Diet & Nutrition
11 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்பக்காலம் என்பது சவாலான நேரமாகவே அமைகிறது. தாய்மை என்பது ஒரு அற்புதமான உணர்வு. முதல் மூன்று மாதத்தில் இருக்கும் முதல் 10 வாரங்கள் மிக கவனமாக இருக்க வேண்டியவை. எனவே, நீங்கள் உங்கள் டயட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் என்ன உட்கொள்கிறீர்களோ அது கண்டிப்பாக உங்கள் வயிற்றிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் டயட் கண்டிப்பாக சரியான அளவிலான வைட்டமின்ஸ், ஊட்டச்சத்துக்கள் மற்றும் மினரலை கொண்டதாக இருத்தல் வேண்டும். ஒரு ஆரோக்கியமான டயட் என்பது ஒரு தாயின் ஆரோக்கியத்துக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் நேர் விகிதமாக இருக்கும்.
கர்ப்பக்காலத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட கூடாது என்பதை தேர்வு செய்வதே பெரிய சவால் தான். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒருவருக்காக சாப்பிடவில்லை, இரு உயிர்களுக்காக சாப்பிடுகிறீர்கள். நீங்கள் கர்ப்பக்காலத்தின் முதல் 10 வாரத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பின்வருமாறு:
ஒருவர் முதலில் கலோரி உட்கொள்ளலை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும். முதல் மூன்று காலத்தில், பெரும்பாலான பெண்கள் அதிக கலோரிகளை உட்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எனவே, நீங்கள் கலோரிகளை எடுத்துக்கொள்கையில் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பின்வருமாறு.
குறைந்த கொழுப்பு சத்துடைய பாலை அருந்துதல்: குறைந்த கொழுப்பு சத்துடைய பால் நமக்கு போதிய ஊட்டச்சத்தை வழங்குவதுடன் வளரும் குழந்தைக்கு தேவையான கால்சியத்தையும் வழங்குகிறது. சில நேரத்தில், நீங்கள் உட்கொள்ள வேண்டிய கலோரி அளவை குறைத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாகவும், முழு ஆற்றலுடன் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
கொழுப்பில்லாத யோகர்ட்: உங்கள் டயட்டை சமநிலை செய்ய சிறந்த வழி யோகர்ட். இது உங்கள் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவும். செயற்கை ஃபிளேவர்களுக்கு பதிலாக ஸ்ட்ராபெரிகள் போன்ற இயற்கை பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
ஸ்னாக் சாப்பிட வேண்டும் போல இருக்கிறதா? வெபர் மற்றும் டிப்களுக்கு பதிலாக ஆரோக்கியமான விருப்பங்களை தேர்வு செய்க. வெள்ளரிக்காய் மற்றும் கேரட்களை ஹம்முஸ் உடன் சாப்பிடலாம். நீங்கள் வீட்டிலேயே ஆரோக்கியமான ஹம்முஸை சாப்பிடலாம். வேகவைத்த கொண்டைக்கடலையை அரைத்து அதில் மிளகு, ஆலிவ் எண்ணெய் போன்ற ஃபிளேவர்களை சேர்த்து நன்றாக கடையவும். இது கர்ப்பக்காலத்தின் 10 ஆம் வார டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய அட்டகாசமான ஸ்னாக்ஸ்.
உங்கள் டயட்டில் நீங்கள் கண்டிப்பாக வைட்டமின் ஏ, இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் ஐயோடினை சேர்த்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், உங்கள் கைனகாலஜிஸ்ட் பரிந்துரைத்தாலின்றி தேவையில்லாத மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் உங்கள் டயட்டில் தினசரி மீன், ஆய்ஸ்டர்ஸ் மற்றும் காட் லிவர் ஆயில் போன்ற கடல் உணவையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த உணவு வகைகள் குறைந்த மெர்குரி அளவை கொண்டவை.
உங்கள் டயட்டில் வைட்டமின்களையும் புரதங்களையும் ஒரே நேரத்தில் சேர்க்கும் அட்டகாசமான உணவு முட்டை. உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் இது உதவும். நீங்கள் வேகவைத்த முட்டை சாப்பிடலாம் அல்லது முட்டையில் செய்த உணவுவகைகளை சாப்பிடலாம். அத்தகைய அற்புதமான உணவு வகைகளில் கீரை முட்டையும் ஒன்று. கீரை இலைகளை நன்றாக வேகவைத்து சட்டியில் வதக்கவும். வேகவைத்த முட்டையை நறுக்கவும் அல்லது பச்சை முட்டையை பாத்திரத்தில் உடைத்து ஊற்றவும். அதை மிதமான சூட்டிலேயே சமைக்கவும். இதை நீங்கள் ரொட்டி, சாலட் மற்றும் யோகர்ட் உடன் சாப்பிடலாம்.
உங்கள் உணவில் பச்சைகாய்கறிகளை எவ்வளவு சேர்த்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு சேர்த்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு மலச்சிக்கல் ஒரு தலைவலியாக தான் இருக்கிறது. இது கீரை, ப்ரோக்கோலி, மற்றும் கலே போன்ற பச்சை காய்கறிகளை உங்கள் அன்றாட டயட்டில் போன்ற சேர்த்துக்கொள்வதன் மூலம் சரி செய்யப்படுகிறது.
ஏதாவது இனிப்பாக சாப்பிட வேண்டும் போன்று இருக்கிறதா? நமது பாரம்பரியமான இந்திய இனிப்புகள் கர்ப்பக்காலத்தில் சிறந்த வாய்ப்பாக இருக்காது. உங்கள் 10 வாரக் கர்ப்பக்காலத்தில், நீங்கள் கண்டிப்பாக பெர்ரிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். அதே நேரத்தில், இது உங்கள் இனிப்பிற்கான ஏக்கத்தையும் பூர்த்தி செய்யும்.
ஆரோக்கியமான தேர்வுகளுக்கு நீங்கள் பெரிய மாற்றத்தை செய்யவேண்டியிருக்கலாம். வெள்ளை அரிசிக்கு பதிலாக சிகப்பு அரிசி சாதம் சாப்பிடுங்கள். உங்கள் டயட்டிலிருந்து மைதா, பிரட் மற்றும் பாஸ்தாவை நீக்கவும். நீங்கள் முழு தானிய வகைகளான பாஜ்ரி, ஓட்ஸ் மற்றும் ஜோவர் போன்றவற்றை சாப்பிட துவங்கலாம். அவை முழு புரதங்களை கொண்டவை மேலும் உங்கள் வயிறும் நிரம்பும்.
இறுதியாக, நீங்கள் மாலை என்ன ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.. கைநிறைய ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவது உங்கள் 10 வார கர்ப்பக்கால டயட் சார்ட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. நார்சத்துக்கு நீங்கள் பருப்பு வகைகள் மற்றும் பயிர் வகைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பம் தரித்து 9 வாரங்கள் ஆன குழந்தையின் வளர்ச்சி
எனவே, இப்போது நாம் என்ன உண்ண வேண்டும் என்பது தெளிவாக புரிந்துவிட்டது. எந்தவகை டயட் சார்ட்டை நீங்கள் பின்பற்றினாலும், நீங்கள் அதை தொடர்ந்து மிக சரியாக பின்பற்றவேண்டும். ஒட்டுமொத்தமாக, நீங்கள் கவனமாகவும் ஆரோக்கியமாகவும் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகள் உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஒரு அம்மா மற்றவர்களின் ஆயிரக்கணக்கான கருத்துக்களை, அறிவுரைகளை பற்றி கலவைப்படக்கூடாது. ஒரு கர்ப்பிணி அவளது 10 வார டயட்டில் வைட்டமின்கள், மினரல்கள், கால்ஷியம் மற்றும் புரதம் நிறைந்த உணவு வகைகளான கடல் உணவு, பயிறுகள் மற்றும் முட்டைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Yes
No
Written by
aviraparaiyar
aviraparaiyar
உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதைக் காட்டும் 8 எளிய அறிகுறிகள்
குழந்தை என்.ஐ.சி.யு (NICU) இல் இருக்கும்போது அதை எப்படிச் சமாளிப்பது?
குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 4 முக்கியமான ஊட்டச்சத்துகள்
புதிய அம்மாக்களுக்கான நேர மேலாண்மை
வெவ்வேறு வயதுகளில் உங்கள் குழந்தைக்கு எவ்வளவு தூக்கம் தேவை?
குழந்தைகளுடைய பாட்டில் ஸ்டெர்லைசரில் பூஞ்சை வராமல் தடுக்கும் வழிகள்
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Mylo is a master brand offering solutions through it's subsidiaries - Mylo Care and Mylo Baby.
Mylo Care offers science backed, expert led solutions across multiple health concerns.
Mylo Baby is a one stop solution for young parents for all their baby's needs.
Winter Clothing | Socks | Diapers & Wipes - Feeding & Lactation | Feeding Bottle | Grooved Nipple | Fruit Feeder | Manual Breast Pump | Diapers & Wipes - For Mom | Maternity Dresses | Maternity Pillows | Pregnancy Belt | Skin | Acne & Blemishes | Dry & Dull Skin | Tan Removal | Anti Ageing | Skin brightening | Dark Circles | Skin hydration | Shop By Ingredient |