Back Pain
Updated on 16 February 2023
கருவுற்ற ஆரம்பத்தில முதுகு வலி ஏற்படுவது என்பது மிக சாதாரணமான அனைவருக்கும் இருக்கும் ஒன்று தான். கர்ப்பகாலத்துல பெண்களால் எதிர்கொள்ளப்படுகின்ற பிரச்சனைகள் அனைத்தையும் விட முதுகு வலி மிகவும் கடினமான ஒன்று. கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் ஏற்படுகிற முதுகு வலி மற்றும் தசைப்பிடிப்பு பெண்களை அவர்களின் மாதவிடாய் நாட்களில் இருப்பது போல உணர வைக்கும்.பின்னர் அவர்களின் வயிறு பெரிதாகும் போது சற்று அதிக முதுகு வலி ஏற்படலாம்.
கர்ப்பக்காலத்தில் , ஒரு பெண்ணுடைய எடை தோராயமாக 11-13 கிலோ வரை அதிகரிக்கும். இது அவர்களது முதுகு தண்டு, இடுப்பு போன்ற பகுதிகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
எடை அதிகரித்தல், கர்ப்பப்பையின் அளவு அதிகரித்தல், பனிக்குடம் , குழந்தை மற்றும் கனமான நஞ்சுக்கொடி ஒரு பெண்ணின் உடலின் மையத்தையே மாற்றுகிறது. இந்த மாற்றம் அவர்களது உடலின் வடிவத்தை மாற்றும் அதன் காரணத்தினால் தான் கர்ப்பக்காலத்தில் முதுகு வலி ஏற்படுகிறது.
வளரும் குழந்தைக்கு ஏற்ப கர்ப்பப்பை பெரிதடைகிறது. இப்படி விரிவடைவதினால், மலக்குடல் மற்றும் வயிற்று தசைகளின் அடுக்குகள் விலா எழும்பு முதல் பூப்பென்பு வரை விரிவடைந்து ஒன்றுடன் ஒன்று இணையாக மாறுகிறது. இது கர்ப்பக்காலத்தில் முதுகு வலியை மேலும் மோசமடையச்செய்கிறது.
கர்ப்பக்காலத்தில் ஏற்படும் கவலை மற்றும் மனஅழுத்தம் முதுகு வலியை அதிகரிக்கும் அல்லது தசைப்பிடிப்பை ஏற்படுத்தும்.
கர்ப்பக்காலத்தில் சுரக்கும் தளர்ந்த ஹார்மோன்களினால் இடுப்பு பகுதியிலிருக்கும் தசைநார்கள் மற்றும் மூட்டுகள் தளர்வடைகின்றன. இதனால் முதுகெலும்பை ஆதரிக்கும் தசைநார்கள் தளர்வடைகின்றன, இது கர்ப்பகாலத்தின் ஆரம்ப நிலையில் முதுகு வலியை ஏற்படுத்தும்.
கர்ப்பக்காலத்தில் முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெற என்னதான் நீங்கள் பல முறைகளை முயற்சி செய்தாலும், மகப்பேறுக்கு முன்பு பாரம்பரியமாக செய்யப்பட்டுவரும் மசாஜ் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் கருதப்படுகிறது. வலியிலிருந்து நிவாரணம் பெறுவது மட்டுமின்றி மகப்பேறுக்கு முன்பு செய்யப்படும் மசாஜ் மனஅழுத்தத்தையும் கவலையையும் குறைக்கிறது. இருப்பினும், கர்ப்பக்காலத்தின் உங்கள் முதல் மூன்று மாதத்தில் நீங்கள் எண்ணெய் மசாஜை தவிர்ப்பது நல்லது. மகப்பேறுக்கு முன்பு சிறந்த எண்ணெய் உபயோகித்து செய்யப்படும் மசாஜ் இருகியிருக்கும் தசைகளை தளர்வடைய செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது, மேலும் முதுகு வலியை குறைக்கிறது. மகப்பேறுக்கு முன்பு செய்யப்படும் மசாஜின் போது கர்ப்பக்காலத்தில் முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெற தன்வந்த்ரம் எண்ணையை பயன்படுத்துவதே சிறந்ததாக கருதப்படுகிறது.
ஆயுர்வேதாவில் மகப்பேறுக்கு முன்பு தன்வந்த்ரம் எண்ணை மூலம் செய்யப்படும் மசாஜ்ஜே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இது கர்ப்பக்காலத்தில் முதுகு வலியிலிருந்து விரைவான நிவாரணத்தை வழங்குகிறது. இது தசை பிடிப்பு, அழற்சி மற்றும் மூட்டுகளின் விறைப்பு தண்மை போன்றவற்றிற்கு மிகுந்த பலனளிக்கக்கூடியது. முக்கியமாக, இதில் ஹார்மோன்களை சீர்செய்து, உங்களுக்கு கர்ப்பக்காலத்தின் போது ஏற்படும் முதுகு வலியின் அதி முக்கிய காரணிகளான கவலை மற்றும் மனஅழுத்தத்திலிருந்து நிவாரணம் தரும் அஸ்வகந்தா, ஷத்தாவரி, ஆம்லா மற்றும் மாட்டு பால் போன்ற பல இயற்கையான ஆயுர்வேதிக் பொருட்கள் நிறைந்திருக்கின்றன. அதுமட்டுமின்றி, இது குழந்தைபேறுக்கு ஏதுவாக உங்கள் தசைகளை வலுப்படுத்துகிறது.
நம்மில் பெரும்பாலானோர் முதுகு வலி ஏற்பட்டவுடனேயே நாடுவது வலி மாத்திரைகள் தான். இருப்பினும், குறிப்பாக நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போதோ அல்லது நீங்கள் குழந்தை பெற்றெடுத்த பின்னரோ அது பாதுகாப்பான வலியாக கருதப்படுவதல்ல. எனவே, உங்களுக்கு கர்ப்பக்காலத்தில் முதுகு வலி ஏற்பட்டால் அதன் நிவாரணத்திற்கு வேறென்ன வலிகள் இருக்கிறது?
நீங்கள் ஓய்வாக இருக்க மசாஜ் செய்யவது தவிர்த்து, இங்கு சில மாற்றங்களை செய்வதன் மூலம் மற்றும் சில பழக்கங்களை மாற்றுவதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். மருந்து மாத்திரைகள் இல்லாமல் உங்கள் கர்ப்பக்கால முதுகு வலியை போக்கும் தலை சிறந்த இதோ வழிகள் உங்களுக்காக.
கர்ப்பமாக இருக்கும் பெரும்பாலான பெண்கள் அவர்கள் வயிற்று பகுதியில் அதிகரிக்கும் எடையின் காரணத்தினால் அதிலிருந்து சற்று நேரம் விடுப்பட பின்புறம் சாய்வது சகஜம். இது பின்பகுதியிலிருக்கும் தசைகளில் அதிகளவிலான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதன் விளைவினால் இடுப்பு மற்றும் கால்களில் வலி அதிகரிக்கும். கர்ப்பகாலத்திற்கான சிறந்த நிலை என்னவெனில் நீங்கள் நிமிர்ந்து நின்று தோல்களை பின்னோக்கி இழுத்து, நெஞ்சை நிமிர்த்தி உங்கள் வசதிக்கேற்ப கால்களை அகலமாக விரித்து நிற்பது உங்கள் வலியை போக்கும் நிவாரணமாக இருக்கும். கூடுதலாக, நீங்கள் அதிக நேரம் உட்காருதலோ அல்லது நிற்பதோ கூடாது. ஒருவேளை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உங்கள் கால்களை ஸ்டூல் மீது உயர்த்தி வைக்கவும்.
ஒருவேளை தூக்கவேண்டியிருந்தால், தோப்பு கரணம் போடுவது போல் உட்கார்ந்து முதுகின் பலமின்றி உங்கள் கால்களின் பலத்தை பயன்படுத்தி பொருளை தூக்கவும்.
வளைவுகளுக்கு ஆதரவாக இருக்கும் குறைந்த ஹீல் ஆதரவளிக்கும் ஷூக்களை தேர்வு செய்யவும். ஹை ஹீல்ஸ் உங்கள் இடுப்பு மற்றும் கால்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதால் அதை தவிர்ப்பது நன்று. அதுமட்டுமின்றி, நீங்கள் உங்கள் வயிற்றுக்கு பொருந்தும் மென்மையான பெரிதான எலாஸ்டிக்குளை கொண்ட மெட்டர்னிட்டி பேண்ட்ஸ் மற்றும் ஸ்கர்ட்ஸை அணியலாம்.
நீங்கள் அன்றாடம் செய்யும் பழக்கவழக்கங்களுடன் லேசான உடற்பயிற்சியையும் சேர்க்குமாறு உங்கள் மருத்துவரிடம் கேட்பது. அதாவது நடைப்பயிற்சி, நீச்சல் மற்றும் உங்கள் இடுப்பு மற்றும் கால்களை வலுப்படுத்த செய்யப்படும் ஸ்ட்ரெட்சிங் போன்ற எளிமையான உடற்பயிற்சிகளை செய்வதினால் கர்ப்பக்காலத்தில் முதுகு வலியை குறைக்கலாம். மகப்பேறுக்கு முன்பு செய்யப்படும் யோகா மற்றும் கெகல் போன்ற பயிற்சிகளை செய்து உடலில் நீர்சத்துக்கள் தொடர்ந்து ஊடுவதினால் தசைகள் இருக்கமடையாமல் தவிர்த்து அசௌகரியத்தையும் தவிர்க்கலாம்.
உங்கள் பின்புறம் படுப்பதை தவிர, ஒருபக்கமாக படுக்க முயற்சிப்பது நல்லது. உங்கள் முட்டி, கால்கள் மற்றும் இடுப்பிற்கு ஆதரவாக இருக்கும் சிறந்த தலையணைகளை உபயோகிக்கலாம். மேலும், உங்கள் இடுப்பை ஆதரிக்கும் சிறந்த தரம்வாய்ந்த மேட்ரஸை உபயோகிப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். இது கர்ப்பக்காலத்தில் உங்கள் இடதுப்பக்க முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும்.
சில பெண்கள் நியோரோபதி, கலர் தெரபி, ரப் தெரபி, கிரோபிராக்டிக் சிகிச்சை மற்றும் அக்குபஞ்சர் போன்ற மாற்று சிகிச்சைகள் மூலம் கர்ப்பக்கால முதுகு வலிக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஒருவேளை நீங்களும் இம்மாதிரியான விருப்பங்களை தேர்வு செய்ய விரும்பினால் உங்கள் மருத்துவரிடம் கலந்தோலோசிப்பது நன்று.
கர்ப்பக்காலத்தின் ஆரம்பத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதும் முதுகு வலியை குறைக்க மற்றொரு சிறந்த வலியாகும், அதுமட்டுமின்றி இது உங்கள் தசைகளுக்கு குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.
மூட்டுகள், முதுகு மற்றும் தசைகளில் உடனடி வலி நிவாரணம் வழங்கும் சோர்வுற்ற தசைநார்கள் மற்றும் பிணைப்பு தசைநார்களுக்கு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கிறது. எலக்ட்ரானிக் ஹாட் பேக் தண்ணீரற்றது மற்றும் பயன்படுத்த எளிதானது. அதன் நியோபிரீன் அடிப்படையிலான ஜெல் தொழில்நுட்பம் அதிக நேரம் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, எனவே, தசைப்பிடிப்பைக் குறைத்து, அதை தடுக்கிறது, நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க செய்து மீண்டும் நீங்கள் வலியின்றி இயங்க உதவுகிறது.
உட்கார்ந்திருக்கும் போது, நிற்கும் போது அல்லது நெடுந்தூரம் துணையுடன் நடந்து செல்தல், இடுப்பு வளையத்தை சுற்றியிருக்கும் தசைகள், கர்ப்பக்காலத்தில் ஏற்பட்ட கடும் முதுகு வலியிலிருந்து விடுப்பட மெட்டர்னிட்டி பெல்ட் போட்டுக்கொள்ள வேண்டும். அதேப்போல நீண்ட நாட்களுக்கு பெல்ட்டை அணியக்கூடாது, ஏனெனில்
நீங்க உங்க முதுகு வலியிலிருந்து விடுபட எந்த முறை உபயோகித்தாலும் உங்கள் மகப்பேறு மருத்துவர்ட்ட ஒருமுறை கலந்துரையாடிட்டு செய்யறது சாலச்சிறந்தது.
இதையும் படிக்கலாமே :https://mylofamily.com/ta/article/-195737
Yes
No
Written by
aviraparaiyar
aviraparaiyar
Water Breaking During Pregnancy: All That You Need to Know
Is It Safe To Wear A High Waisted Panty For A Long Duration During Pregnancy?
Why do you need to wear a high waisted panty during pregnancy?
How to Hold a Newborn Baby
Why do you need to burp your baby and what are the best positions to burp your baby?
An Expecting Mother's Guide to Glucose Tolerance Test (GTT)
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Trusted by 10+ million young parents Mylo is India’s #1 Pregnancy & Parenting App. Mylo app will guide you through your whole parenting journey. Download now
Anti Acne Products | Dry Skin Products | Oily Skin Products | Anti Ageing Products | Blackheads Face Scrub | Dark Circle Products | Blemishes Cream | Skin Care Products - SHOP BY RANGE | Kumkumadi Range for Skin | Ubtan Range for Skin | Vitamin C Range for Skin | Tea Tree Range for Skin | Aloe Vera Range for Skin | Coconut Range for Skin | Skin Care Products - COMBOS | Kumkumadi Combo | Ubtan Combo | Vitamin C Combo | Hair Care | Hair Oil |