Baby Sleep Management
11 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
குழந்தைகள் இரவில் விழித்திருப்பது என்பது மிகவும் சாதாரணமானது தான். புதிதாகப் பிறந்த குழந்தைகள் இரவில் அழுவதற்கு பல்வேறு விதமான காரணங்கள் உள்ளன. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பசி. குழந்தைகள் பிறந்த முதல் சில வாரங்களில் மிக வேகமாக வளருவார்கள். மேலும், குழந்தையின் வயிறு மிகவும் சிறியதாக இருப்பதால், குழந்தைக்கு அடிக்கடி பாலூட்ட வேண்டியது மிகவும் முக்கியம்.
புதிதாகப் பிறந்த குழந்தைகள் இரவில் ஏன் அழுகிறார்கள், மேலும் அவர்களின் இந்த நிலையை எப்படிச் சரி செய்வது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்தக் கட்டுரை உதவுகிறது.
புதிதாகப் பிறந்த குழந்தை இரவில் அழுவதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கலாம். அவற்றை விளக்கமகப் பார்ப்போம்:
வழக்கமான அழுகை என்பது தங்கள் வழக்கமான அட்டவணையில் ஏதேனும் இடையூறு ஏற்படும் போது நிகழ்கிறது. பெரும்பாலும் அதிக ஆக்டிவாக இருந்து சேட்டைகள் செய்யும் குழந்தைகள் நாள் முடிவில் அமைதியில்லாமலும் மற்றும் வெறித்தனமாகவும் உணர்வார்கள். நாம் நாள் முழுவதும் உழைத்த களைப்பில் இரவில் தூங்கிவிடுவோம். ஆனால், குழந்தைகள் பெரியவர்கள் போல இல்லாமல், இரவு தூங்காமல் அழுவார்கள். அத்தகைய சமயங்களில், குழந்தையை துணியால் தலை மற்றும் கழுத்தை கவர் செய்யும் விதமாக கதகதப்பாக வைத்துக்கொள்ளுதல், அவர்களை அமைதிப்படுத்த உதவும். அதே போல், அவர்களை தள்ளுவண்டியில் நடைபயிற்சி செய்வது அல்லது காரில் ஒரு சிறு பயணத்திற்கு அழைத்துச் செல்வது பயனுள்ளதாக இருக்கும்.
பொதுவாக புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு முதல் 3 மாதங்களுக்கு ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் பாலூட்ட வேண்டும். ஆம், அவர்களுடையது வயிறு சிறியதாக இருப்பதால் அவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்கும். அவர்கள் தாய்ப்பாலை அல்லது ஃபார்முலா பாலை மட்டுமே குடிப்பதால், அது அவர்களுக்கு எளிதில் ஜீரணமாகிவிடும். எனவே, பசி எடுக்கும் போது அழுதால், குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது பாட்டில் பால் கொடுத்தாலே போதும், குழந்தை அமைதியாகிவிடும். சில நேரங்களில் ஃபார்முலா பாலைத் தயார் செய்ய நேரமானால், அப்பொழுது ரப்பர் நிப்பிளைக் கொடுக்கலாம். அது கூட குழந்தைகளை அமைதிப்படுத்த உதவும், மேலும் இது அவர்களுக்கு பாதுகாப்பான உணர்வைத் தருகிறது. மின்விசிறி அல்லது இயந்திரத்தின் ஒலி போன்ற வெண் இரைச்சலும் இதற்கு உதவும்.
பல தாய்மார்கள் குழந்தை போதுமான அளவிற்கு பால் குடிப்பது இல்லை என்பதால் தான் கதறி அழுவதற்கு காரணம் என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால், எப்போதுமே அவ்வாறு இருக்கும் என்று சொல்ல முடியாது. தாய்ப்பாலின் கலவையானது இரவில் மாறுபடும். தாய்மார்கள் பாலின் ஓட்டம் மெதுவாக இருப்பதாக உணர்வார்கள். பாலின் அளவு மாறுபடுவதால் குழந்தையானது நொய் நொய் என்று அழுதுகொண்டே இருக்கலாம்.
வாயுப்பிரச்சனை என்பது ஒரு தற்காலிக பிரச்சனையாகும். இதற்கு ஒரு பொதுவான காரணம் உள்ளது. இது பாலூட்டிய உடனேயே ஏற்படுவது வழக்கமாகும். இத்தகைய சமயத்தில் குழந்தையின் முகம் சிவப்பாக இருக்கலாம் அல்லது அழும் போது வலியில் இருப்பது போலத் தோன்றும். ஒரு மாதிரி நிம்மதியில்லாமல் இருப்பது மற்றும் அவர்களின் கால்களை மார்புக்கு மேலே இழுப்பது போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.
குழந்தையின் செரிமான அமைப்பு அதிக உணர்திறன் இருப்பதாலும், அது இப்போது வளர்ச்சியடைந்து கொண்டு வருவதாலும், பாலூட்டிய பிறகு குழந்தை சரியாக ஏப்பம் விடுவது முக்கியமாகும். குழந்தைக்கு பாலுட்டும்போது அவ்வப்போது இடைவெளி விட்டு பால் கொடுத்து, ஏப்பம் விட வைக்க வேண்டும். குழந்தை ஏப்பம் விட்ட பிறகு மீண்டும் பாலூட்டத் தொடங்கலாம். அதன் பின்பு மீண்டும் பாலூட்டலாம். ஏப்பம் விடுவதற்கு வெவ்வேறு நிலைகளைப் பின்பற்றுவது மிகவும் உதவியாக இருக்கும். எப்போதும் கீழே இருந்து தொடங்குவது உதவியாக இருக்கும்.
சற்று மேல்தூக்கிய நிலையில் குழந்தைக்கு பாலூட்டினால், குழந்தை காற்றை உள்ளே இழுப்பது தவிர்க்கப்படும். குழந்தைகள் படுத்துக்கொண்டிருக்கும் போது பாலூட்டினால் அவர்கள் அதிகமான காற்றை உள்ளே இழுப்பதற்கு வழிவகுக்கும். இதனால் அதிகமான வாயுப்பிரச்சனை ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்கு குழந்தையை சற்று மேலே தூக்கியவாறு பாலூட்டுவது நல்லது. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, காற்று மற்றும் திரவ ஓட்டத்தை சிறப்பாக கட்டுப்படுத்த உதவும் ரப்பர் நிப்பிள்களைப் பயன்படுத்துவது நல்லது.
குழந்தைகள் அதிகமாக அழும் வரைக்கும் காத்திருந்தால், அதன் மூலமாக கூட குழந்தைகள் அதிகமான காற்றை உள்ளே இழுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
குழந்தையின் வயிற்றை கடிகாரச் சுற்றின் திசையில் மென்மையாக மசாஜ் செய்யவும்.
கிரைப் வாட்டர் அல்லது கேஸ் டிராப்ஸ் போன்ற மருத்துவரின் பரிந்துரை இன்றி மருந்தககங்களில் வாங்கக் கூடிய மருந்துகளைப் பயன்படுத்தலாம்
அலர்ஜியுடன் தொடர்புடைய அழுகை: குழந்தைகள் ஊட்டச்சத்திற்கு தாயைச் சார்ந்து இருக்கிறார்கள். தாய் உண்ணும் உணவும் தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்குச் சென்று சேரும். சில நேரங்களில் தாய் உண்ட உணவு குழந்தைக்கு சேராமல் வயிற்றில் கோளாறு ஏற்படலாம். அவ்வாறு அடிக்கடி ஏற்பட்டால், அது குழந்தைக்கு பசும்பால், நட்ஸ், கோதுமை அல்லது இது போன்ற பிற உணவுகள் ஒத்துக் கொள்ளாமல் இருப்பது அல்லது அத்தகைய உணவுகளுக்கு அவர்கள் சென்சிடிவ் ஆக இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே, இதை தாய்மார்கள் கவனித்து அதற்கேற்ப நடக்க வேண்டும். குழந்தைக்கு ஒவ்வாமை அதிகமாக இருந்தால், இதைப் பற்றி குழந்தை மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது. நீங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால், ஒரு வார காலத்திற்கு ஏதேனும் ஒரு வகை உணவை (பால் அல்லது முட்டை) உட்கொள்வதை நிறுத்துமாறு மருத்துவர் உங்களிடம் அறிவுறுத்துவார். அதுவே குழந்தை ஃபார்முலா பாலை மட்டுமே குடித்தால், மருத்துவரிடம் கலந்தாலோசித்து நல்ல பிராண்டுகளுக்கு மாறுவது நல்லது.
இந்த வகையான அழுகையானது குழந்தைக்கு உணவு ஊட்டிய பிறகு காணப்படுகிறது. குழந்தைக்கு அவ்வப்போது இடைவெளிவிட்டு பாலூட்டி, அதன் பிறகு ஏப்பம் விடச் செய்தால், நெஞ்செரிச்சலில் இருந்து விடுபடலாம். அதே போல், குழந்தைக்கு படுத்துக்க கொண்டு பால் கொடுக்காமல் உட்கார்ந்து பாலூட்டினால் இதனைத் தடுக்கலாம். அதிகப்படியான காற்றை குழந்தை உள்ளே இழுப்பதைத் தடுப்பதற்கென்று பிரத்தேயகமான பாட்டில்கள் மற்றும் ரப்பர் நிப்பிள்கள் உள்ளன. இது உதவவில்லை என்றால், ரிஃப்ளக்ஸ் இதற்குக் காரணமாக இருக்கலாம். அதனால், உங்கள் குழந்தை மருத்துவரிடம் இது பற்றி பேசுங்கள். 80% நேரங்களில், லேசான ரிஃப்ளக்ஸ் இருக்கும் குழந்தைகளுக்கு சற்று கெட்டியான ஃபார்முலா பால் கொடுத்தால், அது சரியாகிவிடும்.
பொதுவாக குழந்தைகளில் நரம்பு மண்டலம் சரியாக வளர்ச்சி அடைந்திருக்காது. சத்தம், பிரகாசமான ஒளி மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு குழந்தைகள் மிகவும் சென்சிடிவ் ஆக இருப்பார்கள். எடுத்துக்காட்டாக, இருட்டான அறையில் இருக்கும் டிவியின் வெளிச்சம், அல்லது அதன் தனிப்பட்ட சத்தம் போன்றவை பிறந்த குழந்தையை இரவு நேரத்தில் அழ வைக்கலாம்.
குழந்தை பிறந்த முதல் மாதத்தில் குழந்தைக்கு குடல் வலி பொதுவாக இருக்கும். குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கும் மேலாக அழுவார்கள். இதனால் குழந்தையின் முகம் சிவந்து, வயிறானது வீங்கி விடுகிறது, மேலும் கால்கள் மார்பு நோக்கி வளைந்திருக்கும். இதற்கான காரணம் என்னவென்று இன்னும் புலப்படவில்லை. இருந்தாலும், இது 3-4 மாதங்களில் தானாகவே நின்றுவிடும்.
இதையும் படிக்கலாமே! - புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஏன் முணுமுணுக்கின்றனர்
புதிய பெற்றோர்களுக்கு, பிற்பகல் மற்றும் மாலை நேரம் நீண்டதாகவும் சோர்வாகவும் தோன்றலாம். அழுகை என்பது குழந்தை பிறக்கும்போதே உருவாகும் இயற்கையான, உள்ளார்ந்த அமைப்பாகும். வெவ்வேறு வகையான அழுகைகளை வேறுபடுத்தித் தெரிந்து கொள்வது ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகவும் முக்கியம். இதற்கு விஞ்ஞான ரீதியாக எந்தத் தீர்வும் இல்லை என்றாலும், குழந்தைகள் செளகரியமாக உணர்வதற்கு பெற்றோர்கள் செய்யக்கூடிய விஷயங்கள் பல உள்ளன.
பின்வரும் சில நேர்மறையான பழக்கங்களை பின்பற்றலாம் :
குழந்தையை சற்று மேல்நோக்கியவாறு வைத்து பாலூட்டுதல்.
குழந்தைகளை சரியாக ஏப்பம் விடச் செய்தல்
தாய்மார்கள் தாங்கள் உண்ணும் உணவு குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
வேறு ஏதாவது நடக்குமா என்று மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
இந்தக் கட்டமானது குழந்தைக்கு வெறுப்பாக இருப்பதைப் போல, பெற்றோருக்கும் வெறுப்பாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால், கவலை வேண்டாம், இந்தக் கட்டமும் கடந்து போகும்.
Yes
No
Written by
chandrikaiyer
chandrikaiyer
ஆரம்ப கால கர்ப்பத்தின் போது குதிப்பது கருச்சிதைவை ஏற்படுத்துமா?
கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் என்டி ஸ்கேன் - ஒரு விரிவான வழிகாட்டுதல்
உங்களுடைய குழந்தையை எளிதில் தூங்க வைப்பதற்கான டாப் 3 டிப்ஸ்
9 வார கர்ப்பத்தில் அல்ட்ராசவுண்ட் அறிக்கையில் என்ன எதிர்பார்க்கவேண்டும் மற்றும் அபாயம் தரும் அறிகுறிகள் யாவை?
10 வார கர்ப்பத்திற்கான டயட் சார்ட் பற்றி நீங்கள் அறிய வேண்டிய முக்கிய குறிப்புகள்
உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதைக் காட்டும் 8 எளிய அறிகுறிகள்
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Mylo is a master brand offering solutions through it's subsidiaries - Mylo Care and Mylo Baby.
Mylo Care offers science backed, expert led solutions across multiple health concerns.
Mylo Baby is a one stop solution for young parents for all their baby's needs.
Disposable Diapers | Cloth Diapers | Baby Wipes | Diapers & Wipes - Baby Care | Hair | Skin | Bath & Body | Diapers & Wipes - Baby Wellness | Diaper Rash | Mosquito Repellent | Anti-colic | Diapers & Wipes - Baby Gear | Carry Nest | Dry Sheets | Bathtub | Potty Seat | Carriers | Diaper Bags | Stroller – Lightweight & Compact | Baby Pillow |