கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்
hamburgerIcon

Search

Orders

login

Profile

STORE
Skin CareHair CarePreg & MomsBaby CareDiapersMoreGet Mylo App

Get MYLO APP

Install Mylo app Now and unlock new features

💰 Extra 20% OFF on 1st purchase

🥗 Get Diet Chart for your little one

📈 Track your baby’s growth

👩‍⚕️ Get daily tips

OR

Cloth Diapers

Diaper Pants

This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART

Article Continues below advertisement

  • Home arrow
  • Pregnancy Journey arrow
  • கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள் (Home Remedies To Control High Blood Pressure In Pregnancy In Tamil) arrow

In this Article

  • கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் 10 வீட்டு வைத்தியங்கள் (10 Home Remedies To Control High Blood Pressure In Pregnancy In Tamil)
  • 1. உப்பை/சோடியம் உட்கொள்தலை கட்டுப்படுத்துதல் (Control Salt/Sodium Intake)
  • 2. உடற்பயிற்சி (Exercise)
  • 3. மனஅழுத்ததை தவிர்த்தல் (De-stress Yourself)
  • 4. ஆரோக்கியமான உணவு (Healthy Diet)
  • 5. மெக்னீசியம் (Magnesium)
  • 6. மது அருந்துதலை குறைத்தல் (Limit The Intake Of Alcohol)
  • 7. புகைப்பழக்கத்தை நிறுத்துதல் (Quit Smoking)
  • 8. காஃபின் உட்கொள்ளலை குறைத்தல் (Reduce The Consumption Of Caffeine)
  • 9. கூடுதல் எடையை குறைத்தல் (Lose The Extra Pounds)
  • 10. தொடர்ந்து உங்கள் இரத்த அழுத்தத்தை கண்காணியுங்கள் (Keep Monitoring Your Blood Pressure)
  • முடிவுரை (Conclusion)
  • References
கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள் (Home Remedies To Control High Blood Pressure In Pregnancy In Tamil)

Pregnancy Journey

views icons1201

கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள் (Home Remedies To Control High Blood Pressure In Pregnancy In Tamil)

5 March 2024 அன்று புதுப்பிக்கப்பட்டது

கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் என்பது எந்த ஒரு பெண்ணும் விரும்பாத சூழ்நிலை அல்லது நிலை என்று கூறலாம். ஒவ்வொரு பெண்ணும் அவள் வயிற்றில் வளரும் உயிரை நினைக்கும் போதும், ஒன்பது மாதம் முழுவதும் அதை பேணி காத்திட வேண்டும் என்று எண்ணும் போதும் எந்த வித பிரச்சனையுமில்லாத, அமைதியான கர்ப்ப காலத்தை கடக்கவே விரும்புவாள். கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால் அது பெண்களுக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் ஹைப்பர் டென்ஷன் என்றும் அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்தத்திற்கு அலோபதி மருந்துகளை விட, இயற்கை வைத்தியம் அதிக நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்க முடியும். ஏனெனில் அலோபதி மருந்துகளில் நமக்கு என்னவென்று கூட தெரியாத இரசாயனங்கள் இருக்கின்றன. இருப்பினும், கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெற நீங்கள் எந்த வகையான மருந்தைத் தேர்வுசெய்தாலும், நீங்கள் முழுமையான ஆராய்ந்து அதை உட்கொள்வது அவசியம். இன்று, கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள் பற்றி விவாதிப்போம் வாங்க. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சிறந்த வழி வீட்டு வைத்தியம் என்று கூறலாம், ஏனெனில் என்னவென்றே தெரியாத இரசாயனங்களுக்கு பதில், நீங்கள் ராணியாக இருக்கும் உங்கள் சமையலறைலிருந்து நீங்கள் என்ன எடுத்துக்கொள்ள போகிறீர்கள் என்ற தெரிந்த ஒன்றையே பயன்படுத்தப்போகிறோம்.

கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் 10 வீட்டு வைத்தியங்கள் (10 Home Remedies To Control High Blood Pressure In Pregnancy In Tamil)

கர்ப்பக்காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான இயற்கை வழிகளைத் தேடுகையில், நாம் கண்டிப்பாக அதற்கான முழு ஆராய்ச்சியையும் செய்தல் வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி, எந்த வித சிகிச்சையும் நீங்களாக செய்துக்கொள்ள கூடாது. ஏனெனில் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான பல இயற்கை வைத்தியங்கள் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், சாதாரண பெண்ணிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்ததாகவும் இருக்கலாம். இந்த இயற்கை வைத்தியங்களை நீங்கள் உங்கள் மருத்துவரிடம் கூறி, அது உங்கள் உடலுக்கு நன்மை மட்டுமே பயக்கக்கூடியது என்பதை நன்கு அறிந்தப்பிறகே உபயோகிப்பது அவசியம். எங்களது பரிந்துரை என்னவெனில் வீட்டு வைத்தியத்தை பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் மாற்றீடாக அல்லாமல் அதனுடன் சேர்த்து உபயோகிப்பதே.

Article continues below advertisment

1. உப்பை/சோடியம் உட்கொள்தலை கட்டுப்படுத்துதல் (Control Salt/Sodium Intake)

நீங்கள் உப்பு சேர்க்காத உணவை உட்கொள்வதினால், உங்களால் உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையாகவே கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் முடியும். கர்ப்ப காலத்தில், உங்கள் ஹார்மோன்கள் ஓரு கட்டத்தில் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சமரசம் செய்ய தூண்டும், இல்லையெனில் உங்கள் உடலை அதன் இயல்பான செயல்களைச் செய்வதற்கான திறனை பாதிக்கும். இதனால், உப்பு மற்றும் உப்பு உணவுகள் உடலுக்குள் சென்று செரிமானமாக மிகவும் கடினமாக இருக்கும். ஒருவேளை உப்பு சரியாக செரிமானமாகவில்லை என்றாலோ அல்லது அதை அதிகமாக உட்கொண்டாலோ அது உயர் இரத்த நிலையை விளைவிக்கும். அதுமட்டுமின்றி, உப்பை குறைப்பது உங்கள் உடலின் ஆற்றல் அளவுகளுக்கும், நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும். உங்கள் மருத்துவர் குறிப்பாக பரிந்துரைத்தால் மட்டுமே உப்ப உட்கொள்ளலை குறைத்தல் நல்லது என்பது எங்கள் அறிவுரை. குறைந்த அளவு உப்பு உட்கொளல் உங்கள் ஆரோக்கியத்துக்கு பல இயற்கை தாதுக்களை வழங்கி நன்மை பயக்கும்.

2. உடற்பயிற்சி (Exercise)

உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருத்தல் என்பது கர்ப்பக்காலத்தில் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுவது மட்டுமின்றி ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பரமாரிக்கவும் சிறந்தது. அதற்காக, நீங்கள் கர்ப்பக்காலத்தில் கடினமான உடற்பயிற்ச்சிகள் செய்யவேண்டுமென்ற அவசியம் இல்லை. உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெற ஒருநாளைக்கு நீங்கள் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யலாம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது என்பது உங்கள் தசைகளை தளர்த்தி, உங்கள் உடம்பை மெருகேற்றி, இரத்த ஓட்டத்தை சீராக்கும். கர்ப்பக்காலத்தில் உடற்பயிற்சி செய்தல் என்பது சுகப்பிரசவத்திற்கும், மகப்பேறு வலியை பொருத்துக்கொள்ளவதற்கும் பெரும் உதவியாக இருக்கும்.

3. மனஅழுத்ததை தவிர்த்தல் (De-stress Yourself)

கர்ப்பக்காலம் என்பது ரோலர் கோஸ்டர் போன்ற பலவிதமான உணர்ச்சிகளை கொண்டது. நீங்கள் மகிழ்ச்சி, வருத்தம், கோபம் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றை அதிகமாகவும் அதற்குமேலும் கூட உணரலாம். மனஅழுத்தம், கவலை, மனசோர்வு ஆகிவை கர்ப்பக்காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். அத்தகைய நேரங்களில் நீங்கள் உங்கள் மனஅழுத்தத்திலிருந்து ஓய்வுபெறுவது அவசியம். அதாவது உங்கள் மனதை அமைதிப்படுத்தி நீங்கள் ஓய்வெடுக்க உதவும் பலவிதமான செயல்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஒருநாளைக்கு குறைந்தது 3 முறையாவது 30 நிமிடங்கள் மென்மையான பாடல்களை கேட்கவேண்டும். நீங்கள் ஜாஸ், கிளாசிக்கல் மியூசிக், சுஃபி மியூசிக் போன்றவற்றை கேட்டு மனஅமைதியை பெறலாம். அதுமட்டுமின்றி நீங்கள் கர்ப்பக்கால பெண்களுக்கான யோகா மற்றும் தியானம் போன்றவற்றிலும் ஈடுபடலாம், இது உங்கள் கர்ப்பக்காலங்களில் மனநிம்மதியையும், உடல் ஆரோக்கியத்தையும் தருகிறது.

4. ஆரோக்கியமான உணவு (Healthy Diet)

ஆரோக்கியமான உணவு கர்ப்பக்காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். உங்கள் உணவில் குறைந்த கொழுப்புடைய பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் வகைகள் நிறைந்திருத்தல் அவசியம். இத்தகைய டையட் உங்கள் உயர் இரத்த அழுத்தத்தை 11mm Hg ஆக குறைக்கும்! இந்த டையட் பிளானை உணவு பழக்கம் மூலம் இரத்த அழுத்த நிறுத்தம் (DASH-டாஷ்) என்றும் குறிப்பிடலாம்.

உங்கள் உணவு பழக்கத்தை உடனடியாக மாற்றுதல் என்பது கடினம் அதிலும் குறிப்பாக நீங்கள் ஆரோக்கியம் என கருதப்படாத உணவுகளுக்கு அடிமையானவராக இருந்தால் கண்டிப்பாக இதுவரை நீங்கள் கண்டிறாத பெரிய சவாலாக இருக்கும்:

Article continues below advertisment

  • உணவு ஜர்னலை உருவாக்கி, பால் முதல் ஜங்க் உணவு வரை நீங்கள் உட்கொள்ளும் எல்லா உணவு வகைகளையும் குறித்துக் கொள்ளுங்கள். அன்று இரவு அதை பாருங்கள், நீங்கள் ஒருநாளில் காலை முதல் இரவு வரை என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு அளவு எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பதை தொடர்ந்து கண்காணிபப்பதே உங்கள் முக்கிய நோக்கமாக கருதுங்கள்.
  • அதிக அளவு பொட்டாசியம் எடுத்துக்கொள்வது நல்லது, ஏனெனில் பொட்டாசியத்திற்கு உங்கள் இரத்த அழுத்தத்தில் இருக்கும் சோடியம் / உப்பின் விளைவுகளை முறியடிக்கும் திறன் இருக்கிறது. பொட்டாசியம் மாத்திரைகளை தவிர்த்து, அது நிறைந்திருக்கும் ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள்.
  • உணவு லேபிள்களை படிக்க தவறாதீர்கள். இது உங்கள் உணவில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள உதவும்.

5. மெக்னீசியம் (Magnesium)

2011 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின்படி, ஜர்னல் ஆஃப் தி இந்தியன் மெடிக்கல் அசோசியேஷனில், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க மெக்னீசியம் உதவுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பெரும்பாலான மருத்துவர்கள் இப்போது கர்ப்பிணி பெண்களை டோபு, அவகேடோ, நட்ஸ் மற்றும் சோயா பால் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றனர். மெக்னீசியம் ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை ஊக்குவிக்க உதவுகிறது, அதே நேரத்தில் கர்ப்பக்காலத்தில் கருப்பை முன்கூட்டியே சுருங்குவதையும் தடுக்கிறது.

6. மது அருந்துதலை குறைத்தல் (Limit The Intake Of Alcohol)

மது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மையும் பயக்கும் கேடும் விளைவிக்கும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் பெண்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை 4 mm Hg குடிப்பதன் மூலமும் ஆண்கள் அதே அளவு இரண்டு முறை குடிப்பதன் மூலமும் உங்கள் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முறை என்றால் ஒரு முறைக்கு 1.5 அவுன்ஸ் 80-ப்ரூப் இருக்கும் மது, ஐந்து அவுன்ஸ் சிறந்த பழைய ஒயின் மற்றும் அவரவருக்கு பிடித்த பன்னிரண்டு அவுன்ஸ் பீர் குடிப்பதற்கு சமம் என எளிமையாக சொல்லலாம்!

நீங்கள் மிகவும் சந்தசமடைவதற்கு முன் ஒரு குறிப்பு, கொடுக்கப்பட்ட அளவை சிறிதும் நீங்கள் மீறினாலும் மது உங்களுக்கு வழங்கும் இந்த கவசம் சிதைந்துவிடும் என்பதை கூறவும் கடமைப்பட்டிருக்கிறோம். ஒருவேளை நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட மது அளவை விட அதிகமாக குடித்தால், அது உங்கள் இரத்த அழுத்தத்தின் அளவு கற்பனை செய்யமுடியாத அளவிற்கு அதிகரிப்பது மட்டுமின்றி நீங்கள் இரத்த அழுத்தத்திற்கு எடுத்துக்கொண்ட மருந்துகளினால் எந்தவித பயனும் இருக்காது.

7. புகைப்பழக்கத்தை நிறுத்துதல் (Quit Smoking)

உங்கள் இரத்த அழுத்தம் திடீரென அதிகரிப்பதை நீங்கள் அறிய வேண்டுமெனில், நீங்கள் சிகரெட்டைப் புகைக்கும் போது அதைக் கவனிக்கலாம். நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தினால், உங்கள் இரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை அடியோடு மறப்பது என்பது நீங்கள் எந்தவித இதய நோய்களுக்கு ஆளாகாமல் இருக்கவும், உங்கள் மொத்த உடல்நிலை மேம்படுதலுக்கும் வழிவகுக்கும்.

8. காஃபின் உட்கொள்ளலை குறைத்தல் (Reduce The Consumption Of Caffeine)

கர்ப்பக்காலத்தில் உயர் இரத்த அழுத்தத்திற்கு காஃபின் உட்கொள்ளலும் ஒரு காரணம். எனவே, ஒரு நாளைக்கு ஒரு கப் காபி அருந்தலாம் அல்லது முடிந்தால் அதை முழுமையாக விட்டு விடுவதால் சாலச்சிறந்தது.

Article continues below advertisment

9. கூடுதல் எடையை குறைத்தல் (Lose The Extra Pounds)

  • நீங்கள் எடை அதிகரிக்கும் போது, உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். மேலும், அதிக எடை என்பது தூக்கத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம், அது உங்கள் இரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும்.

  • அதிக எடை அல்லது உடல் பருமன் இருந்தால் சிறிய அளவு எடையைக் குறைத்தாலும் கூட உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும். பொதுவாக ஒரு கிலோ (தோராயமாக 2.2 பவுண்டுகள்) எடையை குறைப்பதன் மூலம் உங்கள் இரத்த அழுத்தம் மெர்குரியின் ஒரு மில்லமீட்டருக்கு குறையும் என நம்பப்படுகிறது(mm Hg).

  • உடல் எடையை குறைத்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக உங்கள் இடுப்புப் பகுதியின் அளவு மேல் ஒரு கண் வைப்பதும் அவசியம். ஏனெனில், உங்கள் இடுப்பைச் சுற்றி அதிக எடையைச் சுமப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்.

10. தொடர்ந்து உங்கள் இரத்த அழுத்தத்தை கண்காணியுங்கள் (Keep Monitoring Your Blood Pressure)

உங்கள் வாழ்க்கை முறை மாற்றங்கள் பயனுள்ளதாக இருப்பதை உறுதிசெய்ய உங்கள் இரத்த அழுத்தத்தை நீங்கள் வீட்டிலேயே கண்காணிக்கலாம். உங்கள் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து பரிசோதித்து, நீங்கள் உங்கள் மருத்துவருக்கு தெரிவித்து ஏதேனும் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறதா என்பதையும் அறிந்துக்கொள்ளலாம். இரத்த அழுத்த மானிட்டர்கள் மிக சாதாரணமாக கிடைக்கின்றன, மேலும் அவற்றிற்கு மருந்து சீட்டு தேவையில்லை. நீங்கள் இதை தொடங்குவதற்கு முன், வீட்டில் கண்காணிப்பதற்கான சாத்தியக்கூறுகளை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பதும் சிறந்தது.

உங்கள் கர்ப்ப காலத்தில் சாதாரண இரத்த அழுத்தத்தை பராமரிக்க வேண்டுமெனில், நீங்கள் உங்கள் மருத்துவரை ஒருமுறைக்கூட தவறாமல் சந்திப்பது அவசியமாகும். உங்கள் இரத்த அழுத்தம் எவ்வளவு நன்றாக கட்டுப்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து, நீங்கள் அதை எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை அதை சரிபார்க்க வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகலாம். உங்கள் மருத்துவர் அதை தினமுமோ அல்லது அவ்வப்போதோ பரிசோதிக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்துவார். உங்கள் மருந்துகள் அல்லது பிற சிகிச்சைகளில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், அது செய்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு தொடங்கி, உங்கள் அடுத்த பரிசோதனைக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்புவரை, ஒரு வாரத்திற்குத் தொடர்ந்து உங்கள் இரத்த அழுத்தத்தை கண்காணிக்குமாரு மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

Article continues below advertisment

இதையும் படிக்கலாமே! - மார்பக சுய பரிசோதனை

முடிவுரை (Conclusion)

முளையிலேயே கிள்ளி எறிவது போல, ஆரம்பத்திலிருந்தே உடல் பிரச்சனையை கட்டுப்படுத்துவது என்பது நன்று. கர்ப்ப காலத்தில் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஆரம்பநிலையில் இருந்தாலும், கர்ப்ப காலத்தில் உங்கள் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் எல்லா அறிவுரைகளையும் பின்பற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் இது இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல்(ப்ரீக்ளாம்ப்சியா) மற்றும் க்ளாம்ப்சியா போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் (ப்ரீக்ளாம்ப்சியா) என்பது கர்ப்பத்தரித்து 20 வாரங்களுக்குப் பிறகு ஏற்படலாம் அல்லது பிரசவமாகி 48 மணி நேரத்திற்குப் பிறகும் கண்டறியப்படலாம். கர்ப்ப காலத்தில் இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல்(ப்ரீக்ளாம்ப்சியா) என்பது ஒரு கர்ப்பிணிக்கு வாழ்வா சாவா என்ற சூழ்நிலையை ஏற்படுத்திவிடும், மேலும் இது தாய் மற்றும் சேய் இருவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த காரணிகளில் ஏதேனும் ஒன்று உங்கள் உடல்நலத்தில் பாதிப்பேற்படுத்தாமல் இருக்கு நீங்கள் மன ஆரோக்கியத்தையும் உங்கள் ஆரோக்கியத்தையும் பேணி போற்றுவது மிக அவசியம்.

References

1. National Library of Medicine. High Blood Pressure in Pregnancy. www.medlineplus.gov

2. CDC. (2021). High Blood Pressure During Pregnancy. www.cdc.gov

Tags

Article continues below advertisment

What is high blood pressure in pregnancy in Tamil, What are the symptoms of high blood pressure in pregnancy in Tamil, Treatment of high blood pressure in pregnancy in Tamil, Home remedies of high blood pressure in pregnnacy in Tamil, Home Remedies to Control High Blood Pressure in Pregnancy in English, Home Remedies to Control High Blood Pressure in Pregnancy in Kannada

Is this helpful?

thumbs_upYes

thumb_downNo

Written by

Kakarla Sirisha

Get baby's diet chart, and growth tips

Download Mylo today!
Download Mylo App

RECENTLY PUBLISHED ARTICLES

our most recent articles

Image related to Conception

Conception

பெண் கருவுறுதல் மற்றும் ஆண் கருவுறாமைக்கான அஸ்வாகந்தா நன்மைகள்: இந்த பண்டைய மூலிகை உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் I Ashwagandha Benefits for Female Fertility & Male Fertility in Tamil

(225 Views)

Image related to Women Specific Issues

Women Specific Issues

சாஸ்ட்பெர்ரி நன்மைகள்: கருவுறுதல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் பி.எம்.எஸ்(PMS)ஆகியவற்றிற்கு உங்களுக்கு தேவையான இயற்கை தீர்வு I Chasteberry Benefits: The Natural Remedy in Tamil

(743 Views)

Image related to Diabetes during Pregnancy

Diabetes during Pregnancy

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கர்ப்பகால மெல்லிடஸ் நீரிழிவு நோய் | Gestational Diabetes Mellitus during Pregnancy in Tamil

(280 Views)

Image related to Pregnancy Journey

Pregnancy Journey

நஞ்சுக்கொடி இறக்கத்திற்கான வழிகாட்டி: அறிகுறிகள் மற்றும் சிகிச்சை | A Guide to Low Lying Placenta: Symptoms and Treatment in Tamil

(909 Views)

Image related to Conception

Conception

கர்ப்பத்தைப் பெறுவதற்கான முதல் 10 செக்ஸ் நிலைகள்: தம்பதிகளுக்கு குழந்தை பெறுவதற்கான இறுதி வழிகாட்டி I Top 10 Sex Positions to Get Pregnant in Tamil

(7,960 Views)

Image related to Male Infertility

Male Infertility

நீங்கள் ஒருபோதும் தவிர்க்கக் கூடாத குறைந்த விந்தணு எண்ணிக்கை அறிகுறிகள் | Low Sperm Count Signs You Should Never Ignore in Tamil

(600 Views)

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo

At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.