This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

உங்கள் பிரியமான உறவிற்கு சிறப்பான முறையில் வளைகாப்பினை ஏற்பாடு செய்வது எப்படி? (How to Arrange a wonderful baby shower for your loved one In Tamil)

Ceremonies
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 26, 2025
உங்கள் பிரியமான உறவிற்கு சிறப்பான முறையில் வளைகாப்பினை ஏற்பாடு செய்வது எப்படி? (How to Arrange a wonderful baby shower for your loved one In Tamil)
Likes5 Likes|
Read time10 min

ஒரு குடும்பத்தில் குழந்தை பிறக்கப் போகிற செய்தி வரும் போது, அவர்களிடையே ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. புதிதாக பெற்றோராக போகும் தம்பதிகளுக்கு மட்டுமின்றி, எந்தவொரு குடும்பத்திற்கும் கர்ப்பகாலம் என்பது மகிழ்ச்சிகரமான விஷயமாகும். இப்பேற்பட்ட சமயத்தில், தாயாக போகும் பெண்ணிடம் மிகுந்த கவனமும், அன்பும் காண்பிக்கப்பட வேண்டும். கர்ப்பவதியான பெண்ணை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நன்கு கவனித்துக் கொள்ளும் போது, அவரின் குழந்தைப்பேறு நல்ல முறையில் நடப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பெற்றோராக ஆகப் போகும் தம்பதிகளுக்கு இது சற்று பதற்றமான காலகட்டமாக தோன்ற கூடும். ஆயினும் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான நபர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில், இந்த காலகட்டம் எளிதாக மாறி விடும். மேலும் இந்த சமயத்தில் சிறு சடங்குகளும், விழாக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கர்ப்பகாலத்தின் போது மேற்கத்திய உலகத்தால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிக்கு பேபி ஷவர் என்று பெயர். இது குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்து கொண்டு தாயாக போகும் பெண்ணையும், பிறக்கப் போகும் குழந்தையையும் வாழ்த்துகின்ற ஒரு நிகழ்ச்சியாகும். இது புதிய வரவினை கொண்டாடுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், பேபி ஷவர் என்பது “வளைகாப்பு” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இது தாயை மையமாக வைத்துக் கொண்டு, அனைத்து உறவினர்களும், நண்பர்களும் சேர்ந்து தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் வேண்டிக் கொள்வது. தாயிற்கு அனைத்து வகையான பட்சணங்களும் வழங்கப்படுகிறது, மேலும் தாய் மற்றும் குழந்தைக்கு அன்பளிப்புகளும் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான குடும்பங்களில், வளைகாப்பு என்பது சிறப்பான முறையில் கொண்டாடப்படும் மிக முக்கியமான ஒரு விழாவாகவே கருதப்படுகிறது.

ஒரு குடும்பத்தில் வளைகாப்பு கொண்டாடப்படுவதன் அவசியம் என்ன? (What is the relevance of babyshower in a household In Tamil)

இந்திய குடும்பங்களில் பல்வேறு விதமான சடங்குகள், பூஜைகள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன, அப்போது குடும்ப நபர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பரிசுகள், பட்சணங்களுடன் கொண்டாடுவார்கள். இந்த விழாக்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தது. பொதுவாகவே இந்த விழாக்களில் சில மரபுகளும், சடங்குகளும் வீட்டினர் மற்றும் விருந்தாளிகளிடையே பின்பற்றப்படுகின்றன. மேலும் இதற்கடுத்து அறுசுவை உணவளிக்கும் விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது போன்ற ஒரு விழா தான் குடும்ப நபர் ஒருவர் கர்ப்பமாயிருக்கும் போது கொண்டாடப்படுகின்ற வளைகாப்பு விழா ஆகும்.

பொதுவாக, தாய் 7-8 மாதங்கள் கர்ப்பமாயிருக்கும் போது வளைகாப்பு விழா கொண்டாடப்படுகிறது. சடங்கு சம்பிரதாயங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்றவாறு வேறுபடலாம். உண்மையில் சொல்ல போனால், சில வீடுகளில், வளைகாப்பு நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இது குடும்பத்தில் பெண் உறுப்பினரின் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது, பொதுவாக மாமியாரால் ஏற்பாடு செய்யப்படும். இது தாயாக போகும் பெண்ணின் சகோதரி, ஒன்று விட்ட சகோதரி, தாய் அல்லது அத்தை போன்றோராலும் கூட ஏற்பாடு செய்யப்படும். அவர்கள் தாயாக போகும் பெண்ணிற்கு சிறப்பானதொரு விருந்தினை ஏற்பாடு செய்வார்கள், ஆரத்தி எடுத்து வாழ்த்துவார்கள், மேலும் குடும்பத்தின் பெரியவர்கள் அனைவரும் அப்பெண்ணிற்கு அன்பளிப்பு வழங்குவார்கள். பிறக்கப் போகும் குழந்தைக்கும் அன்பளிப்பு வழங்கப்படும்.

வளைகாப்பு விழாவிற்கு எப்படி ஏற்பாடு செய்வது? (How to arrange babyshower)

இந்திய விழாக்களை பொருத்த வரை அவற்றை ஏற்பாடு செய்யும் விதம் மிக அருமையாக இருக்கும். பொதுவாகவே இங்கு மக்கள் ஆக்கபூர்வமான முறையில் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு குடும்ப நபர்களிடம் ஆலோசனைகளை கேட்டு பெற்றுக் கொள்வார்கள். விழாக்களுடன் இணைந்திருக்கும் சடங்குகளையும் மேற்கொள்வதற்கான ஏற்பாடு இது. எனவே, வீட்டினில் வளைகாப்பு விழா நடத்துவதற்கு செய்யப்படும் அலங்காரம் பற்றிய யோசனைகள் தேவைப்படுமானால், அவர்களுக்கான ஆலோசனைகள் நிறையவே இருக்கிறது. நீங்கள் முதன் முதலாக வளைகாப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்கிறீர்கள் என்றால், நீங்கள் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்:

  • ஆடை அலங்காரம் (Decoration and attire)

பல வீடுகளில், வளைகாப்பு விழா மிக ஆடம்பரமாக திருமண விழா போலவே நடைபெறுகிறது. இதில் புடவைகள், நகைகள் மற்றும் சடங்குகளுக்கு தேவையான பிரத்யேகமான பொருட்கள் போன்றவை அடங்கும். எனவே நீங்கள் வளைகாப்பு விழாவிற்கு துணிமணிகள் வாங்க ஷாப்பிங் செல்லும் முன், வளைகாப்பு உடைகள் சம்பந்தமான யோசனைகளை பெறுவதற்கு வீட்டிலுள்ள பெரியவர்களிடம் பேசுவது நல்லது. பெரும்பாலான வீடுகளில் கூடுமானவரை மரபுவழியான ஆடைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். மேலும், நறுமண எண்ணெயை கொண்டு தாயாக போகும் பெண்ணிற்கு மேல் பூசி, பெண்கள் குழந்தையை காக்கும் தெய்வத்தை வணங்கி பாடல்கள் பாடுவார்கள். கடைசி நேரத்தில் வீண் அலைச்சலை தவிர்க்க இவற்றையெல்லாம் முன்கூட்டியே வாங்கி வைத்து விட வேண்டும்.

  • தாயின் மேல் கவனம் செலுத்துவது (Focus on the mother)

தாயாக போகும் பெண்ணின் மேல் அன்று நாள் முழுவதும் கவனம் செலுத்துவது மிக முக்கியமாகும். வளைகாப்பு விழா என்பது நீண்ட நேரம் எடுக்கக் கூடிய, பெரிய விழாவாக இருக்கலாம். ஒரு வேளை நீங்கள் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வந்தால், தாயை கவனிப்பதில் தான் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவரை சௌகரியமாகவும், நீர்ச்சத்து குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் அவர் உணவு உண்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அவருக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதனையும் சரிசெய்ய வேண்டும்.

  • உணவு மிக முக்கியம் (Food is important)

விசேஷங்கள் என்றாலே இந்தியர்கள் அனைவரும் விரும்பக் கூடிய ஒரு விஷயம் உண்டென்றால், அது உணவு தான். பொதுவாக வளைகாப்பு விழாவில் அறுசுவை உணவுடன் தாய்க்கும், குடும்பத்திற்கும் விருந்து படைப்பார்கள். இது புதிதாக தாயாக போகும் பெண்ணின் மேல் காட்டப்படும் அன்பு மற்றும் பரிவின் வெளிப்பாடாக கருதப்படுகிறது, அதாவது அவர் விரும்பும் எல்லா உணவுகளையும் அவருக்கு அளிக்க வேண்டும் என்பது. வளைகாப்பு விழாவிற்கு அன்பளிப்பு வழங்குவதற்கான யோசனைகளை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களானால், பொதுவாகவே தாயாக போகும் பெண்ணிற்கு பிடித்தமான பழங்கள், உலர் பருப்பு வகைகள் மற்றும் இதர உலர் உணவு வகைகள் போன்றவற்றை அளிப்பது தான் வழக்கமாக எல்லோரும் செய்து வருவது. குடும்ப உறுப்பினரின் சார்பாக சிறிய தொகுப்பாக இதனை தயார் செய்து விடலாம்.

  • சில பொழுதுபோக்கு அம்சங்களையும் அனைவரும் விரும்புவர் ( Some entertainment is good for everyone)

பெரும்பாலான இந்திய விழாக்கள் ஆடல், பாடலின்றி நிறைவுற்றதாக கருதப்படுவதில்லை. வளைகாப்பு விழாவில், மரபு ரீதியான விளையாட்டுக்களை விருந்தினரிடையே விளையாடி மகிழ்ந்து விழாவினை மகழ்ச்சியாக கொண்டாடலாம். வளைகாப்பில் மிகவும் விரும்பப்படும் விளையாட்டாக கருதப்படுவது, அந்தாக்ஷரி என்னும் விளையாட்டு மூலம் குழந்தையின் பெயரை தீர்மானிப்பது தான். பெரும்பாலும், இந்த விளையாட்டில் ஆலோசிக்கப்படும் பெயர்களே பின்னாளில் பெற்றோர்களால் தங்களின் குழந்தைகளுக்கு சூட்டப்படுகின்றன.

இப்போது எந்த மாதிரியாக வளைகாப்பு விழாவினை ஏற்பாடு செய்ய போகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும், எனவே அதற்கேற்றவாறு அன்பளிப்புகளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கு நாங்கள் சில ஆலோசனைகளை வழங்குகிறோம்.

வளைகாப்பிற்கு என்னென்ன அன்பளிப்பு வழங்கலாம்? (What gifts to buy for a baby shower In Tamil)

நீங்கள் தாயாக போகும் பெண்ணிற்கு நெருக்கமானவராக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு வளைகாப்பு விழா அன்பளிப்பு சம்பந்தமான நிறைய யோசனைகள் தேவைப்படும். உங்களுக்கு பிரியமான நபருக்கும், உங்கள் வாழ்வில் வரவிருக்கும் புது நபருக்கும் என்ன வாங்குவது என்பதில் உங்களுக்கு குழப்பமிருக்கலாம். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் சில ஆலோசனைகள் உங்களுக்கு உதவக் கூடும்:

  • தாய்க்கும், குழந்தைக்கும் ஆடைகள் (Clothes for mother and baby)

புதிதாக தாயாக போகும் பெண்கள் உடல்ரீதியாக பல மாறுதல்களை அடைவார்கள். இதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உண்மையில் சொல்ல போனால், பல பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல்ரீதியாக அடைகின்ற மாற்றத்தினால், கர்ப்பகாலத்திற்கு முன்பு அணிந்த உடைகளை அவர்களால் தற்போது அணிந்து கொள்ள முடியாது. எனவே புதிதாக தாயாக போகும் பெண்ணிற்கு புதிய ஆடைகள் வாங்கிக் கொடுப்பது ஒரு நல்ல யோசனையாகும். ஆகவே, நீங்கள் எளிதாக உடுத்திக் கொள்ள கூடிய நைட்டி போன்ற உடைகளையும், குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தை அணிந்து கொள்வதற்கு ஏற்ற உடைகளையும் அன்பளிப்பாக கொடுக்கலாம்.

  • ஸ்ட்ரோலர் (குழந்தை தள்ளுவண்டி) மற்றும் தொட்டில்கள் (Strollers and cribs)

புதிதாக குழந்தை பிறக்க போகிற வீட்டில் நிறைய பொருட்கள் வாங்க வேண்டியிருக்கும். புதிய ஃபர்னிச்சர், தொட்டில்கள், குழந்தைக்கான நாற்காலிகள், ஸ்ட்ரோலர்கள், மற்றும் வாக்கர்கள் (நடைவண்டி) போன்றவை வளைகாப்பு விழாவில் அளிக்கத்தக்க சிறந்த அன்பளிப்புகளாகும். இது அவர்களின் வீட்டில் வரப் போகும் புது வரவை அவர்களுக்கு நினைவுபடுத்துவது மட்டுமின்றி, அவர்களின் அப்போதைய தேவைக்கு உதவும் சின்னஞ்சிறிய பொருட்களாகவும் கருதப்படும்.

  • பேபி கேர் கிட்ஸ் (குழந்தை பராமரிப்பிற்கான பொருட்களின் தொகுப்பு) (Baby care kits)

வீட்டிற்கு வர போகிற ஒரு அழகான வரவாகவே குழந்தைகள் கருதப்படுகின்றன, எனினும் யதார்த்தமாக சொல்ல போனால், அவர்களுக்கான செலவுகள் மிக அதிகமாகும். மருந்துகள், குழந்தைக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆடைகள் போன்றவற்றை சரியான நேரத்தில் குழந்தைக்கு அளிப்பதன் மூலமே, குழந்தையின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் சரியான முறையில் பேண முடியும். தாயாக போகும் பெண்ணிற்கு நீங்கள் வளைகாப்பு விழாவை நடத்துகிறீர்கள் என்றால், இத்தகைய செலவுகளை நீங்கள் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களுக்கு உதவலாம். பேபி கிட்ஸ்-ஐ அன்பளிப்பாக தருவது அல்லது பிறக்க போகும் குழந்தையின் செலவுகளில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்வது என்பது ஒரு சிறப்பான, அறிவுப்பூர்வமான அன்பளிப்பாக இருக்கும்.

  • புதிய பெற்றோருக்கான கேர் பேக்கேஜ்கள் (பராமரிப்பு பொருட்கள் அடங்கிய தொகுப்பு) (Care packages for the new parents)

புதிதாக பெற்றோராக ஆகியிருக்கும் தம்பதியினரை நீங்கள் அறிந்திருக்கும் பட்சத்தில், அவர்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு சிக்கல்கள் நிறைந்ததாக மாறியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே வளைகாப்பு விழாவின் போது, பிறக்க போகும் குழந்தையோடு சேர்த்து அவர்கள் தங்கள் உடல்நலத்தையும் கவனித்துக் கொள்வதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்துங்கள். வளைகாப்பு விழாவிற்கு கேர் பேக்கேஜ் வழங்குவதற்கான நல்ல யோசனைகளை அறிந்து கொள்ளவும், அதன் மூலம் நீங்கள் பெற்றோருக்கான கேர் பேக்கேஜினை தயார் செய்து கொள்ளலாம். ஆடைகள், தனிப்பட்ட பொருட்கள், அக்சஸரீஸ் (துணைப்பொருட்கள்/accessories) அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் போன்றவை. கேர் பேக்கேஜ்கள் மூலம் ஆக்கபூர்வமான அன்பளிப்பினை தேர்வு செய்து நீங்கள் பரிசளிக்கலாம், மேலும் இவை மற்ற சாதாரணமான அன்பளிப்பிலிருந்து வேறுபட்டு நிற்கிறது.

வளைகாப்பு விழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்கு எந்தெந்த முறையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள், வளைகாப்பு விழாவை மேலும் சிறப்புறச் செய்வதற்கு வேண்டிய அலங்காரங்கள் செய்வதற்கான சில யோசனைகளை இப்போது நாம் பார்க்கலாம்.

வளைகாப்பு விழாவில் அலங்காரம் செய்வதற்கான யோசனைகள் (Decoration Ideas for a good babyshower In Tamil)

வளைகாப்பு விழா பொதுவாக மதிய நேரத்தில் நடைபெறும். பூஜை மற்றும் பிற சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் அங்கு கூட்டம் கூடியிருக்கும், அதற்கேற்றாற் போல் நீங்கள் முன்னமேயே எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே வளைகாப்பு விழாவை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான சில குறிப்புகள் இதோ:

  • புதியதொரு வரவினையும், நல்ல ஆரோக்கியத்தையும் வேண்டி கொண்டாடப்படும் நிகழ்ச்சியாதலால், மலர்களை கொண்டு அலங்காரம் செய்யவும்.

  • விழாவை எளிமையாகவே நடத்தினாலும், நேர்த்தியாக அமைத்துக் கொள்ளவும்.

  • தாயாக போகும் பெண்ணிடம் அவருடைய விருப்பம் என்னவென்று கேட்டுத் தெரிந்து கொள்ளவும். விழா கொண்டாட்டத்தில் அவரை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வதே உங்கள் கடமையாக இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே! - குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா செய்முறைகளும்,வழக்கங்களும்

இறுதி குறிப்புகள் (Final Notes)

வளைகாப்பு விழா என்பது ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையும், ஆரவாரத்தையும் அடிப்படையாக கொண்டது. எனவே, நீங்கள் இத்தகைய முக்கியமான விழாவினை குறித்து திட்டமிடுகிறீர்கள் என்றால், நீங்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை பிறப்பையும், பெண்மையையும் கொண்டாடுவதற்கு ஒன்றிணைவோம். ஏனெனில், வாழ்வினில் ஏற்படவிருக்கும் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளுக்கான ஒரு கொண்டாட்டமாக உள்ள வளைகாப்பு விழா, தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகும்.

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.