hamburgerIcon
login
STORE

VIEW PRODUCTS

ADDED TO CART SUCCESSFULLY GO TO CART

Article Continues below advertisement

  • Home arrow
  • Conception arrow
  • கர்ப்பம் தரிக்க சிறந்த கருத்தரிப்பு மாத்திரைகள்(Best Fertility Pills To Get Pregnant In Tamil) arrow

In this Article

    கர்ப்பம் தரிக்க சிறந்த கருத்தரிப்பு மாத்திரைகள்(Best Fertility Pills To Get Pregnant In Tamil)

    Conception

    கர்ப்பம் தரிக்க சிறந்த கருத்தரிப்பு மாத்திரைகள்(Best Fertility Pills To Get Pregnant In Tamil)

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    Article Continues below advertisement

    இனப்பெருக்க மருத்துவம் என்றால் என்ன?(What is the Meaning of Reproductive Medicine? In Tamil)

    இனப்பெருக்க மருத்துவம் என்பது கருவுறுதிறன் பாதுகாப்பு, கண்டறிதல் மற்றும் குழந்தையின்மைக்கான சிகிச்சை ஆகியவற்றில் நிபுணத்துவம் உள்ள ஒரு மருத்துவத் துறையாகும். குழந்தையின்மை பிரச்சினைகளை சந்தித்து வரும் பெண்களுக்கு இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. கருத்தரிப்பு மருந்து என்பது குழந்தையின்மை சிகிச்சையின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். இன் விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் (வெளிச் சோதனை முறை கருக்கட்டல்) முறைக்கு உட்பட்டிருக்கும் நோயாளிகளுக்கும் கூட இது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மருந்துகள் வெவ்வேறு வடிவங்களிலும், தோற்றங்களிலும் கிடைக்கின்றன, அதாவது கருத்தரிப்பு மாத்திரைகள் மட்டுமின்றி கருத்தரிப்பு ஊசிகளும் கிடைக்கப்பெறும்.

    இனப்பெருக்க மருந்து என்ன செய்கிறது?(What Does Reproductive Medicine Do? In Tamil)

    கருத்தரிப்பு மருந்துகள் ஒரு பெண்ணின் கருப்பையிலிருந்து முட்டை வெளி வருவதை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்கள் சுரப்பதற்கு உதவுகின்றன. பல வகையான கருத்தரிப்பு ஊசிகளும், மருந்துகளும் குழந்தையின்மை சிகிச்சைக்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. அவை எஃப்எஸ்ஹெச் (ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன்/FSH) மற்றும் எல்ஹெச் (லுடினைசிங் ஹார்மோன்/LH) போன்ற இயற்கையான ஹார்மோன்களை போலவே செயல்படுகின்றன.

    க்ளோமிட் அல்லது செரோஃபின்(Clomid or Serophene )

    ஒரு பெண்ணிற்கு இயல்பான முறையில் முட்டை வெளியீடு நிகழாத பட்சத்தில் க்ளோமிஃபின் சிட்ரேட் (க்ளோமிட்) பரிந்துரைக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட 40 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் இது ஈஸ்ட்ரோஜெனை தடுக்கும் மருந்தாக அறியப்படுகிறது. இவை மூளையில் அமைந்துள்ள பிட்யூட்டரி மற்றும் ஹைப்போதாலமஸ் சுரப்பிகளை தூண்டுவதன் மூலம் குறிப்பிட்ட ஹார்மோன்கள் சுரப்பதற்கு உதவி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் முட்டைகளை உருவாக்குவதற்கு கருப்பைகளை தூண்டும், அவை பின்வருமாறு:

    • ஜிஎன்ஆர்ஹெச்/GnRH (கொனாடோட்ரோபின்-ரிலீசிங் ஹார்மோன்).

    • எஃப்எஸ்ஹெச்/FSH (ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன்).

      Article continues below advertisment

    • எல்ஹெச்/LH (லுடினைசிங் ஹார்மோன்).

    எவ்வாறு இதனை பயன்படுத்துவது(How You Use It )

    முதல் க்ளோமிஃபின் மருந்தளவு ஐந்து நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 50 மி.கி எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக முதல் மாத்திரை மாதவிடாய் தொடங்கிய மூன்றாவது, நான்காவது அல்லது ஐந்தாவது நாளில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கடைசி டோஸ் எடுத்துக் கொண்ட ஒரு வாரத்திற்கு பிறகு முட்டை வெளியீடு (ஓவுலேஷன்) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை அதற்குள் நடைபெறவில்லையென்றால், மருந்தளவினை ஒரு நாளைக்கு 50 மி.கி வீதம், 150 மி.கி வரைக்கும், ஒவ்வொரு மாதமும் அதிகப்படுத்துவதற்கு மருத்துவர் பரிந்துரைப்பார்.

    எவ்வாறு இது செயல்படுகிறது(How Well it Works )

    க்ளோமிஃபின் எடுத்துக் கொள்கிற பெண்களுக்கு அண்டவிடுப்பின் (ஓவுலேஷன்) வெற்றி விகிதம் 60% முதல் 80% ஆகும். அவர்களில் ஏறக்குறைய பாதி பேர் கர்ப்பமாவதற்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலான கர்ப்ப தரிப்பு மூன்று சுழற்சிகளில் நடைபெறும்.

    பக்க விளைவுகள்(Side Effects )

    க்ளோமிட் அல்லது செரோஃபினின் பக்க விளைவுகள் குறைவு. மேல் உடலில் திடீரென தோன்றும் வெப்ப உணர்வு, மங்கலான பார்வை, குமட்டல், உப்பிசம் மற்றும் தலைவலி போன்றவை தோன்ற கூடும். கூடுதலாக, கருப்பை வாய் கோளையில் க்ளோமிட் மாற்றங்களை ஏற்படுத்தி, பல முறை கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தும் வாய்ப்புள்ளது.

    உட்செலுத்தப்படும் ஹார்மோன்கள்(Injected Hormones )

    க்ளோமிட் செயல்படவில்லையென்றால் மருத்துவர்கள் ஹார்மோன்களை உட்செலுத்துவதற்கு பரிந்துரை செய்வார்கள். உட்செலுத்தப்படும் ஹார்மோன்களில் சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    Article continues below advertisment

    • ஹெச்சிஜி/hCG.

    • எஃப்எஸ்ஹெச்/FSH.

    • ஹெச்எம்ஜி/hMG.

    • ஜிஎன்ஆர்ஹெச்/GnRH.

    • ஜிஎன்ஆர்ஹெச் அகோனிஸ்ட்/GnRH agonist.

      Article continues below advertisment

    • ஜிஎன்ஆர்ஹெச் ஆன்டகோனிஸ்ட்/GnRH antagonist.

    ஆன்ட்டகான் (கேனிரெலிக்ஸ் அசிடேட்)(Antagon (Ganirelix Acetate) )

    ஆன்ட்டகான் (கேனிரெலிக்ஸ் அசிடேட்) என்பது குழந்தையின்மை நடைமுறைகளுக்கு உட்படுகின்ற பெண்களுக்கு ஏற்படும் முன்கூட்டிய முட்டை வெளியீட்டினை தடுப்பதற்கு உதவும் ஊசியால் செலுத்தப்படும் மருந்தாகும்.

    எவ்வாறு இதனை பயன்படுத்துவது(How You Use It )

    250 மைக்ரோகிராம்/0.5 மி.லி ஆன்ட்டகான் சுழற்சியின் இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் செலுத்தப்படுகிறது, அதாவது ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோனை (எஃப்எஸ்ஹெச்/FSH) தூண்டிய பிறகு சுழற்சியின் நடு-முதல்-பிந்திய காலகட்டத்தில் செலுத்தப்படும்.

    எவ்வாறு இது செயல்படுகிறது?(How Well it Works )

    கருவுறுதல் விகிதம் 62.4% முதல் 61.9% வரை இருக்கும். இம்ப்ளான்டேஷன் விகிதம் 21.1% முதல் 26.1% வரை கணக்கிடப்பட்டிருக்கிறது. மறுபுறம், கர்ப்பமாகும் விகிதம் 30.8% முதல் 38.4% வரை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    பக்க விளைவுகள்(Side Effects)

    ஆன்ட்டகானின் (கேனிரெலிக்ஸ் அசிடேட்) பொதுவான பக்க விளைவுகள் வயிறு வலி, தலைவலி, மற்றும் கருக்கலைதல் போன்றவை ஆகும்.

    Article continues below advertisment

    உட்செலுத்தப்படும் ஹார்மோன்கள்(Injected Hormones )

    இவை ஐவிஎஃப் சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் உட்செலுத்தப்படும் மருந்துகளாகும். இந்த சிகிச்சையில், ஒற்றை ஊசி டோஸ் மட்டுமே கொடுக்கப்படலாம், பல நாட்களுக்கு தொடர்ச்சியான அல்லது தினசரி ஊசிகள் அல்லது சில நாட்கள் இடைவெளியில் ஊசிகள் செலுத்தப்படலாம். இது குறிப்பிட்ட சிகிச்சை திட்டத்தை பொறுத்தது.

    டோஸ்டினெக்ஸ் (கேபர்கோலின்) மற்றும் பார்லோடெல் (ப்ரோமோக்ரிப்டின்)(Dostinex (Cabergoline) and Parlodel (Bromocriptine) )

    பிட்யூட்டரி கட்டிகள் எப்போதுமே முட்டை வெளியீட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். டோஸ்டினெக்ஸ் (கேபர்கோலின்) மற்றும் பார்லோடெல் (ப்ரோமோக்ரிப்டின்) மருந்துகள்:

    • பிட்யூட்டரி கட்டிகளின் அளவை குறைப்பதற்கு உதவும்.

    • சில ஹார்மோன்களின் அளவுகளை குறைப்பதற்கு உதவும்.

    ப்ரோமோகிரிப்டின் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மேலும் அவை பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தும் அபாயம் குறைவாக உள்ளது. மறுபுறம், ப்ரோமோக்ரிப்டினை போன்று எந்தவொரு பதிவு செய்யப்பட்ட வரலாறும் இல்லாத ஒரு புதிய மருந்து தான் கேபர்கோலின். இது பொதுவாகவே ப்ரோமோக்ரிப்டினால் பக்க விளைவுகளை சந்தித்த நபர்களுக்கு அல்லது ப்ரோமோக்ரிப்டின் சரியாக செயல்படாத நபர்களுக்கு உட்செலுத்தப்படுகிறது.

    Article continues below advertisment

    எவ்வாறு இதனை பயன்படுத்துவது(How You Use It )

    டோஸ்டினெக்ஸ் (கேபர்கோலின்) மற்றும் பார்லோடெல் (ப்ரோமோக்ரிப்டின்) மருந்துகள் வாய்வழியாக சிறிய டோஸ்களில் கொடுக்கப்படுகிறது. இந்த அளவினை சில நோயாளிகளுக்கு அதிகப்படுத்தலாம். மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இதனை செய்ய வேண்டும். ஆரம்ப மருந்தளவு வாரம் இரு முறை 0.25 மி.கி ஆகும். பெண்ணுறுப்பு வழியாகவும் கூட ப்ரோமோக்ரிப்டின்-ஐ எடுத்துக் கொள்ளலாம்.

    எவ்வாறு இது செயல்படுகிறது(How Well it Works)

    இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளும் சுமார் 85% பெண்கள் முட்டை வெளியீடு நடைபெறுவதை தெரிவித்திருக்கிறார்கள். இந்த 85% பெண்களில், 70% முதல் 80% பெண்கள் கருத்தரிக்கிறார்கள்.

    பக்க விளைவுகள்(Side Effects)

    தலைசுற்றல், வயிற்றுக் கோளாறு போன்றவை பொதுவாக தோன்றும் பக்க விளைவுகள். பிற பக்க விளைவுகள் குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி போன்றவை ஆகும். எனினும், டோஸ்டினெக்ஸ் மற்றும் பார்லோடெல் மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள் ஆரம்பத்தில் கடுமையாக இருக்கும், பின்னர் உடல் மருந்துகளுக்கு பழகிய பிறகு கொஞ்ச கொஞ்சமாக குறைந்து விடும்.

    இதையும் படிக்கலாமே! - பேறு காலத்தில் புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள், அபாயங்கள் மற்றும் பல

    உட்செலுத்தப்படும் ஹார்மோன்கள்(Injected Hormones )

    சில பெண்கள் சராசரியான ப்ரோலேக்டின் அளவு இருந்தும் கூட முட்டை வெளியிடுவதில்லை. இது போன்ற பெண்களுக்கு, க்ளோமிஃபின் சிட்ரேட் அல்லது கொனாடோட்ரோபின் போன்ற கருவுறுதிறன் மருந்துகள், உங்கள் மருந்துகளோடு சேர்க்கப்படுகின்றன.

    Article continues below advertisment

    Potenmax Testosterone Booster Capsules - 60 Capsules

    Improves Egg Health & Folate Levels |Improves Reproductive Health & Hormonal Balance

    ₹ 524

    4.0

    (30)

    830 Users bought

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.