This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

உங்கள் முதலாளிக்கு நீங்கள் கர்ப்பமாக இருப்பதை எப்படி தெரியப்படுத்துவீர்கள்?(How Do You Notify Your Employer That You Are Pregnant in Tamil)

Pregnancy Journey
Written by - Dhanalakshmi Pillaiகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 8, 2024
உங்கள் முதலாளிக்கு நீங்கள் கர்ப்பமாக இருப்பதை எப்படி தெரியப்படுத்துவீர்கள்?(How Do You Notify Your Employer That You Are Pregnant in Tamil)
Read time14 min

உங்கள் சக ஊழியர்களிடம் நீங்கள் கர்ப்பமாக இருப்பதை தெரிவிப்பதற்கான சரியான நேரம் இன்னது என்று சொல்வதற்கில்லை. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், இதனை தெரியப்படுத்துவது என்பது முற்றிலும் உங்கள் தனிப்பட்ட முடிவாகும். உங்கள் நிறுவனம் எப்படிப்பட்டது என்பது, தினந்தோறும் எந்த வகையான வேலையில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்பது போன்ற பல காரணிகளை பொறுத்தே நீங்கள் முடிவு செய்ய இயலும். உங்கள் கர்ப்பகாலம் குறித்து உங்கள் முதலாளிக்கு நீங்கள் தெரியப்படுத்த விரும்பினால், இந்த கட்டுரை உங்களுக்கானது தான்!

நீங்கள் கர்ப்பமாக இருப்பது குறித்து மற்றவர்களுக்கு எப்போது தெரியப்படுத்துகிறீர்கள் என்பது முக்கியமல்ல, ஆனால் முதலில் இதனை உங்கள் முதலாளிக்கு தெரியப்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும். பல கர்ப்பிணிப் பெண்களின் மனதில் எழுகின்ற முக்கியமான கேள்விகளில் ஒன்று என்னவென்றால், ‘ நான் கர்ப்பமாக இருப்பது குறித்து என்னுடைய முதலாளிக்கு எப்போது தெரிவிக்க வேண்டும்?’ உங்கள் கர்ப்ப காலம் குறித்து அனைவரிடமும் பேச வேண்டிய சரியான நேரம் என்பது, உங்கள் கர்ப்ப வயிறு வெளியே தெரிவதற்கு முன்னமே அல்லது நீங்கள் கழிவறையை அநேக முறை பயன்படுத்துவதற்கு ஆரம்பிக்கும் முன்னமே பேசி விட வேண்டும். உங்கள் கர்ப்ப காலம் குறித்து உங்கள் முதலாளியிடம் தெரிவிப்பதற்கான சில வழிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

நீங்கள் கர்ப்பமாக இருப்பது குறித்து உங்கள் முதலாளியிடம் எப்படி தெரியப்படுத்துவது?(How Do You Notify Your Employer That You Are Pregnant in Tamil)

உங்கள் முதலாளியுடனான உரையாடலை கீழ்க்கண்ட சில ஆலோசனைகளை பின்பற்றி நீங்கள் மனம் விரும்பியவாறு அழகாக கொண்டு செல்லலாம்.

  • முதலில், நீங்கள் கர்ப்பமாக இருப்பது குறித்து உங்கள் முதலாளியிடம் தெரிவிப்பதற்கு தனியாக நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டுமா என்பதை தீர்மானித்துக் கொள்ளவும். ஏனென்றால், நீங்கள் கேப்-இல் செல்லும் போதோ அல்லது மீட்டிங்-கிற்கு செல்லும் போதோ இந்த செய்தியை தெரிவிப்பதற்கு விரும்ப மாட்டீர்கள். சௌகரியமாகவும், அவசர கதியில் இல்லாமலிருக்கவும் வேண்டி, உங்கள் முதலாளியை சந்திப்பதற்கான நேரத்தை கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.எனினும், இன்னும் உங்கள் மனதில் - நான் கர்ப்பமாக இருப்பதை என் முதலாளியிடம் சொல்ல வேண்டுமா, என்று யோசித்துக் கொண்டிருந்தால், இந்த செய்தியை உங்கள் முதலாளியிடம் தெரிவிப்பதற்கு முன்னர் பல அம்சங்களை பற்றி நீங்கள் இன்னும் பரிசீலித்து முடிவெடுக்க விரும்புகிறீர்கள் என்று பொருள்.

  • உரையாடலை நேர்மறையான விதத்தில் தொடங்குவதற்கு முயற்சிக்கவும். திடீரென்று மன்னிப்பு கேட்கும் விதத்தில் ஆரம்பிக்க வேண்டாம். உண்மையில், உங்கள் பணி மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டையுமே நீங்கள் சரிசமமாக கையாள விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் முதலாளி புரிந்து கொள்வதை உறுதி செய்து கொள்ளவும். உங்கள் மனதில் உள்ள திட்டம் குறித்து நீங்கள் சற்று இணக்கமாக இருப்பதற்கும் கூட நீங்கள் முயற்சி செய்யலாம். அப்போது தான் நீங்கள் சௌகரியமாக பின்பற்றுவதற்கு ஏற்ப ஒரு யதார்த்தமான வாய்ப்பினை குறித்து உங்கள் முதலாளி உங்களிடம் பேசுவதற்கு முடியும்.

  • உங்கள் முதலாளியிடம் இந்த விஷயத்தை குறித்து பேசி முடித்தவுடன், எழுத்து மூலமாக ஒரு அதிகாரப் பூர்வமான கர்ப்பகால அறிவிப்புக் கடிதத்தை சமர்ப்பிக்கலாம், இது பிற்காலத்தில் ஏதேனும் கருத்துப் பரிமாற்ற குளறுபடி நடக்காமல் இருப்பதற்கு உதவியாய் இருக்கும். உங்கள் கடிதத்தில் உங்கள் கர்ப்பகால செய்தியின் சிறு தகவல்களையும் சேர்ப்பதற்கு பரிசீலிக்கவும். இவ்வாறு நீங்கள் மெட்டர்னிட்டி லீவிற்கும் (பேறுகால விடுப்பு) கேட்டுக் கொள்ளலாம்.

  • உங்கள் நிறுவனம் குடும்ப-நலனில் அக்கறை கொண்டது இல்லையென்றால், மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து அமைப்பாக இணைந்து, பெற்றோர்களுக்கான சலுகைகள் பெறுவதற்கு உழைக்கலாம். நீங்கள் உங்கள் மனுவில் பிற சலுகைகள் குறித்தும் சேர்த்துக் கொள்ளலாம், இதன் மூலம் தங்கள் துணைவர்கள் அல்லது குழந்தைகள் உடல்நிலை சரியில்லாத போது ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும். உண்மையில், பெற்றோர்களின் ஆற்றல் உங்களை திகைப்படைய செய்யும்.

  • நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதாக இருந்தால், நீங்கள் கர்ப்பமாக இருப்பது குறித்து உங்கள் முதலாளிக்கு தெரிவிப்பதற்கு பல வழிகள் உள்ளன. எதிர்பாராமல் ஏற்பட்ட நோய்த் தொற்று பரவலின் காரணமாக, வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் சூழல் பலருக்கு அமைந்தது. ஒரு இ-மெயிலில் உங்கள் தற்போதைய நிலைமை குறித்து விவரித்து எழுதுவது நிச்சயமாக நீங்கள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை உங்கள் முதலாளிக்கு தெரிவிக்கும் ஒரு தொழில் முறை வழியாகும்.

  • நீங்கள் கர்ப்பமாக இருக்கும் செய்தி குறித்து தெரிவிக்கும் போது நீங்கள் பரிசீலிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, அதனை நேர்மறையாக தெரியப்படுத்துவது தான். உண்மையில், இந்த செய்தியை தொலைதூரத்தில் இருந்து நீங்கள் தெரிவிக்கும் போது மிகவும் உதவிகரமாக இருக்கும். உங்கள் பிரசவ தேதி குறித்து தகவல் தெரிவிப்பதற்கு கூட நீங்கள் விரும்புவீர்கள், ஏனென்றால் அப்போது தான் அதற்கேற்றாற் போல் உங்கள் பேறுகால விடுப்பு குறித்து உங்கள் முதலாளி திட்டமிடுவதற்கு வசதியாக இருக்கும்.

இந்தியாவில் கர்ப்பமாக இருப்பது குறித்து முதலாளியிடம் எப்போது தெரிவிக்க வேண்டும்(When To Inform Employer About Pregnancy In India in Tamil)

இந்தியாவில் கர்ப்பமாக இருப்பது குறித்து முதலாளிக்கு எப்போது தெரிவிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு நீங்கள் பல்வேறு காரணிகளை பரிசீலிக்க வேண்டியிருக்கும். நீங்கள் பரிசீலிக்க விரும்பும் சில விஷயங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பொதுவாகவே பல பெண்கள் தங்கள் முதல் மும்மாதங்கள் முடியும் வரை காத்திருப்பார்கள், ஏனெனில் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகளும் இந்த சமயத்தில் உள்ளன. வேலை பார்க்கும் பெண்கள் தங்களின் கர்ப்ப காலம் ஆரோக்கியமான முறையில் நகரும் போது, பொதுவாகவே தங்கள் நிலைமை குறித்து தங்கள் முதலாளியிடம் தெரிவிப்பதற்கு முன் வருவார்கள். எனினும், சிலர் பொதுவாகவே நான்காம் மாதம் முடியும் வரை காத்திருப்பார்கள் அல்லது அவர்களின் கர்ப்ப பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரை காத்திருப்பார்கள். கீழே குறிப்பிடப்பட்ட ஏதேனும் சூழ்நிலைகளை நீங்கள் சந்திக்கும் பட்சத்தில், நீங்கள் கர்ப்பமாக இருப்பது குறித்து உங்கள் முதலாளிக்கு தெரிவிக்க விரும்புவீர்கள்.

  • உங்களுக்கு குமட்டல் உணர்வு காரணமாக, தினமும் படுக்கையை விட்டு எழுவதே சிரமமாக இருக்குமானால், உங்கள் முதலாளிக்கு தெரிவிப்பதற்கான நேரம் இது தான். சில சமயங்களில், உங்கள் கர்ப்ப வயிறு சந்தேகத்துக்கிடமின்றி நீங்கள் கர்ப்பமாக இருக்கும் இரகசியத்தை நீங்கள் வெளியிடுவதற்கு முன்பே தெரியப்படுத்தி விடும். வீட்டிலிருந்து வேலை செய்வதன் பெரும் நன்மைகளுள் ஒன்று, உங்கள் முதலாளியிடம் செய்தியை தெரிவிப்பதற்கு நீங்கள் பொதுவாக நீண்ட காலத்திற்கு காத்திருக்கலாம், 20-வார காலத்தை நீங்கள் அடையும் வரைக்கும் கூட காத்திருக்கலாம். ஏனென்றால், வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, தங்களின் கர்ப்ப வயிறு வெளியே தெரிந்து காட்டிக் கொடுத்து விடுமோ என்று நீங்கள் கவலை கொள்ள வேண்டியிருக்காது.

  • உங்கள் வேலை நேரம் கடினமானதாக இருந்தால், உங்கள் வேலை நேரத்தை மாற்றுவது பற்றி அல்லது டிரான்ஸ்ஃபர் குறித்து உங்கள் முதலாளியிடம் நீங்கள் பேசலாம். சில சமயங்களில், நீங்கள் எல்லா நேரமும் நின்று கொண்டே இருக்கும் கடினமான வேலையாக இருந்தாலோ அல்லது நச்சு இரசாயனப் பொருட்களுக்கு ஊடாக வேலை செய்யும் படி நேர்ந்தாலோ, உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையை அது எதிர்மறையாக பாதிக்கும். எனவே, பொதுவாக இது போன்ற சமயத்தில் ஆபத்து நிறைந்த வேலைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே! - ஒரு கர்ப்பிணிப் பெண் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வரைக்கும் வேலை செய்யலாம்?(How Many Hours A Pregnant Woman Should Work?In Tamil)

  • இந்த செய்தியானது, உங்கள் சம்பள சீராய்வு அல்லது பதவி உயர்வு சீராய்வினை தாமதப்படுத்தும் என்றால், உங்கள் பதவி உயர்வு காலம் முடியும் வரை காத்திருப்பது நல்லது. சில சமயங்களில், கர்ப்பத்தின் காரணமாக பதவி உயர்வு முடிவுகள் போன்றவை பாதிக்கப்படும், பல ஊழியர்கள் இதனை நியாயமற்றதாகவே கருதுகிறார்கள். எனவே, இது போன்ற சூழ்நிலையில் காத்திருப்பது நல்லது.
  • உங்கள் சக ஊழியர்களுக்கு கிசுகிசு பேசும் வழக்கம் இருந்தால், கர்ப்பமான செய்தியை உங்கள் முதலாளிக்கு முதலில் நீங்கள் சொல்வது தான் சரியானதாக இருக்கும். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் செய்தி உங்களின் மூலமாக இல்லாமல், மற்ற ஊழியரின் மூலமாக உங்கள் முதலாளியை போய்ச் சேர்ந்தால் அவ்வளவு நன்றாக இருக்காது. உங்களுக்கும், உங்கள் முதலாளிக்குமிடையே சில நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் இருக்கலாம்.

உங்கள் முதலாளி இந்த செய்தியை முழு மனதாக ஏற்றுக் கொள்ள மாட்டார் என நீங்கள் நினைத்தால், நீங்கள் உங்களுடைய வேலையை நன்றாக செய்ய முடியும் என்பதை உங்கள் முதலாளியிடம் நிரூபித்துக் காட்டுவதற்கு 20-வார காலம் வரைக்கும் நீங்கள் காத்திருக்கலாம். எனினும், உங்கள் முதலாளி இந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைவார் என நீங்கள் நம்பினால், நீங்கள் வெளிப்படையாக அவரிடம் பேசி, தொழில் முறையில் அவரிடம் வெளிப்படுத்தலாம். பிறகு நிறுவனத்தின் பிரத்யேக மெட்டர்னிட்டி பேக்கேஜ்-களின் முழு பயன்களையும் நீங்கள் பெறலாம்.

இ-மெயிலில் நீங்கள் கர்ப்பமாக இருப்பதை அறிவிப்பது எப்படி?(How Can You Announce Your Pregnancy Through An Email in Tamil)

பலருக்கு தாங்கள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நேரடியாக தெரிவிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, இது போன்ற சூழ்நிலையில் இ-மெயில் வழிமுறையை தேர்வு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாகவே பல ஊழியர்கள் தாங்கள் கர்ப்பமாயிருக்கும் செய்தியை தங்கள் முதலாளிகளுக்கு இ-மெயில் மூலமாக தெரிவிப்பதை எளிதாக கருதுவார்கள். ஏனென்றால், எந்த தடுமாற்றமுமில்லாமல் அல்லது பதற்றமில்லாமல், சொல்ல வேண்டிய செய்தியை தொழில் முறையில் எளிதாக வெளிப்படுத்தலாம்.

ஆயினும், இந்த மொத்த நடவடிக்கையும் நீங்கள் இ-மெயிலில் எழுதும் முறையையும், பயன்படுத்தும் வார்த்தைகளையும் சார்ந்துள்ளது. இது தவிர்த்து, உங்கள் முதலாளியுடனான உங்கள் உறவையும் பொறுத்து உள்ளது. உங்கள் முதலாளியுடனான உங்கள் உறவு சிறப்பாக இருப்பதாக நீங்கள் நம்பினால், நீங்கள் வீடியோ சாட்-இன் மூலம் இந்த செய்தியை தெரிவிக்கலாம். உங்கள் முதலாளியை நேரடியாக சந்தித்து பேசுவதற்கு, நீங்கள் அப்பாய்ன்மெண்ட்டை (சந்திப்பு நேரம்) கூட வாங்கலாம்.

எனினும், உங்கள் முதலாளியுடனான உறவில் சற்று இறுக்கம் இருக்கும் பட்சத்தில், நீங்கள் நேரடியாகவோ அல்லது வீடியோ சாட்-இன் மூலமாகவோ இந்த செய்தியை தெரிவிப்பதற்கு சங்கடப்படலாம். இது போன்ற சூழ்நிலைகளில், நீங்கள் எப்போதும் இ-மெயிலை தேர்வு செய்யலாம், இதன் மூலம் உங்கள் முதலாளிக்கும் உங்களுடைய எதிர்கால கடமைகளையும், பணிகளையும் குறித்து சிந்தித்து முடிவெடுப்பதற்கு கூடுதல் நேரத்தை வழங்க முடியும். நீங்கள் கர்ப்பமாக இருப்பது குறித்து பணிவான முறையில் இ-மெயில் எழுதுவதற்கான சில ஆலோசனைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

  • மகிழ்ச்சிகரமான குறிப்பில் ஆரம்பிப்பது மேலானது. நீங்கள் “நான் கர்ப்பமாக இருப்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றோ அல்லது “கர்ப்பமாக இருக்கும் செய்தியை பகிர்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்” என்றோ ஆரம்பித்து எழுதலாம்.

  • .உங்கள் பிரசவ தேதியை தெளிவாக குறிப்பிடுவதை உறுதி செய்து கொள்ளவும்.

  • உங்கள் நிறுவனம் வழங்கும் பேறுகால பலன்கள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது, அப்போது தான் அதற்கேற்றாற் போல் நீங்கள் அவர்களிடம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

  • உங்கள் எதிர்கால திட்டங்கள் குறித்தும், நீங்கள் எப்போது வேலைக்கு திரும்ப விரும்புகிறீர்கள் என்பதையும் கூட நீங்கள் குறிப்பிட வேண்டியிருக்கும்.

  • மாற்று ஏற்பாடுகள் குறித்தோ அல்லது பிற பரிந்துரைகள் குறித்தோ கேட்பதற்கு தயக்கம் கொள்ள வேண்டாம்.

  • உங்கள் முதலாளியின் அபிப்ராயங்கள் குறித்தும் பரிசீலிப்பதற்கு ஏற்றவாறு இணக்கமாகவும், வெளிப்படைத் தன்மையோடும் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

வேறு ஏதேனும் அனுசரிப்பு நடவடிக்கைகள் குறித்து விண்ணப்பம் செய்ய விரும்பினாலும் உங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு பின்னர், நீங்கள் பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்களிடம் இந்த செய்தியை பகிரலாம் அல்லது இரகசியமாகவே வைத்துக் கொள்ளலாம். முற்றிலும் இது உங்கள் விருப்பமே!

கர்ப்ப காலத்தில் ஓரங்கட்டப்படுவதை நீங்கள் எப்படி சமாளிக்கலாம்?(How Can You Cope Up With Pregnancy Discrimination in Tamil)

  • உங்கள் முதலாளியிடம் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தெரிவித்த உடனேயே, உங்கள் வேலையில் உங்களுக்கு இருக்கப் போகும் எல்லை வரையறைகளை பற்றி அவரிடம் தெரிவித்து விடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஒரு வேளை உங்கள் வேலையில் கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் பட்சத்தில், உங்கள் பணிக்கான சுற்றுமுறையை மாற்றிக் கொள்வதற்கான நேரமிது. நீங்கள் கர்ப்பமாக இருப்பதன் காரணமாக உங்கள் முதலாளி உங்களை சரியாக நடத்தவில்லையென்று நீங்கள் நினைக்கலாம். அப்போது, நிறுவனத்தின் ஹெச்ஆர் துறையிடமோ அல்லது வேறு ஏதேனும் அதிகாரியிடமோ, உங்களிடம் பாரபட்சம் காட்டப்படுவது குறித்து நீங்கள் புகார் கொடுக்கலாம்.

  • இந்த புகாரில், நேரம், தேதி உள்ளிட்ட தகவல்களோடு என்ன நடந்தது என்பதையும், பிரச்சினை என்ன என்பது குறித்தும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பேசிய நபர்களையும், நீங்கள் ஏன் அசௌகரியமாக உணர்ந்தீர்கள் என்பதையும் கூட குறிப்பிடவும். ஒரு வேளை ஹெச்ஆர் துறை இந்த பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை என்று நீங்கள் நினைத்தால், உங்கள் பகுதியில் உள்ள சட்ட அதிகாரியிடம் நீங்கள் புகார் அளிக்கலாம். இது மிகவும் நல்லதொரு முடிவாக இருக்கும், ஏனெனில் இதை முன்னுதாரணமாக கொண்டு பிற தாய்மார்களும் கூட தங்கள் பணியிடங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேச முடியும்!

  • பொதுவாக கர்ப்பமாக இருப்பதை தெரியப்படுத்தும் போது, அது தொழில் முறை சூழலாக இருந்தாலும் அல்லது வீடு-போன்ற சூழலாக இருந்தாலும் நன்றாக வரவேற்கப்படும் விஷயமாகவே இருக்கும். நீங்கள் இந்த செய்தியை பகிர்வதற்கு தயாராக இருக்கும் போது, இந்த செய்தி நல்ல வரவேற்பை பெறுவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ளலாம். ஆயினும், இதனை தெரியப்படுத்துவதற்கு முன்பு, சில விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் விடுப்பு கொள்கைகள் குறித்து மேலும் தெரிந்து கொள்ளவும்(Consider learning more about your Company’s Leave Policies in Tamil)

உங்கள் முதலாளியிடம் கர்ப்பமாக இருக்கும் தகவலை தெரிவிப்பதற்கு முன்னர், நீங்கள் நிறுவனத்தின் பேறுகால விடுப்பு கொள்கைகள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள விரும்புவீர்கள். பொதுவாகவே பல நிறுவனங்கள் சம்பளத்துடன் விடுப்பு அளிக்கின்றன, ஆயினும் சிலவற்றில் சம்பளமில்லாத விடுப்பு இருக்கும். சில நிறுவனங்கள் ஓரிரு நாட்களுக்கு சிக் லீவ் (உடல்நிலை சரியில்லா பட்சத்தில் பெறும் விடுப்பு) கூட வழங்குகின்றன. மேலும் நீங்கள் தற்போதைய விதிமுறைகள் குறித்து மேலும் தெரிந்து கொள்வதற்கு நீங்கள் ஊழியர் கையேட்டினை கூட வாசித்துப் பார்க்கலாம். அதற்கேற்றாற் போல், நீங்கள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளிப்படுத்தி, உங்கள் சக ஊழியர்களுடன் இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தை கொண்டாடலாம்.

உங்கள் பகுதியில் ஒரு ஊழியராக உங்கள் உரிமைகள் என்னென்ன என்பது குறித்து ஆராயவும்(Consider Researching About Your Rights As An Employee In The Region in Tamil)

பேறுகால விடுப்பு விதிகள் என்று வரும் போது, பல பகுதிகளில் பொதுவாகவே விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கும். இப்பேற்பட்ட பேறுகால விடுப்பு விதிகளின் பயனாக உங்களுக்கும், உங்கள் சக ஊழியர்களுக்கும் என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

உங்கள் வேலை தொடர்பான அனுசரிப்புகள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளவும்(Consider Digging Deeper into Your Job Adjustments in Tamil)

நீங்கள் கடினமான பணிச் சூழலில் ஈடுபடுபவராய் இருந்தால், உங்கள் கர்ப்ப காலத்தின் போது நீங்கள் செய்யக் கூடிய மாற்று வேலை ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து தெரிந்து கொள்வது நல்லது. உண்மையில், உங்கள் தினசரி வேலைகளில் தேவையான அனுசரிப்பினை செய்து கொண்டு, அதனை செயல்படுத்துவதற்கு உங்கள் முதலாளியின் சம்மதம் வேண்டி நீங்கள் விண்ணப்பம் செய்யலாம். ஒரு வேளை உங்கள் சக ஊழியர்களில் ஒருவர் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் வரைக்கும், உங்கள் வேலைகளை தனக்கு மாற்றிக் கொள்ள சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில், நீங்கள் இந்த திட்டத்தை தாராளமாக அமுல்படுத்தலாம்! இது போன்று, உங்கள் வேலை மற்றும் தாய்மை ஆகிய இரண்டையும் சமரசமின்றி உங்களால் மகிழ்ச்சியாக கொண்டு செல்ல முடியும்!

நீங்கள் வேலைக்கு திரும்பும் வரை மாற்று ஏற்பாட்டுக்கு திட்டமிடவும்(You May Want To Plan For A Coverage Until You Return in Tamil)

நீங்கள் பேறுகால விடுப்பில் இருக்கும் போது உங்கள் வேலையை செய்வதற்கு வேறொருவரை நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். நீங்கள் தகவலை தெரிவித்தவுடன் நீங்கள் போன பின் இருக்கப் போகும் பணிச் சுமை குறித்து உங்கள் முதலாளி சிறிது கவலை கொள்ளக் கூடுமாதலால், நீங்கள் பேறுகால விடுப்பில் இருக்கும் போது செய்யக் கூடிய மாற்று ஏற்பாடு குறித்த எல்லா சாத்தியமான விஷயங்களை ஆலோசித்துக் கொள்ள வேண்டும். உங்கள் சக ஊழியர்களுடன் இந்த பிரச்சினை குறித்து கலந்து பேசியும் கூட, நீங்கள் ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை உருவாக்கலாம்!

வேலைக்குத் திரும்பும் தேதியை ஆலோசித்து அறிவிக்கவும்(Give A Realistic Return Date)

நீங்கள் பேறுகால விடுப்பில் இருப்பதால், உங்கள் கணவரின் சம்பளத்தை மட்டுமே வைத்து சமாளிப்பதற்கான வெவ்வேறு வழிகள் குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கும். ஒரு வேளை உங்கள் வீட்டு செலவுகளை தடையின்றி சமாளிப்பதற்கு உங்கள் சம்பளமும் முக்கியமானது எனும் பட்சத்தில், உங்கள் விடுப்பை நீட்டிப்பதற்கு முன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துக் கொள்ளவும். இது போன்ற சூழ்நிலைகளில், நீங்கள் வேலைக்குத் திரும்பும் தேதியை அறிவிப்பது குறித்து சரியான முடிவினை எடுப்பது உங்களுக்கு உதவிகரமானதாக இருக்கும்.

நீங்கள் வேலைக்கு திரும்பும் முன்னர், குழந்தை பராமரிப்புக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். அது தவிர்த்து, முழு நேர வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வதற்கு திட்டமிடுவதும், நீங்கள் வேலைக்குத் திரும்பும் தேதியை தீர்மானிப்பதற்கு உதவும். உண்மையில், நீங்கள் வேலைக்குத் திரும்ப இருக்கும் தேதியை முடிவெடுப்பதற்கு, பல ஏற்பாட்டு ரீதியான, உணர்வு ரீதியான காரணிகளும் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இது போன்ற விஷயங்களை உங்கள் துணையிடம் பேசுவது உதவியாக இருக்கும், ஆயினும், இறுதி முடிவு உங்கள் கையில் தான்! பிரசவத்திற்கு பிறகு உங்கள் உடல் முற்றிலும் குணமடைவதற்கு முயற்சிகள் மேற்கொள்வது உதவிகரமானதாக இருக்கும், ஏனெனில் நீங்கள் உடல் நிலை சரியான பின்னர் எந்த தடங்கலுமின்றி வேலைக்கு திரும்பலாம்.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.