் பலவற்றால் கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் மலச்சிக்கலால் பாதிக்கப்படுகின்றனர். இது வீக்கம், இரைப்பை அழற்சி மற்றும் அடிக்கடி வாந்தியை ஏற்படுத்தும். தினமும் காலையில் கரும்பு ஜூஸ் குடிப்பது குடல் இயக்கத்தை எளிதாக்கவும், மலச்சிக்கலைப் போக்கவும் உதவும்.

    2. தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது ( Helps fight infections)

    பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், கர்ப்ப காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பது உடலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இதனால் பல வகையான நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது, குறிப்பாக சளி மற்றும் இருமலுக்கு எதிராக. கர்ப்ப காலத்தில் கரும்பு ஜூஸ் குடிக்கும் பெண்களுக்கு பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    3. பிலிவர்டின் மற்றும் பிலிரூபின் செறிவை சமநிலைப்படுத்துகிறது (Balances biliverdin and bilirubin concentration)

    கரும்பு ஜூஸ் இரத்தத்தில் பிலிரூபின் மற்றும் பிலிவர்டின் செறிவைக் குறைத்து கல்லீரல் மற்றும் பித்தப்பை சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்கிறது. பிலிரூபின் மற்றும் பிலிவர்டின் அதிக அளவு இருப்பது கர்ப்ப கால மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தை குறிக்கிறது. இது தாய் மற்றும் கருவுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால்தான் கர்ப்ப காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    4. இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துகிறது (Controls the blood pressure levels)

    கர்ப்ப காலத்தில் கரும்பு சாப்பிடுவது பாதுகாப்பானதா என யாராவது யோசித்தால், கவலைப்பட ஒன்றுமில்லை. கரும்பு ஜூஸில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் ஏற்ற இறக்கங்களைக் குறைக்கவும் உதவுகின்றன. இதன் விளைவாக, ஒட்டுமொத்த இதய ஆரோக்கியம் மேம்படுகிறது, இதனால் கர்ப்பம் காலம் ஆரோக்கியமாக இருக்கும்.

    கர்ப்ப காலத்தில் கரும்பு ஜூஸ் குடிக்கும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்(Precautions to take when drinking sugarcane juice in pregnancy in Tamil)

    • கரும்பு ஜூஸ் குடிப்பதால் கர்ப்ப காலத்தில் எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லை என்றாலும், சுகாதாரத்தை பேணுவது மிகவும் முக்கியம். எனவே, கர்ப்ப காலத்தில் சாலையோர கடைகளில் அல்லது கேன்களில் இருந்து கரும்பு ஜூஸ் குடிப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    • கரும்பு ஜூஸில் கார்போஹைட்ரேட் மற்றும் குளுக்கோஸ் அதிகம் இருப்பதால், கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் கரும்பு ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    • இரத்தத்தில் குளுக்கோஸ் செறிவு அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்க கரும்பு ஜூஸை ஒவ்வொரு நாளும் அல்லது மாற்று நாட்களில் மிதமாக குடிக்க வேண்டும்.

    முடிவுரை (Conclusion)

    கரும்பு ஜூஸில் உள்ள கர்ப்ப கால நன்மைகள் குறித்து இப்போது தெரிந்துகொண்ட நிலையில், கரும்பு ஜூஸ் குடிப்பதால் கர்ப்பம் அல்லது கருவின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படுமா என்பது பற்றி ஒருவர் கவலைப்பட வேண்டியதில்லை. நன்மைகள் நடைமுறைக்குரியவை என்றாலும், இதனை கர்ப்பகால உணவில் சேர்ப்பதற்கு முன்பு மகளிர் மருத்துவ நிபுணர் அல்லது மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

    References

    1. A Singh, U R Lal, et al.; (2015). Phytochemical profile of sugarcane and its potential health aspects; Pharmacognosy Review

    2. D McCaffrey; (2011). Raw Sugarcane Juice Nature’s Perfect Wonder Food; CDC

    3. Gestational Diabetes Mellitus; (2003). American Diabetes Association Diabetes Care

    Tags

    Sugarcane Juice During Pregnancy in Tamil, Nutritional Value of Sugarcane Juice in Tamil, Is Sugarcane Juice Safe During Pregnancy in Tamil, Benefits of Sugarcane Juice During Pregnancy in Tamil, Precautions of Sugarcane Juice During Pregnancy in Tamil, Sugarcane Juice in Pregnancy in English, Sugarcane Juice in Pregnancy in Hindi, Sugarcane Juice in Pregnancy in Telugu,⁠ Sugarcane Juice in Pregnancy in Bengali

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    Article continues after adveritsment

    Article continues after adveritsment

    Article continues after adveritsment

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Diet & Nutrition

    Diet & Nutrition

    கர்ப்ப காலத்தில் சீதாப்பழம்: நன்மைகள் மற்றும் அபாயங்கள் | Custard apple during pregnancy: Benefits & risks In Tamil)

    Image related to Diet & Nutrition

    Diet & Nutrition

    கர்ப்ப காலத்தில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு: நன்மைகள், அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் | Sweet Potato During Pregnancy in Tamil)

    Image related to Diet & Nutrition

    Diet & Nutrition

    கர்ப்ப காலத்தில் கேரட்: நன்மைகள் மற்றும் தீமைகள் | Carrot During Pregnancy: Benefits & Disadvantages in Tamil

    Image related to Conception

    Conception

    உடலுறவுக்குப் பிறகு எத்தனை நாட்களில் கருவுற்றத்தை சோதனை செய்யவேண்டும்? (After how many days of sex can you check for pregnancy In Tamil)

    Image related to Pregnancy Journey

    Pregnancy Journey

    கர்ப்பகால ஹார்மோன் - கோனாடோட்ரோபின் (எச்சிஜி), அதன் காரணங்கள் மற்றும் இயற்கையாக அதை எவ்வாறு அதிகரிப்பது?

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.