back search
Browse faster in app
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Baby Care Myths & facts arrow
  • குளிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டுமா?(Should You Massage Your Baby With Coconut Oil In The Winter Season in Tamil) arrow

In this Article

     குளிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டுமா?(Should You Massage Your Baby With Coconut Oil In The Winter Season in Tamil)

    Baby Care Myths & facts

    குளிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டுமா?(Should You Massage Your Baby With Coconut Oil In The Winter Season in Tamil)

    19 September 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    குளிர்காலத்தில் ஜலதோஷம் பிடிப்பது, வறண்ட சருமத்தை அனுபவிப்பது அல்லது வாரங்கள் முழுவதும் குளிரில் நடிங்குக்கொண்டிருப்பது போன்றவை கண்டிப்பாக இருக்கக்கூடிய ஒரு சீசன் ஆகும். எனவே, தாயும் சேயும் அதற்கேற்பத் தயாராக இருப்பது அவசியமாகிறது. மாறிவரும் வானிலை காரணமாக குழந்தைகள் வறண்ட சருமத்தை அனுபவிப்பது மிகவும் பொதுவானது. எனவே, இந்த காலகட்டத்தில் உடலுக்குத் தேவையான எண்ணெய்கள் மற்றும் கிரீம்களைப் பயன்படுத்துவது உலர்ந்த சருமம் அல்லது சருமம் உரிந்து வருதல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

    மசாஜ் அளிப்பது உங்கள் குழந்தைக்கு நன்மை தரக்கூடியதாக இருக்குமா?(Can massage benefit your baby in Tamil)

    • உங்கள் குழந்தைக்கு தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்வதால் அதில் உங்கள் குழந்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நன்மைகள் உள்ளன. குழந்தைகளை பராமரிப்பதில் குழந்தைளுக்கான மசாஜ் ஒரு பாரம்பரிய வழியாகக் கருதப்படுகின்றன. ஒரு நல்ல மசாஜ் உங்கள் குழந்தையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. அவர்களின் செரிமானத்தை மேம்படுத்துகிறது. அவர்களை கதகதப்பாக வைத்திருக்கிறது. மேலும், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அது தவிர, உங்கள் குழந்தை அவர்கள் வாழிக்கையின் இதம் தரும் இந்த மசாஜை கட்டத்தை கண்டிப்பாக என்ஜாய் செய்வார்கள் மேலும் இதில் கவலைப்பட ஒன்றுமில்லை.

    • குளிர்காலம் உங்கள் குழந்தைக்கு நீரிழப்பு, உலர்ந்த காற்றின் வெளிப்பாடு போன்ற சவால்களின் தொகுப்புடன் வருகிறது. அவற்றில் இருந்து உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பு தேவைப்படலாம். கடுமையான வானிலையின் காரணமாக உங்கள் குழந்தையின் சருமத்தைப் பாதுகாக்க நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்களில் ஒன்று, அவர்களுக்கு மசாஜ் செய்வதாகும். நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், உங்கள் குழந்தைக்கு மசாஜ் செய்ய நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் வகை.

    • ஒரு நல்ல மசாஜ் எண்ணெய் தேர்ந்தெடுபதில் தேங்காய் எண்ணெய்க்கு முன்னுரிமை அளிக்கலாம். இது உங்கள் குழந்தைக்கு பல வழிகளில் மிகவும் சாதகமானதாக மாறும். நீங்கள் தொடர்ந்து இந்தக் கட்டுரையைப் படிப்பதன் மூலம் தேங்காய் எண்ணெயின் நன்மைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி மேலும் அறியலாம்.

    உங்கள் குழந்தைக்கு தேங்காய் எண்ணெய்யால் மசாஜ் செய்வது நல்லதா? (Is it good to massage your baby with coconut oil in Tamil)

    ஆம், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி உங்கள் குழந்தைக்கு மசாஜ் செய்யலாம். இது குழந்தைகளின் மென்மையான மற்றும் சென்சிடிவான சருமத்திற்கு ஏற்றது மற்றும் அவர்களின் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், நீரேற்றம் உடையதாகவும் ஆக்குகிறது. மிகவும் அரிதான தோல் வகைகள் பொதுவாக தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு இணக்கமாக இல்லை என்பதால் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிப்பதைக் கவனியுங்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நல்ல தரமான மாற்று மசாஜ் எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.

    குளிர்காலத்தில் உங்கள் குழந்தை தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் ஏற்படும் சில நன்மைகள் இங்கே உள்ளன:

    தேங்காய் எண்ணெயால் உங்கள் குழந்தைக்கு மசாஜ் செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் (Benefits of massaging your baby with coconut oil in Tamil)

    • மிருதுவான ஈரப்பதம் (Smooth moisture)

    தேங்காய் எண்ணெய் குழந்தைகளின் உலர்ந்த மற்றும் செதில் தோலை நீரேற்றம் செய்ய உதவுகிறது. இது ஃப்ளாகினிஸைக் குறைக்க உதவுகிறது. மற்றும் அவர்களின் சருமத்தின் pH சமநிலையை பராமரிப்பதன் மூலம் அவர்களின் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கிறது. இது இயற்கையான பொருட்களால் ஆனது என்பதால், இது குழந்தைகளின் எளிதில் சேதமடையக்கூடிய தோலுக்கு மிகவும் ஏற்றது. அதோடு, நீங்கள் ஒரு புகழ்பெற்ற பிராண்டிலிருந்து தேங்காய் எண்ணெய்யை வாங்குவது அவசியமாகும். தயாரிப்பை வாங்குவதற்கு முன் எப்போதும் லேபிளைச் சரிபார்க்கவும்.

    • பாக்டீரியாவை எதிர்க்கக்கூடிய பண்புகள்(Antibacterial properties)

    தேங்காய் எண்ணெய்யில் பாக்டீரியாவை எதிர்க்கக்கூடிய பண்புகள் உள்ளன. அதோடு, பல்வேறு தோல் கண்டிஷன்களுக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. இது குழந்தையின் தோல் மற்றும் சுற்றுச்சூழலினால் ஏற்படக்கூடிய தீங்கு விளைவிக்கும் மாசுபடுத்திகளுக்கு இடையில் ஒரு தடையாக செயல்படுகிறது. சிரங்கு, டயபரால் ஏற்படும் தடிப்புகள் மற்றும் இது போன்ற பல்வேறு தோல் நோய்த்தொற்றுகளை குணப்படுத்தவும் தேங்காய் எண்ணெய் உதவியாக இருக்கும். உங்கள் குழந்தையின் தோலில் தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்துவதற்கு முன்பு, முன்னெச்சரிக்கையாக உங்கள் குழந்தையின் தோல் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.

    • முடி வளர்ச்சிக்கு நல்லது (Good for hair growth)

    தேங்காய் எண்ணெய்யானது உங்கள் குழந்தையின் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. இது உச்சந்தலையை ஈரப்பதமாக்குகிறது மற்றும் பொடுகைக் குறைக்கிறது. இது ஒட்டுமொத்தமாக உங்கள் குழந்தையின் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு மற்றும் பிற சிக்கலான கண்டிஷன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு நல்ல தரமான தேங்காய் எண்ணெய் நிச்சயமாக இந்த உச்சந்தலையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் அதோடு, முடி வளர்ச்சிக்கும் உதவும்.

    தங்கள் குழந்தைக்கு தேங்காய் எண்ணெயில் ஒவ்வாமை உள்ளதா? இல்லையா? என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது?(Is your child allergic to coconut oil? Isn't it? How to know in Tamil)

    • தேங்காய் எண்ணெய்யானது பயன்படுத்துவதற்கு மிகவும் பாதுகாப்பானது என்றாலும், ஒரு சில குழந்தைகள் மட்டுமே தேங்காய் எண்ணெய் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, நீங்கள் மசாஜ் செய்ய எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் குழந்தையின் சுகாதார வழங்குநரை அணுகுவது சிறந்தது.

    • உங்கள் குழந்தைக்கு தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்திய உடனேயே தனித்துவமான அறிகுறிகள் வெளிப்பட்டால், உங்கள் குழந்தை தேங்காய் எண்ணெய் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை எளிதில் அறிந்துகொள்ளலாம். அவற்றில் குமட்டல், படை நோய், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை சில அறிகுறிகளில் அடங்கும். இது தவிர, உங்கள் குழந்தைக்கு தடிப்புகள் அல்லது கடும் ஒவ்வாமை ஏற்படலாம். இது உயிருக்கு ஆபத்தான நிலை ஆகும். இதன் விளைவாக சுவாசப் பிரச்சினைகள் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

    • உங்கள் குழந்தைக்கு மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்வதை நிறுத்துங்கள். தீவிர சந்தர்ப்பங்களில், உடனடியாக உங்கள் குழந்தையின் மருத்துவரை அணுகவும்.

    இதையும் படிக்கலாமே! - எடை இழப்பு மற்றும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் (பிரசவ தழும்புகள்): உங்களுக்கான விரைவான வழிகாட்டி(Weight Loss & Stretch Marks: Your Quick Guide In Tamil)

    தங்கள் குழந்தைக்கு தேங்காய் எண்ணெய் ஒவ்வாமை இருந்தால் ஒருவர் பயன்படுத்தக்கூடிய பிற மாற்று எண்ணெய்கள் என்னென்ன?(What are other alternative oils that one can use if your child is allergic to coconut oil in Tamil)

    உங்கள் குழந்தைக்கு தேங்காய் எண்ணெய்யில் ஒவ்வாமை இருந்தால், அதற்கு பதிலாக கோல்டு பிரஸ்டு ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். இந்த கோல்டு பிரஸ்டு எண்ணெய் எந்த வகையான ஒவ்வாமையையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. தவிர, உங்கள் குழந்தையின் சென்சிட்டிவான ஆனால் மென்மையான சருமத்திற்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இந்த பேபி எண்ணெய்யை உங்கள் குழந்தையின் தோலில் நேரடியாக தடவலாம்.

    உங்கள் குழந்தைக்கு வறண்ட அல்லது சரும எரிச்சல் இருந்தால், ஆலிவ் எண்ணெய் அதற்கு ஒரு சிறந்த மசாஜ் எண்ணெயாக இருக்கும். கொழுப்புகளைத் தவிர, கோல்டு பிரஸ்டு ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்ற பொருட்களும் உள்ளன.

    சென்சிட்டிவான சருமம் கொண்ட குழந்தைகளுக்கு மைலோ கோல்டு பிரஸ்டு தேங்காய் எண்ணெய் ஏன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது?(Why is Mylo Cold Pressed Coconut Oil a great choice for babies with sensitive skin in Tamil)

    சருமத்திற்கான மைலோவின் கோல்டு பிரஸ்டு தேங்காய் எண்ணெய்யில் பாக்டீரியா மற்றும் பூஞ்சையை எதிர்க்கும் பண்புகள் உள்ளன, அவை உங்கள் குழந்தையின் தோலுக்கு மிகவும் ஏற்றது. அது மட்டுமின்றி, இது ஒரு நல்ல இயற்கை மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகிறது. இந்த குழந்தைகளுக்கான எண்ணெய்யைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், அதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது மற்றும் டயபரால் ஏற்படும் தடிப்புகளையும் தடுக்கலாம். உண்மையில், தேங்காய் எண்ணெய்யில் உள்ள பல நன்மைகள் பல தாய்மார்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

    உங்கள் குழந்தையின் உச்சந்தலையில் வறண்டு காணப்பட்டால், மைலோ கோல்டு பிரஸ்டு தேங்காய் எண்ணெய்யைத் தேய்த்தால் மிகவும் பலனளிக்கக் கூடியதாக இருக்கும். இந்த எண்ணெய்யில் வாசனை மற்றும் பிபிஏ எதுவும் சேர்க்கப்படவிலை. உண்மையில், நீங்கள் இரண்டாவது யோசனைக்கே செல்ல வேண்டாம், இன்றே உங்கள் கார்ட்டில் அதை சேர்த்துவிடுங்கள்!

    முடிவுரை (conclusion)

    தேங்காய் எண்ணெய்யானது நிச்சயமாக தங்கள் குழந்தைகளுக்கு ஓய்வை அளிக்கவும், நன்மை பயக்கும் மசாஜ் செய்யவும் விரும்பும் தாய்மார்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். இருப்பினும், நீங்கள் ஒரு நல்ல தரமான எண்ணெய்யை வாங்க விரும்பலாம். எனவே அதில் இயற்கை பொருட்கள் மட்டுமே உள்ளன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    குழந்தைகளுக்கான மைலோவின் கோல்டு பிரஸ்டு எக்ஸ்ட்ரா விர்ஜின் தேங்காய் எண்ணெய் உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு சரியான தேர்வாகும். இது வைட்டமின் ஈ நிறைந்துள்ளது மற்றும் ஊட்டச்சத்துக்களின் அற்புதமான சமநிலையுடன் 100% இயற்கையானது, இது உங்கள் குழந்தையின் முடி மற்றும் சருமத்திற்கு ஏற்றதாக உள்ளது.

    Tags :

    coconut oil in tamil, coconut oil for babies in tamil, oil massage for babies in tamil, best coconut oil in tamil, best coconut oil for babies in tamil, dry skin for babies in tamil, skin allergies for babies in tamil

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    chandrikaiyer

    chandrikaiyer

    Read from 5000+ Articles, topics, verified by MYLO.

    Download MyloLogotoday!
    Download Mylo App

    Related Questions

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    100% Secure Payment Using

    Stay safe | Secure Checkout | Safe delivery

    Have any Queries or Concerns?

    CONTACT US
    +91-8047190745
    shop@mylofamily.com
    certificate

    Made Safe

    certificate

    Cruelty Free

    certificate

    Vegan Certified

    certificate

    Toxic Free

    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.

    All trademarks are properties of their respective owners.2017-2023©Blupin Technologies Pvt Ltd. All rights reserved.