Diet & Nutrition
18 September 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
மிகவும் பிரபலமான பழமான நட்சத்திர பழம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. எனினும், கர்ப்ப காலத்தில் ஸ்டார் பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்ற கேள்வி இன்றும் நிலவி வருகிறது. இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவு நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆனால் இதைப்பற்றி பேசுவதற்கு முன், உங்கள் உணவு முறையில் எந்த ஒரு உணவை சேர்க்கும் முன்பு மருத்துவரிடம் ஆலோசிப்பது அவசியம். இறுதியில், கர்ப்பமாக இருக்கும் போது, சரியான உணவை சாப்பிடுவது முக்கியமானது.
கர்ப்ப காலத்தில் ஸ்டார் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் சில பொதுவான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அபாயங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
நட்சத்திர பழம் என்பது ஐந்து கோணம் கொண்ட மெழுகு போன்ற வெளிப்புற அமைப்பில் இருக்கும் மஞ்சள்-பச்சை நிற பழமாகும். இது கேரம்போலா என்றும் அழைக்கப்படுகிறது. அவர்ஹோவா என்ற மரத்தில் காய்க்கும் இந்த அற்புதமான பழம் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டுள்ளது. நட்சத்திர பழத்தில் ஏராளமான ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஸ்டார் பழத்தில் வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், கரோட்டினாய்டு சேர்மங்கள், கரிம அமிலங்கள், தாதுக்கள், மற்றும் பிற பொருட்கள் உட்பட எக்கச்சக்கமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இதன் காரணமாக ஸ்டார் பழம் கர்ப்ப காலத்திற்கு ஏற்ற பழமாக அமைகிறது.
இதில் வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், மற்றும் கரிம அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கும், எளிமையான பிரசவத்திற்கு அவசியமானவை.
கர்ப்ப காலத்தில் ஸ்டார் பழம் சாப்பிடுவதன் நன்மைகள், மற்றும் அதன் ஊட்டச்சத்து மதிப்பு குறித்து மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் நுங்கு: நன்மைகள் மற்றும் அபாயங்கள்(Ice Apple or Nungu During Pregnancy: Benefits And Risks In Tamil)
கர்ப்ப காலத்தில் ஸ்டார் பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இதன் அதிக ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக கர்ப்பிணி பெண்களின் உணவில் நட்சத்திர பழத்தை சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. இப்பழத்திலுள்ள தாதுக்கள், வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கர்ப்ப காலத்தின் போது உங்களுக்கு தேவையான வலிமையை அளிக்கிறது.
கர்ப்பமாக இருக்கும் போது ஸ்டார் பழம் சாப்பிடுவது தொண்டை மற்றும் வாய் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. இந்த பழமானது மேலும் சில உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. நட்சத்திர பழத்தில் அதிக அளவில் ஆக்சலேட் உள்ளதால், உங்களுக்கு சிறுநீரகம் சார்ந்த நோய்கள் இருந்தால் இதனை சாப்பிடும் முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது.
நட்சத்திர பழம் என்பது அதன் இனிப்பு கலந்த புளிப்பு சுவைக்காக பல கர்ப்பிணி பெண்களால் விருப்பப்படும் ஒரு உணவாகும். இத்தகைய சிறப்பியல்பு தன்மை வாய்ந்த பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் கர்ப்ப காலத்தில் நட்சத்திர பழத்தை ஏன் சாப்பிட வேண்டும் என்பது குறித்து ஆராய்வோம்:
பெரும்பாலான கர்ப்பிணி பெண்களுக்கு மலச்சிக்கல் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். நட்சத்திர பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த ஆரோக்கியமான பழம் வயிற்றுப்போக்கு பிரச்சினைக்கும் தீர்வாக அமைகிறது. எனினும், செரிமான பிரச்சினைகளுக்கு நட்சத்திர பழம் சாப்பிடலாமா என்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசிப்பது மிகவும் அவசியம்.
நட்சத்திர பழத்தை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்க உதவும். கூடுதலாக, அதிக கொலஸ்ட்ரால் அளவால் உடலில் ஏற்படும் பிரச்சினைகளையும் தடுக்கிறது.
ஸ்டார் பழம் வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரமாகும். இது போன்ற ஊட்டச்சத்துக்கள் கர்ப்ப காலத்தில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பங்கு வகிக்கிறது.
நட்சத்திர பழத்தில் புரதம், வைட்டமின் சி, மற்றும் கால்சியம் ஆகியவை உள்ளது. இவை ஒன்றிணைந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு ஒரு கவசமாகவும், சுற்றுச்சூழலில் இருந்து ஏற்படும் நோய்களில் இருந்து குழந்தையை பாதுகாக்கவும் செய்கிறது.
கர்ப்பிணி பெண்களில் அடிக்கடி இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது பொதுவான ஒன்று. நட்சத்திர பழத்தில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் காரணமாக இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், சீராக வைக்கவும் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் நட்சத்திர பழம் சாப்பிடும்படி மருத்துவர்கள் பரிந்துரைப்பதற்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஆன்டி ஆக்சிடன்டுகள் இதய ஏற்படுவதில் இருந்து ஓருவரை காப்பாற்றுகிறது. கூடுதலாக, இது ஒருவரை இளமையாக வைத்திருக்கிறது.
நட்சத்திர பழத்தில் உள்ள சில கூடுதல் மூலப் பொருட்களான எப்பிகாடெசின், காலிக் அமிலம், மற்றும் குவர்செடின் போன்றவை இப்பழத்தை மேலும் ஆரோக்கியமானதாக மாற்றுகிறது. இவை ஆரோக்கியத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சில தரமான ஆன்டி ஆக்சிடன்டுகள் ஆகும். நட்சத்திர பழத்தில் உள்ள சேர்மங்கள் எலிகளில் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதாகவும், ஃபாட்டி லிவர் நோய் ஏற்படுவதைத் தடுப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, எலிகளில் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது என்பது குறித்த ஆராய்ச்சியும் நடத்தப்பட்டது.
நட்சத்திர பழத்தில் உள்ள அதிக ஆக்சலேட் அளவு காரணமாக ஒரு சிலர் எதிர்மறையான விளைவுகளை அனுபவிக்கின்றனர். இதன் காரணமாக, சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் நட்சத்திர பழம் மற்றும் அதன் சாறு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது இதனை சாப்பிடும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.
ஏற்கனவே சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்ந்து நட்சத்திர பழம் சாப்பிட்டு வந்தால் அது சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். இதனுடன் சேர்ந்து நட்சத்திர பழம் நச்சுத்தன்மையும் உண்டாகும். மேலும் இது குழப்பம், வலிப்பு, மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும் நரம்பு சார்ந்த சிக்கல்களை ஏற்படுத்தலாம். மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சாப்பிடும் நபர்களும் கவனமாக இருத்தல் அவசியம். பப்ளிமாஸ் பழத்தைப் போலவே நட்சத்திர பழமும் ஒரு மருந்து உங்கள் உடலால் எவ்வாறு வளர்சிதை மாற்றம் அடைகிறது மற்றும் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் பாதிக்கலாம்.
நட்சத்திர பழம் சுவை மிக்கது மற்றும் கர்ப்ப காலத்தில் நட்சத்திர பழம் ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது என்பதை நாம் முடிவு செய்யலாம். இதில் குறைவான கலோரிகள் இருந்தாலும், இது ஆன்டி ஆக்சிடன்டுகள், நார்ச்சத்து, மற்றும் வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக உள்ளது. இந்த பழத்தை சாப்பிடும் முன், சிறுநீரக கோளாறுகள் அல்லது மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மருந்து எடுத்துக் கொள்ள இருக்கும் நபர்கள் கட்டாயமாக மருத்துவரிடம் பேச வேண்டும். பெரும்பாலான நபர்களுக்கு, நட்சத்திர பழம் மிகவும் சுவைமிகுந்த மற்றும் ஆரோக்கியமான கூடுதலாகவே அமைகிறது.
Reference
1. Lakmal K, Yasawardene P, Jayarajah U, Seneviratne SL. (2021). Nutritional and medicinal properties of Star fruit (Averrhoa carambola): A review. Food Sci Nutr.
What is star fruit in Tamil, Is it safe to eat star fruit during pregnancy in Tamil, Benefits of eating star fruit in Tamil, What are the risks of eating start fruit during pregnancy in Tamil, Star fruit during pregnancy in English, Star fruit during pregnancy in Hindi, Star fruit during pregnancy in Telugu, Star fruit during pregnancy in Bengali
Yes
No
Written by
aviraparaiyar
aviraparaiyar
கர்ப்ப காலத்தில் தேன்: தொடர்புடைய நன்மைகள் & தீமைகள் | Honey During Pregnancy: Benefits & Effects In Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
கர்ப்ப காலத்தில் பட்டர்ஃபிளை எக்சர்சைஸ் செய்வதால் கிட்டும் 11 நன்மைகள் | 11 Benefits Of Butterfly Exercise In Pregnancy In Tamil
பாஸ்தா டூரிங் ப்றேஞானசி | பெனிபிட்ஸ் & ரிஸ்க்ஸ் | Pasta During Pregnancy | Benefits & Risks in Tamil
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கான டாப் 10 செயல்பாடுகள்| Top 10 Baby Brain Development Activities In Tamil
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
Feeding Bottle | Grooved Nipple | Fruit Feeder | Manual Breast Pump | Baby Sipper | Skin | SHOP BY CONCERN | Dry & Dull Skin | Anti Ageing | Skin brightening | Acne & Blemishes | Skin hydration | Dark Circles | Blackheads & Pimples | Skin Moisturizer | Skin Irritation | Shop By Ingredient | Kumkumadi | Ubtan | Vitamin C | Cloth Diaper | Maternity dresses | Stretch Marks Kit | Stroller |