Pregnancy
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
உடலில் உள்ள செயலற்ற தைராய்டானது தைராய்டு சுரப்பு குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது, இது தைராய்டு சுரப்பி முக்கியமான ஹார்மோன்களை உற்பத்தி செய்வதைத் தடுக்கிறது. பெண்களில் தைராய்டு அறிகுறிகள் ஆரம்ப கட்டங்களில் வெளிப்படுவதில்லை. ஆனால், இதற்கு நீங்கள் தகுந்த சிகிச்சையளிக்காவிட்டால், தைராய்டு சுரப்பு குறைபாட்டால் உடல் பருமன், மூட்டு வலிகள், இதயம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மலட்டுத்தன்மை கூட ஏற்படக்கூடும்.
தைராய்டு என்பது மூச்சுக் குழாய் அல்லது காற்றுக் குழாயைச் சுற்றி, கழுத்தின் முன் அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பியாகும். அதன் வடிவம் பட்டாம்பூச்சியை ஒத்திருக்கும். தைராய்டு சுரப்பி இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, உடல் வெப்பநிலை மற்றும் எடையை பராமரித்தல் போன்ற முக்கிய உடல் செயல்பாடுகளுக்கு பொறுப்பான ஹார்மோன்களை உருவாக்குகிறது. ஹார்மோன் அதிகமாக வெளியிடப்பட்டால், உடல் மிகை தைராய்டு சுரப்பு எனப்படும் ஒரு கண்டிஷனை உருவாக்கலாம். அதன் உற்பத்தி போதுமானதாக இல்லாதபோது, அது தைராய்டு சுரப்பு குறைபாடு என்று அழைக்கப்படுகிறது. இரண்டு கண்டிஷன்களும் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், ஏனெனில் அவை கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதையும் படிக்கலாமே! - பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு புற்றுநோய் அறிகுறிகள்
தைராய்டு சுரப்பியின் முக்கிய செயல்பாடு வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை வெளியிடுவதும் கட்டுப்படுத்துவதும் ஆகும். வளர்சிதை மாற்றம் என்பது தனிநபர்கள் உட்கொள்ளும் உணவு ஆற்றலாக மாற்றப்பட்டு உடல் சரியாக செயல்பட பயன்படுத்தப்படும் செயல்முறையாகும்.
டி4 - தைராக்சின்.
டி3 - ட்ரையோடோதைரோனைன்.
பிட்யூட்டரி சுரப்பி இரத்த ஓட்டத்தில் உள்ள தைராய்டு ஹார்மோன்களின் அளவைக் கண்காணிக்கிறது. தைராய்டு ஹார்மோன்களின் அதிகப்படியான அல்லது குறைந்த உற்பத்தி இருந்தால், பிட்யூட்டரி சுரப்பியானது டி.எஸ்.எச் அல்லது தைராய்டு தூண்டுதல் ஹார்மோன் எனப்படும் அதன் சொந்த ஹார்மோனைப் பயன்படுத்தி இதைச் சரிசெய்யும்.
பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு அறிகுறிகள் பிற பொதுவான நோய்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை போன்றே இருக்கலாம், எனவே தைராய்டு தொடர்பான சிக்கல்களைக் கண்டறிவது கடினம்.
இந்த அறிகுறிகள் பின்வருமாறு
கவலை மற்றும் பதட்டம்
காரணமின்றி எரிச்சல் ஏற்படுதல்
தூக்கம் சம்மந்தமான பிரச்சனைகள்
காரணம் தெரியாத எடை இழப்பு
முன்கழுத்துக் கழலை (கோயிட்டர்) அல்லது விரிவாக்கப்பட்ட தைராய்டு சுரப்பி
தசை பலவீனம்
நடுக்கம்
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள்
வெயிலுக்கு அதிக சென்சிட்டிவாக இருத்தல்
பார்வை தொடர்பான பிரச்சனைகள்
அறிகுறிகள் பின்வருமாறு:
களைப்பு
எடை அதிகரிப்பு
மறதி
அதிக மாதவிடாய்
அதிகப்படியான வறண்ட கூந்தல்
குரலின் கரகரப்பு அதிகரித்தல்
குளிரைத் தாங்க இயலாமை
தைராய்டு ஏற்படுவதற்கான காரணங்கள் அதன் வகையைப் பொறுத்தது.
பெண்களுக்கு ஏற்படும் தைராய்டுக்கான காரணங்கள் | தைராய்டு சுரப்பு குறைபாடு
தைராய்டிடிஸ் - தைராய்டு சுரப்பியில் ஏற்படும் வீக்கம் சரியான அளவு ஹார்மோன் உற்பத்தியைத் தடுக்கிறது.
ஹாஷிமோடோவின் தைராய்டிடிஸ் - தைராய்டு சுரப்பியை சேதப்படுத்தும் ஒரு ஆட்டோ இம்மியூன் கண்டிஷன்
மகப்பேறுக்கு பிறகான தைராய்டிடிஸ் - பிரசவத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 9% பெண்களை பாதிக்கிறது.
அயோடின் குறைபாடு - உடலில் போதுமான அயோடின் இல்லாததால் குறைந்த ஹார்மோன் உற்பத்திக்கு வழிவகுக்கும்.
செயலற்ற தைராய்டு சுரப்பி - சிலருக்கு பிறக்கும் போதே இருக்கக்கூடிய ஒரு கண்டிஷன்.
மிகை தைராய்டு சுரப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்,
கிரேவ்வின் நோய் - பரவலாக இது நச்சு கோயிட்டர் என்றும் அழைக்கப்படுகிறது, இதன் காரணமாக தைராய்டு சுரப்பி மிகவும் அதிகமாக செயல்படக்கூடும்.
முடிச்சுகள் - ஒரு நச்சு ஆனது தன்னிச்சையாக செயல்படும் தைராய்டு முடிச்சு அல்லது மல்டி-நாடூல்ஸ் கோயிட்டர் எனப்படும் பல முடிச்சுகளைக் கொண்ட ஒரு சுரப்பி ஆகும்.
தைராய்டிடிஸ் - தைராய்டு ஹார்மோன்களின் அதிகப்படியான உற்பத்தி.
அதிக அயோடின் அளவு.
தைராய்டு நோய்கள் முக்கியமாக இரண்டு வகைப்படும்.
மிகை தைராய்டு சுரப்பு: உடலில் அதிகப்படியான தைராய்டு சுரப்பி இருக்கும்போது இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நிலையில், டி.எஸ்.எச் அல்லது தைராய்டு தூண்டுதல் ஹார்மோனின் அதிகப்படியான உற்பத்தி உள்ளது.
தைராய்டு சுரப்பு குறைபாடு: தைராய்டு சுரப்பியால் போதுமான அளவு தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாத போது, அது தைராய்டு சுரப்பு குறைபாட்டுக்கு வழிவகுக்கிறது. இது டி.எஸ்.எச் இன் குறைந்த உற்பத்தியால் விளையும்.
எந்தவொரு ஆரோக்கியமான நபருக்கும் தைராய்டு சுரப்பு குறைபாடு அல்லது மிகை தைராய்டு சுரப்பு உருவாகலாம்; இருப்பினும், சில காரணிகள் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. பின்வரும் காரணிகள் தைராய்டு நோய் அபாயத்திற்கு பங்களிக்கின்றன:
ஒரு பெண்ணாக இருத்தல்.
60 வயதுக்கு மேல் இருத்தல்.
தைராய்டு சுரப்பு குறைபாடு அல்லது மிகை தைராய்டு சுரப்பு இருந்ததற்கான குடும்ப வரலாறு.
வகை 1 நீரிழிவு அல்லது செலியாக் நோய் போன்ற ஆட்டோ இம்மியூன் கண்டிஷன்கள்.
கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு மருந்துகள் சம்பந்தப்பட்ட கடந்தகால சிகிச்சை.
கதிர்வீச்சு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட கழுத்துப் பகுதி அல்லது மேல்பக்க மார்பு.
தைராய்டெக்டோமிக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பகுதி.
பிரக்னன்ஸி அல்லது பிரசவம்.
பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு அறிகுறிகள் பொதுவாக சிகிச்சையளிக்கப்பட்டு குணமாகக்கூடியவை. ஆனால், சிகிச்சையளிக்கப்படாத தைராய்டு நோய் உடல் நலத்தில் கலவையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தைராய்டு சுரப்பி மிகவும் பெரியதாக மாறுகின்ற கண்டிஷன். இது சுவாசிப்பதில் மற்றும் விழுங்குவதில் சிரமங்களை ஏற்படுத்தக்கூடும்.
தைராய்டு சுரப்பு குறைபாடு பெரும்பாலும் இதய செயலிழப்பு உள்ளிட்ட இதய கண்டிஷன்களுக்கு வழிவகுக்கிறது. குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அல்லது எல்.டி.எல் கொழுப்பு அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம், இது உடலுக்கு நல்லதல்ல.
யாருக்கேனும் தைராய்டு பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால் அதனால் அவர்களின் மன ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். தைராய்டு சுரப்பு குறைபாட்டில் மனச்சோர்வு மற்றும் பாதகமான மன செயல்பாடு போன்றவை பொதுவானதாக இருக்கலாம்.
கட்டுப்பாடற்ற தைராய்டு நோய் புற நரம்புகளுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும். இது வலி மற்றும் உணர்வின்மை ஏற்படுத்தும்.
சில நேரங்களில், நீண்டகால, கண்டறியப்படாத தைராய்டு சுரப்பு குறைபாடு மிக்ஸிடிமாவை ஏற்படுத்தக் கூடும், இது ஒரு ஆபத்தான கண்டிஷன் ஆகும்.
தைராய்டு பிரச்சனைகள் சரியான ஓவுலேஷன் நடைபெறுவதை தடுக்கலாம், சில நேரங்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.
தைராய்டு அறிகுறிகள் உள்ள பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகள் ஏற்படும் அபாயம் அதிகம்.
தைராய்டு புற்றுநோயின் மிகவும் பொதுவான வகை பாபில்லரி கார்சினோமா தைராய்டு ஆகும். பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு அறிகுறிகளில் கழுத்தில் ஒரு கட்டி அல்லது முடிச்சு, கழுத்தைச் சுற்றி இறுக்கம், குரல் மாற்றங்கள், விழுங்குவதில் சிரமம், கழுத்தில் விரிவடைந்த நிணநீர் முனைகள், கழுத்து மற்றும் தொண்டையில் வலி ஆகியவை அடங்கும்.
பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு அறிகுறிகள் அவரது வாழ்நாளில் எந்த நேரத்திலும் தோன்றும். சரியான நேரத்தில் கவனித்தால், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதோடு தைராய்டு நோயை உருவாகும் வாய்ப்பையும் முற்றிலுமாக தவிர்க்கலாம்.
Yes
No
Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |