Getting Pregnant
Updated on 21 February 2023
பெண்களுக்கான கருத்தடை உறை என்பது உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு பிறப்புறுப்பு அல்லது ஆசனவாயில் வைத்துக் கொள்ளப்படும் ஒரு நெகிழ்வான பை ஆகும். பெண்களுக்கான கருத்தடை உறை, பால்வினை நோய்கள் உடலைத் தாக்குவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
அத்துடன், தேவையற்ற கருத்தரிப்பதையும் தடுக்க உதவுகிறது. மெல்லிய சிலிக்கான் பூசப்பட்ட நைட்ரைட் அல்லது பாலியூரிதீன் உறைகள் ஆண்களின் பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் விந்து திரவத்தை சேகரிக்கும்.
பெண்களுக்கான கருத்தடை உறைகள் ஆணுறைகளிலிருந்து சற்று வேறுபடுகின்றன. ஆணுறைகள் இறுதியில் ஒரு பஞ்சுபோன்ற, நெகிழ்வான வளையத்துடன் ஒரு பையைக் கொண்டுள்ளன. வளையப் பகுதி மூடிய நிலையில் இருக்கும். அந்தப் பகுதிதான் பிறப்புறுப்பில் செலுத்தப்படுகிறது. மறுபுறம் திறந்த நிலையில் வளையம் இருக்கும். உடலுறவின்போது பெண்களின் பிறப்புறுக்கு வெளியே இது உள்ளது.
பெண்களின் பிறப்புறுப்புக்கு உள்ளே செருகக் கூடிய கருத்தடை உறைகள் என்றும் இவை அழைக்கப்படுகின்றன. இவை ஆணுறைகளை விட பல நன்மைகளைக் கொண்டுள்ளன. இந்த கருத்தடை உறைகள் உடலுறவின்போது விந்தணுக்கள் பிறப்புறுப்புக்குள் வருவதைத் தடுப்பதன் மூலம் கருத்தரிப்பதைத் தடுக்க உதவுகின்றன.
அவை, வைரஸ் ஹெபடைடிஸ் மற்றும் எச்ஐவி/எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் அல்லது பால்வினை தொற்றுகளுக்கு எதிரான பாதுகாப்பையும் வழங்குகின்றன. பெண்களுக்கான கருத்தடை உறைகள் எஃப்சி1 மற்றும் எஃப்சி2-ஐ ஒரு சில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகரித்துள்ளது. எஃப்சி1 பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது உற்பத்தி செய்யப்படுவதில்லை. எஃப்சி2 பாலியூரிதீன் மற்றும் நைட்ரைட் என்றழைக்கப்படும் செயற்கை ரப்பரால் உருவாக்கப்பட்டது.
பெண்களுக்கான கருத்தடை உறைகள் டாம்பன்கள் (TAMPONS) போலவே செருகப்படுகின்றன. இது ஆரம்பத்தில் சிக்கலான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் பயிற்சி இருந்தால் இதையும் நீங்கள் ஈஸியாக பிறப்புறுக்கு உள்ளே செருகிவிட முடியும்.
உடலுறவு கொள்ளும்போது, புதிய கருத்தடை உறைகளை பயன்படுத்துங்கள்.
பேக்கை திறக்கும்போது கருத்தடை உறை கிழிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆசனவாய் மற்றும் பிறப்புறுப்பு அல்லது ஆண் பிறப்புறுப்புக்கு இடையிலான எந்தவொரு தொடர்பிற்கும் முன் கருத்தடை உறைகளை செருகவும்.
கருத்தடை உறை முடியும் பகுதியில் லூப்ரிகன்ட் இருக்க வேண்டும்.
கருத்தடை உறையை செருக சரியான இடத்தை கண்டறியுங்கள். அதை செருகுவதற்கு ஏதுவாக நீங்கள் அமர்ந்து கொள்ளலாம். ஒரு நாற்காலியில் ஒரு காலுடன் நிற்கலாம் அல்லது படுத்துக் கொள்ளலாம்.
கருத்தடை உறையின் மூடிய நிலையில் உள்ள பகுதி நன்கு உள்ளே செல்லும் வரை உங்கள் பிறப்புறுப்பில் செருகுங்கள். ஆசனவாய் வழி உடலுறவுக்கு கருத்தடை உறையை உங்கள் ஆசனவாயின் கீழ் பாகம் செல்லும் வரை செருகுங்கள்.
திறந்து உள்ளே செல்ல வளையப் பகுதியை அனுமதியுங்கள்.
மறுமுனையில் வளையம் உங்கள் பிறப்புறுப்பு அல்லது ஆசனவாயில் ஒரு இன்ச் உள்ளே சென்று இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் சரியாகப் பயன்படுத்தினால் கருத்தடை உறைகள் சரியாக வேலை செய்யும். அவை சுமார் 95% பயனுள்ளவை. அதாவது, நீங்கள் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம்.
கருத்தரிப்பைத் தடுப்பதன் மூலம் பெண் கருத்தடை உறைகள் கர்ப்பம் ஏற்படாமல் தடுத்து நிறுத்துகின்றன. உடலுறவுக்கு முன் பிறப்புறுப்பில் செருகிக் கொள்வதன் மூலம் இந்த கருத்தடை உறையைப் பயன்படுத்துங்கள். ஆனால், கருத்தடை உறையை செருகுவதற்கு முன்பு ஆண் பிறப்புறுப்புக்கும் பெண் பிறப்புறுப்புக்கும் இடையில் எந்த தொடர்பும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், ஆண் பிறப்புறுப்பு உச்சநிலைக்கு முன்பே விந்தை வெளியிட முடியும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பெண்களுக்கான கருத்தடை உறைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று நீங்கள் யோசித்தால், பின்வரும் வழிமுறையைப் பின்பற்றுங்கள்:
ஒரு வசதியான பொசிஷனை முடிவு செய்யுங்கள்.
மூடிய நிலையில் உள்ள கருத்தடை உறையின் வெளிப்புறத்தை நீங்கள் பிடித்திருக்கும்போது, உள் வளையத்தின் பக்கங்களை உங்கள் முன்கை மற்றும் கட்டைவிரலுடன் கூட்டாக அழுத்தி பிறப்புறுப்பில் செருகுங்கள்.
உங்கள் விரலைப் பயன்படுத்தியவாறு, கருப்பை வாய்க்கு எதிராக இருக்கும் வரை உள் வளையத்தைத் தள்ளுங்கள்.
பெரும்பாலான பெண்கள் பெண்களுக்கான கருத்தடை உறைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும். கருத்தடை உறைகள் பிரசவத்திற்குப் பிறகும், கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவுக்குப் பின்னரும் உடனடியாகப் பயன்படுத்தலாம். எனினும், ஒருவர் தங்கள் பிறப்புறுப்பு பகுதியைத் தொடுவதை வசதியாக உணரவில்லை என்றாலோ, பிறப்புறுப்பைத் தொடுவதற்கு அச்சமோ அல்லது கூச்சமோ பட்டாலோ பெண்கள் கருத்தடை உறைகளைத் தவிர்க்க வேண்டும்.
எஸ்டிஐ போன்ற பால்வினை நோய்களிலிருந்து உடலுறவில் ஈடுபடும் இருவரையும் பாதுகாக்கும்
இந்த கருத்தடை உறையைப் பயன்படுத்துபவரின் ஹெல்த்தில் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படாது
உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் 8 மணி நேரம் வரை பெண்களுக்கான கருத்தடை உறைகளை நீங்கள் செருகலாம்
இந்த கருத்தடை உறைகள் நைட்ரைட்டைக் கொண்டிருப்பதால், லேடெக்ஸ் (latex) அலர்ஜி உள்ள நபர்கள் இதனைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது
இதையும் படிக்கலாமே! - உங்களுடைய 7 வார கர்ப்பகால உணவு முறையில் நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டிய டாப் 5 உணவுகள்
ஆண் பிறப்புறுப்பிலிருந்து விந்து வெளியேற்றப்பட்ட பிறகு பெண் பிறப்புறுப்புடன் தொடர்பு கொள்ளுதல்
கருத்தடை உறையை பெண் பிறப்புறுப்பில் செருக வேண்டியதை விட ஆழமாக தள்ளுதல்
கூர்மையான நகைகள் அல்லது விரல் நகங்களால் கருத்தடை உறைக்கு எந்தவொரு தற்செயலான சேதம் ஏற்படுதல்
பெண் கருத்தடை உறைகள் மிகவும் மகிழ்ச்சியான, ஒவ்வாமை இல்லாத, தேவையற்ற கர்ப்பம் ஏற்படுவதைத் தடுக்க உதவும் பயனுள்ள வழிகளை வழங்குகின்றன. அவை எஸ்டிஐ போன்ற பால்வினை நோய்கள் பரவலைத் திறம்படத் தடுக்கின்றன. பேக்கேஜ் வழிகாட்டுதல்களை சரியாகப் பின்பற்றி கருத்தடை உறைகளை முறையாக பிறப்புறுப்பில் செருகவதையும் அகற்றுவதையும் நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். அவற்றின் செயல்திறனைக் குறைக்காமல் லூப்ரிகன்டைத் (lubricant) தேர்ந்தெடுப்பதன் மூலமும் அவற்றை நீங்கள் பயன்படுத்த முடியும்.
Yes
No
Written by
gajalakshmiudayar
gajalakshmiudayar
Why and When Is the Tetanus Toxoid (TT) Vaccine Given During Pregnancy?
Should You Eat Bananas During Pregnancy?
Ideal Baby Weight Chart in Kg by Month: Birth to 1 Year (0 - 12 Months)
18 Foods that Can Cause Miscarriage In Pregnancy
How to Guide Your Child to Make Healthy Food Choices and Get the Required Nutrition?
Low Birth Weight: Causes, Complications & Treatment
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Trusted by 10+ million young parents Mylo is India’s #1 Pregnancy & Parenting App. Mylo app will guide you through your whole parenting journey. Download now
Ayurvedic Stretch Marks Products | Ayurvedic Skin Whitening Products | Ayurvedic Tanning Products | Ayurvedic Black Head Products | Anti Ageing Ayurvedic Products | Ayurvedic Uneven Skin Tone Products | Ayurvedic Hairfall & Damage Repair Products | Ayurvedic Pain Relief Oil | Ayurvedic Massage Oil | AYURVEDIC CARE PRODUCTS - SHOP BY RANGE | AYURVEDIC CARE PRODUCTS - COMBOS | KUMKUMADI COMBO | UBTAN COMBO | Baby | Disposable Diapers | Baby Wipes | Baby Creams & Lotions | Baby Swaddle Wraps | Reusable Cloth Diapers | Newborn Winter Wear |