Get MYLO APP
Install Mylo app Now and unlock new features
💰 Extra 20% OFF on 1st purchase
🥗 Get Diet Chart for your little one
📈 Track your baby’s growth
👩⚕️ Get daily tips
OR
Article Continues below advertisement
Pregnancy Complications
9 January 2024 அன்று புதுப்பிக்கப்பட்டது
எக்டோபிக் கர்ப்பம், அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதை எவ்வாறு கண்டறியலாம், அத்துடன் அதன் பக்க விளைவுகள் மற்றும் சிறந்த சிகிச்சைக்கான அவற்றின் மேலாண்மை ஆகியவற்றைப் பற்றி நமக்குத் தெரியும்.
கருப்பையைத் தவிர வேறு ஓர் இடத்தில் கரு பொருந்துவது எக்டோபிக் கர்ப்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. கருவுற்ற முட்டை கருப்பைக்கு வெளியே பொருந்தும் போது இது நிகழ்கிறது. பெரும்பாலும் ஃபலோபியன் குழாயில் கரு பொருந்தலாம், சில சந்தர்ப்பங்களில், கருப்பை, கருப்பை வாய் அல்லது வயிற்றுக் குழியில் கர்ப்பம் ஏற்படுகிறது. இது உயிருக்கு ஆபத்தான நிலை ஆகும். இந்த வகையான கர்ப்பம் பிறப்பு வரை பராமரிக்கக் கூடிய சாதாரண கர்ப்பம் அல்ல, உடனடியாகக் கலைக்கப்படாவிட்டால் தாய்க்கு தீங்கு விளைவிக்கும்.
பெரும்பாலும், ஃபலோபியன் குழாய் சிதைவடையும் போது வலி தொடங்குகிறது. லேசான யோனி இரத்தப்போக்கு மற்றும் இடுப்பு வலி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். ஃபலோபியன் குழாய் சிதைந்து அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டால், அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இதில், சிதைந்த ஃபலோபியன் குழாய் மற்றும் கர்ப்பத்தின் பிற எச்சங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுகின்றன.
Article continues below advertisment
எக்டோபிக் கர்ப்பம் சார்ந்து உடனடி மருத்துவக் கவனிப்பு தேவைப்படுவதை எடுத்துக்காட்டும் சில அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
● அடிவயிற்றில் வலி (கீழ் இடுப்பு பகுதி)
● தலைசுற்றல்
● நிலை குழைவு அல்லது மயக்கம்
● பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு
Article continues below advertisment
● அடிவயிற்றில் கூர்மையான வலி
● தோள்பட்டை, இடுப்பு அல்லது கழுத்தில் வலி
● மலக்குடலில் அழுத்தம்
எக்டோபிக் கர்ப்பத்திற்கான காரணம் குறித்து தெளிவு இல்லை. எக்டோபிக் கர்ப்பத்துடன் தொடர்புடைய சில நிலைகளாவன:
● முந்தைய அறுவை சிகிச்சை அல்லது தொற்று காரணமாக ஃபலோபியன் குழாய்களில் காயம் அல்லது வீக்கம்
Article continues below advertisment
● ஹார்மோன் காரணிகள்
● வயது 35 வயதுக்கு மேல்
● கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் அல்லது கருவுறுதல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலை
● கருப்பையக கருவூட்டல் (IVF) போன்ற இனப்பெருக்க முறைகளைப் பயன்படுத்துதல்
● எண்டோமெட்ரியோசிஸ்
Article continues below advertisment
● கடந்த காலத்தில் எக்டோபிக் கர்ப்பம் கொண்டிருந்த நிலை
பெல்விக் பரிசோதனை (அல்ட்ராசவுண்ட்) மற்றும் இரத்தப் பரிசோதனை ஆகியவை உங்கள் மருத்துவருக்கு முன்கூட்டிய எக்டோபிக் கர்ப்பத்தைக் கண்டறிய உதவும்.
கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்வதற்காக ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் (HCG) ஹார்மோன்களின் அளவை சோதிக்க கர்ப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. கர்ப்ப காலத்தில் இந்த ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருக்கும். அல்ட்ராசவுண்ட் மூலம் உறுதிப்படுத்தப்படும் வரை அல்லது எக்டோபிக் கர்ப்பம் நிராகரிக்கப்படும் வரை இந்த சோதனை இரண்டு நாட்களுக்கு அடிக்கடி மேற்கொள்ளப்படுகிறது. கருத்தரித்த ஐந்து முதல் ஆறு வாரங்களில் இந்த சோதனை செய்யப்படுகிறது.
வயிற்றின் அடிப்பகுதியைச் சோதிக்கவும், பொருத்தப்பட்ட கருவைக் கண்டறியவும், அது கருப்பையின் உள்ளே அல்லது வெளியே உள்ளதா என்பதைத் தீர்மானிக்கவும் டிரான்ஸ்வஜினல் அல்ட்ராசவுண்ட் மருத்துவருக்கு உதவுகிறது.
கர்ப்பத்தை உறுதி செய்ய மற்றும் உள்ளக இரத்தப் போக்கு உள்ளத என அறிய இது உபயோகமாகிறது
Article continues below advertisment
எக்டோபிக் கர்ப்பம் பொதுவாக கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் கண்டறியப்படுகிறது. பெரும்பாலும், முதல் மூன்று மாதங்களில், கர்ப்பத்தின் எட்டாவது வாரத்தில் கண்டறியப்படுகிறது.
எக்டோபிக் கர்ப்பத்திற்கு சிகிச்சையளிக்க பல வழிகள் உள்ளன.
1. மருந்துகள் (Medication): சில சந்தர்ப்பங்களில், கருவின் வளர்ச்சியை நிறுத்த அல்லது மெதுவாக்க மெத்தோட்ரெக்ஸேட் எடுத்துக்கொள்ளுமாறு சுகாதார வழங்குநர் உங்களுக்கு அறிவுறுத்துவார். இது உங்கள் கர்ப்பத்தை முறித்துவிடும். மெத்தோட்ரெக்ஸேட் ஊசி மருந்தாக கொடுக்கப்படுகிறது. இது அறுவை சிகிச்சையை விட எளிதானது என்றாலும் hCG அளவுகள் கண்காணிக்கப்பட நீங்கள் மருத்துவரை மீண்டும் சென்று பார்க்க வேண்டும்.
2. எக்டோபிக் கர்ப்ப அறுவை சிகிச்சை (லேப்ராஸ்கோபி) (Ectopic Pregnancy Surgery (Laparoscopy): தீவிர நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகிறது. சில எக்டோபிக் கர்ப்பங்களுக்கு சிகிச்சையளிக்க லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த நடைமுறையில், அடிவயிற்றில், அருகில் அல்லது தொப்புளில் ஒரு கீறல் செய்யப்பட்டு, குழாய் பகுதியைப் பார்க்க கேமரா லென்ஸ் மற்றும் ஒளியுடன் கூடிய சாதனம் போன்ற மெல்லிய குழாய் செருகப்படுகிறது.
சேதம் மற்றும் இரத்தப்போக்கு மற்றும் குழாய் சிதைந்துள்ளாதா என்பதைப் பொறுத்து, செயல்முறை செய்யப்படுகிறது.
Article continues below advertisment
3. லேபரோடமி (Laparotomy): அறுவை சிகிச்சை பலன் தரவில்லை என்றால், லேபரோடமிக்கு உட்படுத்தப்படலாம், இந்த நடைமுறையில் பெரிய கீறல் செய்யப்படுகிறது. ஃபலோபியன் குழாய் சேதமடைந்தால் அறுவை சிகிச்சையின் போது அகற்றப்படும்.
மருந்து அல்லது அறுவை சிகிச்சை எது மூலம் சிகிச்சையளிக்கப்பட்டாலும், hCG அளவைக் கண்காணித்து அவை இயல்பு நிலைக்குத் திரும்பியதை உறுதி செய்ய உங்கள் மருத்துவர் உங்களை தவறாமல் காண விரும்புவார். இதற்கு பல வாரங்கள் ஆகலாம்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு, லேசான மற்றும் கடுமையான பக்க விளைவுகளை அனுபவிக்கலாம். எக்டோபிக் கர்ப்பத்திற்கான அறுவை சிகிச்சையின் சாத்தியமான பக்க விளைவுகள் பற்றி உங்கள் சுகாதார நிபுணர் உங்களிடம் பேசுவார். வலி, சோர்வு, இரத்தப்போக்கு மற்றும் தொற்று ஆகியவை இதில் அடங்கும். குணமடையும்போது சில வாரங்களுக்கு சோர்வாக உணரலாம். வயிற்றில் அசௌகரியம் அல்லது வலியை அனுபவிக்கலாம். மருந்துகளால் வளி குறையவில்லை எனில், உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் அல்லது சுகாதார நிபுணரிடம் ஆலோசியுங்கள்.
● hCG அளவுகள் கண்காணிக்கப்பட்டு, ஹார்மோன்களின் தடயங்கள் இல்லாதவரை இந்த சோதனை அடிக்கடி செய்யப்படுகிறது.
● ஹார்மோன் அளவு குறையவில்லை அல்லது அதிகரிக்கிறது என்றால் கூடுதல் சிகிச்சை தேவைப்படுகிறது.
Article continues below advertisment
● யோனியில் இரத்தப்போக்கு ஏற்பட்டால் சானிட்டரி பேடைப் பயன்படுத்துவது நல்லது.
● வயிற்று வலி ஏற்பட்டால் பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளுங்கள்.
● கடுமையான அறிகுறிகள் தோன்றினால் மருத்துவர் கவனிப்பார்.
எக்டோபிக் கர்ப்பத்தின் மருத்துவ மேலாண்மையில் அறுவை சிகிச்சையின் தேவையைத் தவிர்க்க, பெரும்பாலும், ஊசி வடிவில் மெத்தோட்ரெக்ஸேட் கொடுக்கப்படுகிறது. இது ஃபலோபியன் குழாயில் வளரும் செல்களைக் கொல்கிறது. கர்ப்பத்தின் துவக்கக் அக்ட்டத்தில் இதை உபயோகிக்கலாம். இம்முறை சிறப்பாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்த பல வாரங்களுக்கு மீண்டும் மீண்டும் இரத்த பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் மூலம் கண்காணிக்கப்படுவீர்கள். hCG அளவுகள் குறைவாக இருக்கும் வரை ஒவ்வொரு 2-3 நாட்களுக்கும் hCG-க்கான இரத்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். சில பெண்களில், மெத்தோட்ரெக்ஸேட் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். 3-7 நாட்களுக்கு மெத்தோட்ரெக்ஸேட் எடுத்துக் கொண்ட பிறகு, வயிற்று வலி ஏற்படலாம்.
எக்டோபிக் கர்ப்பத்தைத் தடுக்க முடியாது. புகைபிடிக்காமலிருத்தல், ஆரோக்கியமான எடை மற்றும் உணவைப் பராமரித்தல் மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் ஆகியவற்றைத் தடுப்பது உள்ளிட்ட சிறந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஆபத்து காரணிகளைக் குறைக்க முயற்சி செய்யலாம். உங்களுக்கு இது போன்ற ஏதேனும் ஆபத்து காரணிகள் இருந்தால் கர்ப்பமாகும் முன் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.
Article continues below advertisment
Tags;
What is Ectopic Pregnancy in Tamil, How to detect earlier Ectopic Pregnancy in Tamil, How to Prevent Ectopic Pregnancy in Tamil, Treatment of Ectopic Pregnancy in Tamil, What is Ectopic Pregnancy - Symptoms, Causes, Treatment, Prevention & How to Detect it in English
Yes
No
Written by
Priya Baskar
Get baby's diet chart, and growth tips
உங்கள் கர்ப்ப காலத்திலும் பின்னும் நர்சிங் பேட்களின் பயன்பாடு என்ன I What Is the Use of Nursing Pads During & After Your Pregnancy in Tamil?
(137 Views)
கர்ப்ப காலத்தில் பிரா அணிவதால் சரும நமைச்சல் ஏற்படுவது ஏன்? I Why Does Wearing A Bra In Pregnancy Makes Your Skin Itchy in Tamil?
(530 Views)
மகப்பேறு ப்ரா வாங்கும் போது என்ன வகையான துணிகள் மற்றும் ஸ்டைல்கள் பார்க்க வேண்டும் I What Kind Of Fabrics And Styles To Look For While Shopping For A Maternity Bra in Tamil
(341 Views)
உங்கள் சரும பராமரிப்பு முறையில் தேயிலை மர எண்ணெயை எப்படி பயன்படுத்துவது? I How to include tea tree in your face care regime in Tamil?
(125 Views)
கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவத்திற்கு உதவும் உணவுகள் I Foods that Can Help Pregnant Women Go into Labor in Tamil
(584 Views)
கருப்பையில் இருக்கும் உங்கள் குழந்தைக்கு எப்போது பாலியல் உறுப்புகள் உருவாகும்? I When Do Sex Organs Develop In Your Baby In The Womb in Tamil?
(425 Views)
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |